top of page
Writer's pictureAnbezhil

ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 1 - 100 ஸ்லோகங்களும் பொருளும். பகுதி - 1 தசகம் 1 - 9


#ஸ்ரீமன்நாராயணீயம் நூறு தசகங்களை கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் தோராயமாக பத்துப் பாடல்கள் இருக்கும். இதை இயற்றியவர் #நாராயண_பட்டத்திரி இவர் தன் குருவின் வியாதியை தான் வாங்கிக் கொண்டு தன் ஆச்சாரயனுக்கு அந்நோயிலிருந்து விடுதலை கொடுத்து, மற்ற மாணாக்கர்களுக்கு அவர் தொடர்ந்து பாடம் எடுக்கும்படி உதவினார். ஆனால் அவர் ஏற்றுக் கொண்ட வாத நோய் அவரை மிகவும் வருத்தியது. கேரளாவில் பிறந்த நம்பூதிரி பிராமண குலத்தைச் சார்ந்தவர். அவர் பணக்கார வீட்டுப் பிள்ளை. அவர் வீட்டு வேலையாள் அவரின் துன்பத்தைக் காண பொறுக்காமல் ஒரு ஜோசியரிடம் சென்று பரிகாரம் வேண்டினார். ஜோசியர், நாக்கில் மீனை வைத்துக் கொண்டு குருவாயூரப்பன் கோவிலில் அவரை பாடச் சொல்லு என்றார். இதை வந்து பட்டத்திரியிடம் வேலையாள் சொன்னார். முதலில், நாவில் மீனா என்று அதிர்ச்சி அடைந்தார், பின் புரிந்து கொண்டார். மகா விஷ்ணுவும் மச்சாவதாரத்தில் இருந்து பாட ஆரம்பித்தார். தினம் அவரை தூக்கிக் கொண்டு கோவிலில் ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டுப் போய் விடுவார்கள். மாலை வந்து திரும்பவும் வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போவார்கள். பக்கவாட்டில் திண்ணையில் உட்கார்ந்திருந்த அவரால் அவரால் சன்னதியில் இருக்கும் கிருஷ்ணனை கழுத்தைத் திரும்பிக் கூட பார்க்க இயலாது. நூறு தசகம் வரை, அவர் நோயை கண்ணன் குணப்படுத்தவில்லை. நூறாவது தசகத்தில் கேசாதிபாதமாக அவர் கண்ணனை வர்ணிக்க ஆரம்பித்தவுடன் அவருக்குக் காட்சி தந்து அவரை, நோயின் கோரப் பிடியில் இருந்தும் விடுவித்தார். இதுவே நாராயணீயம். அவர் 1036 ஸ்லோகங்கள் 100 நாட்களில் எழுதி முடித்தார். அதில் ஒவ்வொரு (தசகம்)10 ஸ்லோகம் முடியும் பொழுதும் தனக்கு இருக்கும் நோயும் தீர வேண்டும் என்பதற்கு சில வாக்கியங்களும் எழுதியிருப்பார். சித்த சுத்தியுடன் நாராயணீயத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு தீராத நோயும் தீரும் என்பது உறுதி. இது கண்ணனின் அருட் கடாக்ஷம். இந்த நூறு தசகத்தையும் நாம் யுடியுபில் போட்டும் அல்லது ஒரு குரு முகமாகவும் (அது தான் சிறந்தது) கற்றுக் கொள்ள முடியும். பொருள் தெரிந்து படித்தால் தான் நமக்கு என்ன பாராயணம் செய்கிறோம் என்பதுடன் பட்டத்திரி எவ்வளவு அழகாக எழுதியுள்ளார் என்பதை உணர்ந்து கொள்ள முடியும். ஸ்ரீமத் நாராயணீயம் ஸ்ரீமத் பாகவதத்தின் சாரம் (ஸ்ரீமத் பாகவத புராணத்தின் சாரம்). சமஸ்கிருத இலக்கியத்தில் ஒரு கவிதையாகவும், பக்திப் பாடல்களாகவும் நாராயணீயம் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. பட்டத்திரி குருவாயூரப்பனின் திருவுருவத்தை உன்னதமாகச் சித்தரிக்கிறார்.

“சம்மோஹனம் மோகனாத், காந்தம் காந்திநிதானதோபி, மதுரம் மாதுர்ய துர்யதாபி, சௌந்தர்யோதரதோபி சுந்தரதரம்” நாராயணீய பாராயணம் பக்தர்களின் மனம் மற்றும் உடல் ரீதியான துன்பங்களைக் குணப்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. நாராயணீய #நித்யபாராயணம் பக்தர்கள் #ஆயுராரோக்யசௌக்யம் அடைய உதவும். ஒவ்வொரு தசகத்தின் ஸ்லோகத்தை, சமஸ்கிரதத்திலும் தமிழிலும் கொடுத்து, பொருளையும் இங்கே அடியேன் ஆச்சார்யன் திருவருளாலும், குருவாயூரப்பன் கருணையாலும் எழுதியுள்ளேன். பிழையிருப்பின் பொறுத்தருள்க.


பகவான் பெருமை

ஸ்ரீ குருவாயூரப்பன் ஜனங்களின் பாக்யம்


सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां

निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।

अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं

तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥


ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்

நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |

அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்

தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||


1. பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் உள்ளது. மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஒப்புயர்வு அற்றது. கால தேசத்திற்கு அப்பார்ப்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. ஆச்சர்யம்!


एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्

तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।

एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै

निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥


ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்

தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |

ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை

நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||


2. இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான பொருள், எளிதில் கிடைத்திருந்தும், மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழிபடுகிறார்கள். கஷ்டம்! அனைத்து உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவனான குருவாயூரப்பனையே, உலகோரின் கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பியிருக்கின்றோம்.


सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत्

भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।

तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं

तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥


ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்

பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|

தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்

தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||


3. ஓ குருவாயூரப்பா! உன் திருவுருவம் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய குணங்களின் சம்பந்தமற்று, ஸத்வ குணம் நிரம்பியதாகவும், பஞ்ச பூதங்களாலும்,பதினொரு இந்த்ரியங்களாலும் ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று வியாசர் கூறுகின்றார். பரமானந்த ரூபமான உன் அழகுருவம் பிரகாசிக்கிறதாய், எளிதில் அடையக்கூடியதாய் , காதிற்கும், மனத்திற்கும் இனியதாய் இருக்கிறது. புண்யசாலிகள் அந்த ரூபத்தைக் கண்டு களிக்கிறார்கள்.


निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे

निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।

कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्म

कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥


நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே

நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |

கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா

கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||


4. நீ என்றும் நிறைந்து இருப்பவன். பேரின்பமாகிற அம்ருதஸ்வரூபி. முக்தர்களின் கூட்டத்தால் அழகு நிறைந்து விளங்குபவன். அப்படிப்பட்ட ஸத்வ ரூபியான நீயே முழுமுதற்கடவுள். பரிபூரணன்.


निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां

तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।

तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं

स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥


நிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப₄ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்₂யாம்

தேநைவோதே₃தி லீநா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி₃காலே|

தஸ்யா: ஸம்ஶுத்₃த₄மம்ஶம் கமபி தமதிரோதா₄யகம் ஸத்த்வரூபம்

ஸ த்வம் த்₄ருத்வா த₃தா₄ஸி ஸ்வமஹிமவிப₄வாகுண்ட₂ வைகுண்ட₂ ரூபம் ||5||


5. ஓ குருவாயூரப்பா! பிறப்பற்றவனே! நீ எவ்விதச் செயலுமற்றவன். ஆயினும், கடைக்கண் பார்வையால் மாயையை ஏவும் செயலைச் செய்து வருகிறாய். அந்த மாயை, உன்னிடத்தில் அடங்காதது போன்ற தோற்றம் அளிக்கிறது. விவரிக்க முடியாத அந்த தூய்மையான மாயையின் ஒரு அம்சமே உன் திருவுருவம்.


तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं

लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।

लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:

सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥


தத்தே ப்ரத்யக்₃ரதா₄ராத₄ரலலிதகலாயாவலீகேலிகாரம்

லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜநத்₃ருஶாம் பூர்ணபுண்யாவதாரம்|

லக்ஷ்மீநிஶ்ஶங்கலீலாநிலயநமம்ருதஸ்யந்த₃ஸந்தோ₃ஹமந்த:

ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா₃ரநாத₂ ||6||


6. உன் சரீரமானது, கார்மேகம் போலும், காயாம்பூங்கொத்தைப் போலும் அழகாய் இருக்கிறது. புண்ணியசாலிகளின் கண்களுக்கு முன்ஜன்ம புண்ணியத்தின் பயனாக விளங்குகிறது. ஸ்ரீ மகாலக்ஷ்மி விளையாடுவதற்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கிறது. பக்தர்களின் மனத்தைப் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது. அப்படிப்பட்ட உன்னை நான் என்றும் ஸ்மரிக்கிறேன்.


कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-

मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।

नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं

नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥


கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப₃ஹுதரப₄வகே₂தா₃வஹா ஜீவபா₄ஜா-

மித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்₃யாபி₄ஜாநே|

நோசேஜ்ஜீவா: கத₂ம் வா மது₄ரதரமித₃ம் த்வத்₃வபுஶ்சித்₃ரஸார்த்₃ரம்

நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா₄ம்போ₄தி₄பூரே ரமேரந்||7||


7. மாயையால் ஜயிக்கப்படாத குருவாயூரப்பா! இதுவரை, உன் ஸ்ருஷ்டி பிறவித் துன்பத்தை அளிக்கிறது என்று நினைத்தேன். இப்போது அந்த எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், இவ்வாறு படைக்காதிருந்தால், மிகவும் ஆனந்தமான உன் திருமேனியைக் கண்களாலும், காதுகளாலும் அனுபவித்து பேரின்பக் கடலில் மகிழ்ச்சி அடைந்திருக்க முடியுமா?


नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -

प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।

इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं

क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥


நம்ராணாம் ஸந்நித₄த்தே ஸததமபி புரஸ்தைரநப்₄யர்தி₂தாந -

ப்யர்தா₂ந் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநந்த₃ஸாந்த்₃ராம் க₃திம் ச|

இத்த₂ம் நிஶ்ஶேஷலப்₄யோ நிரவதி₄கப₂ல: பாரிஜாதோ ஹரே த்வம்

க்ஷுத்₃ரம் தம் ஶக்ரவாடீத்₃ருமமபி₄லஷதி வ்யர்த₂மர்தி₂வ்ரஜோ(அ)யம்||8||


8. குருவாயூரப்பனான பாரிஜாதமானது அளவற்ற பயன்களை அளிக்கும். சுலபமாக அடைய முடியும். மோக்ஷத்தையும் கொடுக்கும். அப்படியிருக்க, அழியக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் இந்திரலோகத்து பாரிஜாத மரத்தை யாசகர்கள் விரும்புவது ஏனோ?


कारुण्यात्काममन्यं ददति खलु परे स्वात्मदस्त्वं विशेषा-

दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम्।

त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतना: स्फीतभाग्या-

स्त्वं चात्माराम एवेत्यतुलगुणगणाधार शौरे नमस्ते॥९॥


காருண்யாத்காமமந்யம் த₃த₃தி க₂லு பரே ஸ்வாத்மத₃ஸ்த்வம் விஶேஷா-

தை₃ஶ்வர்யாதீ₃ஶதே(அ)ந்யே ஜக₃தி பரஜநே ஸ்வாத்மநோ(அ)பீஶ்வரஸ்த்வம்|

த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத₃மது₄ரே சேதநா: ஸ்பீ₂தபா₄க்₃யா-

ஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு₃ணக₃ணாதா₄ர ஶௌரே நமஸ்தே||9||


9. உலகில் மற்ற தெய்வங்கள் அபீஷ்டங்களைக் கொடுக்கின்றனர். நீயோ, உன்னையே, உன் ஸ்வரூபமான ஆத்மாவையே அளிக்கின்றாய். வாசுதேவ, உன்னைத் தொழுகிறேன்.


ऐश्वर्यं शङ्करादीश्वरविनियमनं विश्वतेजोहराणां

तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम्।

अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता

तद्वातागारवासिन् मुरहर भगवच्छब्दमुख्याश्रयोऽसि॥१०॥


ஐஶ்வர்யம் ஶங்கராதீ₃ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்

தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ₃தம்|

அங்கா₃ஸங்கா₃ ஸதா₃ ஶ்ரீரகி₂லவித₃ஸி ந க்வாபி தே ஸங்க₃வார்தா

தத்₃வாதாகா₃ரவாஸிந் முரஹர ப₄க₃வச்ச₂ப்₃த₃முக்₂யாஶ்ரயோ(அ)ஸி||10||


10. முரனைக் கொன்றவனே! சங்கரனையும், மற்ற தெய்வங்களையும், அவரவர்கள் வேலையைச் செய்ய ஏவுகின்றாய். முற்றும் துறந்த பெரியோர் உன்னைப் பாடும் புகழ் பெற்றிருக்கிறாய். நீ பற்றற்று இருப்பதால்,பகவான் என்ற சொல்லுக்குப் பொருளாக விளங்குகின்றாய்.


பகவான் திருமேனி வர்ணனை


सूर्यस्पर्धिकिरीटमूर्ध्वतिलकप्रोद्भासिफालान्तरं

कारुण्याकुलनेत्रमार्द्रहसितोल्लासं सुनासापुटम्।

गण्डोद्यन्मकराभकुण्डलयुगं कण्ठोज्वलत्कौस्तुभं

त्वद्रूपं वनमाल्यहारपटलश्रीवत्सदीप्रं भजे॥१॥


ஸூர்யஸ்பர்தி₄கிரீடமூர்த்₄வதிலகப்ரோத்₃பா₄ஸிபா₂லாந்தரம்

காருண்யாகுலநேத்ரமார்த்₃ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்|

க₃ண்டோ₃த்₃யந்மகராப₄குண்ட₃லயுக₃ம் கண்டோ₂ஜ்வலத்கௌஸ்துப₄ம்

த்வத்₃ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ₃ப்ரம் ப₄ஜே|| 1||


1.சூர்யனை விட பிரகாசமானதாய் உனது கிரீடம் விளங்குகிறது. மேல் நோக்கியுள்ள திலகத்தால் உன் நெற்றி மிக அழகாய் விளங்குகிறது. கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம் இவற்றால் அழகியதாக விளங்கும் உன் திருமேனியைத் தினமும் தொழுகிறேன்.


केयूराङ्गदकङ्कणोत्तममहारत्नाङ्गुलीयाङ्कित-

श्रीमद्बाहुचतुष्कसङ्गतगदाशङ्खारिपङ्केरुहाम् ।

काञ्चित् काञ्चनकाञ्चिलाञ्च्छितलसत्पीताम्बरालम्बिनी-

मालम्बे विमलाम्बुजद्युतिपदां मूर्तिं तवार्तिच्छिदम् ॥२॥


மனக்கவலையைப் போக்கும் ஸ்லோகம்:

கேயூராங்க₃த₃கங்கணோத்தமமஹாரத்நாங்கு₃லீயாங்கித-

ஶ்ரீமத்₃பா₃ஹுசதுஷ்கஸங்க₃தக₃தா₃ஶங்கா₂ரிபங்கேருஹாம் |

காஞ்சித் காஞ்சநகாஞ்சிலாஞ்ச்சி₂தலஸத்பீதாம்ப₃ராலம்பி₃நீ-

மாலம்பே₃ விமலாம்பு₃ஜத்₃யுதிபதா₃ம் மூர்திம் தவார்திச்சி₂த₃ம் || 2||


2. உன் நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம் முதலியவை பிரகாசிக்கிறது. மேலும், அவை சங்கம், சக்ரம், கதை, தாமரை இவற்றால் விளங்குகிறது. இடுப்பில் பொன் அரைஞாணும், பீதாம்பரமும் அலங்கரிக்கின்றன. திருவடிகள் தாமரை மலரை ஒத்ததாய் இருக்கிறது. உன் அழகிய திருமேனி பக்தர்களின் துன்பங்களையும், பீடைகளையும் போக்கக்கூடியது. இப்படிப்பட்ட உன் திருமேனியை சரணடைகிறேன்.


यत्त्त्रैलोक्यमहीयसोऽपि महितं सम्मोहनं मोहनात्

कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि ।

सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपमाश्चर्यतोऽ-

प्याश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णो विभो ॥३॥


அழகு முதலிய லாபங்கள் கிட்டும்:

யத்த்த்ரைலோக்யமஹீயஸோ(அ)பி மஹிதம் ஸம்மோஹநம் மோஹநாத்

காந்தம் காந்திநிதா₄நதோ(அ)பி மது₄ரம் மாது₄ர்யது₄ர்யாத₃பி |

ஸௌந்த₃ர்யோத்தரதோ(அ)பி ஸுந்த₃ரதரம் த்வத்₃ரூபமாஶ்சர்யதோ(அ)-

ப்யாஶ்சர்யம் பு₄வநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ₄ || 3||


3. பிரபுவே! மூவுலகத்திலும் சிறந்த பொருட்கள் யாவற்றையும் விட சிறந்ததாய் உன் ரூபம் விளங்குகிறது. மனங்கவர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மனம் கவர்ந்தது. இனியவையான அனைத்தையும் விட இனியவன். அழகுமிக்க பொருட்கள் எல்லாவற்றையும் விட அழகு வாய்ந்தவன். ஆச்சர்யம் மிக்க பொருட்கள் அனைத்தையும் விட ஆச்சர்யம் மிக்கவன். உன் திவ்ய ரூபம் யாருக்குத்தான் மகிழ்ச்சியை உண்டு பண்ணாது?


तत्तादृङ्मधुरात्मकं तव वपु: सम्प्राप्य सम्पन्मयी

सा देवी परमोत्सुका चिरतरं नास्ते स्वभक्तेष्वपि ।

तेनास्या बत कष्टमच्युत विभो त्वद्रूपमानोज्ञक -

प्रेमस्थैर्यमयादचापलबलाच्चापल्यवार्तोदभूत् ॥४॥


தத்தாத்₃ருங்மது₄ராத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ

ஸா தே₃வீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வப₄க்தேஷ்வபி |

தேநாஸ்யா ப₃த கஷ்டமச்யுத விபோ₄ த்வத்₃ரூபமாநோஜ்ஞக -

ப்ரேமஸ்தை₂ர்யமயாத₃சாபலப₃லாச்சாபல்யவார்தோத₃பூ₄த் || 4||


4. ஓ குருவாயூரப்பா! ஸகல செல்வத்திற்கும் இருப்பிடமான மகாலக்ஷ்மி உன் திருமேனியில் பற்று கொண்டு உன்னிடத்திலேயே நிலைத்து விட்டாள். அதனால் அவள் தன் பக்தர்களிடத்தில் தங்குவதில்லை. உன் திருமேனியில் கொண்ட பற்றினால் அவளுக்கு “நிலையற்றவள்” என்ற அவப்பெயர் ஏற்பட்டது. (திருமகள் தனது தலைவனான திருமாலிடம் அதிகப்பற்று வைத்திருக்கிறாள் எனக் கொள்ள வேண்டும்).


लक्ष्मीस्तावकरामणीयकहृतैवेयं परेष्वस्थिरे-

त्यस्मिन्नन्यदपि प्रमाणमधुना वक्ष्यामि लक्ष्मीपते ।

ये त्वद्ध्यानगुणानुकीर्तनरसासक्ता हि भक्ता जना-

स्तेष्वेषा वसति स्थिरैव दयितप्रस्तावदत्तादरा ॥५॥


லக்ஷ்மீஸ்தாவகராமணீயகஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்தி₂ரே-

த்யஸ்மிந்நந்யத₃பி ப்ரமாணமது₄நா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே |

யே த்வத்₃த்₄யாநகு₃ணாநுகீர்தநரஸாஸக்தா ஹி ப₄க்தா ஜநா-

ஸ்தேஷ்வேஷா வஸதி ஸ்தி₂ரைவ த₃யிதப்ரஸ்தாவத₃த்தாத₃ரா || 5||


5. உன் அழகில் ஈடுபட்டு மகாலக்ஷ்மியானவள் மற்றவரிடம் நிலைத்து நிற்பதில்லை. உன்னைப் பற்றிய சிந்தையிலும், நாம சங்கீர்த்தனத்தாலும், உன் புகழ் பாடும் பக்தர்களிடத்தில் நித்யவாஸம் செய்கிறாள் அல்லவா? அதாவது, பகவானிடத்திலும், பகவத் விஷயங்களைப் பாடும் பக்தர்களிடத்திலும் நிலைத்து இருக்கிறாள், மற்றவர்களிடத்தில் நிலைத்திருப்பதில்லை எனக் கருத்து.


एवंभूतमनोज्ञतानवसुधानिष्यन्दसन्दोहनं

त्वद्रूपं परचिद्रसायनमयं चेतोहरं शृण्वताम् ।

सद्य: प्रेरयते मतिं मदयते रोमाञ्चयत्यङ्गकं

व्यासिञ्चत्यपि शीतवाष्पविसरैरानन्दमूर्छोद्भवै: ॥६॥


ஏவம் பூ₄தமநோஜ்ஞதாநவஸுதா₄நிஷ்யந்த₃ஸந்தோ₃ஹநம்

த்வத்₃ரூபம் பரசித்₃ரஸாயநமயம் சேதோஹரம் ஶ்ருண்வதாம் |

ஸத்₃ய: ப்ரேரயதே மதிம் மத₃யதே ரோமாஞ்சயத்யங்க₃கம்

வ்யாஸிஞ்சத்யபி ஶீதவாஷ்பவிஸரைராநந்த₃மூர்சோ₂த்₃ப₄வை: || 6||


6. உன் உருவம், ஸௌந்தர்யமான அமுதத்தைச் சொரிகிறது. ஆனந்தமாகவும், மனம் கவர்வதாகவும் உள்ளது. கேட்கும்போது, மறுபடி மறுபடி கேட்க வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குகிறது. ஆனந்தப் பரவசத்தில் உடல் புல்லரிக்கிறது. கண்களில் நீர் பெருகி உடலையே நனைத்து விடுகிறது.


एवंभूततया हि भक्त्यभिहितो योगस्स योगद्वयात्

कर्मज्ञानमयात् भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते ।

सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका

भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ ॥७॥


ஏவம் பூ₄ததயா ஹி ப₄க்த்யபி₄ஹிதோ யோக₃ஸ்ஸ யோக₃த்₃வயாத்

கர்மஜ்ஞாநமயாத் ப்₄ருஶோத்தமதரோ யோகீ₃ஶ்வரைர்கீ₃யதே |

ஸௌந்த₃ர்யைகரஸாத்மகே த்வயி க₂லு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா

ப₄க்திர்நிஶ்ரமமேவ விஶ்வபுருஷைர்லப்₄யா ரமாவல்லப₄ || 7||


7. யோகங்களில் சிறந்தது பக்தி யோகம். கர்ம-ஞான யோகங்களை விட பக்தி யோகமே சிறந்தது என யோகிகள் கூறுகின்றனர். அத்தகைய பக்தி யோகம், அழகுருவான உன்னிடத்தில் எளிதாக அடையக்கூடியதாய் இருக்கின்றது.


निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं

तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुन: ।

तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो

त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वादीयसी श्रेयसी ॥८॥


நிஷ்காமம் நியதஸ்வத₄ர்மசரணம் யத் கர்மயோகா₃பி₄த₄ம்

தத்₃தூ₃ரேத்யப₂லம் யதௌ₃பநிஷத₃ஜ்ஞாநோபலப்₄யம் புந: |

தத்த்வவ்யக்ததயா ஸுது₃ர்க₃மதரம் சித்தஸ்ய தஸ்மாத்₃விபோ₄

த்வத்ப்ரேமாத்மகப₄க்திரேவ ஸததம் ஸ்வாதீ₃யஸீ ஶ்ரேயஸீ || 8||


8. செய்ய வேண்டிய கர்மாக்களை பற்றற்று செய்வதும், அதனால் உண்டாகும் ஞானமும் கர்ம-ஞான யோகமாகும். இது காலம் கடந்தே பலனளிக்கும். ஞானத்தால் உண்டாகும் பலனோவெனில் இந்திரியங்களுக்குப் புலப்படாதது. சுலபத்தில் மனதிற்கு எட்டாதது. உன்னிடத்தில் செலுத்தும் பக்தியே நிரந்தரமான இன்பத்தை அளிப்பதாக இருக்கிறது.


अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला

बोधे भक्तिपथेऽथवाऽप्युचिततामायान्ति किं तावता ।

क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन-

श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिस्सिद्ध्यन्ति जन्मान्तरै: ॥९॥


அத்யாயாஸகராணி கர்மபடலாந்யாசர்ய நிர்யந்மலா

போ₃தே₄ ப₄க்திபதே₂(அ)த₂வா(அ)ப்யுசிததாமாயாந்தி கிம் தாவதா |

க்லிஷ்ட்வா தர்கபதே₂ பரம் தவ வபுர்ப்₃ரஹ்மாக்₂யமந்யே புந-

ஶ்சித்தார்த்₃ரத்வம்ருதே விசிந்த்ய ப₃ஹுபி₄ஸ்ஸித்₃த்₄யந்தி ஜந்மாந்தரை: || 9||


9. மிகவும் சிரமப்பட்டு கர்மாக்களைச் செய்து அதனால் வைராக்கியம் பெற்றால் ஞானயோகத்திலும், இல்லையேல் பக்தி யோகத்திலும் மக்கள் செல்கிறார்கள். அதனால் என்ன பயன்? மற்ற சிலரோ வேதாந்த மார்க்கத்தில் மிகவும் சிரமப்பட்டு, “பிரம்மம்” என்ற உன்னைத் தியானித்து, பல ஜன்மங்களுக்குப் பின் முக்தி அடைகிறார்கள்.


त्वद्भक्तिस्तु कथारसामृतझरीनिर्मज्जनेन स्वयं

सिद्ध्यन्ती विमलप्रबोधपदवीमक्लेशतस्तन्वती ।

सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो सैवास्तु मे त्वत्पद-

प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर ॥१०॥


த்வத்₃ப₄க்திஸ்து கதா₂ரஸாம்ருதஜ₂ரீநிர்மஜ்ஜநேந ஸ்வயம்

ஸித்₃த்₄யந்தீ விமலப்ரபோ₃த₄பத₃வீமக்லேஶதஸ்தந்வதீ |

ஸத்₃யஸ்ஸித்₃தி₄கரீ ஜயத்யயி விபோ₄ ஸைவாஸ்து மே த்வத்பத₃-

ப்ரேமப்ரௌடி₄ரஸார்த்₃ரதா த்₃ருததரம் வாதாலயாதீ₄ஶ்வர || 10||


10. பிரபுவே! உன்னிடம் கொண்ட பக்தி எப்படிபட்டது எனில், உன் கதைகளில் பெருகும் அம்ருத வெள்ளத்தில் மூழ்குவதால் தானாகவே மோக்ஷத்தை அளிக்கவல்லது. உடனேயே பலனைத் தருகிறது. சிரமமின்றி பிரம்ம ஞானத்தை அளிக்கிறது. உன் திருப்பாதங்களில் ஏற்பட்ட அன்பினால், இடைவிடாமல் உன்னிடம் பக்தி செய்ய எனக்கு அருள வேண்டும்.


பக்தி ப்ரார்த்தனை


पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:

स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।

चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-

नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥


பட₂ந்தோ நாமாநி ப்ரமத₃ப₄ரஸிந்தௌ₄ நிபதிதா:

ஸ்மரந்தோ ரூபம் தே வரத₃ கத₂யந்தோ கு₃ணகதா₂: |

சரந்தோ யே ப₄க்தாஸ்த்வயி க₂லு ரமந்தே பரமமூ-

நஹம் த₄ந்யாந் மந்யே ஸமதி₄க₃தஸர்வாபி₄லஷிதாந் || 1||


1. வரதா! பக்தர்கள், உன் நாமாகளைப் படித்தும், உன் ரூபத்தை தியானித்தும், அதனால் ஆனந்தக் கடலில் மூழ்கி, உன் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களே பாக்யசாலிகள் என்று கருதுகிறேன்.


गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ-

प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।

भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-

नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥


க₃த₃க்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவாரஸப₄ரே(அ)-

ப்யநாஸக்தம் சித்தம் ப₄வதி ப₃த விஷ்ணோ குரு த₃யாம் |

ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணரஸிகோ நாமநிவஹா-

நஹம் கா₃யம் கா₃யம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே || 2||


2. உள்ளும் புறமும் ரோகங்களால் கஷ்டப்படும் என் மனம் உன்னை சேவிப்பதில் ஈடுபடுவதில்லை. ப்ரபோ, உன் திருவடிகளை சரணடைந்து அவற்றை தியானம் செய்து, உன் நாமாகளை உச்சரித்துக் கொண்டு ஏகாந்தத்தில் இருக்க விரும்புகிறேன்.


कृपा ते जाता चेत्किमिव न हि लभ्यं तनुभृतां

मदीयक्लेशौघप्रशमनदशा नाम कियती ।

न के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता

भवद्भक्ता मुक्ता: सुखगतिमसक्ता विदधते ॥३॥


க்ருபா தே ஜாதா சேத்கிமிவ ந ஹி லப்₄யம் தநுப்₄ருதாம்

மதீ₃யக்லேஶௌக₄ப்ரஶமநத₃ஶா நாம கியதீ |

ந கே கே லோகே(அ)ஸ்மிந்நநிஶமயி ஶோகாபி₄ரஹிதா

ப₄வத்₃ப₄க்தா முக்தா: ஸுக₂க₃திமஸக்தா வித₃த₄தே || 3||


3. உன் கிருபை இருந்தால் ஜீவன்களுக்கு அடைய முடியாதது என்று ஒன்றும் இல்லை. அப்படியிருக்க, என் கஷ்டங்களை அழிப்பது உனக்கு எம்மாத்திரம்? உன் பக்தர்கள் எப்பொழுதும் துக்கமற்றவர்களாக, பற்றற்றவர்களாக, ஜீவன் முக்தர்களாக மோக்ஷத்தை அடைகின்றனர்.


मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो

भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा: ।

चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि -

त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम् ॥४॥


முநிப்ரௌடா₄ ரூடா₄ ஜக₃தி க₂லு கூ₃டா₄த்மக₃தயோ

ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணவிருஜோ நாரத₃முகா₂: |

சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா₄தபரசி -

த்ஸதா₃நந்தா₃த்₃வைதப்ரஸரபரிமக்₃நா: கிமபரம் || 4||.


4. நாரதர் முதலிய முனிவர்கள், ஞானத்தைப் பெற்று, உன் பாதஸேவையினால் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள். எப்போதும் பிரகாசிக்கும் பரமானந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். அவர்கள் விரும்பியவாறு சஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்கு இதைவிட அடைய வேண்டியது என்ன இருக்கிறது?


भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये-

दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।

न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो

भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥


ப₄வத்₃ப₄க்தி: ஸ்பீ₂தா ப₄வது மம ஸைவ ப்ரஶமயே-

த₃ஶேஷக்லேஶௌக₄ம் ந க₂லு ஹ்ருதி₃ ஸந்தே₃ஹகணிகா |

ந சேத்₃வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைக₃மவசோ

ப₄வேந்மித்₂யா ரத்₂யாபுருஷவசநப்ராயமகி₂லம் || 5||


5. ஓ குருவாயூரப்பா! எனக்கு உன்னிடத்தில் அளவற்ற பக்தி உண்டாக வேண்டும். அது, என் துன்பங்கள் யாவற்றையும் போக்கும் என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. அப்படியில்லையெனில், வியாசருடைய வாக்கும், வேதவாக்கும், நாடோடியின் பேச்சைப் போல பொய்யாக அமைந்துவிடும்.


भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्

किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी ।

पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल-

न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥


ப₄வத்₃ப₄க்திஸ்தாவத் ப்ரமுக₂மது₄ரா த்வத் கு₃ணரஸாத்

கிமப்யாரூடா₄ சேத₃கி₂லபரிதாபப்ரஶமநீ |

புநஶ்சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோ₃தோ₄த₃யமில-

ந்மஹாநந்தா₃த்₃வைதம் தி₃ஶதி கிமத: ப்ரார்த்₂யமபரம் || 6||.


6. உன் கதைகளைக் கேட்பதால் உண்டாகும் பக்தி இனிமையாக இருக்கிறது. இந்த பக்தி வளர வளர, தாபங்கள், துன்பங்கள் அடியோடு ஒழிகின்றன. முடிவில், அது சுத்தமான ப்ரம்மஞானத்துடன் கூடிய பேரானந்தத்தை அளிக்கிறது. இதற்குமேல் வேண்டக் கூடியது வேறு என்ன இருக்கிறது?


विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं

भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।

भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-

परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥


விதூ₄ய க்லேஶாந்மே குரு சரணயுக்₃மம் த்₄ருதரஸம்

ப₄வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ₄ |

ப₄வந்மூர்த்யாலோகே நயநமத₂ தே பாத₃துலஸீ-

பரிக்₄ராணே க்₄ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே || 7||


7. ஓ குருவாயூரப்பா, என் துன்பங்களைப் போக்கி அருள வேண்டும். என் கால்கள் உன் கோயிலைப் பிரதக்ஷிணம் செய்யவும், கைகள் உன்னைப் பூஜிக்கவும், கண்கள் உன் வடிவழகைக் காணவும், மூக்கு சரண துளசியை நுகரவும், காது உன் கதைகளை ஸ்ரவணம் செய்வதிலும் ஈடுபடும்வண்ணம் அருள் புரிய வேண்டும்.


प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि

त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।

उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो

यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥


ப்ரபூ₄தாதி₄வ்யாதி₄ப்ரஸப₄சலிதே மாமகஹ்ருதி₃

த்வதீ₃யம் தத்₃ரூபம் பரமஸுக₂சித்₃ரூபமுதி₃யாத் |

உத₃ஞ்சத்₃ரோமாஞ்சோ க₃லிதப₃ஹுஹர்ஷாஶ்ருநிவஹோ

யதா₂ விஸ்மர்யாஸம் து₃ருபஶமபீடா₃பரிப₄வாந் || 8||


8. கவலைகளாலும், ரோகங்களாலும் கலக்கமடைந்ததாக என் மனம் இருக்கிறது. அவற்றை மறந்து, மயிர்க்கூச்செறிய, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உன் சிதானந்த வடிவழகு என் மனதில் தோன்ற அருள்வாய். உலகக் கஷ்டங்களில் இருந்து தப்ப பகவத் தியானம் தான் வழி என்று கொள்ள வேண்டும்.


मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो

भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।

अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्

भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥


மருத்₃கே₃ஹாதீ₄ஶ த்வயி க₂லு பராஞ்சோ(அ)பி ஸுகி₂நோ

ப₄வத்ஸ்நேஹீ ஸோ(அ)ஹம் ஸுப₃ஹு பரிதப்யே ச கிமித₃ம் |

அகீர்திஸ்தே மா பூ₄த்₃வரத₃ க₃த₃பா₄ரம் ப்ரஶமயந்

ப₄வத் ப₄க்தோத்தம்ஸம் ஜ₂டிதி குரு மாம் கம்ஸத₃மந || 9||


9. உன்னிடம் பக்தியில்லாதவர்கள் சௌக்யமாய் இருக்கிறார்கள். உன்னிடம் பக்தியாய் இருக்கும் நானோ கஷ்டப்படுகிறேன். ஆச்சர்யம்! உன்னை நாடியவர்களைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கிய பழி உனக்கு வரக்கூடாது. ப்ரபோ! கம்ஸனை வதம் செய்தவனே, என் வியாதியைப் போக்கி என்னை ஆட்கொள்ள வேண்டும்.


किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया-

दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।.

पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-

न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥


கிமுக்தைர்பூ₄யோபி₄ஸ்தவ ஹி கருணா யாவது₃தி₃யா-

த₃ஹம் தாவத்₃தே₃வ ப்ரஹிதவிவிதா₄ர்தப்ரலபித: |

புர: க்ல்ருப்தே பாதே₃ வரத₃ தவ நேஷ்யாமி தி₃வஸா-

ந்யதா₂ஶக்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயந் || 10||


10. தேவா! அதிகமான சொற்கள் கூறி என்ன பயன்? உனக்கு எப்போது என் மேல் கருணை உண்டாகுமோ உண்டாகட்டும். அதுவரை, அழுது புலம்பாமல், என்னால் முடிந்தவரைக்கும் உன்னை ஸ்தோத்திரம், நமஸ்காரம் செய்து உன் பாதங்களில் பணிவேன். இதுவே என் முடிவு


அஷ்டாங்க யோகங்களும் அதன் சித்திகளும்


कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।

स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥


கல்யதாம் மம குருஷ்வ தாவதீம் கல்யதே ப₄வது₃பாஸநம் யயா |

ஸ்பஷ்டமஷ்டவித₄யோக₃சர்யயா புஷ்டயாஶு தவ துஷ்டிமாப்நுயாம் || 1||


1. உன்னை ஆராதிப்பதற்கும், தொழுவதற்கும் ஏற்ற சக்தியைக் கொடுத்தருள வேண்டும். அதனால், அஷ்டாங்க யோகத்தை அனுஷ்டித்து உன் அருளை அடைவேன்.


ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविता: ।

कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥


ப்₃ரஹ்மசர்யத்₃ருட₄தாதி₃பி₄ர்யமைராப்லவாதி₃நியமைஶ்ச பாவிதா: |

குர்மஹே த்₃ருட₄மமீ ஸுகா₂ஸநம் பங்கஜாத்₃யமபி வா ப₄வத்பரா: || 2||


2. ஸ்நானம், பிரம்மசர்யம் காப்பது போன்றவற்றால் பக்தர்களாகிய நாங்கள் தூய்மை அடைகிறோம். பத்மாசனம், சுகாசனம் முதலியவற்றை உறுதியாக செய்கிறோம்.


तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।

इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥


தாரமந்தரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி₄யம்ய நிர்மலா: |

இந்த்₃ரியாணி விஷயாத₃தா₂பஹ்ருத்யாஸ்மஹே ப₄வது₃பாஸநோந்முகா₂: || 3||


3. ஓங்காரத்தை ஜபித்தும், பிராணாயாமம் செய்தும் தூய்மை அடைகிறோம். இந்திரியங்களை அடக்கித் உன் உபாசனையில் ஈடுபட்டுவருகிறோம்.


अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।

तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥


அஸ்பு₂டே வபுஷி தே ப்ரயத்நதோ தா₄ரயேம தி₄ஷணாம் முஹுர்முஹு: |

தேந ப₄க்திரஸமந்தரார்த்₃ரதாமுத்₃வஹேம ப₄வத₃ங்க்₄ரிசிந்தகா || 4||


4. உன் திவ்ய சரீரம் வேதங்களாலும் விளக்க முடியாதது. சாதாரணமானவர்களுக்குப் புலப்படாதது. அத்தகைய வடிவழகை மிகுந்த பிரயத்தனத்துடன் தியானித்து பக்தியைப் பெறுகிறோம்.


विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।

अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥


விஸ்பு₂டாவயவபே₄த₃ஸுந்த₃ரம்ʼ த்வத்₃வபு: ஸுசிரஶீலநாவஶாத் |

அஶ்ரமம்ʼ மநஸி சிந்தயாமஹே த்₄யாநயோக₃நிரதாஸ்த்வதா₃ஶ்ரயா: || 5||


5. உன்னையே அண்டியிருக்கும் நாங்கள், தியானத்தில் ஈடுபட்டு, பலகாலம் பயின்றதன் காரணமாய் மிக அழகிய உன் வடிவழகை மனக்கண்ணில் எளிதாகக் காண்கிறோம்.


ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् ।

सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥६॥


த்₄யாயதாம் ஸகலமூர்திமீத்₃ருஶீமுந்மிஷந்மது₄ரதாஹ்ருதாத்மநாம் |

ஸாந்த்₃ரமோத₃ரஸரூபமாந்தரம் ப்₃ரஹ்ம ரூபமயி தே(அ)வபா₄ஸதே || 6||


6. ஓ குருவாயூரப்பா, இப்படிப்பட்ட உன் பூர்ணமான அழகு ரூபத்தை தியானிப்பதால் ஆனந்தமான மனதை உடையவர்களாக இருக்கின்றோம். அதனால், உன் ரூபம், ஆனந்த ரூபமான பரப்ரம்மமாக எங்கள் மனதில் விளங்குகிறது.


तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।

आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥


தத்ஸமாஸ்வத₃நரூபிணீம் ஸ்தி₂திம் த்வத்ஸமாதி₄மயி விஶ்வநாயக |

ஆஶ்ரிதா: புநரத: பரிச்யுதாவாரபே₄மஹி ச தா₄ரணாதி₃கம் || 7||


7. ஜகன்னாதா! உன் வடிவழகில் லயித்த நாங்கள் தன்னை மறந்த நிலையான சமாதியை அடைந்துள்ளோம். இதிலிருந்து நழுவினால், மறுபடியும் தாரணை முதலியவற்றைத் தொடங்குவோம்.


इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्परात्मसुखकल्पितोत्सवा: ।

मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥


இத்த₂மப்₄யஸநநிர்ப₄ரோல்லஸத்த்வத்பராத்மஸுக₂கல்பிதோத்ஸவா: |

முக்தப₄க்தகுலமௌலிதாம் க₃தா: ஸஞ்சரேம ஶுகநாரதா₃தி₃வத் || 8||


8. இப்படிச் செய்வதால், எங்களுக்கு உன் அழகு ரூபம் அதிகம் தெரியத் தொடங்குகிறது. அந்த பரப்ரம்ம அனுபவத்தால் பக்தர்களுள் சிறந்தவர்களாக ஆவோம். ஜீவன் முக்தர்களான சுகர், நாரதர் போல் நாங்களும் சஞ்சரிப்போம்.


त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।

योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥


த்வத்ஸமாதி₄விஜயே து ய: புநர்மங்க்ஷு மோக்ஷரஸிக: க்ரமேண வா |

யோக₃வஶ்யமநிலம் ஷடா₃ஶ்ரயைருந்நயத்யஜ ஸுஷும்நயா ஶநை: || 9||


9. பிறப்பு இல்லாதவனே! கிரம முக்தியையும், சமாதியையும் அடைய விரும்பும் யோகி, பிராணனை பிராணாயாமத்தால் அடக்குகிறான். பிறகு, மூலாதாரம் முதலிய ஆறு ஸ்தானங்களால், அப்பிராணவாயுவை மேலே கொண்டு செல்கிறான்.


लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।

ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥


லிங்க₃தே₃ஹமபி ஸந்த்யஜந்நதோ₂ லீயதே த்வயி பரே நிராக்₃ரஹ: |

ஊர்த்₄வலோககுதுகீ து மூர்த₄த: ஸார்த₄மேவ கரணைர்நிரீயதே || 10||


10. பிறகு அவன், பூத உடலை விட்டு, ஸூக்ஷ்ம சரீரத்தை அடைந்து உன்னிடத்தில் மறைந்து விடுகிறான். க்ரம முக்தி (படிப்படியாக) அடைய விரும்புபவன், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி, பஞ்ச இந்திரியங்களுடன் தலை வழியாக உயரக் கிளம்புகிறான்.


अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।

प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥


அக்₃நிவாஸரவலர்க்ஷபக்ஷகை₃ருத்தராயணஜுஷா ச தை₃வதை: |

ப்ராபிதோ ரவிபத₃ம் ப₄வத்பரோ மோத₃வாந் த்₄ருவபதா₃ந்தமீயதே || 11||


11. உன் பக்தன், அக்னி, பகல், சுக்லபக்ஷம் இவற்றுக்குரிய தேவதைகளாலும், உத்தராயண தேவதையாலும் ஸூர்ய லோகம் செல்கிறான். மிகவும் சந்தோஷமானவனாக த்ருவ ஸ்தானத்தையும் அடைகிறான்.


आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।

ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥


ஆஸ்தி₂தோ(அ)த₂ மஹராலயே யதா₃ ஶேஷவக்த்ரத₃ஹநோஷ்மணார்த்₃யதே |

ஈயதே ப₄வது₃பாஶ்ரயஸ்ததா₃ வேத₄ஸ: பத₃மத: புரைவ வா || 12||


12. பிறகு, மஹர்லோகத்தை அடைகிறான். தான் புண்யத்தால், ஆதிசேஷன் மூச்சுக்காற்றின் உஷ்ணம் தாக்குவதற்கு முன்பே, பிரம்மலோகத்தை அடைகிறான்.


तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।

स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥


தத்ர வா தவ பதே₃(அ)த₂வா வஸந் ப்ராக்ருதப்ரலய ஏதி முக்ததாம் |

ஸ்வேச்ச₂யா க₂லு புரா விமுச்யதே ஸம்விபி₄த்₃ய ஜக₃த₃ண்ட₃மோஜஸா || 13||


13. அந்த பிரம்மலோகத்தில் அல்லது உன்னுடைய லோகத்தில் வாழ்ந்து கொண்டு, பிரளயத்தின்போது மோக்ஷம் அடைகிறான். தனது யோகபலத்தால் பிரம்மலோகத்தை விட்டு வெளியேறி ஜீவன் முக்தனாகிறான்.


तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।

तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥


தஸ்ய ச க்ஷிதிபயோமஹோ(அ)நிலத்₃யோமஹத்ப்ரக்ருதிஸப்தகாவ்ருதீ: |

தத்ததா₃த்மகதயா விஶந் ஸுகீ₂ யாதி தே பத₃மநாவ்ருதம் விபோ₄ || 14||


14. ப்ரபோ! பூமி, நீர், நெருப்பு, காற்று, ஆகாசம், மகத்தத்வம், மாயை ஆகிய ஏழும் பிரம்மாண்டத்தை மறைத்துக் கொண்டிருக்கின்றன. உன் பக்தன் அவை ஒவ்வொன்றுக்கு உள்ளும் அந்தந்த உருவமாகவே ப்ரவேசிக்கிறான். ஸௌக்யமாய் உன்னுடைய ஸ்தானத்தை அடைகிறான்.


अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।

सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥


அர்சிராதி₃க₃திமீத்₃ருஶீம் வ்ரஜந் விச்யுதிம் ந ப₄ஜதே ஜக₃த்பதே |

ஸச்சிதா₃த்மக ப₄வத் கு₃ணோத₃யாநுச்சரந்தமநிலேஶ பாஹி மாம் || 15||


15. லோகநாயகா! இவ்வாறு அர்ச்சிராதி மார்க்கத்தை அடையும் அவன், மீண்டும் இவ்வுலகில் பிறப்பதில்லை. உன் மென்மையான புகழைப் பாடும் என்னை ரோகங்களிருந்து ரக்ஷிக்க வேண்டும்.


விராட் புருஷ உற்பத்தி


व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये

मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।

नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-

स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥


வ்யக்தாவ்யக்தமித₃ம் ந கிஞ்சித₃ப₄வத்ப்ராக்ப்ராக்ருதப்ரக்ஷயே

மாயாயாம் கு₃ணஸாம்யருத்₃த₄விக்ருதௌ த்வய்யாக₃தாயாம் லயம் |

நோ ம்ருத்யுஶ்ச ததா₃(அ)ம்ருதம் ச ஸமபூ₄ந்நாஹ்நோ ந ராத்ரே: ஸ்தி₂தி-

ஸ்தத்ரைகஸ்த்வமஶிஷ்யதா₂: கில பராநந்த₃ப்ரகாஶாத்மநா || 1||


1. மகாப்ரளயம் ஏற்பட்டபோது மாயையானது உன்னிடம் மறைந்து விட்டதால் பிரபஞ்சமும், வேறு ஒன்றும் இருக்கவில்லை. நீ ஒருவனே பரமானந்தரூபியாக தனித்து இருந்தாய்.


काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो

चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।

तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां

नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥


கால: கர்ம கு₃ணாஶ்ச ஜீவநிவஹா விஶ்வம் ச கார்யம் விபோ₄

சில்லீலாரதிமேயுஷி த்வயி ததா₃ நிர்லீநதாமாயயு: |

தேஷாம் நைவ வத₃ந்த்யஸத்த்வமயி போ₄: ஶக்த்யாத்மநா திஷ்ட₂தாம்

நோ சேத் கிம் க₃க₃நப்ரஸூநஸத்₃ருஶாம் பூ₄யோ ப₄வேத்ஸம்ப₄வ: || 2||


2. அப்போது நீ ஆத்ம ரூபமான லீலையில் ஈடுபட்டிருந்தாய். முக்குணங்களும், ஜீவராசிகளும், அவைகளின் செயல்களும் மறைந்து விட்டன. காரண ரூபமாக உள்ள அவை எல்லாவற்றையும் வேதங்கள் இல்லையென்று சொல்லவில்லை. இல்லாவிடில், ஆகாச புஷ்பத்தைப் போன்ற அவை மறுபடியும் உண்டாகுமா?


एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां

बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।

मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च

प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥


ஏவம் ச த்₃விபரார்த₄காலவிக₃தாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்

பி₃ப்₄ராணே த்வயி சுக்ஷுபே₄ த்ரிபு₄வநீபா₄வாய மாயா ஸ்வயம் |

மாயாத: க₂லு காலஶக்திரகி₂லாத்₃ருஷ்டம் ஸ்வபா₄வோ(அ)பி ச

ப்ராது₃ர்பூ₄ய கு₃ணாந்விகாஸ்ய வித₃து₄ஸ்தஸ்யாஸ்ஸஹாயக்ரியாம் || 3||


3. இவ்வாறு இரண்டு பரார்த்த காலம் முடிந்ததும் நீ படைக்க வேண்டும் என நினைத்தாய். மாயை படைப்பதை நினத்து கலக்கமடைந்தது. மாயையிலிருந்து மஹாகாலமும், ஜீவன்களின் கர்மம்,அவற்றின் தன்மை முதலியன தோன்றின. அவை, முக்குணங்களையும் உண்டாக்கி, ஸ்ருஷ்டியில் மாயைக்கு உதவி புரிந்தன.


मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्

भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।

कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं

माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥


மாயாஸந்நிஹிதோ(அ)ப்ரவிஷ்டவபுஷா ஸாக்ஷீதி கீ₃தோ ப₄வாந்

பே₄தை₃ஸ்தாம் ப்ரதிபி₃ம்ப₃தோ விவிஶிவாந் ஜீவோ(அ)பி நைவாபர: |

காலாதி₃ப்ரதிபோ₃தி₄தா(அ)த₂ ப₄வதா ஸம்சோதி₃தா ச ஸ்வயம்

மாயா ஸா க₂லு பு₃த்₃தி₄தத்த்வமஸ்ருஜத்₃யோ(அ)ஸௌ மஹாநுச்யதே || 4||


4. நீ மாயைக்கு அருகில் இருந்தாலும், அதன் சம்பந்தம் இல்லாததால், உன்னை சாட்சி என்று சொல்கிறார்கள். அந்த மாயையில், பல ரூபங்களுடன் இருக்கும் ஜீவனும் நீயே. அந்த மாயை, காலம், கர்மம், அவற்றின் தன்மை ஆகியவற்றால் உணர்த்தப் பட்டும், உன்னால் ஏவப்பட்டும் புத்தி தத்வத்தை உண்டாக்கியது. இந்த புத்தி தத்வமானது, மகத்தத்வம் என்று சொல்லப்படுகிறது.


तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं

जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।

चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ

सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥


தத்ராஸௌ த்ரிகு₃ணாத்மகோ(அ)பி ச மஹாந் ஸத்த்வப்ரதா₄ந: ஸ்வயம்

ஜீவே(அ)ஸ்மிந் க₂லு நிர்விகல்பமஹமித்யுத்₃போ₃த₄நிஷ்பாத்₃க: |

சக்ரே(அ)ஸ்மிந் ஸவிகல்பபோ₃த₄கமஹந்தத்த்வம் மஹாந் க₂ல்வஸௌ

ஸம்புஷ்டம் த்ரிகு₃ணைஸ்தமோ(அ)திப₃ஹுலம் விஷ்ணோ ப₄வத்ப்ரேரணாத் || 5||


5. இந்த மகத்தத்வம் முக்குணங்களின் உருவமாக இருந்தாலும், ஸத்வ குணத்தையே பிரதானமாகக் கொண்டு ஜீவனிடத்தில் நான் என்னும் அறிவை உண்டாக்குகிறது. இதுவே, தமோ குணம் நிறைந்ததாக ஜீவனிடத்தில் நான் மனிதன் என்ற அகங்காரத்தையும் உண்டு பண்ணுகிறது.


सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको

भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना

देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो

वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥


ஸோ(அ)ஹம் ச த்ரிகு₃ணக்ரமாத் த்ரிவித₄தாமாஸாத்₃ய வைகாரிகோ

பூ₄யஸ்தைஜஸதாமஸாவிதி ப₄வந்நாத்₃யேந ஸத்த்வாத்மநா

தே₃வாநிந்த்₃ரியமாநிநோ(அ)க்ருத தி₃ஶாவாதார்கபாஶ்யஶ்விநோ

வஹ்நீந்த்₃ராச்யுதமித்ரகாந் விது₄விதி₄ஶ்ரீருத்₃ரஶாரீரகாந் || 6||


6. இந்த அகங்காரம் தோன்றிய உடனேயே, ஸத்வம், ராஜஸம், தாமஸம் என்ற மூன்று தன்மைகளை அடைகிறது. முதலாவதான ஸத்வம் என்ற அகங்காரமானது, திசைகள், வாயு, ஸூர்யன், வருணன், அஸ்வினீதேவர்கள், அக்னி, இந்திரன், மித்ரன், பிரஜாபதி, சந்திரன், பிரம்மா, ருத்ரன், முதலியவர்களைப் படைத்தது.


भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वित

तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।

जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-

स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥


பூ₄மந் மாநஸபு₃த்₃த்₄யஹம் க்ருதிமிலச்சித்தாக்₂யவ்ருத்த்யந்விதம்

தச்சாந்த:கரணம் விபோ₄ தவ ப₃லாத் ஸத்த்வாம்ஶ ஏவாஸ்ருஜத் |

ஜாதஸ்தைஜஸதோ த₃ஶேந்த்₃ரியக₃ணஸ்தத்தாமஸாம்ஶாத்புந-

ஸ்தந்மாத்ரம் நப₄ஸோ மருத்புரபதே ஶப்₃தோ₃(அ)ஜநி த்வத்₃ப₃லாத் || 7||


7. உலகெங்கும் நிறைந்தவனே! உன்னுடைய வலிமையால் ஸத்வ குணமானது, மனது, புத்தி, அகங்காரம் இவைகளுடன் கூடிய சித்தம் என்ற ஸாத்வீக அகங்காரத்தை உண்டாக்கியது. ரஜோ குணமானது, பத்து இந்திரியங்களை உண்டாக்கியது. தமோ குணமானது ஆகாயத்தின் ஸூக்ஷ்ம சப்தத்தை உண்டாக்கியது.


श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं

तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।

एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं

भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥


ஶப்₃தா₃த்₃வ்யோம தத: ஸஸர்ஜித₂ விபோ₄ ஸ்பர்ஶம் ததோ மாருதம்

தஸ்மாத்₃ரூபமதோ மஹோ(அ)த₂ ச ரஸம் தோயம் ச க₃ந்த₄ம் மஹீம் |

ஏவம் மாத₄வ பூர்வபூர்வகலநாதா₃த்₃யாத்₃யத₄ர்மாந்விதம்

பூ₄தக்₃ராமமிமம் த்வமேவ ப₄க₃வந் ப்ராகாஶயஸ்தாமஸாத் || 8||


8. குருவாயூரப்பா! உன் தாமஸ அகங்காரத்தின் அம்சத்தால், சப்தத்திலிருந்து ஆகாசத்தையும், ஆகாயத்திலிருந்து ஸ்பரிசம், ஸ்பரிசத்திலிருந்து காற்று, காற்றிலிருந்து ரூபம், ரூபத்திலிருந்து தேஜஸ், தேஜஸிலிருந்து சுவை, சுவையிலிருந்து நீர், நீரிலிருந்து மணம், மணத்திலிருந்து பூமி ஆகியவற்றைப் படைத்தீர்கள். இப்படி உண்டானவைகளின் சேர்க்கையால் அவற்றின் தன்மைகள் கொண்ட பஞ்சபூதங்களையும் படைத்தாய்.


एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-

नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।

त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-

श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥


ஏதே பூ₄தக₃ணாஸ்ததே₂ந்த்₃ரியக₃ணா தே₃வாஶ்ச ஜாதா: ப்ருத₂ங்-

நோ ஶேகுர்பு₄வநாண்ட₃நிர்மிதிவிதௌ₄ தே₃வைரமீபி₄ஸ்ததா₃ |

த்வம் நாநாவித₄ஸூக்திபி₄ர்நுதகு₃ணஸ்தத்த்வாந்யமூந்யாவிஶம்-

ஶ்சேஷ்டாஶக்திமுதீ₃ர்ய தாநி க₄டயந் ஹைரண்யமண்ட₃ம் வ்யதா₄: || 9||


9. இப்படித் தோன்றிய பஞ்ச பூதங்களும், பஞ்ச இந்திரியங்களும் தனித்தனியே இருந்ததால் அவற்றால் பிரம்மாண்டத்தைப் படைக்கும் சக்தி இல்லை. அப்போது தேவர்கள் உன்னைத் துதித்தார்கள். உடன் நீ அந்த மகத்தத்வங்களுக்குள் பிரவேசித்து அவற்றுக்கு க்ரியா சக்தியை அளித்தாய், பிறகு பிரம்மாண்டத்தைப் படைத்தாய்.


अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:

निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।

साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको

निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥


அண்ட₃ம் தத்க₂லு பூர்வஸ்ருஷ்டஸலிலே(அ)திஷ்ட₂த் ஸஹஸ்ரம் ஸமா:

நிர்பி₄ந்த₃ந்நக்ருதா₂ஶ்சதுர்த₃ஶஜக₃த்₃ரூபம் விராடா₃ஹ்வயம் |

ஸாஹஸ்ரை: கரபாத₃மூர்த₄நிவஹைர்நிஶ்ஶேஷஜீவாத்மகோ

நிர்பா₄தோ(அ)ஸி மருத்புராதி₄ப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத் || 10||


10. குருவாயூரப்பா, நீ முதலில் ஜலத்தை உண்டாக்கினாய். பிரம்மாண்டம் அந்த நீரில் ஆயிரம் வருஷங்கள் மூழ்கி இருந்தது. நீ அதைப் பிளந்து கொண்டு ஈரேழு லோக ரூபமான விராட் ரூபத்தைத் தரித்தாய். ஆயிரக்கணக்கான கைகள், கால்கள், தலைகளுடன் சகலவிதமான ஜீவராசிகளின் வடிவமாகத் தோன்றினாய். அத்தகைய தாங்கள் என்னை சகல விதமான ரோகங்களில் இருந்தும் காக்க வேண்டும் என்று நம்பூதிரி வேண்ட அப்பனும் “அப்படியே ஆகட்டும்” என்று தம் தலையை அசைத்து அங்கீகரித்தான்.


விராட் ஸ்வரூப வர்ணனை


एवं चतुर्दशजगन्मयतां गतस्य

पातालमीश तव पादतलं वदन्ति ।

पादोर्ध्वदेशमपि देव रसातलं ते

गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन् ॥१॥


ஏவம் சதுர்த₃ஶஜக₃ந்மயதாம் க₃தஸ்ய

பாதாலமீஶ தவ பாத₃தலம் வத₃ந்தி |

பாதோ₃ர்த்₄வதே₃ஶமபி தே₃வ ரஸாதலம் தே

கு₃ல்ப₂த்₃வயம் க₂லு மஹாதலமத்₃பு₄தாத்மந் || 1||


1. குருவாயூரப்பா! நீ ஈரேழு உலக வடிவமான விராட் ரூபத்தைத் தரித்தாய்.

உன்னுடைய பாதங்களைப் பாதாளம் என்றும், மேல் பாதங்களை ரஸாதலம் என்றும், இரு கணுக்கால்களை மஹாதலம் என்று முனிவர்கள் கூறுகின்றனர்.


जङ्घे तलातलमथो सुतलं च जानू

किञ्चोरुभागयुगलं वितलातले द्वे ।

क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि-

र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥


ஜங்கே₄ தலாதலமதோ₂ ஸுதலம் ச ஜாநூ

கிஞ்சோருபா₄க₃யுக₃லம் விதலாதலே த்₃வே |

க்ஷோணீதலம் ஜக₄நமம்ப₃ரமங்க₃ நாபி₄-

ர்வக்ஷஶ்ச ஶக்ரநிலயஸ்தவ சக்ரபாணே || 2||


2. ப்ரபோ! சக்ரத்தைத் தரித்தவனே! உன் முழங்கால்கள் தலாதலம் என்றும்,

துடைகள் ஸூதல லோகமாகவும், இரு துடைகளின் கீழ்ப் பகுதி விதலம், அதலம் என்ற இரு உலகங்களாகவும், இடுப்பு பூலோகமாகவும், நாபி ஆகாசமாகவும், மார்பு இந்திர லோகமாகவும் கூறுகின்றனர்.


ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु

फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।

एवं जगन्मयतनो जगदाश्रितैर-

प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥


க்₃ரீவா மஹஸ்தவ முக₂ம் ச ஜநஸ்தபஸ்து

பா₂லம் ஶிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம் |

ஏவம் ஜக₃ந்மயதநோ ஜக₃தா₃ஶ்ரிதைர-

ப்யந்யைர்நிப₃த்₃த₄வபுஷே ப₄க₃வந்நமஸ்தே || 3||


3. கழுத்து மஹர்லோகம், முகம் ஜனோலோகம், நெற்றி தபோலோகம், தலை பிரம்மலோகம் என்று கூறுகின்றனர். இப்படி உலகமாகவும், உலகப் பொருட்களாகவும் சரீரத்தைக் கொண்ட உனக்கு நமஸ்காரம்.


त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द

छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।

उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं

पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥


த்வத்₃ப்₃ரஹ்மரந்த்₄ரபத₃மீஶ்வர விஶ்வகந்த₃

ச₂ந்தா₃ம்ஸி கேஶவ க₄நாஸ்தவ கேஶபாஶா: |

உல்லாஸிசில்லியுக₃லம் த்₃ருஹிணஸ்ய கே₃ஹம்

பக்ஷ்மாணி ராத்ரிதி₃வஸௌ ஸவிதா ச நேத்ரை || 4||


4. உலகிற்குக் காரணமானவனே! உன் தலையில் உள்ள ப்ரம்மரந்த்ர ஸ்தானமான தொறை வேதங்கள், கேசங்கள் மேகங்கள், அழகிய இரு புருவங்கள் பிரம்மாவினுடைய வீடு, இமைகள் இரவு பகல், கண்கள் ஸூர்யன்.


निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष:

कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।

लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ

तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥


நிஶ்ஶேஷவிஶ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ:

கர்ணௌ தி₃ஶோ(அ)ஶ்வியுக₃லம் தவ நாஸிகே த்₃வே |

லோப₄த்ரபே ச ப₄க₃வந்நத₄ரோத்தரோஷ்டௌ₂

தாராக₃ணாஶ்ச த₃ஶநா: ஶமநஶ்ச த₃ம்ஷ்ட்ரா || 5||


5. பகவானே! உன் கடைக்கண் பார்வையில் அனைத்து உலகங்களும் உண்டாகின்றன. காதுகள் திக்குகள், மூக்கு அஸ்வினீ தேவர்கள், கீழ் மேல் உதடுகள் ஆசையும் வெட்கமும், பற்கள் நட்சத்திரங்கள், கோரைப்பல் யமன்.


माया विलासहसितं श्वसितं समीरो

जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।

सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि-

र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥


மாயா விலாஸஹஸிதம் ஶ்வஸிதம் ஸமீரோ

ஜிஹ்வா ஜலம் வசநமீஶ ஶகுந்தபங்க்தி: |

ஸித்₃தா₄த₃ய: ஸ்வரக₃ணா முக₂ரந்த்₄ரமக்₃நி-

ர்தே₃வா பு₄ஜா: ஸ்தநயுக₃ம் தவ த₄ர்மதே₃வ: || 6||


6. ஈசனே! உன் புன்சிரிப்பு மாயை, உன் மூச்சு காற்று, நாக்கு தண்ணீர், வாக்கு பறவைக் கூட்டம், ஸ்வரக் கூட்டம் சித்தர் முதலியோர், வாய் நெருப்பு, கைகள் தேவர்கள், இரு ஸ்தனங்களும் தர்மதேவதை.


पृष्ठं त्वधर्म इह देव मन: सुधांशु -

रव्यक्तमेव हृदयंबुजमम्बुजाक्ष ।

कुक्षि: समुद्रनिवहा वसनं तु सन्ध्ये

शेफ: प्रजापतिरसौ वृषणौ च मित्र: ॥७॥


ப்ருஷ்ட₂ம் த்வத₄ர்ம இஹ தே₃வ மந: ஸுதா₄ம்ஶு -

ரவ்யக்தமேவ ஹ்ருத₃யம்பு₃ஜமம்பு₃ஜாக்ஷ |

குக்ஷி: ஸமுத்₃ரநிவஹா வஸநம் து ஸந்த்₄யே

ஶேப₂: ப்ரஜாபதிரஸௌ வ்ருஷணௌ ச மித்ர: || 7||


7. தேவா! உன் பின்புறம் அதர்மம், மனம் சந்திரன், இருதயத் தாமரையானது பிரக்ருதி, வயது ஏழு கடல்கள், வஸ்திரம் காலை, மாலை, ஸந்தி, ஆண்குறி பிரஜாபதி, இரு அண்டங்கள் மித்திரன்.


श्रोणीस्थलं मृगगणा: पदयोर्नखास्ते

हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु काल: ।

विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु-

चारूरुयुग्मचरणं करुणांबुधे ते ॥८॥


ஶ்ரோணீஸ்த₂லம் ம்ருக₃க₃ணா: பத₃யோர்நகா₂ஸ்தே

ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த₄வமுகா₂ க₃மநம் து கால: |

விப்ராதி₃வர்ணப₄வநம் வத₃நாப்₃ஜபா₃ஹு-

சாரூருயுக்₃மசரணம் கருணாம்பு₃தே₄ தே || 8||


8. கருணைக் கடலே! உன் இடுப்பு மிருகக்கூட்டங்கள், கால் நகங்கள் யானை, ஒட்டகம்,குதிரை முதலியவை, நடை காலம். உன் திருமுகம், கை, தொடை கால்களிலிருந்து நான்கு வர்ணங்களும் உண்டாயிற்று.


संसारचक्रमयि चक्रधर क्रियास्ते

वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैला: ।

नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम

जीयादिदं वपुरनिर्वचनीयमीश ॥९॥


ஸம்ஸாரசக்ரமயி சக்ரத₄ர க்ரியாஸ்தே

வீர்யம் மஹாஸுரக₃ணோ(அ)ஸ்தி₂குலாநி ஶைலா: |

நாட்₃யஸ்ஸரித்ஸமுத₃யஸ்தரவஶ்ச ரோம

ஜீயாதி₃த₃ம் வபுரநிர்வசநீயமீஶ || 9||


9. சக்ரம் ஏந்தியவனே! உன் செயல்கள் சக்ரம் போல் சுழலும் ஜனன மரணங்கள், பராக்ரமம் அசுரர்களின் கூட்டம், எலும்புகள் மலைகள், ரத்தக் குழாய்கள் நதிகள், ரோமம் மரங்கள். இப்படிப்பட்ட, விவரிக்கமுடியாத இந்த விராட்ரூபமானது என்றென்றும் சிறப்பாக விளங்கட்டும்.


ईदृग्जगन्मयवपुस्तव कर्मभाजां

कर्मावसानसमये स्मरणीयमाहु: ।

तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते

वातालयाधिप नमोऽस्तु निरुन्धि रोगान् ॥१०॥


ஈத்₃ருக்₃ஜக₃ந்மயவபுஸ்தவ கர்மபா₄ஜாம்

கர்மாவஸாநஸமயே ஸ்மரணீயமாஹு: |

தஸ்யாந்தராத்மவபுஷே விமலாத்மநே தே

வாதாலயாதி₄ப நமோ(அ)ஸ்து நிருந்தி₄ ரோகா₃ந் || 10||


10. இத்தகைய உலக ரூபமான உன் சரீரம், கர்ம வழியில் செல்பவர்களுக்கு,

அந்த கர்மங்களின் முடிவில் தியானிக்கத் தகுந்தது என்று சொல்லுகிறார்கள். அந்த பிரபஞ்சத்திற்கு நிர்மலமான நீயே உயிர். உனக்கு என் நமஸ்காரம். ரோகங்களை நீயே போக்க வேண்டும்.


பிரம்மாவின் தவமும் வைகுண்ட தரிசனமும்


एवं देव चतुर्दशात्मकजगद्रूपेण जात: पुन-

स्तस्योर्ध्वं खलु सत्यलोकनिलये जातोऽसि धाता स्वयम् ।

यं शंसन्ति हिरण्यगर्भमखिलत्रैलोक्यजीवात्मकं

योऽभूत् स्फीतरजोविकारविकसन्नानासिसृक्षारस: ॥१॥


ஏவம் தே₃வ சதுர்த₃ஶாத்மகஜக₃த்₃ரூபேண ஜாத: புந-

ஸ்தஸ்யோர்த்₄வம் க₂லு ஸத்யலோகநிலயே ஜாதோ(அ)ஸி தா₄தா ஸ்வயம்|

யம் ஶம்ஸந்தி ஹிரண்யக₃ர்ப₄மகி₂லத்ரைலோக்யஜீவாத்மகம்

யோ(அ)பூ₄த் ஸ்பீ₂தரஜோவிகாரவிகஸந்நாநாஸிஸ்ருக்ஷாரஸ: || 1||


1. தேவா! பதினான்கு உலகங்களாகத் தோன்றிய நீ, மறுபடியும் அந்தப் பதினான்கு உலகங்களுக்கு மேல் உள்ள ஸத்ய லோகத்தில் பிரம்மதேவனாகத் தோன்றினாய். ரஜோகுணத்தின் விகாரத்தால் தோன்றியவனும், பூமி,ஸ்வர்க்கம்,பாதாளம் என்ற மூன்று உலகங்களுக்கும் ஜீவ ஸ்வரூபமாயுள்ள உன்னை ஹிரண்யகர்பன் என்று முனிவர்கள் கூறுவார்கள்.


सोऽयं विश्वविसर्गदत्तहृदय: सम्पश्यमान: स्वयं

बोधं खल्वनवाप्य विश्वविषयं चिन्ताकुलस्तस्थिवान् ।

तावत्त्वं जगतां पते तप तपेत्येवं हि वैहायसीं

वाणीमेनमशिश्रव: श्रुतिसुखां कुर्वंस्तप:प्रेरणाम् ॥२॥


ஸோ(அ)யம் விஶ்வவிஸர்க₃த₃த்தஹ்ருத₃ய: ஸம்பஶ்யமாந: ஸ்வயம்

போ₃த₄ம் க₂ல்வநவாப்ய விஶ்வவிஷயம் சிந்தாகுலஸ்தஸ்தி₂வாந் |

தாவத்த்வம் ஜக₃தாம் பதே தப தபேத்யேவம் ஹி வைஹாயஸீம்

வாணீமேநமஶிஶ்ரவ: ஶ்ருதிஸுகா₂ம் குர்வம்ஸ்தப:ப்ரேரணாம் || 2||


2. அப்படிப்பட்ட, இந்த பிரம்மதேவர், உலகைப் படைக்க நினத்தார். படைப்பதைப் பற்றிய ஞானம் அடையாமல் கவலை அடைந்தார். அப்போது, தவம் செய், தவம் செய் என்று இனிமையான உன் அசரீரி வாக்கைக் கேட்டார்.


कोऽसौ मामवदत् पुमानिति जलापूर्णे जगन्मण्डले

दिक्षूद्वीक्ष्य किमप्यनीक्षितवता वाक्यार्थमुत्पश्यता ।

दिव्यं वर्षसहस्रमात्ततपसा तेन त्वमाराधित -

स्तस्मै दर्शितवानसि स्वनिलयं वैकुण्ठमेकाद्भुतम् ॥३॥


கோ(அ)ஸௌ மாமவத₃த் புமாநிதி ஜலாபூர்ணே ஜக₃ந்மண்ட₃லே

தி₃க்ஷூத்₃வீக்ஷ்ய கிமப்யநீக்ஷிதவதா வாக்யார்த₂முத்பஶ்யதா |

தி₃வ்யம் வர்ஷஸஹஸ்ரமாத்ததபஸா தேந த்வமாராதி₄த -

ஸ்தஸ்மை த₃ர்ஶிதவாநஸி ஸ்வநிலயம் வைகுண்ட₂மேகாத்₃பு₄தம் || 3||


3. பூமியானது நீரில் மூழ்கியிருக்கும் போது, யார் இவ்வாறு சொல்கிறார்கள் என்று பிரம்மதேவன் எல்லா திக்குகளிலும் தேடியும், ஒன்றும் புலப்படவில்லை. உடனே, அவர் ஆயிரம் தேவ வருஷங்கள் தவம் செய்யத் தொடங்கினார். அப்போது, பிரம்மதேவனுக்கு நீ உன்னுடைய இருப்பிடமான வைகுண்ட லோகத்தைக் காட்டினாய் அல்லவா?


माया यत्र कदापि नो विकुरुते भाते जगद्भ्यो बहि:

शोकक्रोधविमोहसाध्वसमुखा भावास्तु दूरं गता: ।

सान्द्रानन्दझरी च यत्र परमज्योति:प्रकाशात्मके

तत्ते धाम विभावितं विजयते वैकुण्ठरूपं विभो ॥४॥


மாயா யத்ர கதா₃பி நோ விகுருதே பா₄தே ஜக₃த்₃ப்₄யோ ப₃ஹி:

ஶோகக்ரோத₄விமோஹஸாத்₄வஸமுகா₂ பா₄வாஸ்து தூ₃ரம்ʼ க₃தா: |

ஸாந்த்₃ராநந்த₃ஜ₂ரீ ச யத்ர பரமஜ்யோதி:ப்ரகாஶாத்மகே

தத்தே தா₄ம விபா₄விதம்ʼ விஜயதே வைகுண்ட₂ரூபம் விபோ₄ || 4||


4. எங்கும் நிறைந்தவனே! ஈரேழு உலகங்களிலும் பிரகாசிக்கின்றதும், துக்கம், கோபம், அக்ஞானம், பயம் முதலிய உணர்ச்சிகள் அற்றதும், மாயையற்றதும், பரமானந்த வெள்ளத்தில் மூழ்கி இருப்பதுமான உன் லோகமான வைகுண்ட லோகத்தை பிரம்மனுக்குக் காட்டினாய்.


यस्मिन्नाम चतुर्भुजा हरिमणिश्यामावदातत्विषो

नानाभूषणरत्नदीपितदिशो राजद्विमानालया: ।

भक्तिप्राप्ततथाविधोन्नतपदा दीव्यन्ति दिव्या जना-

तत्ते धाम निरस्तसर्वशमलं वैकुण्ठरूपं जयेत् ॥५॥


யஸ்மிந்நாம சதுர்பு₄ஜா ஹரிமணிஶ்யாமாவதா₃தத்விஷோ

நாநாபூ₄ஷணரத்நதீ₃பிததி₃ஶோ ராஜத்₃விமாநாலயா: |

ப₄க்திப்ராப்தததா₂விதோ₄ந்நதபதா₃ தீ₃வ்யந்தி தி₃வ்யா ஜநா-

தத்தே தா₄ம நிரஸ்தஸர்வஶமலம் வைகுண்ட₂ரூபம் ஜயேத் || 5||


5. உன்னுடைய வைகுண்டத்தில், ஜனங்கள், பக்தியினால் கிடைத்த உயர்ந்த ஸ்தானத்தினால், நான்கு கைகளுடனும், இந்த்ரநீலக்கல் போன்ற நீல நிறத்துடனும், பல ரத்னங்களால் அலங்கரிக்கப்பட்டும், திவ்ய விமானங்களில் வசித்தும் வருகின்றனர். அப்படிப்பட்ட, பாபங்கள் அற்ற உன் வைகுண்ட லோகமானது சிறந்து விளங்கட்டும்.


नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया

विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा ।

त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते

यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥


நாநாதி₃வ்யவதூ₄ஜநைரபி₄வ்ருதா வித்₃யுல்லதாதுல்யயா

விஶ்வோந்மாத₃நஹ்ருத்₃யகா₃த்ரலதயா வித்₃யோதிதாஶாந்தரா |

த்வத்பாதா₃ம்பு₃ஜஸௌரபை₄ககுதுகால்லக்ஷ்மீ: ஸ்வயம் லக்ஷ்யதே

யஸ்மிந் விஸ்மயநீயதி₃வ்யவிப₄வம் தத்தே பத₃ம் தே₃ஹி மே || 6||


6. அந்த வைகுண்டத்தில், ஸ்ரீ மகாலக்ஷ்மி, தேவப்பெண்களால் சூழப்பட்டு, மின்னல் கொடி போன்ற அழகிய உடலால் திக்குகளைப் பிரகாசிக்கச் செய்கிறாள். உன் பாதத் தாமரையின் வாசனையை முகர்வதில் உள்ள ஆசையினால் அங்கு எப்போதும் காணப்படுகிறாள். அத்தகைய உன் இருப்பிடமான வைகுந்தத்தை எனக்குத் தந்தருள வேண்டும்.


तत्रैवं प्रतिदर्शिते निजपदे रत्नासनाध्यासितं

भास्वत्कोटिलसत्किरीटकटकाद्याकल्पदीप्राकृति ।

श्रीवत्साङ्कितमात्तकौस्तुभमणिच्छायारुणं कारणं

विश्वेषां तव रूपमैक्षत विधिस्तत्ते विभो भातु मे ॥७॥


தத்ரைவம் ப்ரதித₃ர்ஶிதே நிஜபதே₃ ரத்நாஸநாத்₄யாஸிதம்

பா₄ஸ்வத்கோடிலஸத்கிரீடகடகாத்₃யாகல்பதீ₃ப்ராக்ருதி |

ஶ்ரீவத்ஸாங்கிதமாத்தகௌஸ்துப₄மணிச்சா₂யாருணம் காரணம்

விஶ்வேஷாம் தவ ரூபமைக்ஷத விதி₄ஸ்தத்தே விபோ₄ பா₄து மே || 7||


7. அந்த வைகுண்டத்தில், பிரம்மதேவன், ரத்னமாயமான இருக்கையில், கோடி சூர்ய ஒளியோடு பிரகாசிக்கும் கிரீடம், தோள்வளை முதலிய ஆபரணங்களாலும், கௌஸ்துபமணியின் காந்தியாலும், ஸ்ரீவத்ஸம் என்ற மச்சத்துடனும் உள்ள உன்னைக் கண்டார். உன்னுடைய அந்த ரூபத்தை எனக்குக் காட்டி அருள வேண்டும்.


कालांभोदकलायकोमलरुचीचक्रेण चक्रं दिशा -

मावृण्वानमुदारमन्दहसितस्यन्दप्रसन्नाननम् ।

राजत्कम्बुगदारिपङ्कजधरश्रीमद्भुजामण्डलं

स्रष्टुस्तुष्टिकरं वपुस्तव विभो मद्रोगमुद्वासयेत् ॥८॥


காலாம்போ₄த₃கலாயகோமலருசீசக்ரேண சக்ரம் தி₃ஶா -

மாவ்ருண்வாநமுதா₃ரமந்த₃ஹஸிதஸ்யந்த₃ப்ரஸந்நாநநம் |

ராஜத்கம்பு₃க₃தா₃ரிபங்கஜத₄ரஶ்ரீமத்₃பு₄ஜாமண்ட₃லம்

ஸ்ரஷ்டுஸ்துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ₄ மத்₃ரோக₃முத்₃வாஸயேத் || 8||


8. எங்கும் நிறைந்திருப்பவனே! கார்மேகம், காயாம்பூ போன்ற நிறத்துடனும், திருமுகத்தில் அழகிய புன்சிரிப்புடன், நான்கு கரங்களில் சங்கும் சக்ரம்,கதை, தாமரை இவற்றுடன் பிரம்மதேவருக்கு காட்சி கொடுத்து, மகிழ்ச்சி அளித்த உன் ரூபம் என்னுடைய ரோகத்தைப் போக்கவேண்டும்.


दृष्ट्वा सम्भृतसम्भ्रम: कमलभूस्त्वत्पादपाथोरुहे

हर्षावेशवशंवदो निपतित: प्रीत्या कृतार्थीभवन् ।

जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय

द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे ॥९॥


த்₃ருஷ்ட்வா ஸம்ப்₄ருதஸம்ப்₄ரம: கமலபூ₄ஸ்த்வத்பாத₃பாதோ₂ருஹே

ஹர்ஷாவேஶவஶம்வதோ₃ நிபதித: ப்ரீத்யா க்ருதார்தீ₂ப₄வந் |

ஜாநாஸ்யேவ மநீஷிதம் மம விபோ₄ ஜ்ஞாநம் ததா₃பாத₃ய

த்₃வைதாத்₃வைதப₄வத்ஸ்வரூபபரமித்யாசஷ்ட தம் த்வாம்ப₄ஜே || 9||


9. பிரம்மதேவன், உன் வடிவழகைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சி அடைந்து, உன் பாதக்கமலங்களில் விழுந்து வணங்கி தன் கடமைகளை நிறைவேற்றினார். என்னுடைய இஷ்டத்தை அறிந்து, த்வைதம், அத்வைதம் என்ற உன் ஸ்வரூப ஞானத்தை எனக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தார். அத்தகைய உன்னை நான் பஜிக்கிறேன்.


आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन्

बोधस्ते भविता न सर्गविधिभिर्बन्धोऽपि सञ्जायते ।

इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढ: स्वयं

सृष्टौ तं समुदैरय: स भगवन्नुल्लासयोल्लाघताम् ॥१०॥


ஆதாம்ரே சரணே விநம்ரமத₂ தம் ஹஸ்தேந ஹஸ்தே ஸ்ப்ருஶந்

போ₃த₄ஸ்தே ப₄விதா ந ஸர்க₃விதி₄பி₄ர்ப₃ந்தோ₄(அ)பி ஸஞ்ஜாயதே |

இத்யாபா₄ஷ்ய கி₃ரம் ப்ரதோஷ்ய நிதராம் தச்சித்தகூ₃ட₄: ஸ்வயம்

ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை₃ரய: ஸ ப₄க₃வந்நுல்லாஸயோல்லாக₄தாம் || 10||


10. பிறகு, உன் சிவந்த பாதங்களில் பணிந்த அந்த பிரம்மதேவனை, நீ உன் கையால் தொட்டு, “ உமக்கு ஞானம் தோன்றப் போகிறது, எந்த பந்தமும் இல்லாமல் படைக்கும் காரியத்தைச் செய்வாயாக” என்று அவருடைய மனத்தில் இருந்து தூண்டினாய். அத்தகைய பகவானே! ஆரோக்யத்தைத் தர வேண்டும்


மஹாப்ரளயத்திற்குப் பின் உலகைப் படைத்தல்


एवं तावत् प्राकृतप्रक्षयान्ते

ब्राह्मे कल्पे ह्यादिमे लब्धजन्मा ।

ब्रह्मा भूयस्त्वत्त एवाप्य वेदान्

सृष्टिं चक्रे पूर्वकल्पोपमानाम् ॥१॥


ஏவம் தாவத் ப்ராக்ருதப்ரக்ஷயாந்தே

ப்₃ராஹ்மே கல்பே ஹ்யாதி₃மே லப்₃த₄ஜந்மா |

ப்₃ரஹ்மா பூ₄யஸ்த்வத்த ஏவாப்ய வேதா₃ந்

ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வகல்போபமாநாம் || 1||


1. இவ்வாறு மகாப்ரளயத்தின் முடிவில் பிரும்ம கல்பத்தில் பிரும்மதேவன் தோன்றி, உன்னிடமிருந்தே வேதங்களைப் பெற்று, முன் கல்பத்தில் இருந்தது போன்ற படைப்பைச் செய்தார்.


सोऽयं चतुर्युगसहस्रमितान्यहानि

तावन्मिताश्च रजनीर्बहुशो निनाय ।

निद्रात्यसौ त्वयि निलीय समं स्वसृष्टै-

र्नैमित्तिकप्रलयमाहुरतोऽस्य रात्रिम् ॥२॥


ஸோ(அ)யம் சதுர்யுக₃ஸஹஸ்ரமிதாந்யஹாநி

தாவந்மிதாஶ்ச ரஜநீர்ப₃ஹுஶோ நிநாய |

நித்₃ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை-

ர்நைமித்திகப்ரலயமாஹுரதோ(அ)ஸ்ய ராத்ரிம் || 2||


2. அவர், நான்காயிரம் யுகங்களான இரவு பகல்களைக் கழித்து, தன்னால் படைக்கப்பட்ட உலகங்களுடன் உன்னிடத்தில் மறைந்து தூங்கினார். அவருடைய இந்த இரவை நைமித்திக ப்ரளயம் என்று கூறுகின்றனர்.


अस्मादृशां पुनरहर्मुखकृत्यतुल्यां

सृष्टिं करोत्यनुदिनं स भवत्प्रसादात् ।

प्राग्ब्राह्मकल्पजनुषां च परायुषां तु

सुप्तप्रबोधनसमास्ति तदाऽपि सृष्टि: ॥३॥


அஸ்மாத்₃ருஶாம் புநரஹர்முக₂க்ருத்யதுல்யாம்

ஸ்ருஷ்டிம் கரோத்யநுதி₃நம் ஸ ப₄வத்ப்ரஸாதா₃த் |

ப்ராக்₃ப்₃ராஹ்மகல்பஜநுஷாம் ச பராயுஷாம் து

ஸுப்தப்ரபோ₃த₄நஸமாஸ்தி ததா₃(அ)பி ஸ்ருஷ்டி: || 3||


3. எங்களைப் போன்றவர்களின் காலைக் கடன்களுக்கு ஒப்பான படைத்தலை உன்னுடைய அருளால் செய்கிறார். முந்தைய பிரம்மா கல்பத்தில் தோன்றிய சிரஞ்சீவிகளுடைய படைப்பு, தூங்கி விழிப்பதற்கு சமமாக இருக்கிறது.


पञ्चाशदब्दमधुना स्ववयोर्धरूप-

मेकं परार्धमतिवृत्य हि वर्ततेऽसौ ।

तत्रान्त्यरात्रिजनितान् कथयामि भूमन्

पश्चाद्दिनावतरणे च भवद्विलासान् ॥४॥


பஞ்சாஶத₃ப்₃த₃மது₄நா ஸ்வவயோர்த₄ரூப-

மேகம் பரார்த₄மதிவ்ருத்ய ஹி வர்ததே(அ)ஸௌ |

தத்ராந்த்யராத்ரிஜநிதாந் கத₂யாமி பூ₄மந்

பஶ்சாத்₃தி₃நாவதரணே ச ப₄வத்₃விலாஸாந் || 4||


4. ப்ரும்மன் இப்போது தன்னுடைய ஆயுளான ஐம்பது வருஷங்கள் அடங்கிய ஒரு பரார்த்தத்தை (ஒரு கோடி ஆண்டுகள்) தாண்டி இருக்கிறார் என்பது பிரசித்தம். எங்கும் நிறைந்தவனே! அதில், கடைசி இரவிலும், அடுத்த நாள் ஆரம்பத்திலும் நிகழ்ந்த உன் லீலைகளைச் சொல்கிறேன்.


दिनावसानेऽथ सरोजयोनि:

सुषुप्तिकामस्त्वयि सन्निलिल्ये ।

जगन्ति च त्वज्जठरं समीयु-

स्तदेदमेकार्णवमास विश्वम् ॥५॥


தி₃நாவஸாநே(அ)த₂ ஸரோஜயோநி:

ஸுஷுப்திகாமஸ்த்வயி ஸந்நிலில்யே |

ஜக₃ந்தி ச த்வஜ்ஜட₂ரம் ஸமீயு-

ஸ்ததே₃த₃மேகார்ணவமாஸ விஶ்வம் || 5||


5. ப்ரும்மன், தன்னுடைய பகலின் முடிவில் நித்திரையை விரும்பி உன்னிடத்தில் ஐக்கியமானார். மூவுலகங்களும் உன்னுடைய வயிற்றில் அடங்கின. இந்த உலகம் சமுத்திரமாக ஆயிற்று.


तवैव वेषे फणिराजि शेषे

जलैकशेषे भुवने स्म शेषे ।

आनन्दसान्द्रानुभवस्वरूप:

स्वयोगनिद्रापरिमुद्रितात्मा ॥६॥


தவைவ வேஷே ப₂ணிராஜி ஶேஷே

ஜலைகஶேஷே பு₄வநே ஸ்ம ஶேஷே |

ஆநந்த₃ஸாந்த்₃ராநுப₄வஸ்வரூப:

ஸ்வயோக₃நித்₃ராபரிமுத்₃ரிதாத்மா || 6||


6. உலகமெங்கும் தண்ணீர் மட்டுமே மீதமாக இருந்தது. ஆனந்த வடிவமாகவும், ஞான வடிவமாகவும் உள்ள நீ, ஆதிசேஷன் மேல் நித்திரை கொண்டிருந்தாய்.


कालाख्यशक्तिं प्रलयावसाने

प्रबोधयेत्यादिशता किलादौ ।

त्वया प्रसुप्तं परिसुप्तशक्ति-

व्रजेन तत्राखिलजीवधाम्ना ॥७॥


காலாக்₂யஶக்திம் ப்ரலயாவஸாநே

ப்ரபோ₃த₄யேத்யாதி₃ஶதா கிலாதௌ₃ |

த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்தஶக்தி-

வ்ரஜேந தத்ராகி₂லஜீவதா₄ம்நா || 7||


7. அந்த சமயத்தில் எல்லா சக்திகளும் உன்னிடத்தில் அடங்கியிருந்தன. அதில் கால சக்தியை பிரளய முடிவில் உன்னை எழுப்புமாறு கட்டளை இட்டிருந்தாய். பிறகு ஆதிசேஷன் மீது உறங்கினாய்.


चतुर्युगाणां च सहस्रमेवं

त्वयि प्रसुप्ते पुनरद्वितीये ।

कालाख्यशक्ति: प्रथमप्रबुद्धा

प्राबोधयत्त्वां किल विश्वनाथ ॥८॥


சதுர்யுகா₃ணாம் ச ஸஹஸ்ரமேவம்

த்வயி ப்ரஸுப்தே புநரத்₃விதீயே |

காலாக்₂யஶக்தி: ப்ரத₂மப்ரபு₃த்₃தா₄

ப்ராபோ₃த₄யத்த்வாம் கில விஶ்வநாத₂ || 8||


8. லோகநாதனே! இவ்வாறு ஆயிரம் சதுர்யுகங்கள் தூங்கினாய். அப்போது, கால சக்தி முதலில் எழுந்து, உன்னை எழுப்பியது.


विबुध्य च त्वं जलगर्भशायिन्

विलोक्य लोकानखिलान् प्रलीनान् ।

तेष्वेव सूक्ष्मात्मतया निजान्त: -

स्थितेषु विश्वेषु ददाथ दृष्टिम् ॥९॥


விபு₃த்₄ய ச த்வம் ஜலக₃ர்ப₄ஶாயிந்

விலோக்ய லோகாநகி₂லாந் ப்ரலீநாந் |

தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த: -

ஸ்தி₂தேஷு விஶ்வேஷு த₃தா₃த₂ த்₃ருஷ்டிம் || 9||


9. பிரளய நீரில் படுத்திருந்த நீ, விழித்ததும், அனைத்து உலகங்களும் உன்னிடத்தில் மறைந்திருக்கக் கண்டாய். ஸூக்ஷ்ம வடிவில் இருந்த அந்த உலகங்களின் மீது உன்னுடைய அருள் பார்வை விழுந்தது.


ततस्त्वदीयादयि नाभिरन्ध्रा-

दुदञ्चितं किंचन दिव्यपद्मम् ।

निलीननिश्शेषपदार्थमाला-

संक्षेपरूपं मुकुलायमानम् ॥१०॥


ததஸ்த்வதீ₃யாத₃யி நாபி₄ரந்த்₄ரா-

து₃த₃ஞ்சிதம் கிம்சந தி₃வ்யபத்₃மம் |

நிலீநநிஶ்ஶேஷபதா₃ர்த₂மாலா-

ஸம்க்ஷேபரூபம் முகுலாயமாநம் || 10||


10. உடனே, உன் நாபியிலிருந்து ஓர் அழகிய தாமரை மொட்டு உண்டானது. அதில் உன்னிடம் ஐக்கியமான எல்லா ஜீவன்களும், சாதனங்களும் அடங்கிருந்தன.


तदेतदंभोरुहकुड्मलं ते

कलेवरात् तोयपथे प्ररूढम् ।

बहिर्निरीतं परित: स्फुरद्भि:

स्वधामभिर्ध्वान्तमलं न्यकृन्तत् ॥११॥


ததே₃தத₃ம்போ₄ருஹகுட்₃மலம் தே

கலேவராத் தோயபதே₂ ப்ரரூட₄ம் |

ப₃ஹிர்நிரீதம் பரித: ஸ்பு₂ரத்₃பி₄:

ஸ்வதா₄மபி₄ர்த்₄வாந்தமலம் ந்யக்ருʼந்தத் || 11||


11. அந்த மொட்டு, நீரினுள்ளே இருந்து நீருக்கு மேலே வளர்ந்தது. அது, தன்னுடைய பிரகாசத்தால், பிரளயகால இருட்டை போக்கியது.


संफुल्लपत्रे नितरां विचित्रे

तस्मिन् भवद्वीर्यधृते सरोजे ।

स पद्मजन्मा विधिराविरासीत्

स्वयंप्रबुद्धाखिलवेदराशि: ॥१२॥


ஸம்பு₂ல்லபத்ரே நிதராம் விசித்ரே

தஸ்மிந் ப₄வத்₃வீர்யத்₄ருதே ஸரோஜே |

ஸ பத்₃மஜந்மா விதி₄ராவிராஸீத்

ஸ்வயம்ப்ரபு₃த்₃தா₄கி₂லவேத₃ராஶி: || 12||


12. அந்த மொட்டு நன்கு மலர்ந்தது. அதிலிருந்து பத்மஜன் என்ற பிரும்மதேவன் உண்டானார். அவருக்கு முன்பு கற்ற வேதங்கள் நினைவுக்கு வந்தன.


अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे

त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।

अनन्तभूमा मम रोगराशिं

निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥


இந்த ஸ்லோகத்தைப் படித்தால் ரோகங்கள் விலகும்.


அஸ்மிந் பராத்மந் நநு பாத்₃மகல்பே

த்வமித்த₂முத்தா₂பிதபத்₃மயோநி: |

அநந்தபூ₄மா மம ரோக₃ராஶிம்

நிருந்தி₄ வாதாலயவாஸ விஷ்ணோ || 13||


13. விஷ்ணுவே! குருவாயூரில் வசிப்பவனே! எல்லையில்லா மகிமை உடையவரும், பத்ம கல்பத்தில் ப்ரும்மதேவரைப் படைத்தவருமான நீ என்னுடைய ரோகக்கூட்டங்களைப் போக்க வேண்டும்.


#தசகம்_9 ப்ரும்மாவின் தவமும் மூவுலகப் படைப்பும் स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे कुत: स्विदिदमम्बुधावुदितमित्यनालोकयन् । तदीक्षणकुतूहलात् प्रतिदिशं विवृत्तानन- श्चतुर्वदनतामगाद्विकसदष्टदृष्ट्यम्बुजाम् ॥१॥ ஸ்தி₂தஸ்ஸ கமலோத்₃ப₄வஸ்தவ ஹி நாபி₄பங்கேருஹே குத: ஸ்விதி₃த₃மம்பு₃தா₄வுதி₃தமித்யநாலோகயந் | ததீ₃க்ஷணகுதூஹலாத் ப்ரதிதி₃ஶம்ʼ விவ்ருத்தாநந- ஶ்சதுர்வத₃நதாமகா₃த்₃விகஸத₃ஷ்டத்₃ருஷ்ட்யம்பு₃ஜாம் || 1|| 1. உன்னுடைய நாபிக் கமலத்திலிருந்து உண்டான அந்த பிரும்மன், இந்தத் தாமரை எங்கிருந்து உண்டானது என்று எட்டு திசைகளிலும் தேடினார். அப்போது, தாமரை மலர் போன்ற எட்டு கண்களுடன் கூடிய நான்கு முகங்களைப் பெற்றார். महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् । क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं कुत: स्विदिदम्बुजं समजनीति चिन्तामगात् ॥२॥ மஹார்ணவவிகூ₄ர்ணிதம் கமலமேவ தத்கேவலம் விலோக்ய தது₃பாஶ்ரயம் தவ தநும் து நாலோகயந் | க ஏஷ கமலோத₃ரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம் குத: ஸ்விதி₃த₃ம்பு₃ஜம் ஸமஜநீதி சிந்தாமகா₃த் || 2|| 2. அந்தத் தாமரை சமுத்திர ஜலத்தில் அசைந்தது. அந்த மலருக்குக் காரணமான உன் அழகு உருவத்தை அவரால் காண முடியவில்லை. “இந்த தாமரையில், துணையில்லாமல் தனியாக இருக்கிறேனே, இந்தத் தாமரை எங்கிருந்து உண்டானது?” என்று யோசித்தார். अमुष्य हि सरोरुह: किमपि कारणं सम्भ्वे- दिति स्म कृतनिश्चयस्स खलु नालरन्ध्राध्वना । स्वयोगबलविद्यया समवरूढवान् प्रौढधी - स्त्वदीयमतिमोहनं न तु कलेवरं दृष्टवान् ॥३॥ அமுஷ்ய ஹி ஸரோருஹ: கிமபி காரணம் ஸம்ப்₄வே- தி₃தி ஸ்ம க்ருதநிஶ்சயஸ்ஸ க₂லு நாலரந்த்₄ராத்₄வநா | ஸ்வயோக₃ப₃லவித்₃யயா ஸமவரூட₄வாந் ப்ரௌட₄தீ₄ - ஸ்த்வதீ₃யமதிமோஹநம் ந து கலேவரம் த்₃ருஷ்டவாந் || 3|| 3. சிறந்த புத்தியுள்ள பிரமன் இந்த தாமரை உண்டான இடம் ஒன்று இருக்க வேண்டும் என்று தீர்மானித்து, தனது யோக சக்தியினால் அந்தத் தாமரைத் தண்டின் வழியே சென்று தேடினார். ஆனாலும் உன் உருவத்தைக் காண முடியவில்லை. तत: सकलनालिकाविवरमार्गगो मार्गयन् प्रयस्य शतवत्सरं किमपि नैव संदृष्टवान् । निवृत्य कमलोदरे सुखनिषण्ण एकाग्रधी: समाधिबलमादधे भवदनुग्रहैकाग्रही ॥४॥ தத: ஸகலநாலிகாவிவரமார்க₃கோ₃ மார்க₃யந் ப்ரயஸ்ய ஶதவத்ஸரம் கிமபி நைவ ஸம்த்₃ருஷ்டவாந் | நிவ்ருத்ய கமலோத₃ரே ஸுக₂நிஷண்ண ஏகாக்₃ரதீ₄: ஸமாதி₄ப₃லமாத₃தே₄ ப₄வத₃நுக்₃ரஹைகாக்₃ரஹீ || 4|| 4. நூறு வருடங்கள் தாமரைத் தண்டின் துவாரங்களில் தேடியும் உன்னை எங்கும் காணவில்லை. பிறகு, மனத்தை ஒருநிலைப்படுத்தி, தீவிர தியானத்தைச் செய்தார்.

शतेन परिवत्सरैर्दृढसमाधिबन्धोल्लसत्- प्रबोधविशदीकृत: स खलु पद्मिनीसम्भव: । अदृष्टचरमद्भुतं तव हि रूपमन्तर्दृशा व्यचष्ट परितुष्टधीर्भुजगभोगभागाश्रयम् ॥५॥ ஶதேந பரிவத்ஸரைர்த்₃ருட₄ஸமாதி₄ப₃ந்தோ₄ல்லஸத்- ப்ரபோ₃த₄விஶதீ₃க்ருத: ஸ க₂லு பத்₃மிநீஸம்ப₄வ: | அத்₃ருஷ்டசரமத்₃பு₄தம் தவ ஹி ரூபமந்தர்த்₃ருஶா வ்யசஷ்ட பரிதுஷ்டதீ₄ர்பு₄ஜக₃போ₄க₃பா₄கா₃ஶ்ரயம் || 5|| 5. அவ்வாறு நூறு வருடங்கள் தவம் செய்தார். அதனால் ஞானத்தை அடைந்தார். ஆதிசேஷனின் மேல் அமர்ந்த உன் அழகிய உருவத்தை ஞானக் கண்ணால் கண்டு ஆனந்தம் அடைந்தார். किरीटमुकुटोल्लसत्कटकहारकेयूरयुङ्- मणिस्फुरितमेखलं सुपरिवीतपीताम्बरम् । कलायकुसुमप्रभं गलतलोल्लसत्कौस्तुभं वपुस्तदयि भावये कमलजन्मे दर्शितम् ॥६॥ கிரீடமுகுடோல்லஸத்கடகஹாரகேயூரயுங்- மணிஸ்பு₂ரிதமேக₂லம் ஸுபரிவீதபீதாம்ப₃ரம் | கலாயகுஸுமப்ரப₄ம் க₃லதலோல்லஸத்கௌஸ்துப₄ம் வபுஸ்தத₃யி பா₄வயே கமலஜந்மே த₃ர்ஶிதம் || 6|| 6. கிரீடம், மகுடம் இவைகளால் பிரகாசிக்கிறதும், வளைகள், முத்து மாலைகள், தோள்வளைகள் இவற்றுடனும், சிறந்த ரத்தினங்கள் இழைத்த ஒட்டியாணத்துடனும், பீதாம்பரத்துடனும், காயாம்பூ போன்ற நீல நிறத்துடன் விளங்கும் கௌஸ்துபம் என்ற மணியுடனும் திகழும் உன் அழகிய திருமேனியைக் கண்டார். அவ்வாறு, பிரும்மதேவனுக்குக் காட்சி அளித்த உன் திருமேனியை நான் தியானம் செய்கிறேன். श्रुतिप्रकरदर्शितप्रचुरवैभव श्रीपते हरे जय जय प्रभो पदमुपैषि दिष्ट्या दृशो: । कुरुष्व धियमाशु मे भुवननिर्मितौ कर्मठा- मिति द्रुहिणवर्णितस्वगुणबंहिमा पाहि माम् ॥७॥ ஶ்ருதிப்ரகரத₃ர்ஶிதப்ரசுரவைப₄வ ஶ்ரீபதே ஹரே ஜய ஜய ப்ரபோ₄ பத₃முபைஷி தி₃ஷ்ட்யா த்₃ருஶோ: | குருஷ்வ தி₄யமாஶு மே பு₄வநநிர்மிதௌ கர்மடா₂- மிதி த்₃ருஹிணவர்ணிதஸ்வகு₃ணப₃ம்ஹிமா பாஹி மாம் || 7|| 7. ஓ விஷ்ணுவே! உன் பெருமைகளை வேதங்கள் கூறுகின்றன. நான் செய்த பாக்கியத்தால் உன்னைக் கண்டேன். உலகைப் படைக்கும் செயலில் எனக்கு நல்ல திறமையை நீ தர வேண்டும் என்று பிரமன் துதித்தார். இப்படித் துதிக்கப்பட்ட கல்யாண குணங்களை உடைய நீ என்னைக் காக்க வேண்டும். लभस्व भुवनत्रयीरचनदक्षतामक्षतां गृहाण मदनुग्रहं कुरु तपश्च भूयो विधे । भवत्वखिलसाधनी मयि च भक्तिरत्युत्कटे- त्युदीर्य गिरमादधा मुदितचेतसं वेधसम् ॥८॥ லப₄ஸ்வ பு₄வநத்ரயீரசநத₃க்ஷதாமக்ஷதாம் க்₃ருஹாண மத₃நுக்₃ரஹம் குரு தபஶ்ச பூ₄யோ விதே₄ | ப₄வத்வகி₂லஸாத₄நீ மயி ச ப₄க்திரத்யுத்கடே- த்யுதீ₃ர்ய கி₃ரமாத₃தா₄ முதி₃தசேதஸம் வேத₄ஸம் || 8|| 8. மூன்று உலகையும் படைக்கும் திறமையை அடைந்து, என் அருளையும் பெறுவாய். மீண்டும் தவம் செய்து, என்னிடத்தில் சிறந்த பக்தியையும் பெறுவாய் என்று அனுக்ரஹித்தாய். शतं कृततपास्तत: स खलु दिव्यसंवत्सरा- नवाप्य च तपोबलं मतिबलं च पूर्वाधिकम् । उदीक्ष्य किल कम्पितं पयसि पङ्कजं वायुना भवद्बलविजृम्भित: पवनपाथसी पीतवान् ॥९॥ ஶதம் க்ருததபாஸ்தத: ஸ க₂லு தி₃வ்யஸம்வத்ஸரா- நவாப்ய ச தபோப₃லம் மதிப₃லம் ச பூர்வாதி₄கம் | உதீ₃க்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுநா ப₄வத்₃ப₃லவிஜ்ரும்பி₄த: பவநபாத₂ஸீ பீதவாந் || 9|| 9. ப்ரும்மதேவர், நூறு தேவ வருடங்கள் தவம் செய்து, தவவலிமையையும், அதிகமான அறிவையும் பெற்றார். தான் அமர்ந்திருந்த தாமரை காற்றினால் அசைவதைக் கண்டார். உன் பலத்தால் அந்த காற்றையும், நீரையும் பருகினார். तवैव कृपया पुनस्सरसिजेन तेनैव स: प्रकल्प्य भुवनत्रयीं प्रववृते प्रजानिर्मितौ । तथाविधकृपाभरो गुरुमरुत्पुराधीश्वर त्वमाशु परिपाहि मां गुरुदयोक्षितैरीक्षितै: ॥१०॥ தவைவ க்ருபயா புநஸ்ஸரஸிஜேந தேநைவ ஸ: ப்ரகல்ப்ய பு₄வநத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜாநிர்மிதௌ | ததா₂வித₄க்ருபாப₄ரோ கு₃ருமருத்புராதீ₄ஶ்வர த்வமாஶு பரிபாஹி மாம் கு₃ருத₃யோக்ஷிதைரீக்ஷிதை: || 10|| 10. உன் கருணையால் பிரும்மன் மூன்று உலகங்களையும் படைத்தார். அப்பேர்ப்பட்ட ஓ குருவாயூரப்பா! உன் கருணையான கடைக்கண் பார்வையால் என்னை ரக்ஷிக்க வேண்டும்.



30,663 views5 comments

Recent Posts

See All

5 Comments


padminip16
Nov 08

Is full Narayaneeyam with meaning available? If available can you please publish?

Like

Jyoti Ganesh
Jyoti Ganesh
Aug 07

I want the meaning of full Narayaneeyam of the 100dasagams

Like

Jayam Arun
Jayam Arun
Mar 30

I want to read full narsyaneeyam

Like

thanu1971
thanu1971
Nov 23, 2023

Very useful. Thanks. Keep up your good work

Like

Mallayasamy Mahendran
Mallayasamy Mahendran
Aug 20, 2023

Please be informed that I need full Sri man Narayaniyam please send my what's spp 9442185107

Like
bottom of page