top of page
Writer's pictureAnbezhil

ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 1 -100 ஸ்லோகங்களும் பொருளும். பகுதி - 3 தசகம் 31 - 40


வாமனாவதாரம் (தொடர்ச்சி)

மகாபலியின் செருக்கை அழித்தல்


प्रीत्या दैत्यस्तव तनुमह:प्रेक्षणात् सर्वथाऽपि

त्वामाराध्यन्नजित रचयन्नञ्जलिं सञ्जगाद ।

मत्त: किं ते समभिलषितं विप्रसूनो वद त्वं

वित्तं भक्तं भवनमवनीं वाऽपि सर्वं प्रदास्ये ॥१॥


ப்ரீத்யா தை₃த்யஸ்தவ தநுமஹ:ப்ரேக்ஷணாத் ஸர்வதா₂(அ)பி

த்வாமாராத்₄யந்நஜித ரசயந்நஞ்ஜலிம் ஸஞ்ஜகா₃த₃ |

மத்த: கிம் தே ஸமபி₄லஷிதம் விப்ரஸூநோ வத₃ த்வம்

வித்தம் ப₄க்தம் ப₄வநமவநீம் வா(அ)பி ஸர்வம் ப்ரதா₃ஸ்யே || 1||


1. உன் தேககாந்தியைக் கண்ட மகாபலி, மிகுந்த அன்பினால், உன்னைப் பூஜித்தான். கைகளைக் கூப்பிக்கொண்டு, “பிராம்மண குமாரரே! உமக்கு என்னிடமிருந்து என்னென்ன வேண்டுமோ பெற்றுக் கொள்ளுங்கள். உணவோ, வீடோ, பூமியோ, எல்லாவற்றையுமோ கேளுங்கள் தருகிறேன்” என்று சொன்னான்.


तामक्षीणाम् बलिगिरमुपाकर्ण्य कारुण्यपूर्णोऽ-

प्यस्योत्सेकं शमयितुमना दैत्यवंशं प्रशंसन् ।

भूमिं पादत्रयपरिमितां प्रार्थयामासिथ त्वं

सर्वं देहीति तु निगदिते कस्य हास्यं न वा स्यात् ॥२॥


தாமக்ஷீணாம் ப₃லிகி₃ரமுபாகர்ண்ய காருண்யபூர்ணோ(அ)-

ப்யஸ்யோத்ஸேகம் ஶமயிதுமநா தை₃த்யவம்ஶம் ப்ரஶம்ஸந் |

பூ₄மிம் பாத₃த்ரயபரிமிதாம் ப்ரார்த₂யாமாஸித₂ த்வம்

ஸர்வம் தே₃ஹீதி து நிக₃தி₃தே கஸ்ய ஹாஸ்யம் ந வா ஸ்யாத் || 2||


2. குறையற்ற அந்த பலியின் வார்த்தையைக் கேட்டு, கருணை நிறைந்த நீ, அவனுடைய கர்வத்தை அடக்க விரும்பி, அசுர குலத்தைப் புகழ்ந்து கூறி, மூன்றடி மண் வேண்டும் என்று கேட்டாய். சகலத்தையும் கொடு என்று கேட்டால் பிறர் நகைக்க மாட்டார்களா?


विश्वेशं मां त्रिपदमिह किं याचसे बालिशस्त्वं

सर्वां भूमिं वृणु किममुनेत्यालपत्त्वां स दृप्यन् ।

यस्माद्दर्पात् त्रिपदपरिपूर्त्यक्षम: क्षेपवादान्

बन्धं चासावगमदतदर्होऽपि गाढोपशान्त्यै ॥३॥


விஶ்வேஶம்மாம் த்ரிபத₃மிஹ கிம் யாசஸே பா₃லிஶஸ்த்வம்

ஸர்வாம் பூ₄மிம் வ்ருணு கிமமுநேத்யாலபத்த்வாம் ஸ த்₃ருப்யந் |

யஸ்மாத்₃த₃ர்பாத் த்ரிபத₃பரிபூர்த்யக்ஷம: க்ஷேபவாதா₃ந்

ப₃ந்த₄ம் சாஸாவக₃மத₃தத₃ர்ஹோ(அ)பி கா₃டோ₄பஶாந்த்யை || 3||


3. “உலகங்களுக்கெல்லாம் தலைவனான என்னிடம் வெறும் மூன்றடி மண் வேண்டும் என்று யாசிக்கிறாயே! முட்டாளே! மூன்றடியால் என்ன பயன்? எல்லா பூமியையும் கேளுங்கள், தருகிறேன்” என்று பலி செருக்கோடு சொன்னான். கர்வத்தினாலேயே, அந்த மூன்றடி மண்ணைக் கொடுக்க முடியாமல், அவச்சொற்களைப் பெற்று, வருண பாசத்தாலும் கட்டுண்டான். அதற்கு அவன் தகுதியற்றவன். ஆயினும், அவன் வைராக்கியத்தை அடைவதற்காக அவ்வாறு செய்தாய்.


पादत्रय्या यदि न मुदितो विष्टपैर्नापि तुष्ये-

दित्युक्तेऽस्मिन् वरद भवते दातुकामेऽथ तोयम् ।

दैत्याचार्यस्तव खलु परीक्षार्थिन: प्रेरणात्तं

मा मा देयं हरिरयमिति व्यक्तमेवाबभाषे ॥४॥


பாத₃த்ரய்யா யதி₃ ந முதி₃தோ விஷ்டபைர்நாபி துஷ்யே-

தி₃த்யுக்தே(அ)ஸ்மிந் வரத₃ ப₄வதே தா₃துகாமே(அ)த₂ தோயம் |

தை₃த்யாசார்யஸ்தவ க₂லு பரீக்ஷார்தி₂ந: ப்ரேரணாத்தம்

மா மா தே₃யம் ஹரிரயமிதி வ்யக்தமேவாப₃பா₄ஷே || 4||


4. மூன்றடி மண்ணால் சந்தோஷம் அடையாதவன்,உலகத்தையே கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டான் என்று நீ சொன்னாய். பலி, தானம் செய்ய நீர்வார்க்கும் போது, அசுரகுருவான சுக்ராச்சார்யார், “தானம் கொடுக்காதே, இவர் மகாவிஷ்ணு” என்று எச்சரித்தார். அப்படி அவர் சொன்னதும் உன்னுடைய தூண்டுதலினால் தான்.


याचत्येवं यदि स भगवान् पूर्णकामोऽस्मि सोऽहं

दास्याम्येव स्थिरमिति वदन् काव्यशप्तोऽपि दैत्य: ।

विन्ध्यावल्या निजदयितया दत्तपाद्याय तुभ्यं

चित्रं चित्रं सकलमपि स प्रार्पयत्तोयपूर्वम् ॥५॥


யாசத்யேவம் யதி₃ ஸ ப₄க₃வாந் பூர்ணகாமோ(அ)ஸ்மி ஸோ(அ)ஹம்

தா₃ஸ்யாம்யேவ ஸ்தி₂ரமிதி வத₃ந் காவ்யஶப்தோ(அ)பி தை₃த்ய: |

விந்த்₄யாவல்யா நிஜத₃யிதயா த₃த்தபாத்₃யாய துப்₄யம்

சித்ரம் சித்ரம் ஸகலமபி ஸ ப்ரார்பயத்தோயபூர்வம் || 5||


5. “அந்த பகவானே என்னிடத்தில் யாசகம் கேட்கும் பட்சத்தில், அவர் கேட்டதை நான் மறுக்காமல் கொடுப்பேன்” என்று சொன்ன மகாபலியை சுக்ராச்சார்யார் சபித்தார். இருப்பினும், தன் மனைவி விந்தியாவளியுடன் தீர்த்தத்தை விட்டு தன்னிடமுள்ள எல்லாவற்றையும் உநக்கு தானம் செய்தான். ஆச்சர்யம்!


निस्सन्देहं दितिकुलपतौ त्वय्यशेषार्पणं तद्-

व्यातन्वाने मुमुचु:-ऋषय: सामरा: पुष्पवर्षम् ।

दिव्यं रूपं तव च तदिदं पश्यतां विश्वभाजा-

मुच्चैरुच्चैरवृधदवधीकृत्य विश्वाण्डभाण्डम् ॥६॥


நிஸ்ஸந்தே₃ஹம் தி₃திகுலபதௌ த்வய்யஶேஷார்பணம் தத்₃-

வ்யாதந்வாநே முமுசு:-ருஷய: ஸாமரா: புஷ்பவர்ஷம் |

தி₃வ்யம் ரூபம் தவ ச ததி₃த₃ம் பஶ்யதாம் விஶ்வபா₄ஜா-

முச்சைருச்சைரவ்ருத₄த₃வதீ₄க்ருத்ய விஶ்வாண்ட₃பா₄ண்ட₃ம் || 6||


6. அசுர குலத்தில் சிறந்தவனான அந்த மகாபலி, சந்தேகமில்லாமல் தன்னிடமுள்ள அனைத்தையும் உன்னிடத்தில் கொடுத்துவிட்டான். அதைக் கண்ட தேவர்களும், முனிவர்களும் பூமாரி பொழிந்தனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உன்னுடைய உருவம் மிகப் பெரியதாய், அண்டங்களைத் தாண்டி வளர்ந்தது. பூமியை ஒரு திருவடியாலும், மேலுலகங்களை இன்னொரு திருவடியாலும் அளந்தாய்.


त्वत्पादाग्रं निजपदगतं पुण्डरीकोद्भवोऽसौ

कुण्डीतोयैरसिचदपुनाद्यज्जलं विश्वलोकान् ।

हर्षोत्कर्षात् सुबहु ननृते खेचरैरुत्सवेऽस्मिन्

भेरीं निघ्नन् भुवनमचरज्जाम्बवान् भक्तिशाली ॥७॥


த்வத்பாதா₃க்₃ரம் நிஜபத₃க₃தம் புண்ட₃ரீகோத்₃ப₄வோ(அ)ஸௌ

குண்டீ₃தோயைரஸிசத₃புநாத்₃யஜ்ஜலம் விஶ்வலோகாந் |

ஹர்ஷோத்கர்ஷாத் ஸுப₃ஹு நந்ருதே கே₂சரைருத்ஸவே(அ)ஸ்மிந்

பே₄ரீம் நிக்₄நந் பு₄வநமசரஜ்ஜாம்ப₃வாந் ப₄க்திஶாலீ || 7||


7. ஸத்யலோகத்தை அடைந்த உன் பாதத்தை, பிரமன் தன் கமண்டல ஜலத்தால் அபிஷேகம் செய்தார். அந்த ஜலம், உலகங்கள் அனைத்தையும் பரிசுத்தமாக்கியது. தேவர்கள் சந்தோஷத்தால் நடனம் செய்தனர். பக்தராகிய ஜாம்பவான், தனது பேரிகையை முழக்கிக்கொண்டு பூமியை வலம் வந்தார்.


तावद्दैत्यास्त्वनुमतिमृते भर्तुरारब्धयुद्धा

देवोपेतैर्भवदनुचरैस्सङ्गता भङ्गमापन् ।

कालात्माऽयं वसति पुरतो यद्वशात् प्राग्जिता: स्म:

किं वो युद्धैरिति बलिगिरा तेऽथ पातालमापु: ॥८॥


தாவத்₃தை₃த்யாஸ்த்வநுமதிம்ருதே ப₄ர்துராரப்₃த₄யுத்₃தா₄

தே₃வோபேதைர்ப₄வத₃நுசரைஸ்ஸங்க₃தா ப₄ங்க₃மாபந் |

காலாத்மா(அ)யம் வஸதி புரதோ யத்₃வஶாத் ப்ராக்₃ஜிதா: ஸ்ம:

கிம் வோ யுத்₃தை₄ரிதி ப₃லிகி₃ரா தே(அ)த₂ பாதாலமாபு: || 8||


8. தேவனே! பலியினுடைய சம்மதமின்றி அசுரர்கள் போர் புரிய ஆரம்பித்தனர். உன்னுடன் வந்திருந்தவர்களால் தோல்வி அடைந்தனர். “காலரூபியான பகவானின் அருளால் நாம் வெற்றி அடைந்தவர்களாக இருந்தோம். அந்த பகவானே நம்முன் எதிர்க்கும் போது போரினால் பயன் இல்லை” என்று மகாபலி அசுரர்களிடம் சொன்னான். அதனைக் கேட்ட அவர்கள் தங்கள் உலகமான பாதாள உலகத்திற்குச் சென்றனர்.


पाशैर्बद्धं पतगपतिना दैत्यमुच्चैरवादी-

स्तार्त्तीयीकं दिश मम पदं किं न विश्वेश्वरोऽसि ।

पादं मूर्ध्नि प्रणय भगवन्नित्यकम्पं वदन्तं

प्रह्लाद्स्तं स्वयमुपगतो मानयन्नस्तवीत्त्वाम् ॥९॥


பாஶைர்ப₃த்₃த₄ம் பதக₃பதிநா தை₃த்யமுச்சைரவாதீ₃-

ஸ்தார்த்தீயீகம் தி₃ஶ மம பத₃ம் கிம் ந விஶ்வேஶ்வரோ(அ)ஸி |

பாத₃ம் மூர்த்₄நி ப்ரணய ப₄க₃வந்நித்யகம்பம் வத₃ந்தம்

ப்ரஹ்லாத்₃ஸ்தம் ஸ்வயமுபக₃தோ மாநயந்நஸ்தவீத்த்வாம் || 9||


9. கருடன், வருணபாசத்தால் மகாபலியைக் கட்டினான். “ எனக்கு மூன்றாவது அடி மண்ணைக் கொடு. நீ உலகங்களுக்கெல்லாம் தலைவனல்லவா” என்று உரக்கக் கேட்டாய். மகாபலி சிறிதும் நிதானத்தை இழக்காமல், “பகவானே! மூன்றாவது அடியை என் தலையின் மேல் வைத்து தங்களுடையதாக்கிக் கொள்ளுங்கள்” என்று சொன்னான். அப்போது, பிரஹ்லாதன் பலியைப் புகழ்ந்து, உன்னைத் துதித்தான்.


दर्पोच्छित्त्यै विहितमखिलं दैत्य सिद्धोऽसि पुण्यै-

र्लोकस्तेऽस्तु त्रिदिवविजयी वासवत्वं च पश्चात् ।

मत्सायुज्यं भज च पुनरित्यन्वगृह्णा बलिं तं

विप्रैस्सन्तानितमखवर: पाहि वातालयेश ॥१०॥


த₃ர்போச்சி₂த்த்யை விஹிதமகி₂லம் தை₃த்ய ஸித்₃தோ₄(அ)ஸி புண்யை-

ர்லோகஸ்தே(அ)ஸ்து த்ரிதி₃வவிஜயீ வாஸவத்வம் ச பஶ்சாத் |

மத்ஸாயுஜ்யம் ப₄ஜ ச புநரித்யந்வக்₃ருஹ்ணா ப₃லிம் தம்

விப்ரைஸ்ஸந்தாநிதமக₂வர: பாஹி வாதாலயேஶ || 10||


10. திதியின் வயிற்றில் பிறந்தவனே! உன்னுடைய அகங்காரத்தை அழிக்கவே இவ்வாறெல்லாம் நடந்தது. புண்ணியங்கள் பல செய்த உனக்கு சொர்க்கத்தை விட உயர்ந்ததான சுதலம் என்ற உலகம் கிடைக்கும். பிறகு, இந்திர பதவியை அடைந்து, பிறகு எனது சாயுஜ்யத்தை அடைவாய் என்று மகாபலிக்கு அருள் புரிந்தாய். ஹே குருவாயூரப்பா! காப்பாற்று.


அம்பரீஷ சரித்திரம்


वैवस्वताख्यमनुपुत्रनभागजात-

नाभागनामकनरेन्द्रसुतोऽम्बरीष: ।

सप्तार्णवावृतमहीदयितोऽपि रेमे

त्वत्सङ्गिषु त्वयि च मग्नमनास्सदैव ॥१॥


வைவஸ்வதாக்₂யமநுபுத்ரநபா₄க₃ஜாத-

நாபா₄க₃நாமகநரேந்த்₃ரஸுதோ(அ)ம்ப₃ரீஷ: |

ஸப்தார்ணவாவ்ருதமஹீத₃யிதோ(அ)பி ரேமே

த்வத்ஸங்கி₃ஷு த்வயி ச மக்₃நமநாஸ்ஸதை₃வ || 1||


1. வைவஸ்வத மனுவின் பிள்ளை நபகன். அவனுடைய பிள்ளை நாபாகன். அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான். அவன் ஏழு கடல்களால் சூழப்பட்ட பூமிக்குத் தலைவனாக இருந்தான். இருப்பினும், உன்னிடத்திலும், உன் பக்தர்களிடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான்.


त्वत्प्रीतये सकलमेव वितन्वतोऽस्य

भक्त्यैव देव नचिरादभृथा: प्रसादम् ।

येनास्य याचनमृतेऽप्यभिरक्षणार्थं

चक्रं भवान् प्रविततार सहस्रधारम् ॥२॥


த்வத்ப்ரீதயே ஸகலமேவ விதந்வதோ(அ)ஸ்ய

ப₄க்த்யைவ தே₃வ நசிராத₃ப்₄ருதா₂: ப்ரஸாத₃ம் |

யேநாஸ்ய யாசநம்ருதே(அ)ப்யபி₄ரக்ஷணார்த₂ம்

சக்ரம் ப₄வாந் ப்ரவிததார ஸஹஸ்ரதா₄ரம் || 2||


2. தேவனே! உநிடம் கொண்ட பக்தியால், அனைத்து கர்மங்களையும் ஒன்று விடாமல் செய்தான். அவன் கேட்காமலேயே, அவனைக் காப்பதற்கு, ஆயிரக்கணக்கான முனைகளையுடைய உன் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்தாய்.


स द्वादशीव्रतमथो भवदर्चनार्थं

वर्षं दधौ मधुवने यमुनोपकण्ठे ।

पत्न्या समं सुमनसा महतीं वितन्वन्

पूजां द्विजेषु विसृजन् पशुषष्टिकोटिम् ॥३॥


ஸ த்₃வாத₃ஶீவ்ரதமதோ₂ ப₄வத₃ர்சநார்த₂ம்

வர்ஷம் த₃தௌ₄ மது₄வநே யமுநோபகண்டே₂ |

பத்ந்யா ஸமம் ஸுமநஸா மஹதீம் விதந்வந்

பூஜாம் த்₃விஜேஷு விஸ்ருஜந் பஶுஷஷ்டிகோடிம் || 3||


3. பிறகு, அம்பரீஷன், யமுனைக் கரையில் உள்ள மதுவனத்தில், நற்குணங்கள் கொண்ட தன் மனைவியுடன் உன்னைப் பூஜித்து வந்தான். அறுபது கோடிப் பசுக்களை வேதமறிந்தவர்களுக்குத் தானம் செய்தான். ஒரு வருட காலம் துவாதசி விரதத்தை அனுஷ்டித்துத்து உன்னைப் பூஜித்து வந்தான்.


तत्राथ पारणदिने भवदर्चनान्ते

दुर्वाससाऽस्य मुनिना भवनं प्रपेदे ।

भोक्तुं वृतश्चस नृपेण परार्तिशीलो

मन्दं जगाम यमुनां नियमान्विधास्यन् ॥४॥


தத்ராத₂ பாரணதி₃நே ப₄வத₃ர்சநாந்தே

து₃ர்வாஸஸா(அ)ஸ்ய முநிநா ப₄வநம் ப்ரபேதே₃ |

போ₄க்தும் வ்ருதஶ்சஸ ந்ருபேண பரார்திஶீலோ

மந்த₃ம் ஜகா₃ம யமுநாம் நியமாந்விதா₄ஸ்யந் || 4||


4. விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மதுவனத்திற்கு வந்தார். அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினான். விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து, மெதுவே யமுனை நதிக்குச் சென்றார்.


राज्ञाऽथ पारणमुहूर्तसमाप्तिखेदा-

द्वारैव पारणमकारि भवत्परेण ।

प्राप्तो मुनिस्तदथ दिव्यदृशा विजानन्

क्षिप्यन् क्रुधोद्धृतजटो विततान कृत्याम् ॥५॥


ராஜ்ஞா(அ)த₂ பாரணமுஹூர்தஸமாப்திகே₂தா₃-

த்₃வாரைவ பாரணமகாரி ப₄வத்பரேண |

ப்ராப்தோ முநிஸ்தத₃த₂ தி₃வ்யத்₃ருஶா விஜாநந்

க்ஷிப்யந் க்ருதோ₄த்₃த்₄ருதஜடோ விததாந க்ருத்யாம் || 5||


5. அரசனான அம்பரீஷன், பாரணை செய்ய வேண்டிய திதி முடியப் போகிறதே என்ற கவலையில் தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான். ஞான திருஷ்டியால் அதை அறிந்த முனிவர், கோபத்துடன் கடுஞ்சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து, தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து அதிலிருந்து ‘க்ருத்யை’ என்ற துர்தேவதையை உண்டாக்கினார்.


कृत्यां च तामसिधरां भुवनं दहन्ती-

मग्रेऽभिवीक्ष्यनृपतिर्न पदाच्चकम्पे ।

त्वद्भक्तबाधमभिवीक्ष्य सुदर्शनं ते

कृत्यानलं शलभयन् मुनिमन्वधावीत् ॥६॥


க்ருத்யாம் ச தாமஸித₄ராம் பு₄வநம் த₃ஹந்தீ-

மக்₃ரே(அ)பி₄வீக்ஷ்யந்ருபதிர்ந பதா₃ச்சகம்பே |

த்வத்₃ப₄க்தபா₃த₄மபி₄வீக்ஷ்ய ஸுத₃ர்ஶநம் தே

க்ருத்யாநலம் ஶலப₄யந் முநிமந்வதா₄வீத் || 6||


6. கையில் கத்தியுடன், உலகங்களை எரிக்கும் அந்த துர்தேவதையை நேரில் கண்ட அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான். சுதர்சன சக்கரமானது, அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யையை அழித்து, துர்வாசரைப் பின்தொடர்ந்து சென்றது.


धावन्नशेषभुवनेषु भिया स पश्यन्

विश्वत्र चक्रमपि ते गतवान् विरिञ्चम् ।

क: कालचक्रमतिलङ्घयतीत्यपास्त:

शर्वं ययौ स च भवन्तमवन्दतैव ॥७॥


தா₄வந்நஶேஷபு₄வநேஷு பி₄யா ஸ பஶ்யந்

விஶ்வத்ர சக்ரமபி தே க₃தவாந் விரிஞ்சம் |

க: காலசக்ரமதிலங்க₄யதீத்யபாஸ்த:

ஶர்வம் யயௌ ஸ ச ப₄வந்தமவந்த₃தைவ || 7||


7. பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார். எல்லா இடத்திற்கும் சக்ராயுதம் பின்தொடர்ந்ததைக் கண்டு பிரமனை சரணடைந்தார். காலச்சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரம்மதேவர் முனிவரை அனுப்பி விட்டார். பிறகு, பரமசிவனிடம் சென்றார். அவரும் உன்னை சரணடைய உபதேசம் செய்தார்.


भूयो भवन्निलयमेत्य मुनिं नमन्तं

प्रोचे भवानहमृषे ननु भक्तदास: ।

ज्ञानं तपश्च विनयान्वितमेव मान्यं

याह्यम्बरीषपदमेव भजेति भूमन् ॥८॥


பூ₄யோ ப₄வந்நிலயமேத்ய முநிம் நமந்தம்

ப்ரோசே ப₄வாநஹம்ருஷே நநு ப₄க்ததா₃ஸ: |

ஜ்ஞாநம் தபஶ்ச விநயாந்விதமேவ மாந்யம்

யாஹ்யம்ப₃ரீஷபத₃மேவ ப₄ஜேதி பூ₄மந் || 8||


8. எங்கும் நிறைந்தவனே! கடைசியாக முனிவர் வைகுண்டத்தை அடைந்து உன்னைச் சரணடைந்தார். நீ,"முனிவரே! நான் பக்தர்களுக்கு அடியவன். அறிவும், தவமும் அகங்காரமில்லாமல் இருக்க வேண்டும். நீங்கள் அம்பரீஷனையே சரணடையுங்கள்"என்று சொன்னாய்.


तावत्समेत्य मुनिना स गृहीतपादो

राजाऽपसृत्य भवदस्त्रमसावनौषीत् ।

चक्रे गते मुनिरदादखिलाशिषोऽस्मै

त्वद्भक्तिमागसि कृतेऽपि कृपां च शंसन् ॥९॥


தாவத்ஸமேத்ய முநிநா ஸ க்₃ருஹீதபாதோ₃

ராஜா(அ)பஸ்ருத்ய ப₄வத₃ஸ்த்ரமஸாவநௌஷீத் |

சக்ரே க₃தே முநிரதா₃த₃கி₂லாஶிஷோ(அ)ஸ்மை

த்வத்₃ப₄க்திமாக₃ஸி க்ருதே(அ)பி க்ருபாம் ச ஶம்ஸந் || 9||


9. முனிவரும் அம்பரீஷனின் கால்களைப் பற்றினார். அவன் விலகி, சக்ராயுதத்தைத் துதிக்க, அது திரும்பிச் சென்றது. துர்வாசர், அம்பரீஷனின் பக்தியையும், தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும் மெச்சி அவனை ஆசீர்வதித்தார்.


राजा प्रतीक्ष्य मुनिमेकसमामनाश्वान्

सम्भोज्य साधु तमृषिं विसृजन् प्रसन्नम् ।

भुक्त्वा स्वयं त्वयि ततोऽपि दृढं रतोऽभू-

त्सायुज्यमाप च स मां पवनेश पाया: ॥१०॥


ராஜா ப்ரதீக்ஷ்ய முநிமேகஸமாமநாஶ்வாந்

ஸம்போ₄ஜ்ய ஸாது₄ தம்ருஷிம் விஸ்ருஜந் ப்ரஸந்நம் |

பு₄க்த்வா ஸ்வயம் த்வயி ததோ(அ)பி த்₃ருட₄ம் ரதோ(அ)பூ₄-

த்ஸாயுஜ்யமாப ச ஸ மாம் பவநேஶ பாயா: || 10||


10. அம்பரீஷன், ஒரு வருடம் துர்வாசரை எதிர்பார்த்து, உண்ணாமல் விரதமிருந்து, அவர் வந்ததும் அவருக்கு உணவளித்து, வழியனுப்பி, பிறகு பாரணை செய்தான். முன்பு இருந்ததை விட அதிகமாய்த் உன்னிடம் பக்தி கொண்டு முடிவில் உன்னை அடைந்தான். அத்தகைய மகிமை வாய்ந்த குருவாயூரப்பா! என்னைக் காக்க வேண்டும்.


ஸ்ரீ ராமாவதாரம்


गीर्वाणैरर्थ्यमानो दशमुखनिधनं कोसलेष्वृश्यशृङ्गे

पुत्रीयामिष्टिमिष्ट्वा ददुषि दशरथक्ष्माभृते पायसाग्र्यम् ।

तद्भुक्त्या तत्पुरन्ध्रीष्वपि तिसृषु समं जातगर्भासु जातो

रामस्त्वं लक्ष्मणेन स्वयमथ भरतेनापि शत्रुघ्ननाम्ना ॥१॥


கீ₃ர்வாணைரர்த்₂யமாநோ த₃ஶமுக₂நித₄நம் கோஸலேஷ்வ்ருஶ்யஶ்ருங்கே₃

புத்ரீயாமிஷ்டிமிஷ்ட்வா த₃து₃ஷி த₃ஶரத₂க்ஷ்மாப்₄ருதே பாயஸாக்₃ர்யம் |

தத்₃பு₄க்த்யா தத்புரந்த்₄ரீஷ்வபி திஸ்ருஷு ஸமம் ஜாதக₃ர்பா₄ஸு ஜாதோ

ராமஸ்த்வம் லக்ஷ்மணேந ஸ்வயமத₂ ப₄ரதேநாபி ஶத்ருக்₄நநாம்நா || 1||


1. ரிஷ்யஸ்ருங்க முனிவர், தசரதர் வேண்டிக் கொண்டதன் பேரில், புத்ரகாமேஷ்டி யாகம் நடத்தி, அதில் கிடைத்த உத்தமமான பாயசத்தை தசரதருக்குக் கொடுத்தார். அவனது மனைவியர் மூவரும் அந்தப் பாயசத்தை உண்டு கர்ப்பம் தரித்தனர். ராவணனை வதம் செய்யத் தேவர்கள் வேண்டியதால், நீ அந்த மூவரிடமும், பரதனோடும், லக்ஷ்மணனோடும், சத்ருக்னனோடும் ராமனாக அவதரித்தாய்.


कोदण्डी कौशिकस्य क्रतुवरमवितुं लक्ष्मणेनानुयातो

यातोऽभूस्तातवाचा मुनिकथितमनुद्वन्द्वशान्ताध्वखेद: ।

नृणां त्राणाय बाणैर्मुनिवचनबलात्ताटकां पाटयित्वा

लब्ध्वास्मादस्त्रजालं मुनिवनमगमो देव सिद्धाश्रमाख्यम् ॥२॥


கோத₃ண்டீ₃ கௌஶிகஸ்ய க்ரதுவரமவிதும் லக்ஷ்மணேநாநுயாதோ

யாதோ(அ)பூ₄ஸ்தாதவாசா முநிகதி₂தமநுத்₃வந்த்₃வஶாந்தாத்₄வகே₂த₃: |

ந்ருணாம் த்ராணாய பா₃ணைர்முநிவசநப₃லாத்தாடகாம் பாடயித்வா

லப்₃த்₄வாஸ்மாத₃ஸ்த்ரஜாலம் முநிவநமக₃மோ தே₃வ ஸித்₃தா₄ஶ்ரமாக்₂யம் || 2||


2. தேவனே! தந்தையின் சொல்லுக்கு இணங்க, கோதண்டம் ஏந்தி, லக்ஷ்மணனுடன் கூட, விஸ்வாமித்திரர் செய்த யாகத்தைக் காப்பாற்றுவதற்காகச் சென்றாய். முனிவர் உபதேசித்த பலா, அதிபலா மந்திரங்களால் வழி நடந்த களைப்பு நீங்க பெற்றாய். முனிவர் சொல்படி தாடகையை வதம் செய்து, அவர் கொடுத்த அஸ்திரங்களைப் பெற்றுக் கொண்டு, சித்தாஸ்ரமம் என்ற முனிவனத்தை அடைந்தாய்.


मारीचं द्रावयित्वा मखशिरसि शरैरन्यरक्षांसि निघ्नन्

कल्यां कुर्वन्नहल्यां पथि पदरजसा प्राप्य वैदेहगेहम् ।

भिन्दानश्चान्द्रचूडं धनुरवनिसुतामिन्दिरामेव लब्ध्वा

राज्यं प्रातिष्ठथास्त्वं त्रिभिरपि च समं भ्रातृवीरैस्सदारै: ॥३॥


மாரீசம் த்₃ராவயித்வா மக₂ஶிரஸி ஶரைரந்யரக்ஷாம்ஸி நிக்₄நந்

கல்யாம் குர்வந்நஹல்யாம் பதி₂ பத₃ரஜஸா ப்ராப்ய வைதே₃ஹகே₃ஹம் |

பி₄ந்தா₃நஶ்சாந்த்₃ரசூட₃ம் த₄நுரவநிஸுதாமிந்தி₃ராமேவ லப்₃த்₄வா

ராஜ்யம் ப்ராதிஷ்ட₂தா₂ஸ்த்வம் த்ரிபி₄ரபி ச ஸமம் ப்₄ராத்ருவீரைஸ்ஸதா₃ரை: || 3||


3. யாகத்தின் ஆரம்பத்தில் மாரீசனை பாணங்களால் விரட்டி, மற்ற அசுரர்களைக் கொன்றாய். சாபத்தினால் கல்லாய்க் கிடந்த அகலிகை, உன் பாதம் பட்டதும் பெண்ணாக மாறினாள். சிவனுடைய வில்லை முறித்து, பூமாதேவியின் மகளான ஸ்ரீ மகாலக்ஷ்மியை மணம் புரிந்தாய். பத்தினிகளுடன் கூடிய சகோதரர்களுடன் அயோத்தியை நோக்கிப் புறப்பட்டாய்.


आरुन्धाने रुषान्धे भृगुकुल तिलके संक्रमय्य स्वतेजो

याते यातोऽस्ययोध्यां सुखमिह निवसन् कान्तया कान्तमूर्ते ।

शत्रुघ्नेनैकदाथो गतवति भरते मातुलस्याधिवासं

तातारब्धोऽभिषेकस्तव किल विहत: केकयाधीशपुत्र्या ॥४॥


ஆருந்தா₄நே ருஷாந்தே₄ ப்₄ருகு₃குல திலகே ஸம்க்ரமய்ய ஸ்வதேஜோ

யாதே யாதோ(அ)ஸ்யயோத்₄யாம் ஸுக₂மிஹ நிவஸந் காந்தயா காந்தமூர்தே |

ஶத்ருக்₄நேநைகதா₃தோ₂ க₃தவதி ப₄ரதே மாதுலஸ்யாதி₄வாஸம்

தாதாரப்₃தோ₄(அ)பி₄ஷேகஸ்தவ கில விஹத: கேகயாதீ₄ஶபுத்ர்யா || 4||


4. பிருகு குலத்திற்குத் திலகம் போன்ற பரசுராமர், கோபத்தினால் உன்னை வழிமறித்துத் தடுத்தார். தன் வலிமையை உன்னிடம் சேர்த்தார். பிறகு, நீ அயோத்தியை அடைந்து, சீதையுடன் வசித்து வந்தாய். பரதனும், சத்ருக்னனும் மாமாவினுடைய வீட்டுக்குச் சென்றிருந்த போது, தசரதர், உனக்குப் பட்டாபிஷேகம் செய்ய முடிவு செய்தார். அப்போது கைகேயி அதைத் தடுத்தாள்.


तातोक्त्या यातुकामो वनमनुजवधूसंयुतश्चापधार:

पौरानारुध्य मार्गे गुहनिलयगतस्त्वं जटाचीरधारी।

नावा सन्तीर्य गङ्गामधिपदवि पुनस्तं भरद्वाजमारा-

न्नत्वा तद्वाक्यहेतोरतिसुखमवसश्चित्रकूटे गिरीन्द्रे ॥५॥


தாதோக்த்யா யாதுகாமோ வநமநுஜவதூ₄ஸம்யுதஶ்சாபதா₄ர:

பௌராநாருத்₄ய மார்கே₃ கு₃ஹநிலயக₃தஸ்த்வம் ஜடாசீரதா₄ரீ|

நாவா ஸந்தீர்ய க₃ங்கா₃மதி₄பத₃வி புநஸ்தம் ப₄ரத்₃வாஜமாரா-

ந்நத்வா தத்₃வாக்யஹேதோரதிஸுக₂மவஸஶ்சித்ரகூடே கி₃ரீந்த்₃ரே || 5||


5. தந்தையின் சொல்படி, வில்லேந்தி தம்பியோடும், மனைவியோடும் கானகம் சென்றாய். உன்னைப் பின்தொடர்ந்த நாட்டு மக்களைத் திருப்பி அனுப்பிவிட்டு, குகனுடைய இருப்பிடத்தையடைந்து, மரவுரியையும், ஜடா மகுடத்தையும் தரித்தாய். பிறகு, தோணியின் மூலம் கங்கையைக் கடந்து, வழியில் பரத்வாஜ முனிவரை வணங்கி, அவர் சொல்படி, சித்ரகூட மலையில் சௌக்கியமாக வசித்து வந்தாய்.


श्रुत्वा पुत्रार्तिखिन्नं खलु भरतमुखात् स्वर्गयातं स्वतातं

तप्तो दत्वाऽम्बु तस्मै निदधिथ भरते पादुकां मेदिनीं च

अत्रिं नत्वाऽथ गत्वा वनमतिविपुलं दण्डकं चण्डकायं

हत्वा दैत्यं विराधं सुगतिमकलयश्चारु भो: शारभङ्गीम् ॥६॥


ஶ்ருத்வா புத்ரார்திகி₂ந்நம் க₂லு ப₄ரதமுகா₂த் ஸ்வர்க₃யாதம் ஸ்வதாதம்

தப்தோ த₃த்வா(அ)ம்பு₃ தஸ்மை நித₃தி₄த₂ ப₄ரதே பாது₃காம் மேதி₃நீம் ச

அத்ரிம் நத்வா(அ)த₂ க₃த்வா வநமதிவிபுலம் த₃ண்ட₃கம் சண்ட₃காயம்

ஹத்வா தை₃த்யம் விராத₄ம் ஸுக₃திமகலயஶ்சாரு போ₄: ஶாரப₄ங்கீ₃ம் || 6||


6. உன்னைப் பிரிந்து புத்திர சோகத்தால் தந்தை மரணமடைந்தார் என்று பரதன் மூலம் அறிந்து வருந்தி, தந்தைக்குத் தர்ப்பணம் முதலியவற்றைச் செய்தாய். பரதனிடம் பாதுகைகளையும், பூமியையும் ஒப்படைத்தாய். பிறகு, அத்ரி முனிவரை வணங்கி, தண்டகவனத்தை அடைந்தாய். அங்கு, விராதன் என்ற அசுரனைக் கொன்று, சரபங்க முனிவருக்கு மோக்ஷம் கொடுத்தாய்.


नत्वाऽगस्त्यं समस्ताशरनिकरसपत्राकृतिं तापसेभ्य:

प्रत्यश्रौषी: प्रियैषी तदनु च मुनिना वैष्णवे दिव्यचापे ।

ब्रह्मास्त्रे चापि दत्ते पथि पितृसुहृदं वीक्ष्य भूयो जटायुं

मोदात् गोदातटान्ते परिरमसि पुरा पञ्चवट्यां वधूट्या ॥७॥


நத்வா(அ)க₃ஸ்த்யம் ஸமஸ்தாஶரநிகரஸபத்ராக்ருதிம் தாபஸேப்₄ய:

ப்ரத்யஶ்ரௌஷீ: ப்ரியைஷீ தத₃நு ச முநிநா வைஷ்ணவே தி₃வ்யசாபே |

ப்₃ரஹ்மாஸ்த்ரே சாபி த₃த்தே பதி₂ பித்ருஸுஹ்ருத₃ம் வீக்ஷ்ய பூ₄யோ ஜடாயும்

மோதா₃த் கோ₃தா₃தடாந்தே பரிரமஸி புரா பஞ்சவட்யாம் வதூ₄ட்யா || 7||


7. முனிவர்களுடைய நன்மையைக் கருதி, அசுரர் கூட்டத்தை அழிக்கப் பிரதிக்ஞை செய்தாய். பிறகு அகஸ்தியரை வணங்கி, விஷ்ணு வில்லையும், பிரம்மாஸ்த்ரமும் பெற்று, வழியில் உன் தந்தையின் நண்பரான ஜடாயுவைப் பார்த்து சந்தோஷமடைந்தாய். கோதாவரிக் கரையில், பஞ்சவடியில், சீதையுடன் வாழ்ந்து வந்தாய்.


प्राप्ताया: शूर्पणख्या मदनचलधृतेरर्थनैर्निस्सहात्मा

तां सौमित्रौ विसृज्य प्रबलतमरुषा तेन निर्लूननासाम् ।

दृष्ट्वैनां रुष्टचित्तं खरमभिपतितं दूषणं च त्रिमूर्धं

व्याहिंसीराशरानप्ययुतसमधिकांस्तत्क्षणादक्षतोष्मा ॥८॥


ப்ராப்தாயா: ஶூர்பணக்₂யா மத₃நசலத்₄ருதேரர்த₂நைர்நிஸ்ஸஹாத்மா

தாம் ஸௌமித்ரௌ விஸ்ருஜ்ய ப்ரப₃லதமருஷா தேந நிர்லூநநாஸாம் |

த்₃ருஷ்ட்வைநாம் ருஷ்டசித்தம் க₂ரமபி₄பதிதம் தூ₃ஷணம் ச த்ரிமூர்த₄ம்

வ்யாஹிம்ஸீராஶராநப்யயுதஸமதி₄காம்ஸ்தத்க்ஷணாத₃க்ஷதோஷ்மா || 8||


8. சூர்ப்பணகையின் மோகம் கொண்ட பேச்சுக்களால் பொறுமையிழந்து அவளை லக்ஷ்மணனிடம் அனுப்பினாய். அதிகக் கோபம் கொண்ட லக்ஷ்மணன், அவளுடைய மூக்கை அறுத்துவிட்டார். அதைக் கண்டு போருக்கு வந்த கரதூஷணர்கள், திரிசிரஸ் மற்றும் பதினாயிரத்துக்கும் மேற்பட்ட அசுரர்களை அழித்தாய்.


सोदर्याप्रोक्तवार्ताविवशदशमुखादिष्टमारीचमाया-

सारङ्ग सारसाक्ष्या स्पृहितमनुगत: प्रावधीर्बाणघातम् ।

तन्मायाक्रन्दनिर्यापितभवदनुजां रावणस्तामहार्षी-

त्तेनार्तोऽपि त्वमन्त: किमपि मुदमधास्तद्वधोपायलाभात् ॥९॥


ஸோத₃ர்யாப்ரோக்தவார்தாவிவஶத₃ஶமுகா₂தி₃ஷ்டமாரீசமாயா-

ஸாரங்க₃ ஸாரஸாக்ஷ்யா ஸ்ப்ருஹிதமநுக₃த: ப்ராவதீ₄ர்பா₃ணகா₄தம் |

தந்மாயாக்ரந்த₃நிர்யாபிதப₄வத₃நுஜாம் ராவணஸ்தாமஹார்ஷீ-

த்தேநார்தோ(அ)பி த்வமந்த: கிமபி முத₃மதா₄ஸ்தத்₃வதோ₄பாயலாபா₄த் || 9||


9. சூர்ப்பணகை சீதையைப் பற்றிச் சொன்னதைக் கேட்டு, ராவணன் பரவசமடைந்து, மாரீசனை மாயமானாகச் செல்ல ஆணையிட்டான். தாமரை போன்ற கண்களையுடைய சீதை அந்த மாயமானுக்கு ஆசைப்பட்டாள். அதனால், அதைத் தொடர்ந்து சென்று அதைக் கொன்றாய். சீதை, அந்த மாயமானின் அழுகுரல் கேட்டு லக்ஷ்மணனை வெளியே அனுப்ப, ராவணன் சீதையை அபகரித்துச் சென்றான். நீ, வெளியில் கவலையடைந்தவராய்த் தோன்றினாலும் ராவண வதத்திற்குக் காரணம் கிடைத்ததால் சந்தோஷமடைந்தாய்.


भूयस्तन्वीं विचिन्वन्नहृत दशमुखस्त्वद्वधूं मद्वधेने-

त्युक्त्वा याते जटायौ दिवमथ सुहृद: प्रातनो: प्रेतकार्यम् ।

गृह्णानं तं कबन्धं जघनिथ शबरीं प्रेक्ष्य पम्पातटे त्वं

सम्प्राप्तो वातसूनुं भृशमुदितमना: पाहि वातालयेश ॥१०॥


இந்த ஸ்லோகத்தைப் படிப்போரின் கவலை நீங்கும்.

பூ₄யஸ்தந்வீம் விசிந்வந்நஹ்ருத த₃ஶமுக₂ஸ்த்வத்₃வதூ₄ம் மத்₃வதே₄நே-

த்யுக்த்வா யாதே ஜடாயௌ தி₃வமத₂ ஸுஹ்ருத₃: ப்ராதநோ: ப்ரேதகார்யம் |

க்₃ருஹ்ணாநம் தம் கப₃ந்த₄ம் ஜக₄நித₂ ஶப₃ரீம் ப்ரேக்ஷ்ய பம்பாதடே த்வம்

ஸம்ப்ராப்தோ வாதஸூநும் ப்₄ருஶமுதி₃தமநா: பாஹி வாதாலயேஶ || 10||


10. சீதையைத் தேடிச் சென்றாய். வழியில் ஜடாயுவைக் கண்டாய். சீதையை அபகரித்தவன் ராவணன் என்ற செய்தியைச் சொன்னபின் ஜடாயுவின் உயிர் பிரிந்தது. அவனுக்குச் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்தாய். உன்னைப் பிடித்த கபந்தனைக் கொன்றாய். பம்பை நதிக் கரையில் சபரியைப் பார்த்து , பின்னர் அனுமனைக் கண்டு அளவற்ற ஆனந்தம் அடைந்தாய். குருவாயூரப்பா! காக்க வேண்டும்.


ஸ்ரீ ராமாவதாரம் தொடர்ச்சி


नीतस्सुग्रीवमैत्रीं तदनु हनुमता दुन्दुभे: कायमुच्चै:

क्षिप्त्वाङ्गुष्ठेन भूयो लुलुविथ युगपत् पत्रिणा सप्त सालान् ।

हत्वा सुग्रीवघातोद्यतमतुलबलं बालिनं व्याजवृत्त्या

वर्षावेलामनैषीर्विरहतरलितस्त्वं मतङ्गाश्रमान्ते ॥१॥


நீதஸ்ஸுக்₃ரீவமைத்ரீம் தத₃நு ஹநுமதா து₃ந்து₃பே₄: காயமுச்சை:

க்ஷிப்த்வாங்கு₃ஷ்டே₂ந பூ₄யோ லுலுவித₂ யுக₃பத் பத்ரிணா ஸப்த ஸாலாந் |

ஹத்வா ஸுக்₃ரீவகா₄தோத்₃யதமதுலப₃லம் பா₃லிநம் வ்யாஜவ்ருத்த்யா

வர்ஷாவேலாமநைஷீர்விரஹதரலிதஸ்த்வம் மதங்கா₃ஶ்ரமாந்தே || 1||


1. பிறகு, அனுமானால் சுக்ரீவனுடைய நட்பை அடைந்தாய். கால் கட்டை விரலால் துந்துபி என்ற அசுரனை உயரே தூக்கி எறிந்தாய். ஒரே அம்பால் ஒரே சமயத்தில் ஏழு மரங்களைத் துளைத்தாய். சுக்ரீவனைக் கொல்ல நினைத்த, அதிக பலம் பொருந்திய, வாலியை வதம் செய்தாய். சீதையின் பிரிவால் மனக்கவலை கொண்டு, மதங்க முனிவரின் ஆசிரமத்திற்கு அருகே, மழைக்காலத்தைக் கழித்தாய்.


सुग्रीवेणानुजोक्त्या सभयमभियता व्यूहितां वाहिनीं ता-

मृक्षाणां वीक्ष्य दिक्षु द्रुतमथ दयितामार्गणायावनम्राम् ।

सन्देशं चाङ्गुलीयं पवनसुतकरे प्रादिशो मोदशाली

मार्गे मार्गे ममार्गे कपिभिरपि तदा त्वत्प्रिया सप्रयासै: ॥२॥


ஸுக்₃ரீவேணாநுஜோக்த்யா ஸப₄யமபி₄யதா வ்யூஹிதாம் வாஹிநீம் தா-

ம்ருக்ஷாணாம் வீக்ஷ்ய தி₃க்ஷு த்₃ருதமத₂ த₃யிதாமார்க₃ணாயாவநம்ராம் |

ஸந்தே₃ஶம் சாங்கு₃லீயம் பவநஸுதகரே ப்ராதி₃ஶோ மோத₃ஶாலீ

மார்கே₃ மார்கே₃ மமார்கே₃ கபிபி₄ரபி ததா₃ த்வத்ப்ரியா ஸப்ரயாஸை: || 2||


2. பிறகு, லக்ஷ்மணனின் வார்த்தைகளில் பயந்து உன்னை வந்தடைந்த சுக்ரீவனையும், அவனது வானர சேனைகளையும் பார்த்து மிக்க மகிழ்ந்தாய். ஹனுமானுடைய கைகளில் கணையாழியையும், செய்தியையும் கொடுத்து அனுப்பினாய். வானர சைன்யமும் சீதையைத் தேடப் புறப்பட்டன.


त्वद्वार्ताकर्णनोद्यद्गरुदुरुजवसम्पातिसम्पातिवाक्य-

प्रोत्तीर्णार्णोधिरन्तर्नगरि जनकजां वीक्ष्य दत्वाङ्गुलीयम् ।

प्रक्षुद्योद्यानमक्षक्षपणचणरण: सोढबन्धो दशास्यं

दृष्ट्वा प्लुष्ट्वा च लङ्कां झटिति स हनुमान् मौलिरत्नं ददौ ते ॥३॥


த்வத்₃வார்தாகர்ணநோத்₃யத்₃க₃ருது₃ருஜவஸம்பாதிஸம்பாதிவாக்ய-

ப்ரோத்தீர்ணார்ணோதி₄ரந்தர்நக₃ரி ஜநகஜாம் வீக்ஷ்ய த₃த்வாங்கு₃லீயம் |

ப்ரக்ஷுத்₃யோத்₃யாநமக்ஷக்ஷபணசணரண: ஸோட₄ப₃ந்தோ₄ த₃ஶாஸ்யம்

த்₃ருஷ்ட்வா ப்லுஷ்ட்வா ச லங்காம் ஜ₂டிதி ஸ ஹநுமாந் மௌலிரத்நம் த₃தௌ₃ தே || 3||


3. உன் சரித்திரத்தைக் கேட்ட சம்பாதிக்கு இறக்கைகள் முளைத்தன. உடனே அவர் உயரே பறந்து சீதை இருக்கும் இடத்தை அறிந்து சொன்னார். அதைக் கேட்ட அனுமன் கடலைத் தாண்டிச் சென்று, இலங்கையின் நடுவே சீதையைக் கண்டார். கணையாழியைக் கொடுத்தார். அசோக வனத்தை அழித்தார். அக்ஷயகுமாரனுடன் போரிட்டு, பிரம்மாஸ்திரத்திற்குக் கட்டுப்பட்டு ராவணனைக் கண்டார். இலங்கையை எரித்து, சீக்கிரமாகத் திரும்பி வந்து சீதையின் சூடாமணியைத் உன்னிடம் கொடுத்தார்.


त्वं सुग्रीवाङ्गदादिप्रबलकपिचमूचक्रविक्रान्तभूमी-

चक्रोऽभिक्रम्य पारेजलधि निशिचरेन्द्रानुजाश्रीयमाण: ।

तत्प्रोक्तां शत्रुवार्तां रहसि निशमयन् प्रार्थनापार्थ्यरोष-

प्रास्ताग्नेयास्त्रतेजस्त्रसदुदधिगिरा लब्धवान् मध्यमार्गम् ॥४॥


த்வம் ஸுக்₃ரீவாங்க₃தா₃தி₃ப்ரப₃லகபிசமூசக்ரவிக்ராந்தபூ₄மீ-

சக்ரோ(அ)பி₄க்ரம்ய பாரேஜலதி₄ நிஶிசரேந்த்₃ராநுஜாஶ்ரீயமாண: |

தத்ப்ரோக்தாம் ஶத்ருவார்தாம் ரஹஸி நிஶமயந் ப்ரார்த₂நாபார்த்₂யரோஷ-

ப்ராஸ்தாக்₃நேயாஸ்த்ரதேஜஸ்த்ரஸது₃த₃தி₄கி₃ரா லப்₃த₄வாந் மத்₄யமார்க₃ம் || 4||


4. பிறகு, சுக்ரீவன், அங்கதன் முதலிய பலசாலிகளான வானரப்படைகளோடு இலங்கை மீது போர் தொடுக்கப் புறப்பட்டாய். ராவணனுடைய தம்பி விபீஷணன், சமுத்திரக்கரையில் தங்களைத் தஞ்சம் அடைந்தான். எதிரியின் செய்திகள் யாவற்றையும் அவன்மூலமாகக் கேட்டு அறிந்தாய். உன்னுடைய வேண்டுகோளை ஏற்காததால், சமுத்திரராஜன் மீது அக்னி அஸ்திரத்தைத் தொடுத்தாய். அவன் பயந்து கடலின் மத்தியில் வழி விட்டான்.


कीशैराशान्तरोपाहृतगिरिनिकरै: सेतुमाधाप्य यातो

यातून्यामर्द्य दंष्ट्रानखशिखरिशिलासालशस्त्रै: स्वसैन्यै: ।

व्याकुर्वन् सानुजस्त्वं समरभुवि परं विक्रमं शक्रजेत्रा

वेगान्नागास्त्रबद्ध: पतगपतिगरुन्मारुतैर्मोचितोऽभू: ॥५॥


கீஶைராஶாந்தரோபாஹ்ருதகி₃ரிநிகரை: ஸேதுமாதா₄ப்ய யாதோ

யாதூந்யாமர்த்₃ய த₃ம்ஷ்ட்ராநக₂ஶிக₂ரிஶிலாஸாலஶஸ்த்ரை: ஸ்வஸைந்யை: |

வ்யாகுர்வந் ஸாநுஜஸ்த்வம் ஸமரபு₄வி பரம் விக்ரமம் ஶக்ரஜேத்ரா

வேகா₃ந்நாகா₃ஸ்த்ரப₃த்₃த₄: பதக₃பதிக₃ருந்மாருதைர்மோசிதோ(அ)பூ₄: || 5||


5. வானரர்கள் அனைத்து திக்குகளிலிருந்தும் மலைகளைக் கொண்டு வந்து, அணை கட்டினார்கள். நீ இலங்கைக்குச் சென்று, பற்கள், நகங்கள், மலைகள், கற்கள், மரங்கள் ஆகியவற்றை ஆயுதங்களாகக் கொண்ட வானர சைன்யங்களைக் கொண்டு அசுரர்களை வதம் செய்தாய். சிறந்த வீரத்தையுடைய உன்னையும், உன் சகோதரனையும், இந்திரஜித் நாகாஸ்திரத்தால் கட்டினான். ஆனால், கருடனுடைய இறக்கைகளில் இருந்து வந்த காற்றால் விடுபட்டாய்.


सौमित्रिस्त्वत्र शक्तिप्रहृतिगलदसुर्वातजानीतशैल-

घ्राणात् प्राणानुपेतो व्यकृणुत कुसृतिश्लाघिनं मेघनादम् ।

मायाक्षोभेषु वैभीषणवचनहृतस्तम्भन: कुम्भकर्णं

सम्प्राप्तं कम्पितोर्वीतलमखिलचमूभक्षिणं व्यक्षिणोस्त्वम् ॥६॥


ஸௌமித்ரிஸ்த்வத்ர ஶக்திப்ரஹ்ருதிக₃லத₃ஸுர்வாதஜாநீதஶைல-

க்₄ராணாத் ப்ராணாநுபேதோ வ்யக்ருணுத குஸ்ருதிஶ்லாகி₄நம் மேக₄நாத₃ம் |

மாயாக்ஷோபே₄ஷு வைபீ₄ஷணவசநஹ்ருதஸ்தம்ப₄ந: கும்ப₄கர்ணம்

ஸம்ப்ராப்தம் கம்பிதோர்வீதலமகி₂லசமூப₄க்ஷிணம் வ்யக்ஷிணோஸ்த்வம் || 6||


6. சக்தி ஆயுதத்தால் லக்ஷ்மணனின் உயிர் பிரிந்தது. அனுமன் கொண்டு வந்த ஸஞ்ஜீவி மலையின் இலைகளின் காற்றால் உயிர் பெற்றெழுந்தான். மாயாசக்தியால் போரிட்ட இந்திரஜித்தை லக்ஷ்மணன் கொன்றான். மாயையினால் நீயும் கலக்கமுற்ற போது, விபீஷணன் கூறிய வார்த்தையால் கலக்கம் நீங்கப் பெற்றாய். பூமி அதிரத் உன்னை நோக்கி வந்த கும்பகர்ணனைக் கொன்றாய்.


गृह्णन् जम्भारिसंप्रेषितरथकवचौ रावणेनाभियुद्ध्यन्

ब्रह्मास्त्रेणास्य भिन्दन् गलततिमबलामग्निशुद्धां प्रगृह्णन् ।

देवश्रेणीवरोज्जीवितसमरमृतैरक्षतै: ऋक्षसङ्घै-

र्लङ्काभर्त्रा च साकं निजनगरमगा: सप्रिय: पुष्पकेण ॥७॥


க்₃ருஹ்ணந் ஜம்பா₄ரிஸம்ப்ரேஷிதரத₂கவசௌ ராவணேநாபி₄யுத்₃த்₄யந்

ப்₃ரஹ்மாஸ்த்ரேணாஸ்ய பி₄ந்த₃ந் க₃லததிமப₃லாமக்₃நிஶுத்₃தா₄ம் ப்ரக்₃ருஹ்ணந் |

தே₃வஶ்ரேணீவரோஜ்ஜீவிதஸமரம்ருதைரக்ஷதை: ருக்ஷஸங்கை₄-

ர்லங்காப₄ர்த்ரா ச ஸாகம் நிஜநக₃ரமகா₃: ஸப்ரிய: புஷ்பகேண || 7||


7. இந்திரன் அளித்த தேரையும், கவசத்தையும் ஏற்று ராவணனோடு போர் செய்தாய். பிரம்மாஸ்திரத்தால் அவனுடைய தலைகளை வரிசையாக வெட்டினாய். பிறகு, தீக்குளித்து தன் தூய்மையைக் காட்டிய சீதையை ஏற்றுக் கொண்டாய். போரில் உயிரிழந்த வானரர்கள் தேவர்களால் பிழைப்பிக்கப் பட்டார்கள். அவர்களுடனும், விபீஷணனோடும், சீதையோடும், லக்ஷ்மணனோடும், புஷ்பக விமானத்தில் அயோத்திக்குத் திரும்பினாய்.


प्रीतो दिव्याभिषेकैरयुतसमधिकान् वत्सरान् पर्यरंसी-

र्मैथिल्यां पापवाचा शिव! शिव! किल तां गर्भिणीमभ्यहासी: ।

शत्रुघ्नेनार्दयित्वा लवणनिशिचरं प्रार्दय: शूद्रपाशं

तावद्वाल्मीकिगेहे कृतवसतिरुपासूत सीता सुतौ ते ॥८॥


ப்ரீதோ தி₃வ்யாபி₄ஷேகைரயுதஸமதி₄காந் வத்ஸராந் பர்யரம்ஸீ-

ர்மைதி₂ல்யாம் பாபவாசா ஶிவ! ஶிவ! கில தாம் க₃ர்பி₄ணீமப்₄யஹாஸீ: |

ஶத்ருக்₄நேநார்த₃யித்வா லவணநிஶிசரம் ப்ரார்த₃ய: ஶூத்₃ரபாஶம்

தாவத்₃வால்மீகிகே₃ஹே க்ருதவஸதிருபாஸூத ஸீதா ஸுதௌ தே || 8||


8. கங்கை முதலிய தீர்த்தங்களால் உனக்குப் பட்டாபிஷேகம் செய்யப்பட்டது. பதினாயிரம் வருடங்களுக்குமேல் மகிழ்ச்சியாய் வாழ்ந்தாய். படிப்பற்ற ஒருவனின் சொல்லால், கர்ப்பமாக இருந்த சீதையைக் காட்டுக்கு அனுப்பினாய். சத்ருக்னன், லவணன் என்ற அசுரனை அழித்தான். சம்பூகன் என்ற அசுரனைக் கொன்றாய். வால்மீகியின் ஆசிரமத்தில் வசித்து வந்த சீதை, இரு மகன்களைப் பெற்றாள்.


वाल्मीकेस्त्वत्सुतोद्गापितमधुरकृतेराज्ञया यज्ञवाटे

सीतां त्वय्याप्तुकामे क्षितिमविशदसौ त्वं च कालार्थितोऽभू: ।

हेतो: सौमित्रिघाती स्वयमथ सरयूमग्ननिश्शेषभृत्यै:

साकं नाकं प्रयातो निजपदमगमो देव वैकुण्ठमाद्यम् ॥९॥


வால்மீகேஸ்த்வத்ஸுதோத்₃கா₃பிதமது₄ரக்ருதேராஜ்ஞயா யஜ்ஞவாடே

ஸீதாம் த்வய்யாப்துகாமே க்ஷிதிமவிஶத₃ஸௌ த்வம் ச காலார்தி₂தோ(அ)பூ₄: |

ஹேதோ: ஸௌமித்ரிகா₄தீ ஸ்வயமத₂ ஸரயூமக்₃நநிஶ்ஶேஷப்₄ருத்யை:

ஸாகம் நாகம் ப்ரயாதோ நிஜபத₃மக₃மோ தே₃வ வைகுண்ட₂மாத்₃யம் || 9||


9. நீ அஸ்வமேத யாகம் செய்தாய். அதில், உன் புத்திரர்கள், வால்மீகி முனிவரின் சொல்படி ராமாயணத்தைப் பாடினார்கள். முனிவர், சீதையை ஏற்கும்படி உத்தரவிட்டார். உன்னை அடைய விரும்பினாலும் அவள் பூமியில் பிரவேசித்தாள். லக்ஷ்மணனையும் தியாகம் செய்தாய். யமதர்மனின் வேண்டுகோளுக்கிணங்க, சரயூ நதியில் மூழ்கி வைகுண்டத்தை அடைந்தாய்.


सोऽयं मर्त्यावतारस्तव खलु नियतं मर्त्यशिक्षार्थमेवं

विश्लेषार्तिर्निरागस्त्यजनमपि भवेत् कामधर्मातिसक्त्या ।

नो चेत् स्वात्मानुभूते: क्व नु तव मनसो विक्रिया चक्रपाणे

स त्वं सत्त्वैकमूर्ते पवनपुरपते व्याधुनु व्याधितापान् ॥१०॥


ஸோ(அ)யம் மர்த்யாவதாரஸ்தவ க₂லு நியதம் மர்த்யஶிக்ஷார்த₂மேவம்

விஶ்லேஷார்திர்நிராக₃ஸ்த்யஜநமபி ப₄வேத் காமத₄ர்மாதிஸக்த்யா |

நோ சேத் ஸ்வாத்மாநுபூ₄தே: க்வ நு தவ மநஸோ விக்ரியா சக்ரபாணே

ஸ த்வம் ஸத்த்வைகமூர்தே பவநபுரபதே வ்யாது₄நு வ்யாதி₄தாபாந் || 10||


10. காமம், தர்மம் இவற்றினால் ஏற்பட்ட பற்றினாலும், பிரிவினால் ஏற்பட்ட துன்பத்தினாலும், குற்றமற்றவர்களும் சிரமத்தைக் அடைவார்கள் என்ற உண்மையை உலகிற்கு விளக்கவே நீ மனித உருவம் எடுத்து வந்தாய். இல்லை எனில் சக்கரம் ஏந்திய உனக்கு மனவிகாரம் எப்படி ஏற்படும்? சுத்தஸத்வ ரூபமான குருவாயூரப்பா! அத்தகைய நீ, வியாதிமூலம் ஏற்பட்ட எனது தாபங்களைப் போக்க வேண்டும்.


ஸ்ரீ பரசுராமர் சரித்திரம்


अत्रे: पुत्रतया पुरा त्वमनसूयायां हि दत्ताभिधो

जात: शिष्यनिबन्धतन्द्रितमना: स्वस्थश्चरन् कान्तया ।

दृष्टो भक्ततमेन हेहयमहीपालेन तस्मै वरा-

नष्टैश्वर्यमुखान् प्रदाय ददिथ स्वेनैव चान्ते वधम् ॥१॥


அத்ரே: புத்ரதயா புரா த்வமநஸூயாயாம் ஹி த₃த்தாபி₄தோ₄

ஜாத: ஶிஷ்யநிப₃ந்த₄தந்த்₃ரிதமநா: ஸ்வஸ்த₂ஶ்சரந் காந்தயா |

த்₃ருஷ்டோ ப₄க்ததமேந ஹேஹயமஹீபாலேந தஸ்மை வரா-

நஷ்டைஶ்வர்யமுகா₂ந் ப்ரதா₃ய த₃தி₃த₂ ஸ்வேநைவ சாந்தே வத₄ம் || 1||


1. அத்ரி முனிவருக்கும், அனசூயைக்கும் ‘தத்தர்’ என்ற மகனாகப் பிறந்தாய். பல சிஷ்யர்கள் உன்னை அண்டினார்கள். அவர்கள் தியானத்திற்கு இடையூறெனக் கருதி, தனித்து வசித்து வந்தாய். உன்னிடம் மிகுந்த பக்தி கொண்ட கார்த்தவீர்யார்ஜுனனுக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களை வரமாக அளித்தாய். நீயே அவனை வதம் செய்வதாகவும் வரம் கொடுத்தாய்.


सत्यं कर्तुमथार्जुनस्य च वरं तच्छक्तिमात्रानतं

ब्रह्मद्वेषि तदाखिलं नृपकुलं हन्तुं च भूमेर्भरम् ।

सञ्जातो जमदग्नितो भृगुकुले त्वं रेणुकायां हरे

रामो नाम तदात्मजेष्ववरज: पित्रोरधा: सम्मदम् ॥२॥


ஸத்யம் கர்துமதா₂ர்ஜுநஸ்ய ச வரம் தச்ச₂க்திமாத்ராநதம்

ப்₃ரஹ்மத்₃வேஷி ததா₃கி₂லம் ந்ருபகுலம் ஹந்தும் ச பூ₄மேர்ப₄ரம் |

ஸஞ்ஜாதோ ஜமத₃க்₃நிதோ ப்₄ருகு₃குலே த்வம் ரேணுகாயாம் ஹரே

ராமோ நாம ததா₃த்மஜேஷ்வவரஜ: பித்ரோரதா₄: ஸம்மத₃ம் || 2||


2. அந்த வரத்தை மெய்ப்பிக்க நினைத்தாய். அரசர்களிடையே பிராம்மண த்வேஷத்தை உண்டாக்கி, பூபாரத்தைப் போக்க நினைத்தாய். பிருகு முனிவரின் வம்சத்தில் வந்த ஜமதக்னி முனிவருக்கும், ரேணுகாதேவி என்ற அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தாய்.


लब्धाम्नायगणश्चतुर्दशवया गन्धर्वराजे मना-

गासक्तां किल मातरं प्रति पितु: क्रोधाकुलस्याज्ञया ।

ताताज्ञातिगसोदरै: सममिमां छित्वाऽथ शान्तात् पितु-

स्तेषां जीवनयोगमापिथ वरं माता च तेऽदाद्वरान् ॥३॥


லப்₃தா₄ம்நாயக₃ணஶ்சதுர்த₃ஶவயா க₃ந்த₄ர்வராஜே மநா-

கா₃ஸக்தாம் கில மாதரம் ப்ரதி பிது: க்ரோதா₄குலஸ்யாஜ்ஞயா |

தாதாஜ்ஞாதிக₃ஸோத₃ரை: ஸமமிமாம் சி₂த்வா(அ)த₂ ஶாந்தாத் பிது-

ஸ்தேஷாம் ஜீவநயோக₃மாபித₂ வரம் மாதா ச தே(அ)தா₃த்₃வராந் || 3||


3. நீ பதினான்கு வயதில் சகல வேதங்களையும் கற்றாய். சித்ரரதன் என்ற கந்தர்வனிடம், உன் தாய் ஆசை கொண்டதால், உன் தந்தையின் கட்டளைப் படி, தாயையும், கட்டளையை மீறிய சகோதரர்களையும் கொன்றாய். அதனால் சந்தோஷமடைந்த உன் தந்தை வரம் கேட்கும்படி கூறினார். நீ, அவர்கள் பிழைத்து எழ வரம் கேட்டாய். அவர்களும் பிழைத்தனர். தாயும் உனக்கு வரங்களை அளித்தாள்.


पित्रा मातृमुदे स्तवाहृतवियद्धेनोर्निजादाश्रमात्

प्रस्थायाथ भृगोर्गिरा हिमगिरावाराध्य गौरीपतिम् ।

लब्ध्वा तत्परशुं तदुक्तदनुजच्छेदी महास्त्रादिकं

प्राप्तो मित्रमथाकृतव्रणमुनिं प्राप्यागम: स्वाश्रमम् ॥४॥


பித்ரா மாத்ருமுதே₃ ஸ்தவாஹ்ருதவியத்₃தே₄நோர்நிஜாதா₃ஶ்ரமாத்

ப்ரஸ்தா₂யாத₂ ப்₄ருகோ₃ர்கி₃ரா ஹிமகி₃ராவாராத்₄ய கௌ₃ரீபதிம் |

லப்₃த்₄வா தத்பரஶும் தது₃க்தத₃நுஜச்சே₂தீ₃ மஹாஸ்த்ராதி₃கம்

ப்ராப்தோ மித்ரமதா₂க்ருதவ்ரணமுநிம் ப்ராப்யாக₃ம: ஸ்வாஶ்ரமம் || 4||


4. பிறகு, ஜமதக்னி முனிவர், உன் தாயின் சந்தோஷத்திற்காக ஸ்தோத்திரங்கள் செய்து, காமதேனு என்று பசுவை ஆசிரமத்திற்கு வரவழைத்தார். நீ பரமசிவனைக் குறித்துத் தவம் செய்ய இமயமலைக்குச் சென்றாய். அவர் பரசு என்ற கோடரியை அளித்தார். அந்த ஆயுதத்தால், அவர் கூறிய அசுரனைக் கொன்றாய். அக்ருதவ்ரணர் என்ற முனிவரிடம் நட்பு கொண்டு ஆசிரமத்திற்குத் திரும்பினாய்.


आखेटोपगतोऽर्जुन: सुरगवीसम्प्राप्तसम्पद्गणै-

स्त्वत्पित्रा परिपूजित: पुरगतो दुर्मन्त्रिवाचा पुन: ।

गां क्रेतुं सचिवं न्ययुङ्क्त कुधिया तेनापि रुन्धन्मुनि-

प्राणक्षेपसरोषगोहतचमूचक्रेण वत्सो हृत: ॥५॥


ஆகே₂டோபக₃தோ(அ)ர்ஜுந: ஸுரக₃வீஸம்ப்ராப்தஸம்பத்₃க₃ணை-

ஸ்த்வத்பித்ரா பரிபூஜித: புரக₃தோ து₃ர்மந்த்ரிவாசா புந: |

கா₃ம் க்ரேதும் ஸசிவம் ந்யயுங்க்த குதி₄யா தேநாபி ருந்த₄ந்முநி-

ப்ராணக்ஷேபஸரோஷகோ₃ஹதசமூசக்ரேண வத்ஸோ ஹ்ருத: || 5||


5. வேட்டையாடி விட்டு ஆசிரமத்திற்கு வந்த கார்த்தவீர்யார்ஜுனனை உன் தந்தை, காமதேனுவின் உதவியால் உபசரித்தார். நாடு திரும்பிய அரசன், கெட்ட மந்திரியின் பேச்சைக் கேட்டு, காமதேனுவை விலைக்கு வாங்க நினைத்து, மந்திரியையும், சேனையையும் அனுப்பினான். முனிவர் தர மறுக்கவே, அவரைக் கொன்று, அதனைக் கவர்ந்து செல்ல முயன்றான். கோபம் கொண்ட காமதேனு, அவர்களை அழித்தது. மீதமிருந்த சிலர் காமதேனுவின் கன்றைக் கவர்ந்து சென்றனர்.


शुक्रोज्जीविततातवाक्यचलितक्रोधोऽथ सख्या समं

बिभ्रद्ध्यातमहोदरोपनिहितं चापं कुठारं शरान् ।

आरूढ: सहवाहयन्तृकरथं माहिष्मतीमाविशन्

वाग्भिर्वत्समदाशुषि क्षितिपतौ सम्प्रास्तुथा: सङ्गरम् ॥६॥


ஶுக்ரோஜ்ஜீவிததாதவாக்யசலிதக்ரோதோ₄(அ)த₂ ஸக்₂யா ஸமம்

பி₃ப்₄ரத்₃த்₄யாதமஹோத₃ரோபநிஹிதம் சாபம் குடா₂ரம் ஶராந் |

ஆரூட₄: ஸஹவாஹயந்த்ருகரத₂ம் மாஹிஷ்மதீமாவிஶந்

வாக்₃பி₄ர்வத்ஸமதா₃ஶுஷி க்ஷிதிபதௌ ஸம்ப்ராஸ்துதா₂: ஸங்க₃ரம் || 6||


6. சுக்ராச்சார்யார் உன் தந்தையை உயிர்த்தெழச் செய்தார். தந்தையின் மூலம் நடந்ததை அறிந்த நீ கோபம் கொண்டு, தியானத்தால், கோடரி, வில், அம்பு இவற்றைப் பெற்று, உன் நண்பரான அக்ருதவ்ரணருடன் தேரில் ஏறி மாகிஷ்மதி என்ற நகருக்குச் சென்றாய். அரசனிடம் கன்றைக் கொடுக்கும்படி நயமாகக் கேட்டாய். அவன் தர மறுத்ததால், போர் புரியத் தொடங்கினாய்.


पुत्राणामयुतेन सप्तदशभिश्चाक्षौहिणीभिर्महा-

सेनानीभिरनेकमित्रनिवहैर्व्याजृम्भितायोधन: ।

सद्यस्त्वत्ककुठारबाणविदलन्निश्शेषसैन्योत्करो

भीतिप्रद्रुतनष्टशिष्टतनयस्त्वामापतत् हेहय: ॥७॥


புத்ராணாமயுதேந ஸப்தத₃ஶபி₄ஶ்சாக்ஷௌஹிணீபி₄ர்மஹா-

ஸேநாநீபி₄ரநேகமித்ரநிவஹைர்வ்யாஜ்ருʼம்பி₄தாயோத₄ந: |

ஸத்₃யஸ்த்வத்ககுடா₂ரபா₃ணவித₃லந்நிஶ்ஶேஷஸைந்யோத்கரோ

பீ₄திப்ரத்₃ருதநஷ்டஶிஷ்டதநயஸ்த்வாமாபதத் ஹேஹய: || 7||


7. கார்த்தவீர்யார்ஜுனன், பதினாயிரம் புத்திரர்களோடும், அக்ஷௌகிணிகள், சேனைகள், நண்பர்களோடும் எதிர்த்துப் போரிட்டான். கோடரியாலும், அம்புகளாலும் சேனையைக் கொன்றாய். மீதமிருந்தவர்களுடன் அவன் உன்னுடன் போரிட்டான்.


लीलावारितनर्मदाजलवलल्लङ्केशगर्वापह-

श्रीमद्बाहुसहस्रमुक्तबहुशस्त्रास्त्रं निरुन्धन्नमुम् ।

चक्रे त्वय्यथ वैष्णवेऽपि विफले बुद्ध्वा हरिं त्वां मुदा

ध्यायन्तं छितसर्वदोषमवधी: सोऽगात् परं ते पदम् ॥८॥


லீலாவாரிதநர்மதா₃ஜலவலல்லங்கேஶக₃ர்வாபஹ-

ஶ்ரீமத்₃பா₃ஹுஸஹஸ்ரமுக்தப₃ஹுஶஸ்த்ராஸ்த்ரம் நிருந்த₄ந்நமும் |

சக்ரே த்வய்யத₂ வைஷ்ணவே(அ)பி விப₂லே பு₃த்₃த்₄வா ஹரிம் த்வாம் முதா₃

த்₄யாயந்தம் சி₂தஸர்வதோ₃ஷமவதீ₄: ஸோ(அ)கா₃த் பரம் தே பத₃ம் || 8||


8. முன்னொரு சமயம், கார்த்தவீர்யார்ஜுனன், தன்னுடைய ஆயிரம் கைகளால் நர்மதையின் பிரவாகத்தைத் தடுத்து, ராவணனுடைய செருக்கை அடக்கினான். அப்படிப்பட்ட அவன், ஆயிரம் கைகளால் பிரயோகித்த ஆயுதங்களும், சக்ராயுதமும் உன்னிடத்தில் பயன்படாது போகவே, நீ ஸ்ரீ ஹரியென்று அறிந்து, தியானம் செய்தான். அதனால் பாபங்கள் அனைத்தும் நீங்கப் பெற்றான். பரசுராமரான நீ அவனை வதம் செய்ய, அவன் வைகுண்டத்தை அடைந்தான்.


भूयोऽमर्षितहेहयात्मजगणैस्ताते हते रेणुका-

माघ्नानां हृदयं निरीक्ष्य बहुशो घोरां प्रतिज्ञां वहन् ।

ध्यानानीतरथायुधस्त्वमकृथा विप्रद्रुह: क्षत्रियान्

दिक्चक्रेषु कुठारयन् विशिखयन् नि:क्षत्रियां मेदिनीम् ॥९॥


பூ₄யோ(அ)மர்ஷிதஹேஹயாத்மஜக₃ணைஸ்தாதே ஹதே ரேணுகா-

மாக்₄நாநாம் ஹ்ருத₃யம் நிரீக்ஷ்ய ப₃ஹுஶோ கோ₄ராம் ப்ரதிஜ்ஞாம் வஹந் |

த்₄யாநாநீதரதா₂யுத₄ஸ்த்வமக்ருதா₂ விப்ரத்₃ருஹ: க்ஷத்ரியாந்

தி₃க்சக்ரேஷு குடா₂ரயந் விஶிக₂யந் நி:க்ஷத்ரியாம் மேதி₃நீம் || 9||


9. அவனுடைய புத்திரர்கள் கோபம் கொண்டு, உன் தந்தையான ஜமதக்னியைக் கொன்றனர். உன் தாயான ரேணுகாதேவி, மார்பில் இருபத்தொரு முறை அடித்துக் கொண்டு அழுதாள். அதனால், நீ, இருபத்தொரு தடவை க்ஷத்ரியர்களை அழிக்க உறுதி பூண்டு, தியானத்தினால், ரதம், வில், அம்பு, கோடரி இவைகளைப் பெற்று அரசர்களைக் கொன்றாய். பூமியில் அரசர்கள் இல்லாதபடி செய்தாய்.


तातोज्जीवनकृन्नृपालककुलं त्रिस्सप्तकृत्वो जयन्

सन्तर्प्याथ समन्तपञ्चकमहारक्तहृदौघे पितृन्

यज्ञे क्ष्मामपि काश्यपादिषु दिशन् साल्वेन युध्यन् पुन:

कृष्णोऽमुं निहनिष्यतीति शमितो युद्धात् कुमारैर्भवान् ॥१०॥


தாதோஜ்ஜீவநக்ருந்ந்ருபாலககுலம் த்ரிஸ்ஸப்தக்ருத்வோ ஜயந்

ஸந்தர்ப்யாத₂ ஸமந்தபஞ்சகமஹாரக்தஹ்ருதௌ₃கே₄ பித்ருந்

யஜ்ஞே க்ஷ்மாமபி காஶ்யபாதி₃ஷு தி₃ஶந் ஸால்வேந யுத்₄யந் புந:

க்ருஷ்ணோ(அ)மும் நிஹநிஷ்யதீதி ஶமிதோ யுத்₃தா₄த் குமாரைர்ப₄வாந் || 10||


10. பிறகு, தந்தையை உயிர்ப்பித்தாய். இருபத்தொரு முறை க்ஷத்ரியர்களை அழித்தாய். ‘ஸமந்தபஞ்சகம்’ என்ற புண்ணிய பூமியில், ரத்த மடுவில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்தாய். யாகத்தில் காஸ்யபர் முதலிய முனிவர்களுக்கு நிலங்களைக் கொடுத்தாய். ஸால்வன் என்ற அரசனுடன் போர் புரிந்தாய். ஸனத்குமாரர்கள், ஸ்ரீ கிருஷ்ணன் இவர்களைக் கொல்லப் போகிறார் என்று சொல்லவே, போரை நிறுத்தினாய்.


न्यस्यास्त्राणि महेन्द्रभूभृति तपस्तन्वन् पुनर्मज्जितां

गोकर्णावधि सागरेण धरणीं दृष्ट्वार्थितस्तापसै: ।

ध्यातेष्वासधृतानलास्त्रचकितं सिन्धुं स्रुवक्षेपणा-

दुत्सार्योद्धृतकेरलो भृगुपते वातेश संरक्ष माम् ॥११॥


ந்யஸ்யாஸ்த்ராணி மஹேந்த்₃ரபூ₄ப்₄ருதி தபஸ்தந்வந் புநர்மஜ்ஜிதாம்

கோ₃கர்ணாவதி₄ ஸாக₃ரேண த₄ரணீம் த்₃ருஷ்ட்வார்தி₂தஸ்தாபஸை: |

த்₄யாதேஷ்வாஸத்₄ருதாநலாஸ்த்ரசகிதம் ஸிந்து₄ம் ஸ்ருவக்ஷேபணா-

து₃த்ஸார்யோத்₃த்₄ருதகேரலோ ப்₄ருகு₃பதே வாதேஶ ஸம்ரக்ஷ மாம் || 11||


11. மகேந்திர மலையில் ஆயுதங்களை வைத்து விட்டு தவம் செய்தாய். கோகர்ணம் என்ற இடம் வரையில் உள்ள நிலம் கடலில் மூழ்கியது. முனிவர்கள் உன்னைத் துதிக்க, தியானத்தால் வில்லில் ஆக்னேயாஸ்திரத்தைத் தொடுத்தாய். கடல் பயந்தது. யாக பாத்திரத்தை வீசி, சமுத்திரத்தை, அந்த பாத்திரம் விழுந்த இடம் வரை விலகச் செய்து, நிலத்தை உண்டாக்கினாய். அந்த நிலமான கேரளத்தைக் கடலில் மூழ்காமல் காப்பாற்றிநிய். என்னையும் காப்பாற்ற வேண்டும் என்று பட்டத்ரி கேட்க குருவாயூரப்பன் தலையை அசைத்து அங்கீகரித்தாராம்.


கிருஷ்ணாவதாரத்தின் காரணம்


सान्द्रानन्दतनो हरे ननु पुरा दैवासुरे सङ्गरे

त्वत्कृत्ता अपि कर्मशेषवशतो ये ते न याता गतिम् ।

तेषां भूतलजन्मनां दितिभुवां भारेण दूरार्दिता

भूमि: प्राप विरिञ्चमाश्रितपदं देवै: पुरैवागतै: ॥१॥


ஸாந்த்₃ராநந்த₃தநோ ஹரே நநு புரா தை₃வாஸுரே ஸங்க₃ரே

த்வத்க்ருத்தா அபி கர்மஶேஷவஶதோ யே தே ந யாதா க₃திம் |

தேஷாம் பூ₄தலஜந்மநாம் தி₃திபு₄வாம் பா₄ரேண தூ₃ரார்தி₃தா

பூ₄மி: ப்ராப விரிஞ்சமாஶ்ரிதபத₃ம் தே₃வை: புரைவாக₃தை: || 1||


1. ஆனந்த ரூபமானவனே! முன்பு தேவாசுர யுத்தத்தின் போது பல

அசுரர்களைக் கொன்றாய். பல அசுரர்கள் மோக்ஷமடைந்தனர். சிலர் கர்மவசத்தால் கம்ஸன் முதலிய அசுரர்களாகப் பிறந்தார்கள். அவர்களின் பாரத்தால் பூமாதேவி துன்பமடைந்து, தேவர்களுடன் பிரம்மனை அண்டினாள்.


हा हा दुर्जनभूरिभारमथितां पाथोनिधौ पातुका-

मेतां पालय हन्त मे विवशतां सम्पृच्छ देवानिमान् ।

इत्यादिप्रचुरप्रलापविवशामालोक्य धाता महीं

देवानां वदनानि वीक्ष्य परितो दध्यौ भवन्तं हरे ॥२॥


ஹா ஹா து₃ர்ஜநபூ₄ரிபா₄ரமதி₂தாம் பாதோ₂நிதௌ₄ பாதுகா-

மேதாம் பாலய ஹந்த மே விவஶதாம் ஸம்ப்ருச்ச₂ தே₃வாநிமாந் |

இத்யாதி₃ப்ரசுரப்ரலாபவிவஶாமாலோக்ய தா₄தா மஹீம்

தே₃வாநாம் வத₃நாநி வீக்ஷ்ய பரிதோ த₃த்₄யௌ ப₄வந்தம் ஹரே || 2||


2. “பிரம்மதேவனே! அசுரர்களின் பாரத்தால் நான் கடலில் மூழ்கிவிடும் நிலையில் உள்ளேன். என் நிலைமையை தேவர்களிடம் கேட்டு அறியவும்” என்று அழுத பூமாதேவியையும், தேவர்களையும் பார்த்த பிரமன் உன்னைத் தியானித்தார்.


ऊचे चाम्बुजभूरमूनयि सुरा: सत्यं धरित्र्या वचो

नन्वस्या भवतां च रक्षणविधौ दक्षो हि लक्ष्मीपति: ।

सर्वे शर्वपुरस्सरा वयमितो गत्वा पयोवारिधिं

नत्वा तं स्तुमहे जवादिति ययु: साकं तवाकेतनम् ॥३॥


ஊசே சாம்பு₃ஜபூ₄ரமூநயி ஸுரா: ஸத்யம் த₄ரித்ர்யா வசோ

நந்வஸ்யா ப₄வதாம் ச ரக்ஷணவிதௌ₄ த₃க்ஷோ ஹி லக்ஷ்மீபதி: |

ஸர்வே ஶர்வபுரஸ்ஸரா வயமிதோ க₃த்வா பயோவாரிதி₄ம்

நத்வா தம் ஸ்துமஹே ஜவாதி₃தி யயு: ஸாகம் தவாகேதநம் || 3||


3. “தேவர்களே! பூமாதேவி சொல்வது உண்மை என அறிந்தேன். உங்கள் அனைவரையும் காக்கும் சக்தி விஷ்ணுவுக்கே உள்ளது” என்று பிரம்மன் சொன்னார். நாம் அனைவரும் பாற்கடல் செல்வோம் என்று கூறி பரமசிவனுடன் பாற்கடலை அடைந்தனர்.


ते मुग्धानिलशालिदुग्धजलधेस्तीरं गता: सङ्गता

यावत्त्वत्पदचिन्तनैकमनसस्तावत् स पाथोजभू: ।

त्वद्वाचं हृदये निशम्य सकलानानन्दयन्नूचिवा-

नाख्यात: परमात्मना स्वयमहं वाक्यं तदाकर्ण्यताम् ॥४॥


தே முக்₃தா₄நிலஶாலிது₃க்₃த₄ஜலதே₄ஸ்தீரம் க₃தா: ஸங்க₃தா

யாவத்த்வத்பத₃சிந்தநைகமநஸஸ்தாவத் ஸ பாதோ₂ஜபூ₄: |

த்வத்₃வாசம் ஹ்ருத₃யே நிஶம்ய ஸகலாநாநந்த₃யந்நூசிவா-

நாக்₂யாத: பரமாத்மநா ஸ்வயமஹம் வாக்யம் ததா₃கர்ண்யதாம் || 4||


4. குளிர்ந்த காற்றுடன் இருக்கும் பாற்கடலின் கரையை அடைந்து, உன்னைத் தியானித்தனர். பிரம்மன் உம்முடைய சொற்களை உள்ளத்தில் கேட்டார். “ஸ்ரீமன் நாராயணன் கூறிய சொற்களைக் கூறுகிறேன், கேளுங்கள்” என்று ஆனந்தம் தரும் உன் சொற்களைக் கூறத் தொடங்கினார்.


जाने दीनदशामहं दिविषदां भूमेश्च भीमैर्नृपै-

स्तत्क्षेपाय भवामि यादवकुले सोऽहं समग्रात्मना ।

देवा वृष्णिकुले भवन्तु कलया देवाङ्गनाश्चावनौ

मत्सेवार्थमिति त्वदीयवचनं पाथोजभूरूचिवान् ॥५॥


ஜாநே தீ₃நத₃ஶாமஹம் தி₃விஷதா₃ம் பூ₄மேஶ்ச பீ₄மைர்ந்ருபை-

ஸ்தத்க்ஷேபாய ப₄வாமி யாத₃வகுலே ஸோ(அ)ஹம் ஸமக்₃ராத்மநா |

தே₃வா வ்ருஷ்ணிகுலே ப₄வந்து கலயா தே₃வாங்க₃நாஶ்சாவநௌ

மத்ஸேவார்த₂மிதி த்வதீ₃யவசநம் பாதோ₂ஜபூ₄ரூசிவாந் || 5||


5. “பூமாதேவிக்கும், தேவர்களுக்கும் அசுரர்களால் ஏற்படும் துன்பத்தை அறிவேன். அதைப் போக்க யாதவ குலத்தில் அவதரிக்கிறேன். தேவர்களும், தேவப்பெண்டிரும் என்னைப் பூஜிக்க பூமியில் பிறப்பார்கள்” என்று நீ கூறியதை பிரம்மன் கூறினார்.


श्रुत्वा कर्णरसायनं तव वच: सर्वेषु निर्वापित-

स्वान्तेष्वीश गतेषु तावककृपापीयूषतृप्तात्मसु ।

विख्याते मधुरापुरे किल भवत्सान्निध्यपुण्योत्तरे

धन्यां देवकनन्दनामुदवहद्राजा स शूरात्मज: ॥६॥


ஶ்ருத்வா கர்ணரஸாயநம் தவ வச: ஸர்வேஷு நிர்வாபித-

ஸ்வாந்தேஷ்வீஶ க₃தேஷு தாவகக்ருபாபீயூஷத்ருப்தாத்மஸு |

விக்₂யாதே மது₄ராபுரே கில ப₄வத்ஸாந்நித்₄யபுண்யோத்தரே

த₄ந்யாம் தே₃வகநந்த₃நாமுத₃வஹத்₃ராஜா ஸ ஶூராத்மஜ: || 6||


6. உன்னுடைய ஆனந்தம் தரும் சொற்களைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்து திரும்பிச் சென்றனர். உன் தொடர்பால் சிறந்த மதுரா நகரை ஆண்ட வசுதேவர் என்பவர் புண்ணியசாலியான தேவகியை மணந்தார்.


उद्वाहावसितौ तदीयसहज: कंसोऽथ सम्मानय-

न्नेतौ सूततया गत: पथि रथे व्योमोत्थया त्वद्गिरा ।

अस्यास्त्वामतिदुष्टमष्टमसुतो हन्तेति हन्तेरित:

सन्त्रासात् स तु हन्तुमन्तिकगतां तन्वीं कृपाणीमधात् ॥७॥


உத்₃வாஹாவஸிதௌ ததீ₃யஸஹஜ: கம்ஸோ(அ)த₂ ஸம்மாநய-

ந்நேதௌ ஸூததயா க₃த: பதி₂ ரதே₂ வ்யோமோத்த₂யா த்வத்₃கி₃ரா |

அஸ்யாஸ்த்வாமதிது₃ஷ்டமஷ்டமஸுதோ ஹந்தேதி ஹந்தேரித:

ஸந்த்ராஸாத் ஸ து ஹந்துமந்திகக₃தாம் தந்வீம் க்ருபாணீமதா₄த் || 7||


7. அவர்களைப் பெருமைப்படுத்த, தேவகியின் சகோதரனான கம்ஸன், அவர்களது ரதத்தைத் தானே ஓட்டிச் சென்றான். அப்போது, “ மூடனே! இவளுடைய எட்டாவது பிள்ளை உன்னைக் கொல்வான்” என்ற அசரீரி வாக்கு கேட்டது. பயந்த கம்ஸன், தேவகியைக் கொல்ல வாளை எடுத்தான்.


गृह्णानश्चिकुरेषु तां खलमति: शौरेश्चिरं सान्त्वनै-

र्नो मुञ्चन् पुनरात्मजार्पणगिरा प्रीतोऽथ यातो गृहान् ।

आद्यं त्वत्सहजं तथाऽर्पितमपि स्नेहेन नाहन्नसौ

दुष्टानामपि देव पुष्टकरुणा दृष्टा हि धीरेकदा ॥८॥


க்₃ருஹ்ணாநஶ்சிகுரேஷு தாம் க₂லமதி: ஶௌரேஶ்சிரம் ஸாந்த்வநை-

ர்நோ முஞ்சந் புநராத்மஜார்பணகி₃ரா ப்ரீதோ(அ)த₂ யாதோ க்₃ருஹாந் |

ஆத்₃யம் த்வத்ஸஹஜம் ததா₂(அ)ர்பிதமபி ஸ்நேஹேந நாஹந்நஸௌ

து₃ஷ்டாநாமபி தே₃வ புஷ்டகருணா த்₃ருஷ்டா ஹி தீ₄ரேகதா₃ || 8||

8. தேவகியின் கூந்தலைப் பற்றி இழுத்தான். வசுதேவர் சமாதானப் படுத்தி, தன் குழந்தைகளை அவனிடம் தந்து விடுவதாகச் சொன்னார். அதனால் அவளைக் கொல்லாமல் விட்டான். முதல் குழந்தையை வசுதேவர் கொடுத்தும், கம்ஸன் கருணையால் கொல்லவில்லை. துஷ்டர்களிடமும் சில சமயம் கருணை இருக்கிறது!


तावत्त्वन्मनसैव नारदमुनि: प्रोचे स भोजेश्वरं

यूयं नन्वसुरा: सुराश्च यदवो जानासि किं न प्रभो ।

मायावी स हरिर्भवद्वधकृते भावी सुरप्रार्थना-

दित्याकर्ण्य यदूनदूधुनदसौ शौरेश्च सूनूनहन् ॥९॥


தாவத்த்வந்மநஸைவ நாரத₃முநி: ப்ரோசே ஸ போ₄ஜேஶ்வரம்

யூயம் நந்வஸுரா: ஸுராஶ்ச யத₃வோ ஜாநாஸி கிம் ந ப்ரபோ₄ |

மாயாவீ ஸ ஹரிர்ப₄வத்₃வத₄க்ருதே பா₄வீ ஸுரப்ரார்த₂நா-

தி₃த்யாகர்ண்ய யதூ₃நதூ₃து₄நத₃ஸௌ ஶௌரேஶ்ச ஸூநூநஹந் || 9||


9. உன் ஏவுதலால் நாரதர் கம்ஸனிடம், “அரசனே! நீங்கள் அசுரர்கள். யாதவர்களோ தேவர்கள். இது நீ அறியாததா? மாயாவியான விஷ்ணு உன்னைக் கொல்ல அவதாரம் செய்யப் போகிறான்” என்று சொன்னார். அதைக் கேட்ட கம்ஸன், வசுதேவருடைய குழந்தைகளைக் கொன்றான். யாதவர்களையும் நகரத்தை விட்டு விரட்டினான்.


प्राप्ते सप्तमगर्भतामहिपतौ त्वत्प्रेरणान्मायया

नीते माधव रोहिणीं त्वमपि भो:सच्चित्सुखैकात्मक: ।

देवक्या जठरं विवेशिथ विभो संस्तूयमान: सुरै:

स त्वं कृष्ण विधूय रोगपटलीं भक्तिं परां देहि मे ॥१०॥


ப்ராப்தே ஸப்தமக₃ர்ப₄தாமஹிபதௌ த்வத்ப்ரேரணாந்மாயயா

நீதே மாத₄வ ரோஹிணீம் த்வமபி போ₄:ஸச்சித்ஸுகை₂காத்மக: |

தே₃வக்யா ஜட₂ரம் விவேஶித₂ விபோ₄ ஸம்ஸ்தூயமாந: ஸுரை:

ஸ த்வம் க்ருஷ்ண விதூ₄ய ரோக₃படலீம் ப₄க்திம் பராம் தே₃ஹி மே || 10||


10. குருவாயூரப்பா! உன்னுடைய சித்தப்படி, ஆதிசேஷன் தேவகியின் ஏழாவது கர்ப்பத்தை அடைந்தான். மாயையானவள் உன் கட்டளைப்படி அந்த கர்ப்பத்தை ரோகிணியிடம் கொண்டு சேர்த்தாள். நீயும் தேவகியின் கர்ப்பத்தை அடைந்தாய். அப்போது, தேவர்கள் உன்னைத் துதித்தனர். பெருமை நிரம்பிய கிருஷ்ணனான நீ என் நோய்களைப் போக்கி, என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.


க்ருஷ்ணாவதாரம்


आनन्दरूप भगवन्नयि तेऽवतारे

प्राप्ते प्रदीप्तभवदङ्गनिरीयमाणै: ।

कान्तिव्रजैरिव घनाघनमण्डलैर्द्या-

मावृण्वती विरुरुचे किल वर्षवेला ॥१॥


ஆநந்த₃ரூப ப₄க₃வந்நயி தே(அ)வதாரே

ப்ராப்தே ப்ரதீ₃ப்தப₄வத₃ங்க₃நிரீயமாணை: |

காந்திவ்ரஜைரிவ க₄நாக₄நமண்ட₃லைர்த்₃யா-

மாவ்ருண்வதீ விருருசே கில வர்ஷவேலா || 1||


1. ஆனந்த வடிவானவனே! நீ அவதரித்த பொழுது, வானம் மழைக்கால மேகங்களால் மூடியிருந்தது. உன் நீலநிற உடலில் இருந்து தோன்றிய ஒளியால் மூடியிருந்தது போல தோன்றியது.


आशासु शीतलतरासु पयोदतोयै-

राशासिताप्तिविवशेषु च सज्जनेषु ।

नैशाकरोदयविधौ निशि मध्यमायां

क्लेशापहस्त्रिजगतां त्वमिहाविरासी: ॥२॥


ஆஶாஸு ஶீதலதராஸு பயோத₃தோயை-

ராஶாஸிதாப்திவிவஶேஷு ச ஸஜ்ஜநேஷு |

நைஶாகரோத₃யவிதௌ₄ நிஶி மத்₄யமாயாம்

க்லேஶாபஹஸ்த்ரிஜக₃தாம் த்வமிஹாவிராஸீ: || 2||


2. மழை நீரால் அனைத்து திசைகளும் குளிர்ந்திருந்தது. வேண்டிய வரம் கிடைத்ததால் தேவர்கள் மகிழ்ச்சியுடன் இருந்தார்கள். அப்போது, நடு இரவில், சந்திரோதய வேளையில், மூவுலகங்களின் துன்பங்களையும் போக்குபவராகத் நீ அவதரித்தாய் அல்லவா?


बाल्यस्पृशाऽपि वपुषा दधुषा विभूती-

रुद्यत्किरीटकटकाङ्गदहारभासा ।

शङ्खारिवारिजगदापरिभासितेन

मेघासितेन परिलेसिथ सूतिगेहे ॥३॥


பா₃ல்யஸ்ப்ருஶா(அ)பி வபுஷா த₃து₄ஷா விபூ₄தீ-

ருத்₃யத்கிரீடகடகாங்க₃த₃ஹாரபா₄ஸா |

ஶங்கா₂ரிவாரிஜக₃தா₃பரிபா₄ஸிதேந

மேகா₄ஸிதேந பரிலேஸித₂ ஸூதிகே₃ஹே || 3||


3. குழந்தை ரூபத்தில் இருந்த உன் மேனியில், கிரீடம், கடகம், தோள்வளை, ஹாரம் ஆகியவற்றோடும், சங்கு, சக்கரம், தாமரை, கதை தரித்த கைகளுடனும் காட்சி அளித்தாய். உன் நீலமேனி இந்த எல்லாச் சின்னங்களையும் தரித்து, பிரசவ அறையில் விளங்கியது.


वक्ष:स्थलीसुखनिलीनविलासिलक्ष्मी-

मन्दाक्षलक्षितकटाक्षविमोक्षभेदै: ।

तन्मन्दिरस्य खलकंसकृतामलक्ष्मी-

मुन्मार्जयन्निव विरेजिथ वासुदेव ॥४॥


வக்ஷ:ஸ்த₂லீஸுக₂நிலீநவிலாஸிலக்ஷ்மீ-

மந்தா₃க்ஷலக்ஷிதகடாக்ஷவிமோக்ஷபே₄தை₃: |

தந்மந்தி₃ரஸ்ய க₂லகம்ஸக்ருதாமலக்ஷ்மீ-

முந்மார்ஜயந்நிவ விரேஜித₂ வாஸுதே₃வ || 4||


4. கம்ஸனுடைய அந்த அறை சோபையற்று இருந்தாலும், உன் மார்பில் நிரந்தரமாக வசிக்கும் மகாலக்ஷ்மியின் பார்வையால் அந்த அறை லக்ஷ்மிகரமாக விளங்கியது.


शौरिस्तु धीरमुनिमण्डलचेतसोऽपि

दूरस्थितं वपुरुदीक्ष्य निजेक्षणाभ्याम् ॥

आनन्दवाष्पपुलकोद्गमगद्गदार्द्र-

स्तुष्टाव दृष्टिमकरन्दरसं भवन्तम् ॥५॥


ஶௌரிஸ்து தீ₄ரமுநிமண்ட₃லசேதஸோ(அ)பி

தூ₃ரஸ்தி₂தம் வபுருதீ₃க்ஷ்ய நிஜேக்ஷணாப்₄யாம் ||

ஆநந்த₃வாஷ்பபுலகோத்₃க₃மக₃த்₃க₃தா₃ர்த்₃ர-

ஸ்துஷ்டாவ த்₃ருஷ்டிமகரந்த₃ரஸம் ப₄வந்தம் || 5||

5. ஞானிகளின் மனதிற்கும் எட்டாத, உன் திவ்யஸ்வரூபத்தை வசுதேவர் கண்களால் தரிசித்தார். மயிர்க்கூச்சலுடன், ஆனந்தக் கண்ணீர் வடித்து, உன்னைத் துதித்தார்.


देव प्रसीद परपूरुष तापवल्ली-

निर्लूनदात्रसमनेत्रकलाविलासिन् ।

खेदानपाकुरु कृपागुरुभि: कटाक्षै-

रित्यादि तेन मुदितेन चिरं नुतोऽभू: ॥६॥


தே₃வ ப்ரஸீத₃ பரபூருஷ தாபவல்லீ-

நிர்லூநதா₃த்ரஸமநேத்ரகலாவிலாஸிந் |

கே₂தா₃நபாகுரு க்ருபாகு₃ருபி₄: கடாக்ஷை-

ரித்யாதி₃ தேந முதி₃தேந சிரம் நுதோ(அ)பூ₄: || 6||


6. “தேவனே! துன்பங்களை அறுப்பவனே! மாயையினால் லீலைகளைச் செய்கிறவனே! உன் கடைக்கண் பார்வையால் என் துக்கங்களைப் போக்கி அனுக்ரஹிக்க வேண்டும்” என்று துதித்தார்.


मात्रा च नेत्रसलिलास्तृतगात्रवल्या

स्तोत्रैरभिष्टुतगुण: करुणालयस्त्वम् ।

प्राचीनजन्मयुगलं प्रतिबोध्य ताभ्यां

मातुर्गिरा दधिथ मानुषबालवेषम् ॥७॥


மாத்ரா ச நேத்ரஸலிலாஸ்த்ருதகா₃த்ரவல்யா

ஸ்தோத்ரைரபி₄ஷ்டுதகு₃ண: கருணாலயஸ்த்வம் |

ப்ராசீநஜந்மயுக₃லம் ப்ரதிபோ₃த்₄ய தாப்₄யாம்

மாதுர்கி₃ரா த₃தி₄த₂ மாநுஷபா₃லவேஷம் || 7||


7. கொடி போன்ற வடிவுடைய தாயான தேவகியின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் பெருகியது. உன்னைத் துதித்தாள். கருணை வடிவான நீ, அவர்கள் இருவருக்கும், அவர்களது முந்தைய இரண்டு ஜன்மங்களைப் பற்றிச் சொன்னாய். தாயின் வேண்டுகோளுக்கிணங்க மனித உரு எடுத்தாய்.


त्वत्प्रेरितस्तदनु नन्दतनूजया ते

व्यत्यासमारचयितुं स हि शूरसूनु: ।

त्वां हस्तयोरधृत चित्तविधार्यमार्यै-

रम्भोरुहस्थकलहंसकिशोररम्यम् ॥८॥


த்வத்ப்ரேரிதஸ்தத₃நு நந்த₃தநூஜயா தே

வ்யத்யாஸமாரசயிதும் ஸ ஹி ஶூரஸூநு: |

த்வாம் ஹஸ்தயோரத்₄ருத சித்தவிதா₄ர்யமார்யை-

ரம்போ₄ருஹஸ்த₂கலஹம்ஸகிஶோரரம்யம் || 8||


8. பிறகு, வசுதேவருக்கு, உன்னை நந்தகோபன் வீட்டில் விட்டுவிட்டு, அவரது பெண் குழந்தையை எடுத்துவரும்படி ஆணையிட்டாய். ஞானிகள் மனதில் இருப்பவரும், தாமரை மலரில் இருக்கும் அன்னக்குஞ்சு போல் அழகானவருமான உன்னை வசுதேவர் கையில் எடுத்துக் கொண்டார்.


जाता तदा पशुपसद्मनि योगनिद्रा ।

निद्राविमुद्रितमथाकृत पौरलोकम् ।

त्वत्प्रेरणात् किमिव चित्रमचेतनैर्यद्-

द्वारै: स्वयं व्यघटि सङ्घटितै: सुगाढम् ॥९॥


ஜாதா ததா₃ பஶுபஸத்₃மநி யோக₃நித்₃ரா |

நித்₃ராவிமுத்₃ரிதமதா₂க்ருத பௌரலோகம் |

த்வத்ப்ரேரணாத் கிமிவ சித்ரமசேதநைர்யத்₃-

த்₃வாரை: ஸ்வயம் வ்யக₄டி ஸங்க₄டிதை: ஸுகா₃ட₄ம் || 9||

9. பிறகு, உன் ஏவுதலால் யோகநித்ரை நந்தகோபர் வீட்டில் யசோதையிடத்தில் அவதரித்தாள். நகர மக்கள் அனைவரும் யோக மாயையினால் தூங்கினர். அறிவற்ற கதவுகள் கூட உன் கட்டளையால் தாமே திறந்து கொண்டனவாமே? ஆச்சர்யம்!


शेषेण भूरिफणवारितवारिणाऽथ

स्वैरं प्रदर्शितपथो मणिदीपितेन ।

त्वां धारयन् स खलु धन्यतम: प्रतस्थे

सोऽयं त्वमीश मम नाशय रोगवेगान् ॥१०॥


ஶேஷேண பூ₄ரிப₂ணவாரிதவாரிணா(அ)த₂

ஸ்வைரம் ப்ரத₃ர்ஶிதபதோ₂ மணிதீ₃பிதேந |

த்வாம் தா₄ரயந் ஸ க₂லு த₄ந்யதம: ப்ரதஸ்தே₂

ஸோ(அ)யம் த்வமீஶ மம நாஶய ரோக₃வேகா₃ந் || 10||


10. பாக்யசாலியான வசுதேவர், உன்னை கோகுலம் எடுத்துச் சென்றார். ஆதிசேஷன் தன் படங்களால் மழையைத் தடுத்துக் குடை பிடித்தான். அவன் தலைகளில் இருந்த ரத்னமணிகளின் ஒளியால் வழிகாட்டிக் கொண்டு வந்தானாமே? இப்படிப் பல பெருமைகள் வாய்ந்த நீ என் நோய்களைப் போக்க வேண்டும்.


யோகமாயா அவதாரம்

கண்ணன் பிறப்பும் கோகுலத்தில் மகிழ்ச்சியும்


भवन्तमयमुद्वहन् यदुकुलोद्वहो निस्सरन्

ददर्श गगनोच्चलज्जलभरां कलिन्दात्मजाम् ।

अहो सलिलसञ्चय: स पुनरैन्द्रजालोदितो

जलौघ इव तत्क्षणात् प्रपदमेयतामाययौ ॥१॥


ப₄வந்தமயமுத்₃வஹந் யது₃குலோத்₃வஹோ நிஸ்ஸரந்

த₃த₃ர்ஶ க₃க₃நோச்சலஜ்ஜலப₄ராம் கலிந்தா₃த்மஜாம் |

அஹோ ஸலிலஸஞ்சய: ஸ புநரைந்த்₃ரஜாலோதி₃தோ

ஜலௌக₄ இவ தத்க்ஷணாத் ப்ரபத₃மேயதாமாயயௌ || 1||

1. யதுகுலத்தில் தோன்றிய வசுதேவர் உன்னைக் கையில் எடுத்துச் செல்லும் போது, யமுனை உயர்ந்த அலைகளுடன் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. வசுதேவர் அருகே சென்றதும், மாயவித்தையைப் போல் வடிந்து கணுக்கால் அளவாக ஓடியது. ஆச்சர்யம்!


प्रसुप्तपशुपालिकां निभृतमारुदद्बालिका-

मपावृतकवाटिकां पशुपवाटिकामाविशन् ।

भवन्तमयमर्पयन् प्रसवतल्पके तत्पदा-

द्वहन् कपटकन्यकां स्वपुरमागतो वेगत: ॥२॥


ப்ரஸுப்தபஶுபாலிகாம் நிப்₄ருʼதமாருத₃த்₃பா₃லிகா-

மபாவ்ருதகவாடிகாம் பஶுபவாடிகாமாவிஶந் |

ப₄வந்தமயமர்பயந் ப்ரஸவதல்பகே தத்பதா₃-

த்₃வஹந் கபடகந்யகாம் ஸ்வபுரமாக₃தோ வேக₃த: || 2||


2. கோகுலத்தில் எல்லாரும் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். கதவுகள் திறந்திருந்தன. குழந்தை அழும் சத்தம் கேட்ட வீட்டிற்குள் வசுதேவர் சென்று, யசோதையின் அருகே உன்னைப் படுக்க வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்துக் கொண்டு வேகமாகத் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார்.


ततस्त्वदनुजारवक्षपितनिद्रवेगद्रवद्-

भटोत्करनिवेदितप्रसववार्तयैवार्तिमान् ।

विमुक्तचिकुरोत्करस्त्वरितमापतन् भोजरा-

डतुष्ट इव दृष्टवान् भगिनिकाकरे कन्यकाम् ॥३॥


ததஸ்த்வத₃நுஜாரவக்ஷபிதநித்₃ரவேக₃த்₃ரவத்₃-

ப₄டோத்கரநிவேதி₃தப்ரஸவவார்தயைவார்திமாந் |

விமுக்தசிகுரோத்கரஸ்த்வரிதமாபதந் போ₄ஜரா-

ட₃துஷ்ட இவ த்₃ருஷ்டவாந் ப₄கி₃நிகாகரே கந்யகாம் || 3||


3. குழந்தையின் அழுகுரல் கேட்டு காவற்காரர்கள் எழுந்தனர். அரசனிடம் சென்று தகவல் கூறினர். அவிழ்ந்த தலையுடன் கம்ஸன் விரைந்தோடி வந்தான். தேவகியின் கைகளில் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு சந்தோஷமடையவில்லை.


ध्रुवं कपटशालिनो मधुहरस्य माया भवे-

दसाविति किशोरिकां भगिनिकाकरालिङ्गिताम् ।

द्विपो नलिनिकान्तरादिव मृणालिकामाक्षिप-

न्नयं त्वदनुजामजामुपलपट्टके पिष्टवान् ॥४॥


த்₄ருவம் கபடஶாலிநோ மது₄ஹரஸ்ய மாயா ப₄வே-

த₃ஸாவிதி கிஶோரிகாம் ப₄கி₃நிகாகராலிங்கி₃தாம் |

த்₃விபோ நலிநிகாந்தராதி₃வ ம்ருணாலிகாமாக்ஷிப-

ந்நயம் த்வத₃நுஜாமஜாமுபலபட்டகே பிஷ்டவாந் || 4||


4. இது நாராயணனின் மாயை என்று நினத்த கம்ஸன், அந்தக் குழந்தையை, தேவகியின் கரத்திலிருந்து வலுவாக இழுத்து, கற்பாறையில் அடித்தான்.


तत: भवदुपासको झटिति मृत्युपाशादिव

प्रमुच्य तरसैव सा समधिरूढरूपान्तरा ।

अधस्तलमजग्मुषी विकसदष्टबाहुस्फुर-

न्महायुधमहो गता किल विहायसा दिद्युते ॥५॥


தத: ப₄வது₃பாஸகோ ஜ₂டிதி ம்ருத்யுபாஶாதி₃வ

ப்ரமுச்ய தரஸைவ ஸா ஸமதி₄ரூட₄ரூபாந்தரா |

அத₄ஸ்தலமஜக்₃முஷீ விகஸத₃ஷ்டபா₃ஹுஸ்பு₂ர-

ந்மஹாயுத₄மஹோ க₃தா கில விஹாயஸா தி₃த்₃யுதே || 5||


5. யமனுடைய பாசக்கயிற்றில் இருந்து விடுபடும் உன் பக்தர்கள் போல், அக்குழந்தை கம்ஸனுடைய கையிலிருந்து விடுபட்டு, வேறு உருவத்துடனும், ஆயுதம் ஏந்திய எட்டுக் கரங்களுடனும் வானில் பறந்து விளங்கினாள்.


नृशंसतर कंस ते किमु मया विनिष्पिष्टया

बभूव भवदन्तक: क्वचन चिन्त्यतां ते हितम् ।

इति त्वदनुजा विभो खलमुदीर्य तं जग्मुषी

मरुद्गणपणायिता भुवि च मन्दिराण्येयुषी ॥६॥


ந்ருஶம்ஸதர கம்ʼஸ தே கிமு மயா விநிஷ்பிஷ்டயா

ப₃பூ₄வ ப₄வத₃ந்தக: க்வசந சிந்த்யதாம் தே ஹிதம் |

இதி த்வத₃நுஜா விபோ₄ க₂லமுதீ₃ர்ய தம் ஜக்₃முஷீ

மருத்₃க₃ணபணாயிதா பு₄வி ச மந்தி₃ராண்யேயுஷீ || 6||

6. “கொடிய கம்ஸனே! உன்னைக் கொல்லப் பிறந்தவன் வேறு எங்கோ இருக்கிறான், அதை நீயே தேடி அறிந்து கொள்” என்று சொன்னாள். தேவர்கள் துதிக்க, பூவுலகில் உள்ள அனைத்து ஆலயங்களையும் அடைந்தாள்.


प्रगे पुनरगात्मजावचनमीरिता भूभुजा

प्रलम्बबकपूतनाप्रमुखदानवा मानिन: ।

भवन्निधनकाम्यया जगति बभ्रमुर्निर्भया:

कुमारकविमारका: किमिव दुष्करं निष्कृपै: ॥७॥


ப்ரகே₃ புநரகா₃த்மஜாவசநமீரிதா பூ₄பு₄ஜா

ப்ரலம்ப₃ப₃கபூதநாப்ரமுக₂தா₃நவா மாநிந: |

ப₄வந்நித₄நகாம்யயா ஜக₃தி ப₃ப்₄ரமுர்நிர்ப₄யா:

குமாரகவிமாரகா: கிமிவ து₃ஷ்கரம் நிஷ்க்ருபை: || 7||


7. மாயை கூறியவற்றை கம்ஸன் அசுரர்களுக்குச் சொன்னான். அதை கேட்ட பிரலம்பன், பகன், பூதனை முதலிய அசுரர்கள், உன்னை வதம் செய்ய வேண்டும் என்பதால், அனைத்து ஆண் குழந்தைகளையும் கொன்று பயமற்றுத் திரிந்தார்கள். கருணையில்லாதவர்களுக்கு, செய்யக் கூடாதது என்று எதுவும் இல்லை.


तत: पशुपमन्दिरे त्वयि मुकुन्द नन्दप्रिया-

प्रसूतिशयनेशये रुदति किञ्चिदञ्चत्पदे ।

विबुध्य वनिताजनैस्तनयसम्भवे घोषिते

मुदा किमु वदाम्यहो सकलमाकुलं गोकुलम् ॥८॥


தத: பஶுபமந்தி₃ரே த்வயி முகுந்த₃ நந்த₃ப்ரியா-

ப்ரஸூதிஶயநேஶயே ருத₃தி கிஞ்சித₃ஞ்சத்பதே₃ |

விபு₃த்₄ய வநிதாஜநைஸ்தநயஸம்ப₄வே கோ₄ஷிதே

முதா₃ கிமு வதா₃ம்யஹோ ஸகலமாகுலம் கோ₃குலம் || 8||


8. முகுந்தா! நீ, நந்தகோபன் வீட்டில் யசோதையின் பக்கத்தில் கால்களை அசைத்துக் கொண்டு அழுதாய். கண் விழித்த யசோதையும், கோபியர்களும் செய்தியை நந்தகோபனிடம் கூறினார்கள். கோகுலம் முழுவதும் ஆனந்தக் கடலில் மூழ்கியது.


अहो खलु यशोदया नवकलायचेतोहरं

भवन्तमलमन्तिके प्रथममापिबन्त्या दृशा ।

पुन: स्तनभरं निजं सपदि पाययन्त्या मुदा


मनोहरतनुस्पृशा जगति पुण्यवन्तो जिता: ॥९॥

அஹோ க₂லு யஶோத₃யா நவகலாயசேதோஹரம்

ப₄வந்தமலமந்திகே ப்ரத₂மமாபிப₃ந்த்யா த்₃ருஶா |

புந: ஸ்தநப₄ரம் நிஜம் ஸபதி₃ பாயயந்த்யா முதா₃

மநோஹரதநுஸ்ப்ருஶா ஜக₃தி புண்யவந்தோ ஜிதா: || 9||

9. காயாம்பூ போன்ற தங்கள் மேனியைக் கண்டு யசோதை மகிழ்ந்தாள். சந்தோஷத்துடன் உனக்குப் பாலூட்டினாள். தொட்டுப் பார்த்து ஆனந்தமடைந்தாள். இத்தகைய பேற்றைப் புண்ணியசாலிகளும் அடையவில்லை.


भवत्कुशलकाम्यया स खलु नन्दगोपस्तदा

प्रमोदभरसङ्कुलो द्विजकुलाय किन्नाददात् ।

तथैव पशुपालका: किमु न मङ्गलं तेनिरे

जगत्त्रितयमङ्गल त्वमिह पाहि मामामयात् ॥१०॥


ப₄வத்குஶலகாம்யயா ஸ க₂லு நந்த₃கோ₃பஸ்ததா₃

ப்ரமோத₃ப₄ரஸங்குலோ த்₃விஜகுலாய கிந்நாத₃தா₃த் |

ததை₂வ பஶுபாலகா: கிமு ந மங்க₃லம் தேநிரே

ஜக₃த்த்ரிதயமங்க₃ல த்வமிஹ பாஹி மாமாமயாத் || 10||


10. நந்தகோபனும் மிக்க மகிழ்ச்சி அடைந்து, அனைவருக்கும் தானங்கள் செய்தார். எல்லா இடையர்களும் மங்கள காரியங்கள் செய்தனர். இவ்வாறு மூவுலகங்களுக்கும் மங்களத்தை அளிக்கும் நீ என் வியாதிகளைப் போக்கிக் காக்க வேண்டும்.


பூதனை மோக்ஷம்


तदनु नन्दममन्दशुभास्पदं नृपपुरीं करदानकृते गतम्।

समवलोक्य जगाद भवत्पिता विदितकंससहायजनोद्यम: ॥१॥


தத₃நு நந்த₃மமந்த₃ஶுபா₄ஸ்பத₃ம் ந்ருபபுரீம் கரதா₃நக்ருதே க₃தம்|

ஸமவலோக்ய ஜகா₃த₃ ப₄வத்பிதா விதி₃தகம்ஸஸஹாயஜநோத்₃யம: || 1||


1. நந்தகோபன், கப்பம் கட்டுவதற்காக மதுரா நகரம் சென்றார். அசுரர்களின் முயற்சியை வசுதேவர் நந்தகோபனிடம் கூறினார்.


अयि सखे तव बालकजन्म मां सुखयतेऽद्य निजात्मजजन्मवत् ।

इति भवत्पितृतां व्रजनायके समधिरोप्य शशंस तमादरात् ॥२॥


அயி ஸகே₂ தவ பா₃லகஜந்ம மாம் ஸுக₂யதே(அ)த்₃ய நிஜாத்மஜஜந்மவத் |

இதி ப₄வத்பித்ருதாம் வ்ரஜநாயகே ஸமதி₄ரோப்ய ஶஶம்ஸ தமாத₃ராத் || 2||

2. “உனக்குப் பிள்ளை பிறந்ததைக் கேட்டு எனக்குப் பிறந்ததைப் போல மகிழ்ச்சி அடைகிறேன்” என்று வசுதேவர் அன்புடன் நந்தகோபனிடம் கூறினார்.


इह च सन्त्यनिमित्तशतानि ते कटकसीम्नि ततो लघु गम्यताम् ।

इति च तद्वचसा व्रजनायको भवदपायभिया द्रुतमाययौ ॥३॥


இஹ ச ஸந்த்யநிமித்தஶதாநி தே கடகஸீம்நி ததோ லகு₄ க₃ம்யதாம் |

இதி ச தத்₃வசஸா வ்ரஜநாயகோ ப₄வத₃பாயபி₄யா த்₃ருதமாயயௌ || 3||


3. மேலும், “சில கெட்ட சகுனங்கள் காணப்படுகிறது, ஆகையால் நீ விரைந்து கோகுலத்திற்குச் செல்வாய்” என்று கூறினார். நந்தகோபனும் உனக்கு ஆபத்து வருமோ என்று கவலை கொண்டு விரைந்து சென்றார்.


अवसरे खलु तत्र च काचन व्रजपदे मधुराकृतिरङ्गना ।

तरलषट्पदलालितकुन्तला कपटपोतक ते निकटं गता ॥४॥


அவஸரே க₂லு தத்ர ச காசந வ்ரஜபதே₃ மது₄ராக்ருதிரங்க₃நா |

தரலஷட்பத₃லாலிதகுந்தலா கபடபோதக தே நிகடம் க₃தா || 4||


4. கபடக் குழந்தை வேடம் பூண்டவனே! கோகுலத்தில், அழகிய பெண் ஒருத்தி, வண்டுகள் மொய்க்கும் கூந்தலுடன் உன் அருகே வந்தாள்.


सपदि सा हृतबालकचेतना निशिचरान्वयजा किल पूतना ।

व्रजवधूष्विह केयमिति क्षणं विमृशतीषु भवन्तमुपाददे ॥५॥


ஸபதி₃ ஸா ஹ்ருதபா₃லகசேதநா நிஶிசராந்வயஜா கில பூதநா |

வ்ரஜவதூ₄ஷ்விஹ கேயமிதி க்ஷணம் விம்ருஶதீஷு ப₄வந்தமுபாத₃தே₃ || 5||


5. எல்லாக் குழந்தைகளுடைய உள்ளத்தையும் கவரும் அவளைக் கண்டு கோபியர்கள் “இவள் யார்?” என்று யோசித்தனர். அவளும் உன்னைக் கையில் எடுத்தாள்.


ललितभावविलासहृतात्मभिर्युवतिभि: प्रतिरोद्धुमपारिता ।

स्तनमसौ भवनान्तनिषेदुषी प्रददुषी भवते कपटात्मने॥६॥


லலிதபா₄வவிலாஸஹ்ருதாத்மபி₄ர்யுவதிபி₄: ப்ரதிரோத்₃து₄மபாரிதா |

ஸ்தநமஸௌ ப₄வநாந்தநிஷேது₃ஷீ ப்ரத₃து₃ஷீ ப₄வதே கபடாத்மநே || 6||

6. தன் நடவடிக்கைகளால் அனைவரின் மனதையும் கவர்ந்தாள். வீட்டின் உள்ளே அமர்ந்து, உன்னை மார்போடு அணைத்து, உனக்குப் பாலூட்டினாள்.


समधिरुह्य तदङ्कमशङ्कितस्त्वमथ बालकलोपनरोषित: ।

महदिवाम्रफलं कुचमण्डलं प्रतिचुचूषिथ दुर्विषदूषितम् ॥७॥


ஸமதி₄ருஹ்ய தத₃ங்கமஶங்கிதஸ்த்வமத₂ பா₃லகலோபநரோஷித: |

மஹதி₃வாம்ரப₂லம் குசமண்ட₃லம் ப்ரதிசுசூஷித₂ து₃ர்விஷதூ₃ஷிதம் || 7||


7. குழந்தைகளைக் கொன்றதால் கோபமடைந்த நீ, பயமின்றி அவள் மடி மீது ஏறி விஷம் நிறைந்த அவளுடைய முலையில் வாய் வைத்து, பெரிய மாம்பழத்தை உறிஞ்சுவதுபோல் உறிஞ்சத் தொடங்கினாய்.


असुभिरेव समं धयति त्वयि स्तनमसौ स्तनितोपमनिस्वना ।

निरपतद्भयदायि निजं वपु: प्रतिगता प्रविसार्य भुजावुभौ ॥८॥


அஸுபி₄ரேவ ஸமம் த₄யதி த்வயி ஸ்தநமஸௌ ஸ்தநிதோபமநிஸ்வநா |

நிரபதத்₃ப₄யதா₃யி நிஜம் வபு: ப்ரதிக₃தா ப்ரவிஸார்ய பு₄ஜாவுபௌ₄ || 8||


8. பால் சாப்பிடுவது போல அவளுடைய உயிரையும் சேர்த்துக் குடித்தாய். அவள், இடி போலக் கூச்சலிட்டுக் கொண்டு, ராக்ஷஸ உருவத்துடன் இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு கீழே விழுந்தாள்.


भयदघोषणभीषणविग्रहश्रवणदर्शनमोहितवल्लवे ।

व्रजपदे तदुर:स्थलखेलनं ननु भवन्तमगृह्णत गोपिका: ।।९॥


ப₄யத₃கோ₄ஷணபீ₄ஷணவிக்₃ரஹஶ்ரவணத₃ர்ஶநமோஹிதவல்லவே |

வ்ரஜபதே₃ தது₃ர:ஸ்த₂லகே₂லநம் நநு ப₄வந்தமக்₃ருஹ்ணத கோ₃பிகா: || 9||


9. அக்குரலைக் கேட்ட அனைவரும் நடுங்கினர். உயிரற்ற அவள் மார்பின்மீது விளையாடிக் கொண்டிருந்த உன்னைக் கோபிகைகள் வாரி எடுத்துத் தூக்கினார்கள்.


भुवनमङ्गलनामभिरेव ते युवतिभिर्बहुधा कृतरक्षण: ।

त्वमयि वातनिकेतननाथ मामगदयन् कुरु तावकसेवकम् ॥१०॥


பு₄வநமங்க₃லநாமபி₄ரேவ தே யுவதிபி₄ர்ப₃ஹுதா₄ க்ருதரக்ஷண: |

த்வமயி வாதநிகேதநநாத₂ மாமக₃த₃யந் குரு தாவகஸேவகம் || 10||


10. மங்கலங்களைக் கொடுக்கும் உன் நாமங்களைக் கொண்டே அவர்கள் உனக்கு ரட்சை செய்தார்கள். குருவாயூரப்பா! நீ என் நோய்களைப் போக்கி, உன் பக்தனாக ஏற்க வேண்டும்.




198 views2 comments

Recent Posts

See All

2 Comments


ksrc1963
Jul 10

Dashakam 33 is given as 32. Upto Dashakam 36 it is like this. Please update.

Like

ksrc1963
Jul 10

Dashakam 32 is not available.

Like
bottom of page