top of page
Writer's pictureAnbezhil

ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 1 -100 ஸ்லோகங்களும் பொருளும். பகுதி - 10 தசகம் 90 - 97

விஷ்ணுவின் மகத்துவம்

वृकभृगुमुनिमोहिन्यम्बरीषादिवृत्ते-

ष्वयि तव हि महत्त्वं सर्वशर्वादिजैत्रम् ।

स्थितमिह परमात्मन् निष्कलार्वागभिन्नं

किमपि यदवभातं तद्धि रूपं तवैव ॥१॥


வ்ருகப்₄ருகு₃முநிமோஹிந்யம்ப₃ரீஷாதி₃வ்ருத்தே-

ஷ்வயி தவ ஹி மஹத்த்வம் ஸர்வஶர்வாதி₃ஜைத்ரம் |

ஸ்தி₂தமிஹ பரமாத்மந் நிஷ்கலார்வாக₃பி₄ந்நம்

கிமபி யத₃வபா₄தம் தத்₃தி₄ ரூபம் தவைவ || 1||


1. வ்ருகாசுரன், பிருகு, அம்பரீஷன், மோஹினி ஆகியோருடைய சரித்திரத்தின் மூலம், பிரம்மா, பரமசிவன், தேவர்கள் ஆகியோரைவிட உன் மகத்துவம் மேலானது என்று விளங்குகிறது. பரமாத்மாவே! பூர்ணப்ரும்மமான இறைவனின் வடிவங்களான பிரும்மா, விஷ்ணு, சிவன் இவர்களிடத்தில் இருந்து வேறுபடாமல், விவரிக்க முடியாததாய் உனது ஸ்வரூபம் பிரகாசிக்கிறது.


मूर्तित्रयेश्वरसदाशिवपञ्चकं यत्

प्राहु: परात्मवपुरेव सदाशिवोऽस्मिन् ।

तत्रेश्वरस्तु स विकुण्ठपदस्त्वमेव

त्रित्वं पुनर्भजसि सत्यपदे त्रिभागे ॥२॥


மூர்தித்ரயேஶ்வரஸதா₃ஶிவபஞ்சகம் யத்

ப்ராஹு: பராத்மவபுரேவ ஸதா₃ஶிவோ(அ)ஸ்மிந் |

தத்ரேஶ்வரஸ்து ஸ விகுண்ட₂பத₃ஸ்த்வமேவ

த்ரித்வம் புநர்ப₄ஜஸி ஸத்யபதே₃ த்ரிபா₄கே₃ || 2||


2. பிரம்மா, விஷ்ணு, சிவன், ஈஸ்வரன். சதாசிவம் என்று, மூர்த்திகளை 5 விதமாக பக்தர்கள் கூறுகின்றனர். சதாசிவமும் பரமாத்ம வடிவான நீயேயாகும். ஈஸ்வரனும் வைகுண்டத்தில் உள்ள நீயேயாகும். மூவுலங்களிலும் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற 3 வடிவுடையவனாக விளங்குகின்றாய்.


तत्रापि सात्त्विकतनुं तव विष्णुमाहु-

र्धाता तु सत्त्वविरलो रजसैव पूर्ण: ।

सत्त्वोत्कटत्वमपि चास्ति तमोविकार-

चेष्टादिकञ्च तव शङ्करनाम्नि मूर्तौ ॥३॥


தத்ராபி ஸாத்த்விகதநும் தவ விஷ்ணுமாஹு-

ர்தா₄தா து ஸத்த்வவிரலோ ரஜஸைவ பூர்ண: |

ஸத்த்வோத்கடத்வமபி சாஸ்தி தமோவிகார-

சேஷ்டாதி₃கஞ்ச தவ ஶங்கரநாம்நி மூர்தௌ || 3||


3. அந்த மும்மூர்த்திகளில், ஸத்வ குணம் நிறைந்த உன்னை விஷ்ணு என்றும், சிறிது ஸத்வ குணத்துடன் ரஜோ குணம் நிறைந்தவரை பிரம்மா என்றும், சத்வ குணம் நிறைந்திருந்தும் தமோ குணங்கள் கொண்ட செய்கை உடையவரை சங்கரன் என்றும் கூறுகின்றனர்.


तं च त्रिमूर्त्यतिगतं परपूरुषं त्वां

शर्वात्मनापि खलु सर्वमयत्वहेतो: ।

शंसन्त्युपासनविधौ तदपि स्वतस्तु

त्वद्रूपमित्यतिदृढं बहु न: प्रमाणम् ॥४॥


தம் ச த்ரிமூர்த்யதிக₃தம் பரபூருஷம் த்வாம்

ஶர்வாத்மநாபி க₂லு ஸர்வமயத்வஹேதோ: |

ஶம்ஸந்த்யுபாஸநவிதௌ₄ தத₃பி ஸ்வதஸ்து

த்வத்₃ரூபமித்யதித்₃ருட₄ம் ப₃ஹு ந: ப்ரமாணம் || 4||


4. மும்மூர்த்திகளைக் காட்டிலும் மேலானவராயும், யாவராயும் நீ விளங்குகின்றாய். உன்னையே சைவர்கள் வழிபாடு செய்யும்போது பரமேஸ்வரன் என்று கூறுகின்றனர். அதுவும் உன் வடிவமே என்ற உண்மைக்குப் பல சான்றுகள் உள்ளன.


श्रीशङ्करोऽपि भगवान् सकलेषु ताव-

त्त्वामेव मानयति यो न हि पक्षपाती ।

त्वन्निष्ठमेव स हि नामसहस्रकादि

व्याख्यात् भवत्स्तुतिपरश्च गतिं गतोऽन्ते ॥५॥


ஶ்ரீஶங்கரோ(அ)பி ப₄க₃வாந் ஸகலேஷு தாவ-

த்த்வாமேவ மாநயதி யோ ந ஹி பக்ஷபாதீ |

த்வந்நிஷ்ட₂மேவ ஸ ஹி நாமஸஹஸ்ரகாதி₃

வ்யாக்₂யாத் ப₄வத்ஸ்துதிபரஶ்ச க₃திம் க₃தோ(அ)ந்தே || 5||


5. ஆதிசங்கரர் எல்லா வடிவங்களிலும் உன்னையே போற்றுகிறார். அவர் ஒரு சார்பாகப் பேசுபவர் இல்லை. உன்னுடைய ஸஹஸ்ரநாமத்திற்கு விளக்க உரை செய்திருக்கிறார். உன்னைக் குறித்து ஸ்தோத்திரங்களையும் செய்து இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தவர்.


मूर्तित्रयातिगमुवाच च मन्त्रशास्त्र-

स्यादौ कलायसुषमं सकलेश्वरं त्वाम् ।

ध्यानं च निष्कलमसौ प्रणवे खलूक्त्वा

त्वामेव तत्र सकलं निजगाद नान्यम् ॥६॥


மூர்தித்ரயாதிக₃முவாச ச மந்த்ரஶாஸ்த்ர-

ஸ்யாதௌ₃ கலாயஸுஷமம் ஸகலேஶ்வரம் த்வாம் |

த்₄யாநம் ச நிஷ்கலமஸௌ ப்ரணவே க₂லூக்த்வா

த்வாமேவ தத்ர ஸகலம் நிஜகா₃த₃ நாந்யம் || 6||


6. அவர், மந்திரங்களின் ஆரம்பத்தில், காயாம்பூ போன்று பிரகாசிப்பவராகவும், அனைத்திற்கும் ஈஸ்வரனாகவும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவராகவும் உன்னைக் கூறியுள்ளார். அவர், பிரணவத்தைப் பற்றிக் கூறும் போது நிர்க்குணமான பிரம்மத்தின் தியானம் பற்றி விவரித்து, அதற்கு உண்மைப் பொருளாகக் கல்யாண குணங்களுடன் கூடிய உன்னையே கூறினார். வேறு எந்த தெய்வத்தையும் அவர் கூறவில்லை.


समस्तसारे च पुराणसङ्ग्रहे

विसंशयं त्वन्महिमैव वर्ण्यते ।

त्रिमूर्तियुक्सत्यपदत्रिभागत:

परं पदं ते कथितं न शूलिन: ॥७॥


ஸமஸ்தஸாரே ச புராணஸங்க்₃ரஹே

விஸம்ஶயம் த்வந்மஹிமைவ வர்ண்யதே |

த்ரிமூர்தியுக்ஸத்யபத₃த்ரிபா₄க₃த:

பரம் பத₃ம் தே கதி₂தம் ந ஶூலிந: || 7||


7. புராணங்களின் சாரத்தைக் கூறும் புராண ஸங்க்ரஹம் என்னும் நூலில் உன் மகத்துவமே கூறப்பட்டிருக்கிறது. மும்மூர்த்திகள் வசிக்கும் ஸத்யலோகத்தை விட உயர்ந்ததாக உன் வைகுண்டம் விவரிக்கப்படுகிறது. சிவலோகத்தைப் பற்றிக் கூறவில்லை.


यत् ब्राह्मकल्प इह भागवतद्वितीय-

स्कन्धोदितं वपुरनावृतमीश धात्रे ।

तस्यैव नाम हरिशर्वमुखं जगाद

श्रीमाधव: शिवपरोऽपि पुराणसारे ॥८॥


யத் ப்₃ராஹ்மகல்ப இஹ பா₄க₃வதத்₃விதீய-

ஸ்கந்தோ₄தி₃தம் வபுரநாவ்ருதமீஶ தா₄த்ரே |

தஸ்யைவ நாம ஹரிஶர்வமுக₂ம் ஜகா₃த₃

ஶ்ரீமாத₄வ: ஶிவபரோ(அ)பி புராணஸாரே || 8||


8. பிரம்ம கல்பத்தின் ஆரம்பத்தில், பிரம்மாவிற்குத் உன் வடிவத்தைப் பிரத்யக்ஷமாகக் காட்டினாய். சிவபக்தரான ஸ்ரீ மாதவாச்சாரியார், புராணஸாரம் என்ற தமது நூலில் அந்த வடிவத்திற்கே விஷ்ணு, சிவன் முதலிய பெயர் என்று கூறியிருக்கிறார்.


ये स्वप्रकृत्यनुगुणा गिरिशं भजन्ते

तेषां फलं हि दृढयैव तदीयभक्त्या।

व्यासो हि तेन कृतवानधिकारिहेतो:

स्कन्दादिकेषु तव हानिवचोऽर्थवादै: ॥९॥


யே ஸ்வப்ரக்ருத்யநுகு₃ணா கி₃ரிஶம் ப₄ஜந்தே

தேஷாம் ப₂லம் ஹி த்₃ருட₄யைவ ததீ₃யப₄க்த்யா|

வ்யாஸோ ஹி தேந க்ருதவாநதி₄காரிஹேதோ:

ஸ்கந்தா₃தி₃கேஷு தவ ஹாநிவசோ(அ)ர்த₂வாதை₃: || 9||


9. தன் சொந்த இயல்புக்கு ஏற்ப, சிவனிடம் தன்னை அர்ப்பணித்து பக்தியுடன் வழிபடுவோருக்கு அதற்குரிய பலன் கிடைக்கிறது. அதனால், வியாசர் ஸ்காந்தம் முதலிய புராணங்களில் சிவனைப் பற்றிப் பெருமையாகக் கூறி உன்னை சிறுமைப்படுத்திக் கூறினார்.


भूतार्थकीर्तिरनुवादविरुद्धवादौ

त्रेधार्थवादगतय: खलु रोचनार्था: ।

स्कान्दादिकेषु बहवोऽत्र विरुद्धवादा-

स्त्वत्तामसत्वपरिभूत्युपशिक्षणाद्या: ॥१०॥


பூ₄தார்த₂கீர்திரநுவாத₃விருத்₃த₄வாதௌ₃

த்ரேதா₄ர்த₂வாத₃க₃தய: க₂லு ரோசநார்தா₂: |

ஸ்காந்தா₃தி₃கேஷு ப₃ஹவோ(அ)த்ர விருத்₃த₄வாதா₃-

ஸ்த்வத்தாமஸத்வபரிபூ₄த்யுபஶிக்ஷணாத்₃யா: || 10||


10. அர்த்தவாதம் மூன்று வகைப்படும். உண்மைகளை உள்ளபடி கூறுவது, அனுபவத்திற்கு ஏற்பப் புகழ்ந்து துதிப்பது, வேண்டாதவற்றை நிந்தித்து, முரணாகப் பேசுவது. ஸ்காந்தத்தில் உன்னைக் குறைவாகக் கூறியது மூன்றாவது வகையாகும். அது உண்மையல்ல.


यत् किञ्चिदप्यविदुषाऽपि विभो मयोक्तं

तन्मन्त्रशास्त्रवचनाद्यभिदृष्टमेव ।

व्यासोक्तिसारमयभागवतोपगीत

क्लेशान् विधूय कुरु भक्तिभरं परात्मन् ॥११॥


யத் கிஞ்சித₃ப்யவிது₃ஷா(அ)பி விபோ₄ மயோக்தம்

தந்மந்த்ரஶாஸ்த்ரவசநாத்₃யபி₄த்₃ருஷ்டமேவ |

வ்யாஸோக்திஸாரமயபா₄க₃வதோபகீ₃த

க்லேஶாந் விதூ₄ய குரு ப₄க்திப₄ரம் பராத்மந் || 11||


11. பிரபுவே! அறிவற்ற நான் கூறியதும்கூட மந்திர சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டவையே. வியாசரின் பாகவதத்தில் போற்றிப் புகழப்பட்ட பரமாத்மாவே! என் துக்கங்களைப் போக்கி, வியாதிகளை ஒழித்து, எனக்கு உறுதியான பக்தி கிடைக்க அருள வேண்டும்.



பக்தி மார்க்கம்

இந்த தசகத்தைப் படிப்பதால் அனைத்து பாபங்களும் விலகி, வைராக்யமும் திடமான பக்தியும் உண்டாகும்.


श्रीकृष्ण त्वत्पदोपासनमभयतमं बद्धमिथ्यार्थदृष्टे-

र्मर्त्यस्यार्तस्य मन्ये व्यपसरति भयं येन सर्वात्मनैव ।

यत्तावत् त्वत्प्रणीतानिह भजनविधीनास्थितो मोहमार्गे

धावन्नप्यावृताक्ष: स्खलति न कुहचिद्देवदेवाखिलात्मन् ॥१॥


ஶ்ரீக்ருஷ்ண த்வத்பதோ₃பாஸநமப₄யதமம் ப₃த்₃த₄மித்₂யார்த₂த்₃ருஷ்டே-

ர்மர்த்யஸ்யார்தஸ்ய மந்யே வ்யபஸரதி ப₄யம் யேந ஸர்வாத்மநைவ |

யத்தாவத் த்வத்ப்ரணீதாநிஹ ப₄ஜநவிதீ₄நாஸ்தி₂தோ மோஹமார்கே₃

தா₄வந்நப்யாவ்ருதாக்ஷ: ஸ்க₂லதி ந குஹசித்₃தே₃வதே₃வாகி₂லாத்மந் || 1||


1. தேவதேவனே! அனைத்து உயிரினங்களின் உயிரே! கிருஷ்ணா! பொய்யான இந்த சரீரத்தில் ஆசை வைத்து அல்லல்பட்டு மரண பயத்தை அடையும் ஒருவனுக்கு, உன் திருவடிகளை அடைக்கலம் அடைந்து பணி செய்வதே பயத்தைப் போக்கக் கூடியது என்று நம்புகிறேன். நீ உபதேசித்த முறைகளில் வழிபடுபவன், கண்ணை மூடியபடி சென்றாலும், அவன் பக்தி நிலையில் தவறுவதில்லை.


भूमन् कायेन वाचा मुहुरपि मनसा त्वद्बलप्रेरितात्मा

यद्यत् कुर्वे समस्तं तदिह परतरे त्वय्यसावर्पयामि ।

जात्यापीह श्वपाकस्त्वयि निहितमन:कर्मवागिन्द्रियार्थ-

प्राणो विश्वं पुनीते न तु विमुखमनास्त्वत्पदाद्विप्रवर्य: ॥२॥


பூ₄மந் காயேந வாசா முஹுரபி மநஸா த்வத்₃ப₃லப்ரேரிதாத்மா

யத்₃யத் குர்வே ஸமஸ்தம் ததி₃ஹ பரதரே த்வய்யஸாவர்பயாமி |

ஜாத்யாபீஹ ஶ்வபாகஸ்த்வயி நிஹிதமந:கர்மவாகி₃ந்த்₃ரியார்த₂-

ப்ராணோ விஶ்வம் புநீதே ந து விமுக₂மநாஸ்த்வத்பதா₃த்₃விப்ரவர்ய: || 2||


2. எங்கும் நிறைந்த பரம்பொருளே! உன் சக்தியினால் என் மனம் தூண்டப் படுகிறது. என் உடல், வாக்கு, மனம் இவைகளால் செய்யும் அனைத்தையும் உநனிடம் அர்ப்பணிக்கிறேன். உன்னிடத்தில் தனது செயல், வாக்கு, இந்திரியங்கள், பிராணன், மனம் ஆகியவற்றை அர்ப்பணம் செய்தவன், பிறப்பால் நீசனாக இருந்தாலும் உலகத்தையே புனிதப்படுத்துகிறான். உன் திருவடிகளில் பக்தி இல்லாதவன் அந்தணனாக இருந்தாலும் உலகைப் புனிதப்படுத்துவதில்லை.


भीतिर्नाम द्वितीयाद्भवति ननु मन:कल्पितं च द्वितीयं

तेनैक्याभ्यासशीलो हृदयमिह यथाशक्ति बुद्ध्या निरुन्ध्याम् ।

मायाविद्धे तु तस्मिन् पुनरपि न तथा भाति मायाधिनाथं

तं त्वां भक्त्या महत्या सततमनुभजनीश भीतिं विजह्याम् ॥३॥


பீ₄திர்நாம த்₃விதீயாத்₃ப₄வதி நநு மந:கல்பிதம் ச த்₃விதீயம்

தேநைக்யாப்₄யாஸஶீலோ ஹ்ருத₃யமிஹ யதா₂ஶக்தி பு₃த்₃த்₄யா நிருந்த்₄யாம் |

மாயாவித்₃தே₄ து தஸ்மிந் புநரபி ந ததா₂ பா₄தி மாயாதி₄நாத₂ம்

தம் த்வாம் ப₄க்த்யா மஹத்யா ஸததமநுப₄ஜநீஶ பீ₄திம் விஜஹ்யாம் || 3||


3. பயமானது தன்னிடத்திலிருந்து விலகியுள்ள மற்றொரு இடத்திலிருந்து உண்டாகிறது. அந்த மற்றொரு இடமும் மனதின் கற்பனையே ஆகும். காரியம், காரணம் இரண்டும் ஒன்றே என்பதை மனதில் நிறுத்தி, நிச்சய புத்தியுடன் சிந்திப்பேன். ஒருமுறை மாயையால் கவரப்பட்டவன், மனதைக் கட்டுப்படுத்தினாலும் முன்போல் சிந்திப்பதில்லை. எனவே, ஈசனே! மாயைக்கு அதிபதியான உன்னை எப்பொழுதும் பக்தியுடன் வணங்கி, என் அனைத்து பயங்களையும் விடுவேன்.


भक्तेरुत्पत्तिवृद्धी तव चरणजुषां सङ्गमेनैव पुंसा-

मासाद्ये पुण्यभाजां श्रिय इव जगति श्रीमतां सङ्गमेन ।

तत्सङ्गो देव भूयान्मम खलु सततं तन्मुखादुन्मिषद्भि-

स्त्वन्माहात्म्यप्रकारैर्भवति च सुदृढा भक्तिरुद्धूतपापा ॥४॥


ப₄க்தேருத்பத்திவ்ருத்₃தீ₄ தவ சரணஜுஷாம் ஸங்க₃மேநைவ பும்ஸா-

மாஸாத்₃யே புண்யபா₄ஜாம் ஶ்ரிய இவ ஜக₃தி ஶ்ரீமதாம் ஸங்க₃மேந |

தத்ஸங்கோ₃ தே₃வ பூ₄யாந்மம க₂லு ஸததம் தந்முகா₂து₃ந்மிஷத்₃பி₄-

ஸ்த்வந்மாஹாத்ம்யப்ரகாரைர்ப₄வதி ச ஸுத்₃ருடா₄ ப₄க்திருத்₃தூ₄தபாபா || 4||


4. இந்த உலகில் செல்வம் உள்ளவனோடு சேர்ந்தால் செல்வம் பெருகுவதைப் போல், தங்கள் திருவடிகளை வணங்குபவரோடு சேர்ந்தால் பக்தி பெருகுகிறது. தேவனே! அடியேனுக்கும் உன் அடியவர்களின் சேர்க்கை கிடைக்கவேண்டும். அவர்கள் கூறும் உன் மகிமைகளால், அனைத்து பாபங்களையும் போக்கக் கூடிய உறுதியான பக்தி எனக்கு உண்டாக வேண்டும்.


श्रेयोमार्गेषु भक्तावधिकबहुमतिर्जन्मकर्माणि भूयो

गायन् क्षेमाणि नामान्यपि तदुभयत: प्रद्रुतं प्रद्रुतात्मा ।

उद्यद्धास: कदाचित् कुहचिदपि रुदन् क्वापि गर्जन् प्रगाय-

न्नुन्मादीव प्रनृत्यन्नयि कुरु करुणां लोकबाह्यश्चरेयम् ॥५॥


ஶ்ரேயோமார்கே₃ஷு ப₄க்தாவதி₄கப₃ஹுமதிர்ஜந்மகர்மாணி பூ₄யோ

கா₃யந் க்ஷேமாணி நாமாந்யபி தது₃ப₄யத: ப்ரத்₃ருதம் ப்ரத்₃ருதாத்மா |

உத்₃யத்₃தா₄ஸ: கதா₃சித் குஹசித₃பி ருத₃ந் க்வாபி க₃ர்ஜந் ப்ரகா₃ய-

ந்நுந்மாதீ₃வ ப்ரந்ருத்யந்நயி குரு கருணாம் லோகபா₃ஹ்யஶ்சரேயம் || 5||


5. மோக்ஷத்தை அடையும் வழிகளில் பக்தி மார்க்கத்தில் மிகவும் விருப்பம் உடையவனாக நான் ஆக வேண்டும். உன் லீலைகளையும், நாமங்களையும் ஆர்வத்துடன் பாடி மனம் உருக வேண்டும். பாடிக் கொண்டும், சிரித்துக் கொண்டும், பைத்தியம் பிடித்தவன் போல் ஆடிக்கொண்டும் பற்றற்று நான் இருக்கக் கருணை புரிய வேண்டும்.


भूतान्येतानि भूतात्मकमपि सकलं पक्षिमत्स्यान् मृगादीन्

मर्त्यान् मित्राणि शत्रूनपि यमितमतिस्त्वन्मयान्यानमानि ।

त्वत्सेवायां हि सिद्ध्येन्मम तव कृपया भक्तिदार्ढ्यं विराग-

स्त्वत्तत्त्वस्यावबोधोऽपि च भुवनपते यत्नभेदं विनैव ॥६॥


பூ₄தாந்யேதாநி பூ₄தாத்மகமபி ஸகலம் பக்ஷிமத்ஸ்யாந் ம்ருகா₃தீ₃ந்

மர்த்யாந் மித்ராணி ஶத்ரூநபி யமிதமதிஸ்த்வந்மயாந்யாநமாநி |

த்வத்ஸேவாயாம் ஹி ஸித்₃த்₄யேந்மம தவ க்ருபயா ப₄க்திதா₃ர்ட்₄யம் விராக₃-

ஸ்த்வத்தத்த்வஸ்யாவபோ₃தோ₄(அ)பி ச பு₄வநபதே யத்நபே₄த₃ம் விநைவ || 6||


6. பஞ்சபூதங்களையும், அவைகளாலான உலகங்களையும், அவற்றில் வசிக்கும் பறவைகள், மீன்கள், விலங்குகள், மனிதர்கள் முதலியவற்றையும், நண்பர்களையும், பகைவர்களையும் உன் வடிவமென்று நான் வணங்க வேண்டும். லோகநாயகா! எப்போதும் உன்னை வணங்குவதால், உன் கருணையினால், எனக்கு உறுதியான பக்தி, வைராக்கியம், உண்மை அறிவு முதலியவை வேறு முயற்சிகள் இல்லாமலேயே கிடைக்கிறது.


नो मुह्यन् क्षुत्तृडाद्यैर्भवसरणिभवैस्त्वन्निलीनाशयत्वा-

च्चिन्तासातत्यशाली निमिषलवमपि त्वत्पदादप्रकम्प: ।

इष्टानिष्टेषु तुष्टिव्यसनविरहितो मायिकत्वावबोधा-

ज्ज्योत्स्नाभिस्त्वन्नखेन्दोरधिकशिशिरितेनात्मना सञ्चरेयम् ॥७॥


நோ முஹ்யந் க்ஷுத்த்ருடா₃த்₃யைர்ப₄வஸரணிப₄வைஸ்த்வந்நிலீநாஶயத்வா-

ச்சிந்தாஸாதத்யஶாலீ நிமிஷலவமபி த்வத்பதா₃த₃ப்ரகம்ப: |

இஷ்டாநிஷ்டேஷு துஷ்டிவ்யஸநவிரஹிதோ மாயிகத்வாவபோ₃தா₄-

ஜ்ஜ்யோத்ஸ்நாபி₄ஸ்த்வந்நகே₂ந்தோ₃ரதி₄கஶிஶிரிதேநாத்மநா ஸஞ்சரேயம் || 7||


7. என் மனம் எப்போதும் உன்னிடம் மூழ்கியிருப்பதால், பசி, தாகம் இவற்றால் பாதிக்கப் படாமல், உன் திருவடியையே தியானித்துக் கொண்டு, பற்றற்று, விருப்பு, வெறுப்பு, இல்லாதவனாக இருக்க அருள வேண்டும். மாயையின் விளைவு என்னும் அறிவினால், சந்தோஷமும், துக்கமும் அற்றவனாக இருக்க அருள வேண்டும். உன் கால் நகங்களாகிற குளிர் நிலவின் ஒளியால் நானும் அமைதியான, குளிர்ந்த மனத்துடன் இருக்க வேண்டும்.


भूतेष्वेषु त्वदैक्यस्मृतिसमधिगतौ नाधिकारोऽधुना चे-

त्त्वत्प्रेम त्वत्कमैत्री जडमतिषु कृपा द्विट्सु भूयादुपेक्षा ।

अर्चायां वा समर्चाकुतुकमुरुतरश्रद्धया वर्धतां मे

त्वत्संसेवी तथापि द्रुतमुपलभते भक्तलोकोत्तमत्वम् ॥८॥


பூ₄தேஷ்வேஷு த்வதை₃க்யஸ்ம்ருதிஸமதி₄க₃தௌ நாதி₄காரோ(அ)து₄நா சே-

த்த்வத்ப்ரேம த்வத்கமைத்ரீ ஜட₃மதிஷு க்ருபா த்₃விட்ஸு பூ₄யாது₃பேக்ஷா |

அர்சாயாம் வா ஸமர்சாகுதுகமுருதரஶ்ரத்₃த₄யா வர்த₄தாம் மே

த்வத்ஸம்ஸேவீ ததா₂பி த்₃ருதமுபலப₄தே ப₄க்தலோகோத்தமத்வம் || 8||


8. உலகிலுள்ள அனைத்து உயிர்களிடத்தும் நீ ஐக்கியமாகி இருக்கிறாய் என்ற அறிவும், தகுதியும் எனக்கு இல்லையெனில், உன் அடியார்களிடத்தில் நேசமும், உன்னை அறியாதவர்களிடத்தில் கருணையும், பகைவர்களிடத்தில் வெறுப்பும் எனக்கு உண்டாக வேண்டும். அதற்கும் தகுதி இல்லாவிடில், உன் விக்ரகத்தைப் பூஜை செய்ய ஆர்வம் உண்டாக வேண்டும். அவ்வாறு செய்வதால் பக்தர்களில் சிறந்தவனாக விளங்கும் பேறு தாமதமில்லாமல் கிடைக்கிறது.


आवृत्य त्वत्स्वरूपं क्षितिजलमरुदाद्यात्मना विक्षिपन्ती

जीवान् भूयिष्ठकर्मावलिविवशगतीन् दु:खजाले क्षिपन्ती ।

त्वन्माया माभिभून्मामयि भुवनपते कल्पते तत्प्रशान्त्यै

त्वत्पादे भक्तिरेवेत्यवददयि विभो सिद्धयोगी प्रबुद्ध: ॥९॥


ஆவ்ருத்ய த்வத்ஸ்வரூபம் க்ஷிதிஜலமருதா₃த்₃யாத்மநா விக்ஷிபந்தீ

ஜீவாந் பூ₄யிஷ்ட₂கர்மாவலிவிவஶக₃தீந் து₃:க₂ஜாலே க்ஷிபந்தீ |

த்வந்மாயா மாபி₄பூ₄ந்மாமயி பு₄வநபதே கல்பதே தத்ப்ரஶாந்த்யை

த்வத்பாதே₃ ப₄க்திரேவேத்யவத₃த₃யி விபோ₄ ஸித்₃த₄யோகீ₃ ப்ரபு₃த்₃த₄: || 9||


9. ஜகன்னாதா! உன் மாயை, உன்னுடைய உண்மையான உருவத்தை மறைத்து, பூமி, நீர், காற்று என்று மாறித் தோன்றும்படி செய்கிறது. வினைப் பயனால் ஜீவாத்மாக்களைத் துன்பமென்னும் வலையில் தள்ளுகிறது. அந்த மாயை என்னைக் கீழ்ப்படுத்தாமல் இருக்க வேண்டும். உன் திருவடிகளில் பக்தியுடன் இருப்பதால் மட்டுமே அந்த மாயையை அழிக்க முடியுமென்று பிரபுத்தன் என்ற யோகி விதேக மன்னனிடம் கூறியுள்ளார்.


दु:खान्यालोक्य जन्तुष्वलमुदितविवेकोऽहमाचार्यवर्या-

ल्लब्ध्वा त्वद्रूपतत्त्वं गुणचरितकथाद्युद्भवद्भक्तिभूमा ।

मायामेनां तरित्वा परमसुखमये त्वत्पदे मोदिताहे

तस्यायं पूर्वरङ्ग: पवनपुरपते नाशयाशेषरोगान् ॥१०॥


து₃:கா₂ந்யாலோக்ய ஜந்துஷ்வலமுதி₃தவிவேகோ(அ)ஹமாசார்யவர்யா-

ல்லப்₃த்₄வா த்வத்₃ரூபதத்த்வம் கு₃ணசரிதகதா₂த்₃யுத்₃ப₄வத்₃ப₄க்திபூ₄மா |

மாயாமேநாம் தரித்வா பரமஸுக₂மயே த்வத்பதே₃ மோதி₃தாஹே

தஸ்யாயம் பூர்வரங்க₃: பவநபுரபதே நாஶயாஶேஷரோகா₃ந் || 10||


10. உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு எனக்கு விவேகம் ஏற்பட

வேண்டும். அதனால் சிறந்த குருவை அடைந்து, அவர் மூலம் உன் உண்மை வடிவத்தை அறிந்து கொள்ள வேண்டும். உன் கல்யாண குணங்களையும், சரித்திரங்களையும் பாடி, பக்தி பெருகி, மாயையைக் கடக்க வேண்டும். உன் திருவடியில் சரணடைந்து வணங்கி ஆனந்தமடைய வேண்டும். இதுவே, அம்மாயையை வெல்லும் முயற்சியின் ஆரம்பமாகும். குருவாயூரப்பா! என்னுடைய நோய்களைப் போக்கியருள வேண்டும்.



கர்மம் கலந்த பக்தி

वेदैस्सर्वाणि कर्माण्यफलपरतया वर्णितानीति बुध्वा

तानि त्वय्यर्पितान्येव हि समनुचरन् यानि नैष्कर्म्यमीश ।

मा भूद्वेदैर्निषिद्धे कुहचिदपि मन:कर्मवाचां प्रवृत्ति-

र्दुर्वर्जं चेदवाप्तं तदपि खलु भवत्यर्पये चित्प्रकाशे ॥१॥


வேதை₃ஸ்ஸர்வாணி கர்மாண்யப₂லபரதயா வர்ணிதாநீதி பு₃த்₄வா

தாநி த்வய்யர்பிதாந்யேவ ஹி ஸமநுசரந் யாநி நைஷ்கர்ம்யமீஶ |

மா பூ₄த்₃வேதை₃ர்நிஷித்₃தே₄ குஹசித₃பி மந:கர்மவாசாம் ப்ரவ்ருத்தி-

ர்து₃ர்வர்ஜம் சேத₃வாப்தம் தத₃பி க₂லு ப₄வத்யர்பயே சித்ப்ரகாஶே || 1||


1. செயல்களை, பற்றற்று, பலனில் விருப்பமின்றி செய்யவேண்டும் என்று வேதம் கூறுகிறது. அதனால் நான், பலனை எதிர்பார்க்காமல் வேதம் கூறிய செயல்களைச் செய்து, அவற்றை உம்மிடமே அர்ப்பணித்து ஞானத்தை அடையவேண்டும். வேதத்தால் புறக்கணிக்கப்பட்ட எந்த செயலிலும் என் மனம், வாக்கு செல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு விலக்கப்பட்ட ஏதாவது செயலை நான் செய்ய நேர்ந்தால், அதையும் உன்னிடமே சமர்ப்பித்து விடுவேன்.


यस्त्वन्य: कर्मयोगस्तव भजनमयस्तत्र चाभीष्टमूर्तिं

हृद्यां सत्त्वैकरूपां दृषदि हृदि मृदि क्वापि वा भावयित्वा ।

पुष्पैर्गन्धैर्निवेद्यैरपि च विरचितै: शक्तितो भक्तिपूतै-

र्नित्यं वर्यां सपर्यां विदधदयि विभो त्वत्प्रसादं भजेयम् ॥२॥


யஸ்த்வந்ய: கர்மயோக₃ஸ்தவ ப₄ஜநமயஸ்தத்ர சாபீ₄ஷ்டமூர்திம்

ஹ்ருத்₃யாம் ஸத்த்வைகரூபாம் த்₃ருஷதி₃ ஹ்ருதி₃ ம்ருதி₃ க்வாபி வா பா₄வயித்வா |

புஷ்பைர்க₃ந்தை₄ர்நிவேத்₃யைரபி ச விரசிதை: ஶக்திதோ ப₄க்திபூதை-

ர்நித்யம் வர்யாம் ஸபர்யாம் வித₃த₄த₃யி விபோ₄ த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜேயம் || 2||


2. பிரபுவே! உன்னைத் தொழுவதும் ஒரு வகையான கர்மயோகம் ஆகும். அழகானதும், ஸத்வ வடிவானதும் ஆன ஒரு மூர்த்தியைக் கல்லிலோ, மண்ணிலோ, மனதிலோ தியானம் செய்து, சக்திக்குத் தகுந்தபடி பரிசுத்தமான சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களாலும், பூக்களாலும் தினமும் பூஜை செய்து, உமது அருளை அடைய வேண்டும்.


स्त्रीशूद्रास्त्वत्कथादिश्रवणविरहिता आसतां ते दयार्हा-

स्त्वत्पादासन्नयातान् द्विजकुलजनुषो हन्त शोचाम्यशान्तान् ।

वृत्त्यर्थं ते यजन्तो बहुकथितमपि त्वामनाकर्णयन्तो

दृप्ता विद्याभिजात्यै: किमु न विदधते तादृशं मा कृथा माम् ॥३॥


ஸ்த்ரீஶூத்₃ராஸ்த்வத்கதா₂தி₃ஶ்ரவணவிரஹிதா ஆஸதாம் தே த₃யார்ஹா-

ஸ்த்வத்பாதா₃ஸந்நயாதாந் த்₃விஜகுலஜநுஷோ ஹந்த ஶோசாம்யஶாந்தாந் |

வ்ருத்த்யர்த₂ம் தே யஜந்தோ ப₃ஹுகதி₂தமபி த்வாமநாகர்ணயந்தோ

த்₃ருப்தா வித்₃யாபி₄ஜாத்யை: கிமு ந வித₃த₄தே தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 3||


3. பெண்களும் மற்றும் சிலரும் அறியாமையினால் உன் கதைகளைக் கேட்காமல் இருக்கின்றார்கள். அவர்கள் இரக்கத்திற்குரியவர்கள். ஆனால், உயர்குலத்தில் பிறந்து உன் திருவடிகளை அடைந்தும் அமைதியற்றவர்களாய் இருப்பவர்களைக் குறித்து வருந்துகிறேன். பிழைப்பிற்காக யாகம் செய்து கொண்டு, பலமுறை உன் பெருமைகளை பற்றிக் கேட்டிருந்தும் உன் பெருமைகளில் நாட்டமில்லாமல், படிப்பால் கர்வம் கொண்டு இருப்பதால் அவர்கள் தவறுகள் செய்கின்றனர். நீ, அவர்களைப் போல் என்னைச் செய்து விடாமல் இருக்க வேண்டுகிறேன்.


पापोऽयं कृष्णरामेत्यभिलपति निजं गूहितुं दुश्चरित्रं

निर्लज्जस्यास्य वाचा बहुतरकथनीयानि मे विघ्नितानि ।

भ्राता मे वन्ध्यशीलो भजति किल सदा विष्णुमित्थं बुधांस्ते

निन्दन्त्युच्चैर्हसन्ति त्वयि निहितमतींस्तादृशं मा कृथा माम् ॥४॥


பாபோ(அ)யம் க்ருஷ்ணராமேத்யபி₄லபதி நிஜம் கூ₃ஹிதும் து₃ஶ்சரித்ரம்

நிர்லஜ்ஜஸ்யாஸ்ய வாசா ப₃ஹுதரகத₂நீயாநி மே விக்₄நிதாநி |

ப்₄ராதா மே வந்த்₄யஶீலோ ப₄ஜதி கில ஸதா₃ விஷ்ணுமித்த₂ம் பு₃தா₄ம்ஸ்தே

நிந்த₃ந்த்யுச்சைர்ஹஸந்தி த்வயி நிஹிதமதீம்ஸ்தாத்₃ருஶம் மா க்ருதா₂ மாம் || 4||


4. பக்தியற்ற சிலர் உன் பக்தர்களை நிந்திக்கின்றனர். “இவன் செய்த பாவங்களை மறைக்க ‘கிருஷ்ணா, ராமா’ என்று கூறுகிறான். வெட்கமற்ற இவன் பிதற்றல்களால் நான் பல விஷயங்களைச் சொல்ல முடியவில்லை. வீண் பொழுது போக்கும் என் சகோதரன் விஷ்ணுவை வழிபடுகிறான்” என்று உண்மையான பக்தர்களைப் பரிகாசம் செய்து சிரிக்கின்றனர். அவர்களைப் போல் என்னைச் செய்துவிடாமல் இருக்க வேண்டுகிறேன்.


श्वेतच्छायं कृते त्वां मुनिवरवपुषं प्रीणयन्ते तपोभि-

स्त्रेतायां स्रुक्स्रुवाद्यङ्कितमरुणतनुं यज्ञरूपं यजन्ते ।

सेवन्ते तन्त्रमार्गैर्विलसदरिगदं द्वापरे श्यामलाङ्गं

नीलं सङ्कीर्तनाद्यैरिह कलिसमये मानुषास्त्वां भजन्ते ॥५॥


ஶ்வேதச்சா₂யம் க்ருதே த்வாம் முநிவரவபுஷம் ப்ரீணயந்தே தபோபி₄-

ஸ்த்ரேதாயாம் ஸ்ருக்ஸ்ருவாத்₃யங்கிதமருணதநும் யஜ்ஞரூபம் யஜந்தே |

ஸேவந்தே தந்த்ரமார்கை₃ர்விலஸத₃ரிக₃த₃ம் த்₃வாபரே ஶ்யாமலாங்க₃ம்

நீலம் ஸங்கீர்தநாத்₃யைரிஹ கலிஸமயே மாநுஷாஸ்த்வாம் ப₄ஜந்தே || 5||


5. கிருத யுகத்தில், ஒளி பொருந்திய வெண்ணிறத்தில் உள்ள பிரும்மச்சாரியின் வடிவுடைய உன்னை, மக்கள் தவங்கள் செய்து மகிழ்விக்கின்றனர். திரேதா யுகத்தில், சிவப்பு நிறம் கொண்ட யக்ஞ புருஷனாகப் பூஜிக்கின்றனர். துவாபர யுகத்தில், சங்கு சக்கரம் தரித்த நீலமேக ஸ்யாமளனாக வணங்குகின்றனர். கலியுகத்திலோ நீலவண்ணனாக உன்னை நாமசங்கீர்த்தனத்தால் வழிபடுகின்றனர்.


सोऽयं कालेयकालो जयति मुररिपो यत्र सङ्कीर्तनाद्यै-

र्निर्यत्नैरेव मार्गैरखिलद न चिरात्त्वत्प्रसादं भजन्ते ।

जातास्त्रेताकृतादावपि हि किल कलौ सम्भवं कामयन्ते

दैवात्तत्रैव जातान् विषयविषरसैर्मा विभो वञ्चयास्मान् ॥६॥


ஸோ(அ)யம் காலேயகாலோ ஜயதி முரரிபோ யத்ர ஸங்கீர்தநாத்₃யை-

ர்நிர்யத்நைரேவ மார்கை₃ரகி₂லத₃ ந சிராத்த்வத்ப்ரஸாத₃ம் ப₄ஜந்தே |

ஜாதாஸ்த்ரேதாக்ருதாதா₃வபி ஹி கில கலௌ ஸம்ப₄வம் காமயந்தே

தை₃வாத்தத்ரைவ ஜாதாந் விஷயவிஷரஸைர்மா விபோ₄ வஞ்சயாஸ்மாந் || 6||


6. முரனை வென்ற முராரியே! இவ்வாறாகக் கலியுகம் மேன்மையுடன் விளங்குகிறது. கலியுகத்தில், சிரமமின்றி நாமசங்கீர்த்தனத்தால் உன்னைத் தொழுவதால், உன் அருளை மக்கள் விரைவிலேயே அடைகிறார்கள். அதனாலேயே, மற்ற யுகங்களில் பிறந்தவர்கள் கூட மீண்டும் கலியுகத்தில் பிறக்க விரும்புகிறார்கள். யாவற்றையும் அளிப்பவனே! இக்கலியில் புண்ணிய வசத்தால் பிறந்த எங்களை, விஷத்தைப் போன்ற இந்திரிய சுகங்களைக் காட்டி ஏமாற்ற வேண்டாம்.


भक्तास्तावत्कलौ स्युर्द्रमिलभुवि ततो भूरिशस्तत्र चोच्चै:

कावेरीं ताम्रपर्णीमनु किल कृतमालां च पुण्यां प्रतीचीम् ।

हा मामप्येतदन्तर्भवमपि च विभो किञ्चिदञ्चद्रसं त्व-

य्याशापाशैर्निबध्य भ्रमय न भगवन् पूरय त्वन्निषेवाम् ॥७॥


ப₄க்தாஸ்தாவத்கலௌ ஸ்யுர்த்₃ரமிலபு₄வி ததோ பூ₄ரிஶஸ்தத்ர சோச்சை:

காவேரீம் தாம்ரபர்ணீமநு கில க்ருதமாலாம் ச புண்யாம் ப்ரதீசீம் |

ஹா மாமப்யேதத₃ந்தர்ப₄வமபி ச விபோ₄ கிஞ்சித₃ஞ்சத்₃ரஸம் த்வ-

ய்யாஶாபாஶைர்நிப₃த்₄ய ப்₄ரமய ந ப₄க₃வந் பூரய த்வந்நிஷேவாம் || 7||


7. இக்கலியில் உன்னிடம் பக்தி கொண்டவர்கள் பலர் உள்ளனர். திராவிட தேசத்தில் இன்னும் அதிகமாக உள்ளனர். காவிரி, தாமிரபரணி, வைகை போன்ற ஆற்றின் கரைகளிலும், மேற்கு நோக்கி ஓடும் நதிகளின் கரைகளிலும் மிகவும் அதிகமாக இருக்கின்றனர். நானும் இந்தப் பகுதியில் பிறந்தவன். உன்னிடம் சிறிதளவு பக்தி கொண்டிருக்கிறேன். ஹே கிருஷ்ணா! ஆசை என்னும் கயிற்றால் என்னைப் பிணைத்து என்னை ஏமாற்ற வேண்டாம். உன்மீது கொண்ட பக்தி முழுமையடையப் பிரார்த்திக்கிறேன்.


दृष्ट्वा धर्मद्रुहं तं कलिमपकरुणं प्राङ्महीक्षित् परीक्षित्

हन्तुं व्याकृष्टखड्गोऽपि न विनिहतवान् सारवेदी गुणांशात् ।

त्वत्सेवाद्याशु सिद्ध्येदसदिह न तथा त्वत्परे चैष भीरु-

र्यत्तु प्रागेव रोगादिभिरपहरते तत्र हा शिक्षयैनम् ॥८॥


த்₃ருஷ்ட்வா த₄ர்மத்₃ருஹம் தம் கலிமபகருணம் ப்ராங்மஹீக்ஷித் பரீக்ஷித்

ஹந்தும் வ்யாக்ருʼஷ்டக₂ட்₃கோ₃(அ)பி ந விநிஹதவாந் ஸாரவேதீ₃ கு₃ணாம்ஶாத் |

த்வத்ஸேவாத்₃யாஶு ஸித்₃த்₄யேத₃ஸதி₃ஹ ந ததா₂ த்வத்பரே சைஷ பீ₄ரு-

ர்யத்து ப்ராகே₃வ ரோகா₃தி₃பி₄ரபஹரதே தத்ர ஹா ஶிக்ஷயைநம் || 8||


8. முன்னொரு சமயம், பரீக்ஷித் என்ற அரசன், தர்மத்திற்குத் தீங்கு செய்த கலிபுருஷனைக் கொல்ல வாளை உருவினான். கலியிடம் நற்குணங்கள் இருந்ததால் அவனைக் கொல்லாமல் விட்டான். இக்கலியுகத்தில் உமக்குச் செய்யும் தொண்டுகள் மிக விரைவிலேயே பலனை அளிக்கும். தீய செயல்கள் பலன் கொடுப்பதில்லை. கலிபுருஷன் உன் பக்தர்களிடம் பயப்படுகிறான். அதனால், உன்னைத் தொழுவதற்கு முன்னரே, பக்தர்களுக்கு நோய் முதலியவற்றைக் கொடுத்து, பக்தியைத் தடை செய்கிறான். அதற்காக மட்டும் நீ அவனைத் தண்டிக்க வேண்டும்.


गङ्गा गीता च गायत्र्यपि च तुलसिका गोपिकाचन्दनं तत्

सालग्रामाभिपूजा परपुरुष तथैकादशी नामवर्णा: ।

एतान्यष्टाप्ययत्नान्यपि कलिसमये त्वत्प्रसादप्रवृद्ध्या

क्षिप्रं मुक्तिप्रदानीत्यभिदधु: ऋषयस्तेषु मां सज्जयेथा: ॥९॥


க₃ங்கா₃ கீ₃தா ச கா₃யத்ர்யபி ச துலஸிகா கோ₃பிகாசந்த₃நம் தத்

ஸாலக்₃ராமாபி₄பூஜா பரபுருஷ ததை₂காத₃ஶீ நாமவர்ணா: |

ஏதாந்யஷ்டாப்யயத்நாந்யபி கலிஸமயே த்வத்ப்ரஸாத₃ப்ரவ்ருத்₃த்₄யா

க்ஷிப்ரம் முக்திப்ரதா₃நீத்யபி₄த₃து₄: ருஷயஸ்தேஷு மாம் ஸஜ்ஜயேதா₂: || 9||


9. பரமனே! இந்தக் கலியுகத்தில் அதிக முயற்சியின்றி உன் அருளைப் பெற்று முக்தி அளிக்கும் எட்டு வழிகளை முனிவர்கள் உபதேசித்து உள்ளனர். அவை, கங்கை, கீதை, காயத்ரி, துளசி, கோபிசந்தனம், ஸாளக்ராம பூஜை, ஏகாதசி, உன் நாமமான அஷ்டாக்ஷரம் ஆகியவை. இந்த எட்டு விஷயங்களிலும் பற்றுள்ளவனாக என்னை ஆக்க வேண்டும்.


देवर्षीणां पितृणामपि न पुन: ऋणी किङ्करो वा स भूमन् ।

योऽसौ सर्वात्मना त्वां शरणमुपगतस्सर्वकृत्यानि हित्वा ।

तस्योत्पन्नं विकर्माप्यखिलमपनुदस्येव चित्तस्थितस्त्वं

तन्मे पापोत्थतापान् पवनपुरपते रुन्धि भक्तिं प्रणीया: ॥१०॥


தே₃வர்ஷீணாம் பித்ருணாமபி ந புந: ருணீ கிங்கரோ வா ஸ பூ₄மந் |

யோ(அ)ஸௌ ஸர்வாத்மநா த்வாம் ஶரணமுபக₃தஸ்ஸர்வக்ருத்யாநி ஹித்வா |

தஸ்யோத்பந்நம் விகர்மாப்யகி₂லமபநுத₃ஸ்யேவ சித்தஸ்தி₂தஸ்த்வம்

தந்மே பாபோத்த₂தாபாந் பவநபுரபதே ருந்தி₄ ப₄க்திம் ப்ரணீயா: || 10||


10. எங்கும் நிறைந்தவனே! எல்லாக் கர்மங்களையும் தொலைத்து உன்னிடம் சரணடைந்தவன், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பித்ருக்களுக்கும் கடன்படுவதோ, பணி செய்வதோ இல்லை. நீ அவனது மனதில் குடிகொண்டு, அவனது பாபங்களை முற்றிலுமாகப் போக்குகின்றாய். குருவாயூரப்பா! அதனால், என் பாபங்களினால் உண்டான என் துன்பங்களைப் போக்கி, எனக்கு பக்தியை அளிக்க வேண்டும்.



இருபத்து நான்கு குருக்கள்

बन्धुस्नेहं विजह्यां तव हि करुणया त्वय्युपावेशितात्मा

सर्वं त्यक्त्वा चरेयं सकलमपि जगद्वीक्ष्य मायाविलासम् ।

नानात्वाद्भ्रान्तिजन्यात् सति खलु गुणदोषावबोधे विधिर्वा

व्यासेधो वा कथं तौ त्वयि निहितमतेर्वीतवैषम्यबुद्धे: ॥१॥


ப₃ந்து₄ஸ்நேஹம் விஜஹ்யாம் தவ ஹி கருணயா த்வய்யுபாவேஶிதாத்மா

ஸர்வம் த்யக்த்வா சரேயம் ஸகலமபி ஜக₃த்₃வீக்ஷ்ய மாயாவிலாஸம் |

நாநாத்வாத்₃ப்₄ராந்திஜந்யாத் ஸதி க₂லு கு₃ணதோ₃ஷாவபோ₃தே₄ விதி₄ர்வா

வ்யாஸேதோ₄ வா கத₂ம் தௌ த்வயி நிஹிதமதேர்வீதவைஷம்யபு₃த்₃தே₄: || 1||


1. உன் கருணையினால் உறவினர்களிடம் உள்ள பாசத்தை நான் விட வேண்டும். இவ்வுலகம் மாயை என்று உணர்ந்து, எல்லாவற்றையும் விலக்கி, உன்னிடத்திலேயே மனதை நிலைநிறுத்தவேண்டும். தவறான புரிதலினால் பேதங்கள் ஏற்படுகிறது. நல்லவை, கெட்டவை என்ற ஞானத்தால் விதி அல்லது விதிவிலக்கு தோன்றுகிறது. உன்னிடத்தில் மனதை நிலைநிறுத்தியவனுக்கு விதி, விதிவிலக்கு என்ற வேறுபாடு எவ்வாறு தோன்றும்?


क्षुत्तृष्णालोपमात्रे सततकृतधियो जन्तव: सन्त्यनन्ता-

स्तेभ्यो विज्ञानवत्त्वात् पुरुष इह वरस्तज्जनिर्दुर्लभैव ।

तत्राप्यात्मात्मन: स्यात्सुहृदपि च रिपुर्यस्त्वयि न्यस्तचेता-

स्तापोच्छित्तेरुपायं स्मरति स हि सुहृत् स्वात्मवैरी ततोऽन्य: ॥२॥


க்ஷுத்த்ருஷ்ணாலோபமாத்ரே ஸததக்ருததி₄யோ ஜந்தவ: ஸந்த்யநந்தா-

ஸ்தேப்₄யோ விஜ்ஞாநவத்த்வாத் புருஷ இஹ வரஸ்தஜ்ஜநிர்து₃ர்லபை₄வ |

தத்ராப்யாத்மாத்மந: ஸ்யாத்ஸுஹ்ருத₃பி ச ரிபுர்யஸ்த்வயி ந்யஸ்தசேதா-

ஸ்தாபோச்சி₂த்தேருபாயம் ஸ்மரதி ஸ ஹி ஸுஹ்ருத் ஸ்வாத்மவைரீ ததோ(அ)ந்ய: || 2||


2. இவ்வுலகில் பசி, தாகம் இவற்றைத் தீர்த்துக்கொள்ள மட்டுமே பல பிராணிகள் வாழ்கின்றன. பகுத்தறிவுள்ள மனிதன் அவைகளைவிட உயர்ந்தவனாகிறான். மனித பிறப்பு உண்மையில் அரிது. மனிதன் தனக்குத்தானே நண்பனாகவும், பகைவனாகவும் இருக்கிறான். உன்னிடத்தில் பக்தி கொண்டு தனது துன்பத்தைப் போக்கிக் கொள்ளும் வழியை அறிபவன் தனக்குத்தானே நண்பனாகவும், அவ்வாறு இல்லாதவன் தனக்குத்தானே பகைவனாகவும் ஆகிறான்.


त्वत्कारुण्ये प्रवृत्ते क इव नहि गुरुर्लोकवृत्तेऽपि भूमन्

सर्वाक्रान्तापि भूमिर्नहि चलति ततस्सत्क्षमां शिक्षयेयम् ।

गृह्णीयामीश तत्तद्विषयपरिचयेऽप्यप्रसक्तिं समीरात्

व्याप्तत्वञ्चात्मनो मे गगनगुरुवशाद्भातु निर्लेपता च ॥३॥


த்வத்காருண்யே ப்ரவ்ருத்தே க இவ நஹி கு₃ருர்லோகவ்ருத்தே(அ)பி பூ₄மந்

ஸர்வாக்ராந்தாபி பூ₄மிர்நஹி சலதி ததஸ்ஸத்க்ஷமாம் ஶிக்ஷயேயம் |

க்₃ருஹ்ணீயாமீஶ தத்தத்₃விஷயபரிசயே(அ)ப்யப்ரஸக்திம் ஸமீராத்

வ்யாப்தத்வஞ்சாத்மநோ மே க₃க₃நகு₃ருவஶாத்₃பா₄து நிர்லேபதா ச || 3||


3. பரமனே! உன் அருள் கிடைத்தால் உலகில் உள்ள எதுதான் குருவாக ஆகமுடியாது? அனைத்தையும் தாங்கி நிற்கும் இந்தப் பூமி பொறுமையாக இருக்கிறது. அந்தப் பொறுமையை நான் பூமாதேவியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஈசனே! வாயுபகவானுக்கு அனைத்து பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டாலும் பற்றற்று விளங்குகிறார். அவரிடமிருந்து பற்றற்ற தன்மையைக் கற்க வேண்டும். எங்கும் பரவியிருந்தும் பாதிக்கப்படாமல் இருக்கும் ஆத்மாவைப் பற்றிய தன்மையை ஆகாயம் என்ற குருவிடமிருந்து கற்க வேண்டும்.


स्वच्छ: स्यां पावनोऽहं मधुर उदकवद्वह्निवन्मा स्म गृह्णां

सर्वान्नीनोऽपि दोषं तरुषु तमिव मां सर्वभूतेष्ववेयाम् ।

पुष्टिर्नष्टि: कलानां शशिन इव तनोर्नात्मनोऽस्तीति विद्यां

तोयादिव्यस्तमार्ताण्डवदपि च तनुष्वेकतां त्वत्प्रसादात् ॥४॥


ஸ்வச்ச₂: ஸ்யாம் பாவநோ(அ)ஹம் மது₄ர உத₃கவத்₃வஹ்நிவந்மா ஸ்ம க்₃ருஹ்ணாம்

ஸர்வாந்நீநோ(அ)பி தோ₃ஷம் தருஷு தமிவ மாம் ஸர்வபூ₄தேஷ்வவேயாம் |

புஷ்டிர்நஷ்டி: கலாநாம் ஶஶிந இவ தநோர்நாத்மநோ(அ)ஸ்தீதி வித்₃யாம்

தோயாதி₃வ்யஸ்தமார்தாண்ட₃வத₃பி ச தநுஷ்வேகதாம் த்வத்ப்ரஸாதா₃த் || 4||


4. தண்ணீரைப்போல் தெளிவாகவும், தூய்மையாகவும், இனிமையாகவும் நான் இருக்க வேண்டும். அக்னி எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு களங்கமில்லாமல் இருப்பதைப் போல் நானும் இருக்க வேண்டும். மரங்களில் அக்னி இருப்பதைப் போன்று எல்லா உயிர்களிலும் நான் இருப்பதாக அறிய வேண்டும். சந்திரனின் கலைகள் வளர்ந்து தேய்வதைப் போல், வளர்ச்சியும், தேய்வும் சரீரத்திற்கே, ஆத்மாவிற்கு இல்லை என்று அறிய வேண்டும். ஒரே சூரியன் தண்ணீரில் வெவ்வேறாகத் தோன்றுவதுபோல், ஒரே ஆத்மா சரீரங்களில் வெவ்வேறாகத் தோன்றுகிறது என்று உணர வேண்டும்.


स्नेहाद्व्याधात्तपुत्रप्रणयमृतकपोतायितो मा स्म भूवं

प्राप्तं प्राश्नन् सहेय क्षुधमपि शयुवत् सिन्धुवत्स्यामगाध: ।

मा पप्तं योषिदादौ शिखिनि शलभवत् भृङ्गवत्सारभागी

भूयासं किन्तु तद्वद्धनचयनवशान्माहमीश प्रणेशम् ॥५॥


ஸ்நேஹாத்₃வ்யாதா₄த்தபுத்ரப்ரணயம்ருதகபோதாயிதோ மா ஸ்ம பூ₄வம்

ப்ராப்தம் ப்ராஶ்நந் ஸஹேய க்ஷுத₄மபி ஶயுவத் ஸிந்து₄வத்ஸ்யாமகா₃த₄: |

மா பப்தம் யோஷிதா₃தௌ₃ ஶிகி₂நி ஶலப₄வத் ப்₄ருங்க₃வத்ஸாரபா₄கீ₃

பூ₄யாஸம் கிந்து தத்₃வத்₃த₄நசயநவஶாந்மாஹமீஶ ப்ரணேஶம் || 5||


5. வேடனால் கொல்லப்பட்ட தன் மனைவியையும், குஞ்சுகளையும் நினைத்து சோகத்தினால் இறந்த மாடப் புறாவைப் போல் நான் ஆகக் கூடாது. மலைப் பாம்பைப் போல் கிடைத்ததை உண்டு பசியைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கடலைப் போல் கம்பீரமாக இருக்க வேண்டும். தீயில் தானாகவே விழும் வீட்டில் பூச்சியைப் போல் பெண் மோகம் முதலிய அற்ப சுகங்களில் விழாமலிருக்க வேண்டும். பூக்களிலிருந்து தேனை மட்டும் சேகரிக்கும் வண்டைப் போல் விஷயங்களின் சாரத்தை மட்டும் சேர்ப்பவனாக இருக்க வேண்டும். ஆனால் அவ்வண்டைப் போல் செல்வத்தை சேகரித்து அழியாமல் இருக்க வேண்டும்.


मा बद्ध्यासं तरुण्या गज इव वशया नार्जयेयं धनौघं

हर्तान्यस्तं हि माध्वीहर इव मृगवन्मा मुहं ग्राम्यगीतै: ।

नात्यासज्जेय भोज्ये झष इव बलिशे पिङ्गलावन्निराश:

सुप्यां भर्तव्ययोगात् कुरर इव विभो सामिषोऽन्यैर्न हन्यै ॥६॥


மா ப₃த்₃த்₄யாஸம் தருண்யா க₃ஜ இவ வஶயா நார்ஜயேயம் த₄நௌக₄ம்

ஹர்தாந்யஸ்தம் ஹி மாத்₄வீஹர இவ ம்ருக₃வந்மா முஹம் க்₃ராம்யகீ₃தை: |

நாத்யாஸஜ்ஜேய போ₄ஜ்யே ஜ₂ஷ இவ ப₃லிஶே பிங்க₃லாவந்நிராஶ:

ஸுப்யாம் ப₄ர்தவ்யயோகா₃த் குரர இவ விபோ₄ ஸாமிஷோ(அ)ந்யைர்ந ஹந்யை || 6||


6. ஈசனே! ஆண் யானை பெண் யானைக்குக் கட்டுப்படுவதுபோல் பெண்களைக் கண்டு மோகமடையாமல் இருக்க வேண்டும். தேனீக்கள் தேனைச் சேர்த்து வைப்பதுபோல் அதிகமான பொருளைச் சேர்த்து வைக்காமல் இருக்க வேண்டும். ஏனெனில், தேனீ சேர்த்து வைத்த தேனை, தேன் எடுப்பவன் கவர்ந்து செல்வதுபோல், சேமித்து வைத்த அப்பொருளை யாராவது கவர்ந்து செல்வார்கள். கீழ்த்தரமான பாட்டுக்களில் மயங்கும் மானைப் போல நான் மயங்காமல் இருக்க வேண்டும். உணவின் மீது உள்ள ஆசையால் தூண்டிலில் அகப்படும் மீனைப் போல உணவில் அதிக நாட்டம் கொள்ளாமல் இருக்க வேண்டும். பிங்களை என்பவளைப் போல் ஆசை இல்லாமல் தூங்க வேண்டும். குரரம் என்ற பறவை மூக்கில் இறைச்சியை வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற பறவைகளால் கொல்லப் பட்டது. அதைப் போல் பொருட்களில் ஆசை வைத்து நான் துன்பப்படாமல் இருக்க வேண்டும்.


वर्तेय त्यक्तमान: सुखमतिशिशुवन्निस्सहायश्चरेयं

कन्याया एकशेषो वलय इव विभो वर्जितान्योन्यघोष: ।

त्वच्चित्तो नावबुध्यै परमिषुकृदिव क्ष्माभृदायानघोषं

गेहेष्वन्यप्रणीतेष्वहिरिव निवसान्युन्दुरोर्मन्दिरेषु ॥७॥


வர்தேய த்யக்தமாந: ஸுக₂மதிஶிஶுவந்நிஸ்ஸஹாயஶ்சரேயம்

கந்யாயா ஏகஶேஷோ வலய இவ விபோ₄ வர்ஜிதாந்யோந்யகோ₄ஷ: |

த்வச்சித்தோ நாவபு₃த்₄யை பரமிஷுக்ருதி₃வ க்ஷ்மாப்₄ருதா₃யாநகோ₄ஷம்

கே₃ஹேஷ்வந்யப்ரணீதேஷ்வஹிரிவ நிவஸாந்யுந்து₃ரோர்மந்தி₃ரேஷு || 7||


7. சிறு குழந்தை, மரியாதை மற்றும் அவமதிப்பு உணர்வு இல்லாமல் இருப்பது போல் இருக்க வேண்டும். கன்னிப் பெண்ணின் கையில் உள்ள ஒற்றை வளையல் போல வீண் பேச்சுக்களின் தொடர்பு இல்லாமல் தனித் தன்மையுடன் இருக்க வேண்டும். அம்பு தயாரிப்பவன், அரசன் வரும் அறிவிப்பை அறியாதது போல் உம்மையே நினைத்து வேறு ஒன்றையும் நினைக்காதிருக்க வேண்டும். எலிவளையில் பாம்பு குடியிருப்பதுபோல, எந்த வீட்டிலும் ஆசை வைக்காமல், பிறர் இல்லத்தில் வாழ வேண்டும்.


त्वय्येव त्वत्कृतं त्वं क्षपयसि जगदित्यूर्णनाभात् प्रतीयां

त्वच्चिन्ता त्वत्स्वरूपं कुरुत इति दृढं शिक्षये पेशकारात् ।

विड्भस्मात्मा च देहो भवति गुरुवरो यो विवेकं विरक्तिं

धत्ते सञ्चिन्त्यमानो मम तु बहुरुजापीडितोऽयं विशेषात् ॥८॥


த்வய்யேவ த்வத்க்ருதம் த்வம் க்ஷபயஸி ஜக₃தி₃த்யூர்ணநாபா₄த் ப்ரதீயாம்

த்வச்சிந்தா த்வத்ஸ்வரூபம் குருத இதி த்₃ருட₄ம் ஶிக்ஷயே பேஶகாராத் |

விட்₃ப₄ஸ்மாத்மா ச தே₃ஹோ ப₄வதி கு₃ருவரோ யோ விவேகம் விரக்திம்

த₄த்தே ஸஞ்சிந்த்யமாநோ மம து ப₃ஹுருஜாபீடி₃தோ(அ)யம் விஶேஷாத் || 8||


8. உன்னால் படைக்கப்பட்ட உலகம் உன்னிடத்திலேயே அடங்கி விடுகிறது என்பதை சிலந்திப் பூச்சியிடமிருந்து அறிந்து கொள்வேன். உன்னையே நினைத்திருப்பது உன்னுடைய வடிவத்தை அளிக்கிறது என்ற உறுதியான பாடத்தைக் குளவியிடமிருந்து கற்றுக் கொள்வேன். புழுக்களாகவும், சாம்பலாகவும் ஆகும் இந்த உடல் ஒரு சிறந்த குருவாக விளங்குகிறது. கவனமாக சிந்தனை செய்தால் இந்த உடல் ஞானத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும். அதிலும் பல நோய்களால் பாதிக்கப்பட்ட என் உடலே எனக்குக் குருவாய் விரைவிலேயே வைராக்கியத்தை அளிக்கிறது.


ही ही मे देहमोहं त्यज पवनपुराधीश यत्प्रेमहेतो-

र्गेहे वित्ते कलत्रादिषु च विवशितास्त्वत्पदं विस्मरन्ति ।

सोऽयं वह्नेश्शुनो वा परमिह परत: साम्प्रतञ्चाक्षिकर्ण-

त्वग्जिह्वाद्या विकर्षन्त्यवशमत इत: कोऽपि न त्वत्पदाब्जे ॥९॥


ஹீ ஹீ மே தே₃ஹமோஹம் த்யஜ பவநபுராதீ₄ஶ யத்ப்ரேமஹேதோ-

ர்கே₃ஹே வித்தே கலத்ராதி₃ஷு ச விவஶிதாஸ்த்வத்பத₃ம் விஸ்மரந்தி |

ஸோ(அ)யம் வஹ்நேஶ்ஶுநோ வா பரமிஹ பரத: ஸாம்ப்ரதஞ்சாக்ஷிகர்ண-

த்வக்₃ஜிஹ்வாத்₃யா விகர்ஷந்த்யவஶமத இத: கோ(அ)பி ந த்வத்பதா₃ப்₃ஜே || 9||


9. குருவாயூரப்பனே! இந்த உடல் மீது கொண்ட ஆசையால் வீடு, பொருள், மனைவி ஆகியவற்றில் மக்கள் பற்று வைத்து உம்மை மறக்கிறார்கள். அந்த உடல் இறுதியில் அக்னிக்கும், நாய்க்கும் இரையாகிறது. வாழும்போது கண், காது, தோல், நாக்கு போன்ற இந்திரியங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. அந்தோ! உன் தாமரைப் பாதங்களை உடலின் ஒரு இந்திரியமாவது நாடுவதில்லை.


दुर्वारो देहमोहो यदि पुनरधुना तर्हि निश्शेषरोगान्

हृत्वा भक्तिं द्रढिष्ठां कुरु तव पदपङ्केरुहे पङ्कजाक्ष ।

नूनं नानाभवान्ते समधिगतममुं मुक्तिदं विप्रदेहं

क्षुद्रे हा हन्त मा मा क्षिप विषयरसे पाहि मां मारुतेश ॥१०॥


து₃ர்வாரோ தே₃ஹமோஹோ யதி₃ புநரது₄நா தர்ஹி நிஶ்ஶேஷரோகா₃ந்

ஹ்ருத்வா ப₄க்திம் த்₃ரடி₄ஷ்டா₂ம் குரு தவ பத₃பங்கேருஹே பங்கஜாக்ஷ |

நூநம் நாநாப₄வாந்தே ஸமதி₄க₃தமமும் முக்தித₃ம் விப்ரதே₃ஹம்

க்ஷுத்₃ரே ஹா ஹந்த மா மா க்ஷிப விஷயரஸே பாஹி மாம் மாருதேஶ || 10||


10. தாமரைக் கண்ணனே! இந்த உடலில் வைத்த ஆசையைத் தவிர்க்க முடியாதெனில், என் வியாதிகளைப் போக்கி உன்னுடைய திருவடித் தாமரையில் அசைக்க முடியாத உறுதியான பக்தியை அளிக்க வேண்டும். பல பிறவிகளுக்குப் பிறகு அடைந்த இந்த பிராம்மண சரீரத்தைக் கீழ்த்தரமான இந்திரிய சந்தோஷத்திற்குள் தள்ள வேண்டாம். குருவாயூரப்பா! என்னைக் காப்பாற்ற வேண்டும்.



தத்வக்ஞான உற்பத்தி

शुद्धा निष्कामधर्मै: प्रवरगुरुगिरा तत्स्वरूपं परं ते

शुद्धं देहेन्द्रियादिव्यपगतमखिलव्याप्तमावेदयन्ते ।

नानात्वस्थौल्यकार्श्यादि तु गुणजवपुस्सङ्गतोऽध्यासितं ते

वह्नेर्दारुप्रभेदेष्विव महदणुतादीप्तताशान्ततादि ॥१॥


ஶுத்₃தா₄ நிஷ்காமத₄ர்மை: ப்ரவரகு₃ருகி₃ரா தத்ஸ்வரூபம் பரம் தே

ஶுத்₃த₄ம் தே₃ஹேந்த்₃ரியாதி₃வ்யபக₃தமகி₂லவ்யாப்தமாவேத₃யந்தே |

நாநாத்வஸ்தௌ₂ல்யகார்ஶ்யாதி₃ து கு₃ணஜவபுஸ்ஸங்க₃தோ(அ)த்₄யாஸிதம் தே

வஹ்நேர்தா₃ருப்ரபே₄தே₃ஷ்விவ மஹத₃ணுதாதீ₃ப்ததாஶாந்ததாதி₃ || 1||


1. பலனை விரும்பாமல் தர்மங்களைச் செய்பவர்கள், நல்ல குருவின் மூலம், ஐம்புலன்களில் இருந்து வேறுபட்டதும், எங்கும் வியாபித்திருப்பதுமான உன் வடிவத்தை அறிகிறார்கள். பலவகை மரக்கட்டைகளில் தொடர்பு கொண்ட அக்னி எவ்வாறு சிறியது, பெரியது எனப் பலவகையாகத் தோன்றுகிறதோ, அவ்வாறே பலவகைக் குணங்களால் செய்யப்பட்ட உடல்களின் சம்பந்தத்தால் பலவிதமாய்த் தோன்றுகின்றாய்.


आचार्याख्याधरस्थारणिसमनुमिलच्छिष्यरूपोत्तरार-

ण्यावेधोद्भासितेन स्फुटतरपरिबोधाग्निना दह्यमाने ।

कर्मालीवासनातत्कृततनुभुवनभ्रान्तिकान्तारपूरे

दाह्याभावेन विद्याशिखिनि च विरते त्वन्मयी खल्ववस्था ॥२॥


ஆசார்யாக்₂யாத₄ரஸ்தா₂ரணிஸமநுமிலச்சி₂ஷ்யரூபோத்தரார-

ண்யாவேதோ₄த்₃பா₄ஸிதேந ஸ்பு₂டதரபரிபோ₃தா₄க்₃நிநா த₃ஹ்யமாநே |

கர்மாலீவாஸநாதத்க்ருததநுபு₄வநப்₄ராந்திகாந்தாரபூரே

தா₃ஹ்யாபா₄வேந வித்₃யாஶிகி₂நி ச விரதே த்வந்மயீ க₂ல்வவஸ்தா₂ || 2||


2. குரு என்கிற அடி அரணிக்கட்டையும், சிஷ்யன் என்கிற மேல் அரணிக்கட்டையும் உரசுவதால், மிகத் தெளிவான ஞானம் என்னும் தீப்பொறி உண்டாகிறது. அந்தத் தீயால், கர்மங்களின் கூட்டம், அதனால் உண்டான இந்த உடல், உலகம் என்னும் காடுகள் எரிக்கப்படுகிறது. எரிக்கப் பொருள் இல்லையெனில் ஞானமாகிற அந்தத் தீ அமைதியாய் அடங்குகின்றது. எஞ்சியுள்ள ஒரு நிலை உன் வடிவமாக இருக்கின்றது.


एवं त्वत्प्राप्तितोऽन्यो नहि खलु निखिलक्लेशहानेरुपायो

नैकान्तात्यन्तिकास्ते कृषिवदगदषाड्गुण्यषट्कर्मयोगा: ।

दुर्वैकल्यैरकल्या अपि निगमपथास्तत्फलान्यप्यवाप्ता

मत्तास्त्वां विस्मरन्त: प्रसजति पतने यान्त्यनन्तान् विषादान्॥३॥


ஏவம் த்வத்ப்ராப்திதோ(அ)ந்யோ நஹி க₂லு நிகி₂லக்லேஶஹாநேருபாயோ

நைகாந்தாத்யந்திகாஸ்தே க்ருஷிவத₃க₃த₃ஷாட்₃கு₃ண்யஷட்கர்மயோகா₃: |

து₃ர்வைகல்யைரகல்யா அபி நிக₃மபதா₂ஸ்தத்ப₂லாந்யப்யவாப்தா

மத்தாஸ்த்வாம் விஸ்மரந்த: ப்ரஸஜதி பதநே யாந்த்யநந்தாந் விஷாதா₃ந்|| 3||


3. அனைத்து துக்கங்களையும் போக்கும் ஒரே வழி உன்னை அடைவதுதான். ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்ட மருந்துகளோ, ராஜநீதியில் சொல்லப்பட்ட வழிமுறைகளோ, தர்மநூல்களில் சொல்லப்பட்ட கர்மங்களோ, வேதத்தில் கூறப்பட்ட யோகங்களோ துன்பத்தைப் போக்கி மீண்டும் வராமல் தடுக்கும் சக்தியற்றவை. மற்ற வழிகளும் கடினமானவை. ஆயினும், அந்த வழிகளைப் பின்பற்றிப் பலனை அடைந்து, அதனால் செருக்கடைந்து, உன்னை மறந்து விடுகின்றனர். வீழ்ச்சி ஏற்படும்போது அளவற்ற துன்பங்களை அடைகின்றனர்.


त्वल्लोकादन्यलोक: क्वनु भयरहितो यत् परार्धद्वयान्ते

त्वद्भीतस्सत्यलोकेऽपि न सुखवसति: पद्मभू: पद्मनाभ ।

एवं भावे त्वधर्मार्जितबहुतमसां का कथा नारकाणां

तन्मे त्वं छिन्धि बन्धं वरद् कृपणबन्धो कृपापूरसिन्धो ॥४॥


த்வல்லோகாத₃ந்யலோக: க்வநு ப₄யரஹிதோ யத் பரார்த₄த்₃வயாந்தே

த்வத்₃பீ₄தஸ்ஸத்யலோகே(அ)பி ந ஸுக₂வஸதி: பத்₃மபூ₄: பத்₃மநாப₄ |

ஏவம் பா₄வே த்வத₄ர்மார்ஜிதப₃ஹுதமஸாம் கா கதா₂ நாரகாணாம்

தந்மே த்வம் சி₂ந்தி₄ ப₃ந்த₄ம் வரத்₃ க்ருபணப₃ந்தோ₄ க்ருபாபூரஸிந்தோ₄ || 4||


4. பத்மநாபா! உன் இருப்பிடமான வைகுண்டத்தைத் தவிர பயமற்ற உலகம் வேறில்லை. ஏனெனில், இரு பரார்த்தங்கள் முடிந்த பின்னும், பிரும்மன் பயத்தினால் ஸத்யலோகத்தில் சுகமாய் வாழவில்லை. இவ்வாறிருக்க, அதர்மங்களைச் செய்து நரகத்தில் இருப்பவர்களைப் பற்றி என்ன சொல்வது? வரதனே! துன்பமடைந்தவர்களைக் காப்பவனே! கருணைக் கடலே! எனது பந்தங்களை அறுக்க வேண்டும்.


याथार्थ्यात्त्वन्मयस्यैव हि मम न विभो वस्तुतो बन्धमोक्षौ

मायाविद्यातनुभ्यां तव तु विरचितौ स्वप्नबोधोपमौ तौ ।

बद्धे जीवद्विमुक्तिं गतवति च भिदा तावती तावदेको

भुङ्क्ते देहद्रुमस्थो विषयफलरसान्नापरो निर्व्यथात्मा ॥५॥


யாதா₂ர்த்₂யாத்த்வந்மயஸ்யைவ ஹி மம ந விபோ₄ வஸ்துதோ ப₃ந்த₄மோக்ஷௌ

மாயாவித்₃யாதநுப்₄யாம் தவ து விரசிதௌ ஸ்வப்நபோ₃தோ₄பமௌ தௌ |

ப₃த்₃தே₄ ஜீவத்₃விமுக்திம் க₃தவதி ச பி₄தா₃ தாவதீ தாவதே₃கோ

பு₄ங்க்தே தே₃ஹத்₃ருமஸ்தோ₂ விஷயப₂லரஸாந்நாபரோ நிர்வ்யதா₂த்மா || 5||


5. உண்மையில் உன்னிடத்தில் ஒன்றிவிட்டதால் எனக்கு பந்தமோ, மோக்ஷமோ கிடையாது. அவை உன் மாயையின் அம்சங்கள். கனவும், விழிப்பும் போன்றது. பந்தமுள்ளவனுக்கும், ஜீவன்முக்தனுக்கும் உள்ள வேற்றுமை அவ்விதமானது தான். பந்தமுள்ளவன், சரீரமென்னும் மரத்தில் இருந்து கொண்டு விஷய சுகங்களாகிற பழங்களை அனுபவிக்கிறான். ஜீவன்முக்தன் அவற்றில் ஈடுபடாமல் துக்கமற்றவனாய் இருக்கிறான்.


जीवन्मुक्तत्वमेवंविधमिति वचसा किं फलं दूरदूरे

तन्नामाशुद्धबुद्धेर्न च लघु मनसश्शोधनं भक्तितोऽन्यत् ।

तन्मे विष्णो कृषीष्ठास्त्वयि कृतसकलप्रार्पणं भक्तिभारं

येन स्यां मङ्क्षु किञ्चिद् गुरुवचनमिलत्त्वत्प्रबोधस्त्वदात्मा ॥६॥


ஜீவந்முக்தத்வமேவம்வித₄மிதி வசஸா கிம் ப₂லம் தூ₃ரதூ₃ரே

தந்நாமாஶுத்₃த₄பு₃த்₃தே₄ர்ந ச லகு₄ மநஸஶ்ஶோத₄நம் ப₄க்திதோ(அ)ந்யத் |

தந்மே விஷ்ணோ க்ருʼஷீஷ்டா₂ஸ்த்வயி க்ருதஸகலப்ரார்பணம் ப₄க்திபா₄ரம்

யேந ஸ்யாம் மங்க்ஷு கிஞ்சித்₃ கு₃ருவசநமிலத்த்வத்ப்ரபோ₃த₄ஸ்த்வதா₃த்மா || 6||


6. ஜீவன்முக்தனின் நிலை இதுதான் என்று கூறுவதால் என்ன பயன்? மனத்தூய்மை இல்லாதவனுக்கு அந்நிலை கிடைக்காது. மனதை சுலபமாகத் தூய்மைப்படுத்துவது பக்தி ஒன்றே. விஷ்ணுவே! உன்னிடம் அனைத்தையும் அர்ப்பணிக்கும் திடமான பக்தியை அளிக்க வேண்டும். அந்தப் பக்தியால் குருவின் உபதேசம் பெற்று, தத்வக்ஞானத்தை அடைந்து, விரைவில் உன்னிடமே ஒன்றிவிடுவேன்.


शब्द्ब्रह्मण्यपीह प्रयतितमनसस्त्वां न जानन्ति केचित्

कष्टं वन्ध्यश्रमास्ते चिरतरमिह गां बिभ्रते निष्प्रसूतिम् ।

यस्यां विश्वाभिरामास्सकलमलहरा दिव्यलीलावतारा:

सच्चित्सान्द्रं च रूपं तव न निगदितं तां न वाचं भ्रियासम् ॥७॥


ஶப்₃த்₃ப்₃ரஹ்மண்யபீஹ ப்ரயதிதமநஸஸ்த்வாம் ந ஜாநந்தி கேசித்

கஷ்டம் வந்த்₄யஶ்ரமாஸ்தே சிரதரமிஹ கா₃ம் பி₃ப்₄ரதே நிஷ்ப்ரஸூதிம் |

யஸ்யாம் விஶ்வாபி₄ராமாஸ்ஸகலமலஹரா தி₃வ்யலீலாவதாரா:

ஸச்சித்ஸாந்த்₃ரம் ச ரூபம் தவ ந நிக₃தி₃தம் தாம் ந வாசம் ப்₄ரியாஸம் || 7||


7. சிலர் வேதத்தைக் கற்று அதிலேயே மூழ்கிய மனம் உடையவர்களாய் இருந்தாலும் உன்னை அறிவதில்லை. அவர்கள் கன்று போடாத மலட்டுப் பசுவைப் போல், வீண் முயற்சி செய்பவர்கள். கிருஷ்ணா! மனதைக் கவர்ந்து பாபங்களைப் போக்கும் உன் லீலைகளையும், சச்சிதானந்த ஸ்வரூபமான உன்னையும், உன் அவதாரங்களையும் பற்றிக் கூறாத அந்த வார்த்தைகளின் பின்னால் நான் செல்லாமல் இருக்க வேண்டும்.


यो यावान् यादृशो वा त्वमिति किमपि नैवावगच्छामि भूम्-

न्नेवञ्चानन्यभावस्त्वदनुभजनमेवाद्रिये चैद्यवैरिन् ।

त्वल्लिङ्गानां त्वदङ्घ्रिप्रियजनसदसां दर्शनस्पर्शनादि-

र्भूयान्मे त्वत्प्रपूजानतिनुतिगुणकर्मानुकीर्त्यादरोऽपि ॥८॥


யோ யாவாந் யாத்₃ருஶோ வா த்வமிதி கிமபி நைவாவக₃ச்சா₂மி பூ₄ம்-

ந்நேவஞ்சாநந்யபா₄வஸ்த்வத₃நுப₄ஜநமேவாத்₃ரியே சைத்₃யவைரிந் |

த்வல்லிங்கா₃நாம் த்வத₃ங்க்₄ரிப்ரியஜநஸத₃ஸாம் த₃ர்ஶநஸ்பர்ஶநாதி₃-

ர்பூ₄யாந்மே த்வத்ப்ரபூஜாநதிநுதிகு₃ணகர்மாநுகீர்த்யாத₃ரோ(அ)பி || 8||


8. பரிபூரணனே! உன்னுடைய் வடிவம் என்ன? மகிமை எவ்வளவு? என்பதை நான் அறியேன். ஆனால் வேறொன்றையும் விரும்பாமல் உன்னையே பஜிக்கிறேன். சிசுபாலனின் எதிரியான கிருஷ்ணா! உன்அழகிய ரூபங்களையும், உன்பாதங்களையே அண்டியிருக்கும் பக்தர்களையும் தரிசித்து, அவர்களோடு சேர வேண்டும். உன்னைப் போற்றிப் பாடி, நமஸ்கரித்து, உன் குணங்களையும் திருவிளையாடல்களையும் பேசிக் கொண்டு, உன்னிடத்தில் பற்றுள்ளவனாக நான் இருக்க வேண்டும்.


यद्यल्लभ्येत तत्तत्तव समुपहृतं देव दासोऽस्मि तेऽहं

त्वद्गेहोन्मार्जनाद्यं भवतु मम मुहु: कर्म निर्मायमेव ।

सूर्याग्निब्राह्मणात्मादिषु लसितचतुर्बाहुमाराधये त्वां

त्वत्प्रेमार्द्रत्वरूपो मम सततमभिष्यन्दतां भक्तियोग: ॥९॥


யத்₃யல்லப்₄யேத தத்தத்தவ ஸமுபஹ்ருதம் தே₃வ தா₃ஸோ(அ)ஸ்மி தே(அ)ஹம்

த்வத்₃கே₃ஹோந்மார்ஜநாத்₃யம் ப₄வது மம முஹு: கர்ம நிர்மாயமேவ |

ஸூர்யாக்₃நிப்₃ராஹ்மணாத்மாதி₃ஷு லஸிதசதுர்பா₃ஹுமாராத₄யே த்வாம்

த்வத்ப்ரேமார்த்₃ரத்வரூபோ மம ஸததமபி₄ஷ்யந்த₃தாம் ப₄க்தியோக₃: || 9||


9. என்னுடைய அனைத்துப் பொருட்களையும் உன்னிடமே அர்ப்பணிக்கிறேன். உனக்கே அடிமையாக இருப்பேன். உன் ஆலயத்தை சுத்தம் செய்வது போன்ற தொண்டுகள் செய்வேன். சூரியன், அக்னி, பிராமணன், தன் ஹ்ருதயம், பசு ஆகியவற்றில் நான்கு கைகளுடன் விளங்கும் உன்னை ஆராதிப்பேன். அன்பினால் நனைந்த என் இதயம் இடைவிடாமல் பக்தி யோகத்தில் ஈடுபட வேண்டும்.


ऐक्यं ते दानहोमव्रतनियमतपस्सांख्ययोगैर्दुरापं

त्वत्सङ्गेनैव गोप्य: किल सुकृतितमा प्रापुरानन्दसान्द्रम् ।

भक्तेष्वन्येषु भूयस्स्वपि बहुमनुषे भक्तिमेव त्वमासां

तन्मे त्वद्भक्तिमेव द्रढय हर गदान् कृष्ण वातालयेश ॥१०॥


ஐக்யம் தே தா₃நஹோமவ்ரதநியமதபஸ்ஸாம்க்₂யயோகை₃ர்து₃ராபம்

த்வத்ஸங்கே₃நைவ கோ₃ப்ய: கில ஸுக்ருதிதமா ப்ராபுராநந்த₃ஸாந்த்₃ரம் |

ப₄க்தேஷ்வந்யேஷு பூ₄யஸ்ஸ்வபி ப₃ஹுமநுஷே ப₄க்திமேவ த்வமாஸாம்

தந்மே த்வத்₃ப₄க்திமேவ த்₃ரட₄ய ஹர க₃தா₃ந் க்ருஷ்ண வாதாலயேஶ || 10||


10. ஹே குருவாயூரப்பா! உன்னுடனான ஐக்கியம், தானம், ஹோமம்,

தவம், யோகம் முதலியவற்றால் அடைய முடியாதது. புண்ணியசாலிகளான கோபிகைகள் உன்னுடன் ஐக்கியத்தை அடைந்தார்கள். பலர் உன்னிடம் பக்தியுடன் இருந்தும், கோபிகைகளின் பக்தியையே மிகவும் விரும்புகின்றாய். ஆகையால், உன்னிடம் உள்ள என் பக்தியானது உறுதியாக இருக்க அருள வேண்டும். கிருஷ்ணா! என் நோய்களைப் போக்க வேண்டும்.



த்யான யோகம்

आदौ हैरण्यगर्भीं तनुमविकलजीवात्मिकामास्थितस्त्वं

जीवत्वं प्राप्य मायागुणगणखचितो वर्तसे विश्वयोने ।

तत्रोद्वृद्धेन सत्त्वेन तु गुणयुगलं भक्तिभावं गतेन

छित्वा सत्त्वं च हित्वा पुनरनुपहितो वर्तिताहे त्वमेव ॥१॥


ஆதௌ₃ ஹைரண்யக₃ர்பீ₄ம் தநுமவிகலஜீவாத்மிகாமாஸ்தி₂தஸ்த்வம்

ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு₃ணக₃ணக₂சிதோ வர்தஸே விஶ்வயோநே |

தத்ரோத்₃வ்ருத்₃தே₄ந ஸத்த்வேந து கு₃ணயுக₃லம் ப₄க்திபா₄வம் க₃தேந

சி₂த்வா ஸத்த்வம் ச ஹித்வா புநரநுபஹிதோ வர்திதாஹே த்வமேவ || 1||


1. உலகிற்குக் காரணமானவனே! பிரளயத்திற்குப் பிறகு ஸ்ருஷ்டியின் போது, அனைத்து உயிர்களின் வடிவத்தில் ஹிரண்யகர்ப்பருடைய சரீரத்தை அடைந்தாய். பிறகு ஜீவன்களாக ஆகி, மாயையோடு சம்பந்தப்பட்டவராக இருக்கின்றாய். அப்போது பக்தியினால் உண்டான ஸத்வ குணத்தினால், ரஜோ குணம், தமோ குணம் ஆகிய இரண்டில் இருந்தும் விடுபட்டு, இறுதியில் ஸத்வகுணத்தையும் விட்டுவிட்டு, ஜீவனாகிய நான் மீண்டும் நிர்க்குணரான உன்னுடன் இருக்க வேண்டும்.


सत्त्वोन्मेषात् कदाचित् खलु विषयरसे दोषबोधेऽपि भूमन्

भूयोऽप्येषु प्रवृत्तिस्सतमसि रजसि प्रोद्धते दुर्निवारा ।

चित्तं तावद्गुणाश्च ग्रथितमिह मिथस्तानि सर्वाणि रोद्धुं

तुर्ये त्वय्येकभक्तिश्शरणमिति भवान् हंसरूपी न्यगादीत् ॥२॥


ஸத்த்வோந்மேஷாத் கதா₃சித் க₂லு விஷயரஸே தோ₃ஷபோ₃தே₄(அ)பி பூ₄மந்

பூ₄யோ(அ)ப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி ரஜஸி ப்ரோத்₃த₄தே து₃ர்நிவாரா |

சித்தம் தாவத்₃கு₃ணாஶ்ச க்₃ரதி₂தமிஹ மித₂ஸ்தாநி ஸர்வாணி ரோத்₃து₄ம்

துர்யே த்வய்யேகப₄க்திஶ்ஶரணமிதி ப₄வாந் ஹம்ஸரூபீ ந்யகா₃தீ₃த் || 2||


2. முழுமுதற்கடவுளே! ஸத்வ குணம் வளர்ந்தால் விஷய சுகங்களில் ஈடுபாடு குறைகிறது. தமோ குணமும், ரஜோ குணமும் வளர்ந்தால் விஷய சுகங்களில் மீண்டும் ஈடுபாடு ஏற்படுகிறது. இங்கு மனமும், விஷயங்களில் பற்றும் இணைந்து விடுகிறது. முக்தியடைய இடையூறாய் இருக்கும் இந்த மனதையும், குணங்களையும் தடுக்க பக்தி ஒன்றே துணையாய் இருக்கும் என்று ஹம்ஸ ரூபமெடுத்து நீர் உபதேசித்தாய்.


सन्ति श्रेयांसि भूयांस्यपि रुचिभिदया कर्मिणां निर्मितानि

क्षुद्रानन्दाश्च सान्ता बहुविधगतय: कृष्ण तेभ्यो भवेयु: ।

त्वं चाचख्याथ सख्ये ननु महिततमां श्रेयसां भक्तिमेकां

त्वद्भक्त्यानन्दतुल्य: खलु विषयजुषां सम्मद: केन वा स्यात् ॥३॥


ஸந்தி ஶ்ரேயாம்ஸி பூ₄யாம்ஸ்யபி ருசிபி₄த₃யா கர்மிணாம் நிர்மிதாநி

க்ஷுத்₃ராநந்தா₃ஶ்ச ஸாந்தா ப₃ஹுவித₄க₃தய: க்ருஷ்ண தேப்₄யோ ப₄வேயு: |

த்வம் சாசக்₂யாத₂ ஸக்₂யே நநு மஹிததமாம் ஶ்ரேயஸாம் ப₄க்திமேகாம்

த்வத்₃ப₄க்த்யாநந்த₃துல்ய: க₂லு விஷயஜுஷாம் ஸம்மத₃: கேந வா ஸ்யாத் || 3||


3. கர்மங்களைச் செய்ய அவரவர்களுக்கேற்பப் பல வழிகள் கூறப்பட்டு இருக்கிறது. அவை நிலையில்லாத அற்ப சுகங்களை அளிக்கிறது. உயர்ந்ததான போற்றத் தகுந்த வழி பக்தி ஒன்றே என்று நீ உத்தவரிடம் கூறினாய். பக்தியால் அடையும் ஆனந்தத்தை, விஷய சுகங்களில் ஈடுபடுவோர் எவ்வாறு அடைய முடியும்?


त्वत्भक्त्या तुष्टबुद्धे: सुखमिह चरतो विच्युताशस्य चाशा:

सर्वा: स्यु: सौख्यमय्य: सलिलकुहरगस्येव तोयैकमय्य: ।

सोऽयं खल्विन्द्रलोकं कमलजभवनं योगसिद्धीश्च हृद्या:

नाकाङ्क्षत्येतदास्तां स्वयमनुपतिते मोक्षसौख्येऽप्यनीह: ॥४॥


த்வத்ப₄க்த்யா துஷ்டபு₃த்₃தே₄: ஸுக₂மிஹ சரதோ விச்யுதாஶஸ்ய சாஶா:

ஸர்வா: ஸ்யு: ஸௌக்₂யமய்ய: ஸலிலகுஹரக₃ஸ்யேவ தோயைகமய்ய: |

ஸோ(அ)யம் க₂ல்விந்த்₃ரலோகம் கமலஜப₄வநம் யோக₃ஸித்₃தீ₄ஶ்ச ஹ்ருத்₃யா:

நாகாங்க்ஷத்யேததா₃ஸ்தாம் ஸ்வயமநுபதிதே மோக்ஷஸௌக்₂யே(அ)ப்யநீஹ: || 4||


4. உன்னிடம் கொண்ட பக்தியால் ஆனந்தித்திருப்பவன், உலகில் உள்ள எல்லா ஆசைகளையும் விட்டு சுகமாக இருக்கிறான். எல்லாத் திசைகளும் அவனுக்குச் சுகமானதாக இருக்கும். நீரில் மூழ்கிய குடத்தின் உள்ளேயும் வெளியேயும் நீர் இருப்பது போல், அவன் எங்கும், எதிலும் சந்தோஷம் அடைந்தவனாக இருக்கின்றான். அவன் இந்திரலோகத்தையோ, ஸத்யலோகத்தையோ, சித்திகளையோ விரும்புவதில்லை. அது மட்டுமில்லாமல், தானாகவே மோக்ஷம் கிடைத்தாலும் கூட அவன் விரும்புவதில்லை.


त्वद्भक्तो बाध्यमानोऽपि च विषयरसैरिन्द्रियाशान्तिहेतो-

र्भक्त्यैवाक्रम्यमाणै: पुनरपि खलु तैर्दुर्बलैर्नाभिजय्य: ।

सप्तार्चिर्दीपितार्चिर्दहति किल यथा भूरिदारुप्रपञ्चं

त्वद्भक्त्योघे तथैव प्रदहति दुरितं दुर्मद: क्वेन्द्रियाणाम् ॥५॥


த்வத்₃ப₄க்தோ பா₃த்₄யமாநோ(அ)பி ச விஷயரஸைரிந்த்₃ரியாஶாந்திஹேதோ-

ர்ப₄க்த்யைவாக்ரம்யமாணை: புநரபி க₂லு தைர்து₃ர்ப₃லைர்நாபி₄ஜய்ய: |

ஸப்தார்சிர்தீ₃பிதார்சிர்த₃ஹதி கில யதா₂ பூ₄ரிதா₃ருப்ரபஞ்சம்

த்வத்₃ப₄க்த்யோகே₄ ததை₂வ ப்ரத₃ஹதி து₃ரிதம் து₃ர்மத₃: க்வேந்த்₃ரியாணாம் || 5||


5. உன் பக்தன் புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாமல் துன்பப் படுகிறான். ஆயினும் அவனுடைய பக்தியால் இந்திரியங்களை அவன் வெல்கிறான். கொழுந்து விட்டு எரியும் நெருப்பு அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மரக்கட்டைகளை எவ்வாறு எரிக்கிறதோ, அதே போலத் உன்னிடம் வைத்த பக்தியானது பாபங்கள் அனைத்தையும் அழிக்கிறது. அப்போது புலன்கள் கட்டுப்பட்டு அடங்குகிறது.


चित्तार्द्रीभावमुच्चैर्वपुषि च पुलकं हर्षवाष्पं च हित्वा

चित्तं शुद्ध्येत्कथं वा किमु बहुतपसा विद्यया वीतभक्ते: ।

त्वद्गाथास्वादसिद्धाञ्जनसततमरीमृज्यमानोऽयमात्मा

चक्षुर्वत्तत्त्वसूक्ष्मं भजति न तु तथाऽभ्यस्तया तर्ककोट्या॥६॥


சித்தார்த்₃ரீபா₄வமுச்சைர்வபுஷி ச புலகம் ஹர்ஷவாஷ்பம் ச ஹித்வா

சித்தம் ஶுத்₃த்₄யேத்கத₂ம் வா கிமு ப₃ஹுதபஸா வித்₃யயா வீதப₄க்தே: |

த்வத்₃கா₃தா₂ஸ்வாத₃ஸித்₃தா₄ஞ்ஜநஸததமரீம்ருஜ்யமாநோ(அ)யமாத்மா

சக்ஷுர்வத்தத்த்வஸூக்ஷ்மம் ப₄ஜதி ந து ததா₂(அ)ப்₄யஸ்தயா தர்ககோட்யா|| 6||


6. உள்ளத்தில் அன்பும், உடலில் மயிர்க்கூச்சலும், கண்களில் ஆனந்தக் கண்ணீரும் இல்லாவிட்டால் மனத்தூய்மை எவ்வாறு ஏற்படும்? பக்தி இல்லாதவனுக்குத் தவத்தாலும், ஞானத்தாலும் பயனில்லை. உன் சரித்திரங்களைக் கேட்டு அனுபவிப்பதால், மனம் பரிசுத்தம் அடைந்து, உண்மையான தத்வக்ஞானத்தை அடைகிறது. தர்க்க வாதங்களைப் படிப்பதால் தத்வக்ஞானத்தை அடைய முடிவதில்லை.


ध्यानं ते शीलयेयं समतनुसुखबद्धासनो नासिकाग्र-

न्यस्ताक्ष: पूरकाद्यैर्जितपवनपथश्चित्तपद्मं त्ववाञ्चम्।

ऊर्ध्वाग्रं भावयित्वा रविविधुशिखिन: संविचिन्त्योपरिष्टात्

तत्रस्थं भावये त्वां सजलजलधरश्यामलं कोमलाङ्गम् ॥७॥


த்₄யாநம் தே ஶீலயேயம் ஸமதநுஸுக₂ப₃த்₃தா₄ஸநோ நாஸிகாக்₃ர-

ந்யஸ்தாக்ஷ: பூரகாத்₃யைர்ஜிதபவநபத₂ஶ்சித்தபத்₃மம் த்வவாஞ்சம்|

ஊர்த்₄வாக்₃ரம் பா₄வயித்வா ரவிவிது₄ஶிகி₂ந: ஸம்விசிந்த்யோபரிஷ்டாத்

தத்ரஸ்த₂ம் பா₄வயே த்வாம் ஸஜலஜலத₄ரஶ்யாமலம் கோமலாங்க₃ம் || 7||


7. உன்னைத் தியானம் செய்யும் முறையைக் கற்க வேண்டும். உடல் வளையாமல் நிமிர்ந்து, சுகாசனத்தில் அமர்ந்து, புருவங்களின் மத்தியில் உள்ள மூக்கின் நுனியைப் பார்த்துக் கொண்டு, பூரகம் முதலியவற்றால் மூச்சைக் கட்டுப்படுத்தி, கீழ்நோக்கிய இதயத்தாமரையை மேல்நோக்கி இருப்பதாய்ப் பாவித்து, அதன் மேல் சூரியன், சந்திரன், அக்னி மண்டலங்களை வரிசையாய்க் கற்பனை செய்து தியானிப்பேன். கடைசியில், அக்னி மண்டலத்தின்மேல் நீருண்ட மேகம் போல் ஸ்யாமள வர்ணனாய், மிக்க அழகிய வடிவத்தை உடையவராகத் உன்னைத் தியானிப்பேன்.


आनीलश्लक्ष्णकेशं ज्वलितमकरसत्कुण्डलं मन्दहास-

स्यन्दार्द्रं कौस्तुभश्रीपरिगतवनमालोरुहाराभिरामम् ।

श्रीवत्साङ्कं सुबाहुं मृदुलसदुदरं काञ्चनच्छायचेलं

चारुस्निग्धोरुमम्भोरुहललितपदं भावयेऽहं भवन्तम् ॥८॥


ஆநீலஶ்லக்ஷ்ணகேஶம் ஜ்வலிதமகரஸத்குண்ட₃லம் மந்த₃ஹாஸ-

ஸ்யந்தா₃ர்த்₃ரம் கௌஸ்துப₄ஶ்ரீபரிக₃தவநமாலோருஹாராபி₄ராமம் |

ஶ்ரீவத்ஸாங்கம் ஸுபா₃ஹும் ம்ருது₃லஸது₃த₃ரம் காஞ்சநச்சா₂யசேலம்

சாருஸ்நிக்₃தோ₄ருமம்போ₄ருஹலலிதபத₃ம் பா₄வயே(அ)ஹம் ப₄வந்தம் || 8||


8. கருத்த மிருதுவான கேசங்கள், காதுகளில் பிரகாசிக்கும் மீன்வடிவ குண்டலங்கள், அழகிய புன்முறுவல், பிரகாசிக்கும் கௌஸ்துபமென்ற மணி, வனமாலை, முத்துமாலை இவைகளால் மிகுந்த மனோகரமாய் இருக்கும் உன்னைத் தியானிக்கிறேன். ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, அழகிய திருக்கரங்கள், மிருதுவான வயிறு, தங்கத்தைப் போல் பிரகாசிக்கும் பீதாம்பரம், வனப்பான இரு தொடைகள், தாமரை போன்ற பாதங்கள் இவைகளுடன் விளங்கும் உன் ரூபத்தைத் தியானிக்கிறேன்.


सर्वाङ्गेष्वङ्ग रङ्गत्कुतुकमिति मुहुर्धारयन्नीश चित्तं

तत्राप्येकत्र युञ्जे वदनसरसिजे सुन्दरे मन्दहासे

तत्रालीनं तु चेत: परमसुखचिदद्वैतरूपे वितन्व-

न्नन्यन्नो चिन्तयेयं मुहुरिति समुपारूढयोगो भवेयम् ॥९॥


ஸர்வாங்கே₃ஷ்வங்க₃ ரங்க₃த்குதுகமிதி முஹுர்தா₄ரயந்நீஶ சித்தம்

தத்ராப்யேகத்ர யுஞ்ஜே வத₃நஸரஸிஜே ஸுந்த₃ரே மந்த₃ஹாஸே

தத்ராலீநம் து சேத: பரமஸுக₂சித₃த்₃வைதரூபே விதந்வ-

ந்நந்யந்நோ சிந்தயேயம் முஹுரிதி ஸமுபாரூட₄யோகோ₃ ப₄வேயம் || 9||


9. ஈசனே! உன் எல்லா அங்கங்களிலும் மீண்டும் மீண்டும் என் மனதைச் செலுத்துவேன். புன்முறுவலுடன் கூடிய அழகிய தாமரையைப் போன்ற உன் முகத்தில் என் மனதை லயிக்கச் செய்வேன். அவ்வாறு ஒன்றிய மனதை பரமானந்தமான, சச்சிதானந்த வடிவத்தில் நிலைநிறுத்தி வேறு ஒன்றையும் நினைக்காமல் இருப்பேன். இவ்வாறு அடிக்கடி செய்து தியான யோகத்தில் முன்னேறுவேன்.


इत्थं त्वद्ध्यानयोगे सति पुनरणिमाद्यष्टसंसिद्धयस्ता:

दूरश्रुत्यादयोऽपि ह्यहमहमिकया सम्पतेयुर्मुरारे ।

त्वत्सम्प्राप्तौ विलम्बावहमखिलमिदं नाद्रिये कामयेऽहं

त्वामेवानन्दपूर्णं पवनपुरपते पाहि मां सर्वतापात् ॥१०॥


இத்த₂ம் த்வத்₃த்₄யாநயோகே₃ ஸதி புநரணிமாத்₃யஷ்டஸம்ஸித்₃த₄யஸ்தா:

தூ₃ரஶ்ருத்யாத₃யோ(அ)பி ஹ்யஹமஹமிகயா ஸம்பதேயுர்முராரே |

த்வத்ஸம்ப்ராப்தௌ விலம்பா₃வஹமகி₂லமித₃ம் நாத்₃ரியே காமயே(அ)ஹம்

த்வாமேவாநந்த₃பூர்ணம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வதாபாத் || 10||


10. முரனைக் கொன்றவனே! இவ்வாறு செய்யும்போது அஷ்டசித்திகளும், வெகு தொலைவில் பேசுவதைக் கேட்கும் சக்தி, வெகு தொலைவில் நடப்பதைப் பார்க்கும் சக்தி ஆகிய சித்திகளும் ஒன்றையொன்று முந்திக் கொண்டு என்னை அடையும். உன்னை அடைவதற்கு அவை இடையூறாக இருப்பதால் அவற்றை நான் விரும்பமாட்டேன். ஆனந்தமயமான உன்னையே விரும்புகிறேன். குருவாயூரப்பா! அனைத்துத் துன்பங்களிலிருந்தும் என்னைக் காக்க வேண்டும்.



பகவானின் பெருமை மற்றும் ஞான, கர்ம, பக்தி யோகம்


त्वं हि ब्रह्मैव साक्षात् परमुरुमहिमन्नक्षराणामकार-

स्तारो मन्त्रेषु राज्ञां मनुरसि मुनिषु त्वं भृगुर्नारदोऽपि ।

प्रह्लादो दानवानां पशुषु च सुरभि: पक्षिणां वैनतेयो

नागानामस्यनन्तस्सुरसरिदपि च स्रोतसां विश्वमूर्ते ॥१॥


த்வம் ஹி ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத் பரமுருமஹிமந்நக்ஷராணாமகார-

ஸ்தாரோ மந்த்ரேஷு ராஜ்ஞாம் மநுரஸி முநிஷு த்வம் ப்₄ருகு₃ர்நாரதோ₃(அ)பி |

ப்ரஹ்லாதோ₃ தா₃நவாநாம் பஶுஷு ச ஸுரபி₄: பக்ஷிணாம் வைநதேயோ

நாகா₃நாமஸ்யநந்தஸ்ஸுரஸரித₃பி ச ஸ்ரோதஸாம் விஶ்வமூர்தே || 1||


1. மிகுந்த பெருமை வாய்ந்தவனே! உலக நாயகனே! நீயே உயர்ந்த பரப்ரம்மம். எழுத்துக்களில் அகாரமாகவும், மந்திரங்களில் பிரணவமாகவும், மன்னர்களில் மனுவாகவும், ரிஷிகளில் பிருகுவாகவும், நாரதராகவும், அசுரர்களில் பிரஹ்லாதனாகவும், மிருகங்களில் காமதேனு என்ற தெய்வீகப் பசுவாகவும், பறவைகளில் கருடனாகவும், பாம்புகளில் அனந்தனாகவும், நதிகளில் கங்கையாகவும் இருக்கிறாய்.


ब्रह्मण्यानां बलिस्त्वं क्रतुषु च जपयज्ञोऽसि वीरेषु पार्थो

भक्तानामुद्धवस्त्वं बलमसि बलिनां धाम तेजस्विनां त्वम् ।

नास्त्यन्तस्त्वद्विभूतेर्विकसदतिशयं वस्तु सर्वं त्वमेव

त्वं जीवस्त्वं प्रधानं यदिह भवदृते तन्न किञ्चित् प्रपञ्चे ॥२॥


ப்₃ரஹ்மண்யாநாம் ப₃லிஸ்த்வம் க்ரதுஷு ச ஜபயஜ்ஞோ(அ)ஸி வீரேஷு பார்தோ₂

ப₄க்தாநாமுத்₃த₄வஸ்த்வம் ப₃லமஸி ப₃லிநாம் தா₄ம தேஜஸ்விநாம் த்வம் |

நாஸ்த்யந்தஸ்த்வத்₃விபூ₄தேர்விகஸத₃திஶயம் வஸ்து ஸர்வம் த்வமேவ

த்வம் ஜீவஸ்த்வம் ப்ரதா₄நம் யதி₃ஹ ப₄வத்₃ருதே தந்ந கிஞ்சித் ப்ரபஞ்சே || 2||


2. பிராம்மண பக்தர்களில் மகாபலியாகவும், யக்ஞங்களில் ஜபயக்ஞமாகவும், வீரர்களில் அர்ஜுனனாகவும், பக்தர்களில் உத்தவராகவும், வல்லவர்களின் பலமாகவும், ஒளி பொருந்தியவர்களின் ஒளியாகவும் இருக்கிறாய். உன் பெருமைக்கு முடிவே இல்லை. உலகில் உள்ள ஆச்சரியமான பொருட்கள் அனைத்தும் நீயே. நீயே ஜீவன், நீயே பிரக்ருதி. இந்த அகிலத்தில் நீ இல்லாதது என்று எதுவுமே இல்லை.


धर्मं वर्णाश्रमाणां श्रुतिपथविहितं त्वत्परत्वेन भक्त्या

कुर्वन्तोऽन्तर्विरागे विकसति शनकै: सन्त्यजन्तो लभन्ते ।

सत्तास्फूर्तिप्रियत्वात्मकमखिलपदार्थेषु भिन्नेष्वभिन्नं

निर्मूलं विश्वमूलं परममहमिति त्वद्विबोधं विशुद्धम् ॥३॥


த₄ர்மம் வர்ணாஶ்ரமாணாம் ஶ்ருதிபத₂விஹிதம் த்வத்பரத்வேந ப₄க்த்யா

குர்வந்தோ(அ)ந்தர்விராகே₃ விகஸதி ஶநகை: ஸந்த்யஜந்தோ லப₄ந்தே |

ஸத்தாஸ்பூ₂ர்திப்ரியத்வாத்மகமகி₂லபதா₃ர்தே₂ஷு பி₄ந்நேஷ்வபி₄ந்நம்

நிர்மூலம் விஶ்வமூலம் பரமமஹமிதி த்வத்₃விபோ₃த₄ம் விஶுத்₃த₄ம் || 3||


3. நான்கு வர்ணங்கள், நான்கு ஆச்ரமங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டவர்கள், வேதத்தில் சொல்லப்பட்ட தர்ம வழியில் செயல்பட்டு, பக்தியோடு அனைத்தையும் உன்னிடமே அர்ப்பணிக்கின்றனர். வைராக்கியம் தோன்றியதும் முறைப்படி அக்கர்மங்களை விடுகின்றனர். பிறகு, உண்மையான அறிவை அடைந்து, சச்சிதானந்த வடிவானவரும், எல்லாவற்றிலும் காணப்படுகிறவரும், பிறப்பு, இறப்பு முதலியவற்றுக்குக் காரணமாய் இருப்பவரும், தனக்கென காரணம் ஒன்றுமில்லாதவரும், பரிசுத்தமானவருமான உன்னை அறிந்து, பேரின்ப ஞானத்தை அடைகிறார்கள்.


ज्ञानं कर्मापि भक्तिस्त्रितयमिह भवत्प्रापकं तत्र ताव-

न्निर्विण्णानामशेषे विषय इह भवेत् ज्ञानयोगेऽधिकार: ।

सक्तानां कर्मयोगस्त्वयि हि विनिहितो ये तु नात्यन्तसक्ता:

नाप्यत्यन्तं विरक्तास्त्वयि च धृतरसा भक्तियोगो ह्यमीषाम् ॥४॥


ஜ்ஞாநம் கர்மாபி ப₄க்திஸ்த்ரிதயமிஹ ப₄வத்ப்ராபகம் தத்ர தாவ-

ந்நிர்விண்ணாநாமஶேஷே விஷய இஹ ப₄வேத் ஜ்ஞாநயோகே₃(அ)தி₄கார: |

ஸக்தாநாம் கர்மயோக₃ஸ்த்வயி ஹி விநிஹிதோ யே து நாத்யந்தஸக்தா:

நாப்யத்யந்தம் விரக்தாஸ்த்வயி ச த்₄ருதரஸா ப₄க்தியோகோ₃ ஹ்யமீஷாம் || 4||


4. இவ்வுலகில், ஞானம், கர்மம், பக்தி என்ற மூன்று மார்க்கங்களால் உன்னை அடைய முடியும். விஷயங்களில் பற்றற்றிருப்பவருக்கு ஞானயோகம் தகுந்தது. விஷய சுகங்களில் ஆசை உள்ளவர்களுக்குக் கர்ம யோகம் சிறந்தது. விஷய சுகங்களில் அதிகம் பற்றில்லாமல், அதனைத் துறக்கவும் முடியாமல், உன் லீலைகளைக் கேட்டு மகிழ்பவர்களுக்குப் பக்தி யோகமே சிறந்தது.


ज्ञानं त्वद्भक्ततां वा लघु सुकृतवशान्मर्त्यलोके लभन्ते

तस्मात्तत्रैव जन्म स्पृहयति भगवन् नाकगो नारको वा ।

आविष्टं मां तु दैवाद्भवजलनिधिपोतायिते मर्त्यदेहे

त्वं कृत्वा कर्णधारं गुरुमनुगुणवातायितस्तारयेथा: ॥५॥


ஜ்ஞாநம் த்வத்₃ப₄க்ததாம் வா லகு₄ ஸுக்ருதவஶாந்மர்த்யலோகே லப₄ந்தே

தஸ்மாத்தத்ரைவ ஜந்ம ஸ்ப்ருஹயதி ப₄க₃வந் நாககோ₃ நாரகோ வா |

ஆவிஷ்டம் மாம் து தை₃வாத்₃ப₄வஜலநிதி₄போதாயிதே மர்த்யதே₃ஹே

த்வம் க்ருத்வா கர்ணதா₄ரம் கு₃ருமநுகு₃ணவாதாயிதஸ்தாரயேதா₂: || 5||


5. இவ்வுலகில் நற்பலன்களால் ஞானம் அல்லது பக்தியை அடைகிறார்கள். ஸ்வர்க்கம் மற்றும் நரகத்திலுள்ளவர்கள் கூட மனிதப் பிறப்பை விரும்புகின்றார்கள். ஸம்ஸாரம் என்னும் கடலைக் கடக்க இந்த உடல் படகாக இருக்கிறது. நல்வினையால் இந்த உடலில் பிரவேசித்த எனக்கு, குரு என்னும் ஓடக்காரனை அளித்து, நீ சாதகமான காற்றாக இருந்து கரையேற்ற வேண்டுகிறேன்.


अव्यक्तं मार्गयन्त: श्रुतिभिरपि नयै: केवलज्ञानलुब्धा:

क्लिश्यन्तेऽतीव सिद्धिं बहुतरजनुषामन्त एवाप्नुवन्ति ।

दूरस्थ: कर्मयोगोऽपि च परमफले नन्वयं भक्तियोग-

स्त्वामूलादेव हृद्यस्त्वरितमयि भवत्प्रापको वर्धतां मे ॥६॥


அவ்யக்தம் மார்க₃யந்த: ஶ்ருதிபி₄ரபி நயை: கேவலஜ்ஞாநலுப்₃தா₄:

க்லிஶ்யந்தே(அ)தீவ ஸித்₃தி₄ம் ப₃ஹுதரஜநுஷாமந்த ஏவாப்நுவந்தி |

தூ₃ரஸ்த₂: கர்மயோகோ₃(அ)பி ச பரமப₂லே நந்வயம் ப₄க்தியோக₃-

ஸ்த்வாமூலாதே₃வ ஹ்ருத்₃யஸ்த்வரிதமயி ப₄வத்ப்ராபகோ வர்த₄தாம் மே || 6||


6. ஞானத்தை விரும்புபவர்கள், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும் கூறிய வழிகளில், வெளிப்படையாகப் புலப்படாத பிரம்மத்தைத் தேடிக் கஷ்டத்தை அடைகிறார்கள். பல பிறவிகளுக்குப் பிறகு சித்தி அடைகிறார்கள். கர்ம யோகமும் மோக்ஷத்திற்கு வெகு தொலைவில் இருக்கிறது. ஆனால் பக்தி யோகமானது, ஆரம்பத்திலிருந்தே மனதைக் கவர்ந்து, உன்னை அடைய விரைவில் வழிவகுக்கிறது. அந்த பக்தியானது எனக்கு மேன்மேலும் வளர வேண்டும்.


ज्ञानायैवातियत्नं मुनिरपवदते ब्रह्मतत्त्वं तु शृण्वन्

गाढं त्वत्पादभक्तिं शरणमयति यस्तस्य मुक्ति: कराग्रे ।

त्वद्ध्यानेऽपीह तुल्या पुनरसुकरता चित्तचाञ्चल्यहेतो-

रभ्यासादाशु शक्यं तदपि वशयितुं त्वत्कृपाचारुताभ्याम् ॥७॥


ஜ்ஞாநாயைவாதியத்நம் முநிரபவத₃தே ப்₃ரஹ்மதத்த்வம் து ஶ்ருண்வந்

கா₃ட₄ம் த்வத்பாத₃ப₄க்திம் ஶரணமயதி யஸ்தஸ்ய முக்தி: கராக்₃ரே |

த்வத்₃த்₄யாநே(அ)பீஹ துல்யா புநரஸுகரதா சித்தசாஞ்சல்யஹேதோ-

ரப்₄யாஸாதா₃ஶு ஶக்யம் தத₃பி வஶயிதும் த்வத்க்ருபாசாருதாப்₄யாம் || 7||


7. ஞானத்திற்காக அதிக முயற்சி செய்வதை வியாஸர் புராணங்களில் அதிருப்தியுடன் கூறியிருக்கிறார். பிரம்மதத்வத்தைக் கேட்டு, உன் திருவடிகளில் உறுதியான பக்தியுடன் சரணடைகின்றவனுக்கு கையிலேயே மோக்ஷம் இருக்கிறது. மனம் அலைபாய்வதால் தியான யோகமும் ஞானயோகத்தை போலவே கஷ்டமாய் இருக்கிறது. ஆனால் பயிற்சியினாலும், உன் கருணையாலும், அழகினாலும் விரைவிலேயே தியானத்தை நடைமுறைப்படுத்த முடியும்.


निर्विण्ण: कर्ममार्गे खलु विषमतमे त्वत्कथादौ च गाढं

जातश्रद्धोऽपि कामानयि भुवनपते नैव शक्नोमि हातुम् ।

तद्भूयो निश्चयेन त्वयि निहितमना दोषबुद्ध्या भजंस्तान्

पुष्णीयां भक्तिमेव त्वयि हृदयगते मङ्क्षु नङ्क्ष्यन्ति सङ्गा: ॥८॥


நிர்விண்ண: கர்மமார்கே₃ க₂லு விஷமதமே த்வத்கதா₂தௌ₃ ச கா₃ட₄ம்

ஜாதஶ்ரத்₃தோ₄(அ)பி காமாநயி பு₄வநபதே நைவ ஶக்நோமி ஹாதும் |

தத்₃பூ₄யோ நிஶ்சயேந த்வயி நிஹிதமநா தோ₃ஷபு₃த்₃த்₄யா ப₄ஜம்ஸ்தாந்

புஷ்ணீயாம் ப₄க்திமேவ த்வயி ஹ்ருத₃யக₃தே மங்க்ஷு நங்க்ஷ்யந்தி ஸங்கா₃: || 8||


8. லோகநாதா! கர்ம யோகத்தில் நாட்டமில்லாமல், உன் கதைகளிலே உறுதியான நம்பிக்கையுடன் இருந்தும், என்னால் ஆசைகளைத் துறக்க முடியவில்லை. அதனால், ஆசைகளைப் பற்றிய விழிப்புணர்வுடன், உறுதியாக மீண்டும் உன்னிடத்திலேயே மனதை நிறுத்தி பக்தி செலுத்துகின்றேன். என் இதயத்தில் நீ புகுந்தவுடன், பற்றுக்களும் அழிந்துவிடுகின்றன.


कश्चित् क्लेशार्जितार्थक्षयविमलमतिर्नुद्यमानो जनौघै:

प्रागेवं प्राह विप्रो न खलु मम जन: कालकर्मग्रहा वा।

चेतो मे दु:खहेतुस्तदिह गुणगणं भावयत्सर्वकारी-

त्युक्त्वा शान्तो गतस्त्वां मम च कुरु विभो तादृशी चित्तशान्तिम् ॥९॥


கஶ்சித் க்லேஶார்ஜிதார்த₂க்ஷயவிமலமதிர்நுத்₃யமாநோ ஜநௌகை₄:

ப்ராகே₃வம் ப்ராஹ விப்ரோ ந க₂லு மம ஜந: காலகர்மக்₃ரஹா வா|

சேதோ மே து₃:க₂ஹேதுஸ்ததி₃ஹ கு₃ணக₃ணம் பா₄வயத்ஸர்வகாரீ-

த்யுக்த்வா ஶாந்தோ க₃தஸ்த்வாம் மம ச குரு விபோ₄ தாத்₃ருஶீ சித்தஶாந்திம் || 9||


9. முன்னொரு சமயம், ஒரு அந்தணன் மிகவும் கடினமாக தர்மமின்றி பொருள் சேர்த்து, பின் அனைத்து செல்வங்களையும் இழந்தான். மனம் வெறுத்து சன்யாசியானான். கபட சன்யாசி என்று மக்கள் துன்புறுத்தினர். அப்போது அவன், “ துன்பத்திற்கு என் மனமே காரணம். மக்களோ, காலநேரமோ, கர்மமோ, கிரகங்களோ அல்ல. மனம்தான் எல்லாவற்றையும் செய்கிறது” என்று கூறிக் கொண்டு மன அமைதி பெற்று உன்னை அடைந்தான். பிரபோ! அவ்வாறான மன அமைதியை எனக்கு அளிக்க வேண்டும்.


ऐल: प्रागुर्वशीं प्रत्यतिविवशमना: सेवमानश्चिरं तां

गाढं निर्विद्य भूयो युवतिसुखमिदं क्षुद्रमेवेति गायन् ।

त्वद्भक्तिं प्राप्य पूर्ण: सुखतरमचरत्तद्वदुद्धूतसङ्गं

भक्तोत्तंसं क्रिया मां पवनपुरपते हन्त मे रुन्धि रोगान् ॥१०॥


ஐல: ப்ராகு₃ர்வஶீம் ப்ரத்யதிவிவஶமநா: ஸேவமாநஶ்சிரம் தாம்

கா₃ட₄ம் நிர்வித்₃ய பூ₄யோ யுவதிஸுக₂மித₃ம் க்ஷுத்₃ரமேவேதி கா₃யந் |

த்வத்₃ப₄க்திம் ப்ராப்ய பூர்ண: ஸுக₂தரமசரத்தத்₃வது₃த்₃தூ₄தஸங்க₃ம்

ப₄க்தோத்தம்ஸம் க்ரியா மாம் பவநபுரபதே ஹந்த மே ருந்தி₄ ரோகா₃ந் || 10||


10. புரூரவஸ் என்ற அரசன் ஊர்வசியிடம் ஆசை கொண்டு அவளுடன் நீண்ட காலம் வாழ்ந்து வந்தான். பிறகு வைராக்கியத்தை அடைந்து, பெண்ணாசை மிகவும் அற்பமானது என்று கூறிக்கொண்டு, உன்னிடம் பக்தி கொண்டு ஆனந்தம் அடைந்தான். குருவாயூரப்பா! அவ்வாறே என் ஆசைகளை அகற்றி, என்னை உன் சிறந்த பக்தனாக ஆக்கி, என் வியாதிகளையும் போக்க வேண்டும்.


மார்க்கண்டேயர் கதை

त्रैगुण्याद्भिन्नरूपं भवति हि भुवने हीनमध्योत्तमं यत्

ज्ञानं श्रद्धा च कर्ता वसतिरपि सुखं कर्म चाहारभेदा: ।

त्वत्क्षेत्रत्वन्निषेवादि तु यदिह पुनस्त्वत्परं तत्तु सर्वं

प्राहुर्नैगुण्यनिष्ठं तदनुभजनतो मङ्क्षु सिद्धो भवेयम् ॥१॥


த்ரைகு₃ண்யாத்₃பி₄ந்நரூபம் ப₄வதி ஹி பு₄வநே ஹீநமத்₄யோத்தமம் யத்

ஜ்ஞாநம் ஶ்ரத்₃தா₄ ச கர்தா வஸதிரபி ஸுக₂ம் கர்ம சாஹாரபே₄தா₃: |

த்வத்க்ஷேத்ரத்வந்நிஷேவாதி₃ து யதி₃ஹ புநஸ்த்வத்பரம் தத்து ஸர்வம்

ப்ராஹுர்நைகு₃ண்யநிஷ்ட₂ம் தத₃நுப₄ஜநதோ மங்க்ஷு ஸித்₃தோ₄ ப₄வேயம் || 1||


1. இவ்வுலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் முக்குணங்களால் உண்டு பண்ணப்பட்டு வேறுபட்டு விளங்குகிறது. அதனால் உத்தமம், மத்யமம், அதமம் என்ற நிலைகளில் விளங்குகிறது. இவ்வுலகில் பலனை எதிர்பார்க்காமல் உன்னை வணங்குவது, உன் கோவில்களுக்குச் செல்வது போன்றவற்றை முக்குணமற்றது என்று முனிவர்கள் கூறுகின்றனர். முக்குணங்களால் உண்டு பண்ணப்படாத உன்னை சேவித்து நான் ஜீவன் முக்தனாக ஆகவேண்டும்.


त्वय्येव न्यस्तचित्त: सुखमयि विचरन् सर्वचेष्टास्त्वदर्थं

त्वद्भक्तै: सेव्यमानानपि चरितचरानाश्रयन् पुण्यदेशान् ।

दस्यौ विप्रे मृगादिष्वपि च सममतिर्मुच्यमानावमान-

स्पर्धासूयादिदोष: सततमखिलभूतेषु संपूजये त्वाम् ॥२॥


த்வய்யேவ ந்யஸ்தசித்த: ஸுக₂மயி விசரந் ஸர்வசேஷ்டாஸ்த்வத₃ர்த₂ம்

த்வத்₃ப₄க்தை: ஸேவ்யமாநாநபி சரிதசராநாஶ்ரயந் புண்யதே₃ஶாந் |

த₃ஸ்யௌ விப்ரே ம்ருகா₃தி₃ஷ்வபி ச ஸமமதிர்முச்யமாநாவமாந-

ஸ்பர்தா₄ஸூயாதி₃தோ₃ஷ: ஸததமகி₂லபூ₄தேஷு ஸம்பூஜயே த்வாம் || 2||


2. உன்னிடமே மனதைச் செலுத்தி, என் எல்லா செய்கைகளையும் உன்னிடமே அர்ப்பணம் செய்வேன். உன் பக்தர்கள் முன்பு சென்ற இடங்களுக்குச் செல்வேன். திருடன், பிராமணன், விலங்குகள் போன்ற எல்லாவற்றிலும் பேதம் பாராமல் இருப்பேன். அவமானம், துவேஷம், அசூயை முதலியவற்றை விட்டு எல்லா உயிர்களிடத்திலும் உன்னையே காண்பேன்.


त्वद्भावो यावदेषु स्फुरति न विशदं तावदेवं ह्युपास्तिं

कुर्वन्नैकात्म्यबोधे झटिति विकसति त्वन्मयोऽहं चरेयम् ।

त्वद्धर्मस्यास्य तावत् किमपि न भगवन् प्रस्तुतस्य प्रणाश-

स्तस्मात्सर्वात्मनैव प्रदिश मम विभो भक्तिमार्गं मनोज्ञम् ॥३॥


த்வத்₃பா₄வோ யாவதே₃ஷு ஸ்பு₂ரதி ந விஶத₃ம் தாவதே₃வம் ஹ்யுபாஸ்திம்

குர்வந்நைகாத்ம்யபோ₃தே₄ ஜ₂டிதி விகஸதி த்வந்மயோ(அ)ஹம் சரேயம் |

த்வத்₃த₄ர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந ப₄க₃வந் ப்ரஸ்துதஸ்ய ப்ரணாஶ-

ஸ்தஸ்மாத்ஸர்வாத்மநைவ ப்ரதி₃ஶ மம விபோ₄ ப₄க்திமார்க₃ம் மநோஜ்ஞம் || 3||


3. முன்பு கூறிய திருடன் முதலியவர்களிடத்தில் நீ இருப்பது எனக்கு விளங்கும் வரை இவ்விதமாக வழிபடுவேன். ஞானம் பெற்ற பிறகு நீயாகவே ஆகி வாழ்வேன். பகவானே! அவ்வாறு செய்யத் தொடங்கிய பாகவத தர்மத்திற்கு சிறிதும் அழிவு ஏற்படாது. பிரபோ! அதனால் எனக்கு மனங்கவரும் பக்தி மார்க்கத்தை அளிக்க வேண்டும்.


तं चैनं भक्तियोगं द्रढयितुमयि मे साध्यमारोग्यमायु-

र्दिष्ट्या तत्रापि सेव्यं तव चरणमहो भेषजायेव दुग्धम् ।

मार्कण्डेयो हि पूर्वं गणकनिगदितद्वादशाब्दायुरुच्चै:

सेवित्वा वत्सरं त्वां तव भटनिवहैर्द्रावयामास मृत्युम् ॥४॥


தம் சைநம் ப₄க்தியோக₃ம் த்₃ரட₄யிதுமயி மே ஸாத்₄யமாரோக்₃யமாயு-

ர்தி₃ஷ்ட்யா தத்ராபி ஸேவ்யம் தவ சரணமஹோ பே₄ஷஜாயேவ து₃க்₃த₄ம் |

மார்கண்டே₃யோ ஹி பூர்வம் க₃ணகநிக₃தி₃தத்₃வாத₃ஶாப்₃தா₃யுருச்சை:

ஸேவித்வா வத்ஸரம் த்வாம் தவ ப₄டநிவஹைர்த்₃ராவயாமாஸ ம்ருத்யும் || 4||


4. இந்த பக்தி யோகம் உறுதியாக இருக்க ஆரோக்யமும் ஆயுளும் வேண்டும். அதை அடைய தெய்வாதீனமாக உன் பாதத்தையே சரணடைய வேண்டும். நோய் தீர பாலைக் குடிப்பது போல், உன் காலடியில் சேவை செய்ய வேண்டும். வெகு நாட்களுக்கு முன்பு, மார்க்கண்டேயனுக்கு வாழ்நாள் பன்னிரண்டு ஆண்டுகள் தான் என்று ஒரு ஜோதிடர் கூறினார். ஒரு வருடகாலம் உன் காலடியில் தீவிர வழிபாடு செய்த மார்க்கண்டேயனுக்கு மரணம் நெருங்கிய போது, உன் தூதர்கள் யமனை விரட்டினர்.


मार्कण्डेयश्चिरायु: स खलु पुनरपि त्वत्पर: पुष्पभद्रा-

तीरे निन्ये तपस्यन्नतुलसुखरति: षट् तु मन्वन्तराणि ।

देवेन्द्र: सप्तमस्तं सुरयुवतिमरुन्मन्मथैर्मोहयिष्यन्

योगोष्मप्लुष्यमाणैर्न तु पुनरशकत्त्वज्जनं निर्जयेत् क: ॥५॥


மார்கண்டே₃யஶ்சிராயு: ஸ க₂லு புநரபி த்வத்பர: புஷ்பப₄த்₃ரா-

தீரே நிந்யே தபஸ்யந்நதுலஸுக₂ரதி: ஷட் து மந்வந்தராணி |

தே₃வேந்த்₃ர: ஸப்தமஸ்தம் ஸுரயுவதிமருந்மந்மதை₂ர்மோஹயிஷ்யந்

யோகோ₃ஷ்மப்லுஷ்யமாணைர்ந து புநரஶகத்த்வஜ்ஜநம் நிர்ஜயேத் க: || 5||


5. நீண்ட ஆயுள் பெற்ற மார்க்கண்டேயர், உன்னையே வணங்கி, நிகரற்ற பேரின்பத்தில் பற்றுக் கொண்டு, புஷ்பபத்ரா நதியின் கரையில் தவம் செய்து ஆறு மன்வந்தரங்களைக் கழித்தார். ஏழாவது மன்வந்தரத்தில், தேவேந்திரன் அவரது தவத்தைக் குலைக்க, தேவலோகப் பெண்களையும், தென்றலையும், மன்மதனையும் அனுப்பினான். அவரது தவத்தின் வெப்பத்தால், அவர்களால் அவரை மயக்க முடியவில்லை. உன் பக்தர்களை யாரால் வெல்ல முடியும்?


प्रीत्या नारायणाख्यस्त्वमथ नरसख: प्राप्तवानस्य पार्श्वं

तुष्ट्या तोष्टूयमान: स तु विविधवरैर्लोभितो नानुमेने ।

द्रष्टुं माय़ां त्वदीयां किल पुनरवृणोद्भक्तितृप्तान्तरात्मा

मायादु:खानभिज्ञस्तदपि मृगयते नूनमाश्चर्यहेतो: ॥६॥


ப்ரீத்யா நாராயணாக்₂யஸ்த்வமத₂ நரஸக₂: ப்ராப்தவாநஸ்ய பார்ஶ்வம்

துஷ்ட்யா தோஷ்டூயமாந: ஸ து விவித₄வரைர்லோபி₄தோ நாநுமேநே |

த்₃ரஷ்டும் மாஃயாம் த்வதீ₃யாம் கில புநரவ்ருணோத்₃ப₄க்தித்ருப்தாந்தராத்மா

மாயாது₃:கா₂நபி₄ஜ்ஞஸ்தத₃பி ம்ருக₃யதே நூநமாஶ்சர்யஹேதோ: || 6||


6. நரனாகவும், நாராயணனாகவும் நீ மார்க்கண்டேயரின் அருகில் சென்றாய். மனம் மகிழ்ந்த அவர் உன்னைத் துதித்தார். நீ பல்வேறு வரங்களை அளித்தும் அவர் ஒன்றையும் விரும்பவில்லை. ஆனால் உன் மாயையைக் காண விரும்பினார். அதனால் உண்டாகும் துன்பங்களை அறியாமல், பக்தியின் மிகுதியாலும், ஆர்வத்தாலும் இவ்வாறு வேண்டினார்.


याते त्वय्याशु वाताकुलजलदगलत्तोयपूर्णातिघूर्णत्-

सप्तार्णोराशिमग्ने जगति स तु जले सम्भ्रमन् वर्षकोटी: ।

दीन: प्रैक्षिष्ट दूरे वटदलशयनं कञ्चिदाश्चर्यबालं

त्वामेव श्यामलाङ्गं वदनसरसिजन्यस्तपादाङ्गुलीकम् ॥७॥


யாதே த்வய்யாஶு வாதாகுலஜலத₃க₃லத்தோயபூர்ணாதிகூ₄ர்ணத்-

ஸப்தார்ணோராஶிமக்₃நே ஜக₃தி ஸ து ஜலே ஸம்ப்₄ரமந் வர்ஷகோடீ: |

தீ₃ந: ப்ரைக்ஷிஷ்ட தூ₃ரே வடத₃லஶயநம் கஞ்சிதா₃ஶ்சர்யபா₃லம்

த்வாமேவ ஶ்யாமலாங்க₃ம் வத₃நஸரஸிஜந்யஸ்தபாதா₃ங்கு₃லீகம் || 7||


7. அவ்வாறே வரமளித்துத் நீ மறைந்தாய். உடனே பலத்த காற்றுடன் மேகங்கள் மழையைப் பொழிந்தன. ஏழு கடல்களும் நிரம்பி உலகத்தை மூழ்கடித்தது. பல கோடி ஆண்டுகள் மார்க்கண்டேயர் அந்தக் கடலில் சுழன்று வருந்தினார். தொலைவில் கருநீல மேனியுடன், ஆலிலையின் மேல் சிறு குழந்தையாகப் பள்ளி கொண்டு, கால் கட்டை விரலை வாயில் வைத்துச் சுவைத்துக் கொண்டு, அதிசயமான ரூபத்தில் இருக்கும் உன்னைக் கண்டார்.

दृष्ट्वा त्वां हृष्टरोमा त्वरितमुपगत: स्प्रष्टुकामो मुनीन्द्र:

श्वासेनान्तर्निविष्ट: पुनरिह सकलं दृष्टवान् विष्टपौघम् ।

भूयोऽपि श्वासवातैर्बहिरनुपतितो वीक्षितस्त्वत्कटाक्षै-

र्मोदादाश्लेष्टुकामस्त्वयि पिहिततनौ स्वाश्रमे प्राग्वदासीत् ॥८॥


த்₃ருஷ்ட்வா த்வாம் ஹ்ருஷ்டரோமா த்வரிதமுபக₃த: ஸ்ப்ரஷ்டுகாமோ முநீந்த்₃ர:

ஶ்வாஸேநாந்தர்நிவிஷ்ட: புநரிஹ ஸகலம் த்₃ருஷ்டவாந் விஷ்டபௌக₄ம் |

பூ₄யோ(அ)பி ஶ்வாஸவாதைர்ப₃ஹிரநுபதிதோ வீக்ஷிதஸ்த்வத்கடாக்ஷை-

ர்மோதா₃தா₃ஶ்லேஷ்டுகாமஸ்த்வயி பிஹிததநௌ ஸ்வாஶ்ரமே ப்ராக்₃வதா₃ஸீத் || 8||


8. உன்னைக் கண்டதும் உடல் புல்லரிக்க, உன்னைத் தொடுவதற்காக வேகமாய் உன் அருகே வந்தார். உன் மூச்சுக் காற்றால் உள்ளே இழுக்கப்பட்டு, குழந்தையான உன் வயிற்றின் உள்ளே அண்டசராசரங்களைக் கண்டார். மீண்டும் உன் மூச்சுக் காற்றால் வெளியே வந்தார். உன் கடைக்கண் பார்வையைக் கண்ட மார்க்கண்டேயர், உன்னைத் தழுவ விரும்பினார். அப்போது உன் உருவத்தை மறைத்துக் கொண்டாய். உன்னைக் காணாமல், முன்போல் தான் மட்டும் தனியே தனது ஆசிரமத்தில் இருக்கக் கண்டார்.


गौर्या सार्धं तदग्रे पुरभिदथ गतस्त्वत्प्रियप्रेक्षणार्थी

सिद्धानेवास्य दत्वा स्वयमयमजरामृत्युतादीन् गतोऽभूत् ।

एवं त्वत्सेवयैव स्मररिपुरपि स प्रीयते येन तस्मा-

न्मूर्तित्रय्यात्मकस्त्वं ननु सकलनियन्तेति सुव्यक्तमासीत् ॥९॥


கௌ₃ர்யா ஸார்த₄ம் தத₃க்₃ரே புரபி₄த₃த₂ க₃தஸ்த்வத்ப்ரியப்ரேக்ஷணார்தீ₂

ஸித்₃தா₄நேவாஸ்ய த₃த்வா ஸ்வயமயமஜராம்ருத்யுதாதீ₃ந் க₃தோ(அ)பூ₄த் |

ஏவம் த்வத்ஸேவயைவ ஸ்மரரிபுரபி ஸ ப்ரீயதே யேந தஸ்மா-

ந்மூர்தித்ரய்யாத்மகஸ்த்வம் நநு ஸகலநியந்தேதி ஸுவ்யக்தமாஸீத் || 9||


9. அப்போது, உன் பக்தரான மார்க்கண்டேயரைப் பார்க்க பரமசிவன் பார்வதியுடன் அவரருகே சென்றார். முதுமை, இறப்பு இல்லாத வரங்களை மார்க்கண்டேயருக்கு அளித்துச் சென்றார். உன்னை வழிபடுவதால் சிவனும் மகிழ்கிறார். இவ்வாறு, மும்மூர்த்திகளின் ரூபமான நீ, அனைவரையும் ஆள்பவர் என்பது தெளிவாகிறது.


त्र्यंशेस्मिन् सत्यलोके विधिहरिपुरभिन्मन्दिराण्यूर्ध्वमूर्ध्वं

तेभोऽप्यूर्ध्वं तु मायाविकृतिविरहितो भाति वैकुण्ठलोक: ।

तत्र त्वं कारणाम्भस्यपि पशुपकुले शुद्धसत्त्वैकरूपी

सच्चित्ब्रह्माद्वयात्मा पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥१०॥


த்ர்யம்ஶேஸ்மிந் ஸத்யலோகே விதி₄ஹரிபுரபி₄ந்மந்தி₃ராண்யூர்த்₄வமூர்த்₄வம்

தேபோ₄(அ)ப்யூர்த்₄வம் து மாயாவிக்ருʼதிவிரஹிதோ பா₄தி வைகுண்ட₂லோக: |

தத்ர த்வம் காரணாம்ப₄ஸ்யபி பஶுபகுலே ஶுத்₃த₄ஸத்த்வைகரூபீ

ஸச்சித்ப்₃ரஹ்மாத்₃வயாத்மா பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 10||


10. பிரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் என்ற மூன்று பகுதிகளையுடைய ஸத்யலோகத்தில், பிரம்மா, விஷ்ணு, மற்றும் சிவனின் வீடுகள் ஒன்றன்மேல் ஒன்றாய் இருக்கின்றது. அம்மூன்றிக்கும் மேல், மாயையாலும் அதன் விகாரங்களாலும் பாதிக்கப்படாத வைகுண்டம் இருக்கிறது. வைகுண்டத்திலும், காரண ஜலத்திலும், இடைச்சேரியிலும் தூய ஸாத்வீக வடிவில், சச்சிதானந்த வடிவிலிருந்து வேறுபடாதவராய்த் நீ பிரகாசிக்கிறீர்கள். குருவாயூரப்பனே! அனைத்து நோய்களிலிருந்தும் என்னைக் காப்பாற்ற வேண்டும்.




116 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page