top of page
Writer's pictureAnbezhil

ஸ்ரீமன் நாராயணீயம் தசகம் 1 -100 ஸ்லோகங்களும் பொருளும். பகுதி - 9 தசகம் 81 - 89

நரகாசுர வதம், பாரிஜாத ஹரணம்

स्निग्धां मुग्धां सततमपि तां लालयन् सत्यभामां

यातो भूय: सह खलु तया याज्ञसेनीविवाहम् ।

पार्थप्रीत्यै पुनरपि मनागास्थितो हस्तिपुर्यां

सशक्रप्रस्थं पुरमपि विभो संविधायागतोऽभू: ॥१॥


ஸ்நிக்₃தா₄ம் முக்₃தா₄ம் ஸததமபி தாம் லாலயந் ஸத்யபா₄மாம்

யாதோ பூ₄ய: ஸஹ க₂லு தயா யாஜ்ஞஸேநீவிவாஹம் |

பார்த₂ப்ரீத்யை புநரபி மநாகா₃ஸ்தி₂தோ ஹஸ்திபுர்யாம்

ஸஶக்ரப்ரஸ்த₂ம் புரமபி விபோ₄ ஸம்விதா₄யாக₃தோ(அ)பூ₄: || 1||


1. அன்புடைய, அழகிய ஸத்யபாமாவை மிகுந்த சந்தோஷமடையச் செய்தாய். ஸத்யபாமாவுடன் திரௌபதியின் திருமணத்திற்காக ஹஸ்தினாபுரம் சென்றாய். பாண்டவர்களை மகிழ்விக்க அங்கேயே சில தினங்கள் தங்கினாய். விஸ்வாகர்மாவைக் கொண்டு இந்திரப்பிரஸ்தம் என்ற நகரத்தை உருவாக்கி, பின் துவாரகைக்குத் திரும்பினாய்.


भद्रां भद्रां भवदवरजां कौरवेणार्थ्यमानां

त्वद्वाचा तामहृत कुहनामस्करी शक्रसूनु: ।

तत्र क्रुद्धं बलमनुनयन् प्रत्यगास्तेन सार्धं

शक्रप्रस्थं प्रियसखमुदे सत्यभामासहाय: ॥२॥


ப₄த்₃ராம் ப₄த்₃ராம் ப₄வத₃வரஜாம் கௌரவேணார்த்₂யமாநாம்

த்வத்₃வாசா தாமஹ்ருத குஹநாமஸ்கரீ ஶக்ரஸூநு: |

தத்ர க்ருத்₃த₄ம் ப₃லமநுநயந் ப்ரத்யகா₃ஸ்தேந ஸார்த₄ம்

ஶக்ரப்ரஸ்த₂ம் ப்ரியஸக₂முதே₃ ஸத்யபா₄மாஸஹாய: || 2||


2. உன் சகோதரியான சுபத்திரையை துரியோதனன் மணந்து கொள்ள விரும்பினான். உன் ஆலோசனைப்படி, அர்ஜுனன் ஸன்யாசி வேடமிட்டு அவளைக் கவர்ந்து சென்றான். அதனால் பலராமன் மிகவும் கோபமடைந்தார். அவரை சமாதானம் செய்தாய். பின்னர், உன் நண்பனான அர்ஜுனனின் சந்தோஷத்திற்காக, பலராமனுடனும், ஸத்யபாமாவுடனும் இந்திரப்பிரஸ்தம் சென்றாய்.


तत्र क्रीडन्नपि च यमुनाकूलदृष्टां गृहीत्वा

तां कालिन्दीं नगरमगम: खाण्डवप्रीणिताग्नि: ।

भ्रातृत्रस्तां प्रणयविवशां देव पैतृष्वसेयीं

राज्ञां मध्ये सपदि जहृषे मित्रविन्दामवन्तीम् ॥३॥


தத்ர க்ரீட₃ந்நபி ச யமுநாகூலத்₃ருஷ்டாம் க்₃ருஹீத்வா

தாம் காலிந்தீ₃ம் நக₃ரமக₃ம: கா₂ண்ட₃வப்ரீணிதாக்₃நி: |

ப்₄ராத்ருத்ரஸ்தாம் ப்ரணயவிவஶாம் தே₃வ பைத்ருஷ்வஸேயீம்

ராஜ்ஞாம் மத்₄யே ஸபதி₃ ஜஹ்ருஷே மித்ரவிந்தா₃மவந்தீம் || 3||


3. யமுனைக்கரையில் கண்ட காளிந்தீயை மனைவியாக ஏற்றுக் கொண்டாய். காண்டவ வனத்தை அக்னிக்கு உணவாக அளித்துவிட்டு, துவாரகைக்குத் திரும்பினாய். உன் அத்தையின் பெண்ணும், அவந்தி தேசத்து இளவரசியுமான மித்ரவிந்தை, உன்னிடம் காதல் கொண்டாள். அவள் தனது சகோதரர்களிடத்தில் பயந்து கதியற்று இருந்தாள். அவளைப் பல அரசர்கள் முன்னிலையில் கவர்ந்து சென்றாய்.


सत्यां गत्वा पुनरुदवहो नग्नजिन्नन्दनां तां

बध्वा सप्तापि च वृषवरान् सप्तमूर्तिर्निमेषात् ।

भद्रां नाम प्रददुरथ ते देव सन्तर्दनाद्या-

स्तत्सोदर्या वरद भवत: साऽपि पैतृष्वसेयी ॥४॥


ஸத்யாம் க₃த்வா புநருத₃வஹோ நக்₃நஜிந்நந்த₃நாம் தாம்

ப₃த்₄வா ஸப்தாபி ச வ்ருஷவராந் ஸப்தமூர்திர்நிமேஷாத் |

ப₄த்₃ராம் நாம ப்ரத₃து₃ரத₂ தே தே₃வ ஸந்தர்த₃நாத்₃யா-

ஸ்தத்ஸோத₃ர்யா வரத₃ ப₄வத: ஸா(அ)பி பைத்ருஷ்வஸேயீ || 4||


4. கோசல தேசத்து அரசன் நக்னஜித்தின் பெண்ணான ஸத்யை என்பவளை மணப்பதற்காக, ஏழு காளைகளை ஏழு உருவம் எடுத்து அடக்கி, பின்னர் அவளை மணந்து கொண்டாய். வரதனே! பத்ரை என்பவளை, அவளது சகோதரன் ஸந்தர்தனனும், மற்றவர்களும் உனக்கு மணம் செய்து கொடுத்தனர். அவளும் உன் அத்தை அருத்கீர்த்தியின் பெண்தான்.


पार्थाद्यैरप्यकृतलवनं तोयमात्राभिलक्ष्यं

लक्षं छित्वा शफरमवृथा लक्ष्मणां मद्रकन्याम् ।

अष्टावेवं तव समभवन् वल्लभास्तत्र मध्ये

शुश्रोथ त्वं सुरपतिगिरा भौमदुश्चेष्टितानि ॥५॥


பார்தா₂த்₃யைரப்யக்ருதலவநம் தோயமாத்ராபி₄லக்ஷ்யம்

லக்ஷம் சி₂த்வா ஶப₂ரமவ்ருதா₂ லக்ஷ்மணாம் மத்₃ரகந்யாம் |

அஷ்டாவேவம் தவ ஸமப₄வந் வல்லபா₄ஸ்தத்ர மத்₄யே

ஶுஶ்ரோத₂ த்வம் ஸுரபதிகி₃ரா பௌ₄மது₃ஶ்சேஷ்டிதாநி || 5||


5. அர்ஜுனன் முதலியவர்களால் கூட அடிக்க முடியாத, தண்ணீரில் மட்டுமே பிரதிபலிக்கும் மீன்குறியை அடித்து, மத்ர அரசனின் மகளான லக்ஷ்மணை என்பவளை மனைவியாக அடைந்தாய். இப்போது உனக்கு எட்டு மனைவிகள் இருந்தார்கள். நரகாசுரன் என்ற அசுரன் உலகைக் கொடுமைப்படுத்துவதாக இந்திரன் கூறக் கேட்டாய்.


स्मृतायातं पक्षिप्रवरमधिरूढस्त्वमगमो

वहन्नङ्के भामामुपवनमिवारातिभवनम् ।

विभिन्दन् दुर्गाणि त्रुटितपृतनाशोणितरसै:

पुरं तावत् प्राग्ज्योतिषमकुरुथा: शोणितपुरम् ॥६॥


ஸ்ம்ருதாயாதம் பக்ஷிப்ரவரமதி₄ரூட₄ஸ்த்வமக₃மோ

வஹந்நங்கே பா₄மாமுபவநமிவாராதிப₄வநம் |

விபி₄ந்த₃ந் து₃ர்கா₃ணி த்ருடிதப்ருதநாஶோணிதரஸை:

புரம் தாவத் ப்ராக்₃ஜ்யோதிஷமகுருதா₂: ஶோணிதபுரம் || 6||


6. நீ நினைத்த மாத்திரத்தில் தங்கள் வாகனமான கருடன் பறந்து வந்தது. அதன் மீது ஏறி, ஸத்யபாமாவை மடியில் வைத்துக் கொண்டாய். பூந்தோட்டத்திற்குச் செல்வது போல் எதிரியான நரகாசுரனின் நகரத்திற்குச் சென்றாய். அந்நகரின் கோட்டைகளை இடித்துத் தரைமட்டமாக்கி, சேனைகளை அழித்தாய். பெருகிய ரத்தத்தால் ப்ராக்ஜ்யோதிஷம் என்ற அந்த நகரை, சோணிதபுரம், அதாவது ரத்தம் நிறைந்த நகரமாக மாற்றினாய்.


मुरस्त्वां पञ्चास्यो जलधिवनमध्यादुदपतत्

स चक्रे चक्रेण प्रदलितशिरा मङ्क्षु भवता ।

चतुर्दन्तैर्दन्तावलपतिभिरिन्धानसमरं

रथाङ्गेन छित्वा नरकमकरोस्तीर्णनरकम् ॥७॥


முரஸ்த்வாம் பஞ்சாஸ்யோ ஜலதி₄வநமத்₄யாது₃த₃பதத்

ஸ சக்ரே சக்ரேண ப்ரத₃லிதஶிரா மங்க்ஷு ப₄வதா |

சதுர்த₃ந்தைர்த₃ந்தாவலபதிபி₄ரிந்தா₄நஸமரம்

ரதா₂ங்கே₃ந சி₂த்வா நரகமகரோஸ்தீர்ணநரகம் || 7||

7. ஐந்து முகங்களைக் கொண்ட முரன் என்ற அசுரன், கடலைப் போன்ற பெரிய மடுவிலிருந்து உன்னை எதிர்த்துப் போரிட வந்தான். உன் சக்ராயுதத்தால் அவன் தலையை வெட்டி வீழ்த்தினாய். பிறகு, நரகாசுரன், நான்கு தந்தங்களையுடைய யானைகளுடன் போர் புரிய வந்தான். நீண்ட யுத்தத்திற்குப் பின்னர், அவனுடைய தலையை சக்ராயுதத்தால் வெட்டி, அவனை நரகத்தைத் தாண்டியவனாகச் செய்து மோக்ஷம் அளித்தாய்.


स्तुतो भूम्या राज्यं सपदि भगदत्तेऽस्य तनये

गजञ्चैकं दत्वा प्रजिघयिथ नागान्निजपुरीम् ।

खलेनाबद्धानां स्वगतमनसां षोडश पुन:

सहस्राणि स्त्रीणामपि च धनराशिं च विपुलं ॥८॥


ஸ்துதோ பூ₄ம்யா ராஜ்யம் ஸபதி₃ ப₄க₃த₃த்தே(அ)ஸ்ய தநயே

க₃ஜஞ்சைகம் த₃த்வா ப்ரஜிக₄யித₂ நாகா₃ந்நிஜபுரீம் |

க₂லேநாப₃த்₃தா₄நாம் ஸ்வக₃தமநஸாம் ஷோட₃ஶ புந:

ஸஹஸ்ராணி ஸ்த்ரீணாமபி ச த₄நராஶிம் ச விபுலம் || 8||


8. நரகாசுரனின் தாயான பூமாதேவி உன்னைத் துதித்தாள். அவனுடைய பிள்ளையான பகதத்தன் என்பவனுக்கு ராஜ்ஜியத்தையும், ஒரு யானையையும் அளித்தாய். மற்ற யானைகளையும், நரகாசுரனால் சிறைப்படுத்தப்பட்ட உன் மீது அன்புகொண்ட பதினாறாயிரம் பெண்களையும், அளவற்ற செல்வங்களையும், உன் நகரமான துவாரகைக்கு அனுப்பினாய்.


भौमापाहृतकुण्डलं तददितेर्दातुं प्रयातो दिवं

शक्राद्यैर्महित: समं दयितया द्युस्त्रीषु दत्तह्रिया ।

हृत्वा कल्पतरुं रुषाभिपतितं जित्वेन्द्रमभ्यागम-

स्तत्तु श्रीमददोष ईदृश इति व्याख्यातुमेवाकृथा: ॥९॥


பௌ₄மாபாஹ்ருதகுண்ட₃லம் தத₃தி₃தேர்தா₃தும் ப்ரயாதோ தி₃வம்

ஶக்ராத்₃யைர்மஹித: ஸமம் த₃யிதயா த்₃யுஸ்த்ரீஷு த₃த்தஹ்ரியா |

ஹ்ருத்வா கல்பதரும் ருஷாபி₄பதிதம் ஜித்வேந்த்₃ரமப்₄யாக₃ம-

ஸ்தத்து ஶ்ரீமத₃தோ₃ஷ ஈத்₃ருஶ இதி வ்யாக்₂யாதுமேவாக்ருதா₂: || 9||


9. இந்திரனின் தாயான அதிதியிடமிருந்து நரகாசுரன் கவர்ந்து சென்ற குண்டலங்களைப் பெற்று, அதை அதிதியிடம் கொடுப்பதற்காக, ஸத்யபாமாவுடன் தேவலோகம் சென்றாய். தன் அழகால் தேவப் பெண்களையும் வெட்கப்படச் செய்யும் ஸத்யபாமாவுடன் வந்த உன்னை இந்திரனும், தேவர்களும் வரவேற்றுப் பூஜித்தார்கள். ஸத்யபாமா விரும்பியதால், கல்பவ்ருக்ஷமான பாரிஜாத விருக்ஷத்தை எடுத்துச் சென்ற உன்னை இந்திரன் எதிர்த்தான். அவனை வென்று உன் இருப்பிடம் அடைந்தாய். செல்வங்களின் மேல் உள்ள ஆசையால் தீய எண்ணம் உண்டாகும் என்பதை உலகிற்கு விளக்கவே இவ்வாறு செய்தாய்.


कल्पद्रुं सत्यभामाभवनभुवि सृजन् द्व्यष्टसाहस्रयोषा:

स्वीकृत्य प्रत्यगारं विहितबहुवपुर्लालयन् केलिभेदै: ।

आश्चर्यान्नारदालोकितविविधगतिस्तत्र तत्रापि गेहे

भूय: सर्वासु कुर्वन् दश दश तनयान् पाहि वातालयेश ॥१०॥


கல்பத்₃ரும் ஸத்யபா₄மாப₄வநபு₄வி ஸ்ருஜந் த்₃வ்யஷ்டஸாஹஸ்ரயோஷா:

ஸ்வீக்ருத்ய ப்ரத்யகா₃ரம் விஹிதப₃ஹுவபுர்லாலயந் கேலிபே₄தை₃: |

ஆஶ்சர்யாந்நாரதா₃லோகிதவிவித₄க₃திஸ்தத்ர தத்ராபி கே₃ஹே

பூ₄ய: ஸர்வாஸு குர்வந் த₃ஶ த₃ஶ தநயாந் பாஹி வாதாலயேஶ || 10||


10. கல்பவ்ருக்ஷத்தை ஸத்யபாமாவின் தோட்டத்தில் நட்டாய். உன் மீது அன்பு கொண்ட பதினாறாயிரம் பெண்களை மனைவியராக ஏற்று, தனித் தனியே வசிக்கச் செய்து, நீயும் பதினாறாயிரம் உருவங்கள் எடுத்துக் கொண்டு அவர்கள் அனைவரையும் ஆனந்தமடையச் செய்தாய். நீ ஒவ்வொரு வீட்டிலும், ஒரே நேரத்தில் தோன்றி, பூஜை முதலிய கர்மாக்களைச் செய்து கொண்டிருப்பதைக் கண்ட நாரதர் ஆச்சர்யம் அடைந்தார். அவர்கள் ஒவ்வொருவருக்கும் பத்துக் குழந்தைகள் பிறந்தன. குருவாயூரப்பனே! நீ என்னைக் காக்க வேண்டும்.



பாணாசுர யுத்தம், ந்ருக மோக்ஷம்

प्रद्युम्नो रौक्मिणेय: स खलु तव कला शम्बरेणाहृतस्तं

हत्वा रत्या सहाप्तो निजपुरमहरद्रुक्मिकन्यां च धन्याम् ।

तत्पुत्रोऽथानिरुद्धो गुणनिधिरवहद्रोचनां रुक्मिपौत्रीं

तत्रोद्वाहे गतस्त्वं न्यवधि मुसलिना रुक्म्यपि द्यूतवैरात् ॥१॥


ப்ரத்₃யும்நோ ரௌக்மிணேய: ஸ க₂லு தவ கலா ஶம்ப₃ரேணாஹ்ருதஸ்தம்

ஹத்வா ரத்யா ஸஹாப்தோ நிஜபுரமஹரத்₃ருக்மிகந்யாம் ச த₄ந்யாம் |

தத்புத்ரோ(அ)தா₂நிருத்₃தோ₄ கு₃ணநிதி₄ரவஹத்₃ரோசநாம் ருக்மிபௌத்ரீம்

தத்ரோத்₃வாஹே க₃தஸ்த்வம் ந்யவதி₄ முஸலிநா ருக்ம்யபி த்₃யூதவைராத் || 1||


1. ருக்மிணியின் மகன் ப்ரத்யும்னன் உன் அம்சம். ப்ரத்யும்னன் பிறந்ததும், அவனை சம்பரன் என்ற அசுரன் கடத்திச் சென்றான். ப்ரத்யும்னன் வளர்ந்த பிறகு, சம்பரனைக் கொன்று, தன் மனைவி ரதியுடன் துவாரகைக்குத் திரும்பினான். தன் மாமன் மகளும், குணவதியுமான ருக்மவதியைக் கவர்ந்து மணம் செய்து கொண்டான். ப்ரத்யும்னனின் பிள்ளை அநிருத்தன் நற்குணங்கள் நிரம்பியவனாய் இருந்தான். அநிருத்தன், ருக்மியின் பேத்தியான ரோசனையை மணந்து கொண்டான். நீயும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தாய். அந்தத் திருமணத்தில் சூதாட்டத்தின் போது நடந்த சண்டையில் பலராமர் ருக்மியைக் கொன்றார்.


बाणस्य सा बलिसुतस्य सहस्रबाहो-

र्माहेश्वरस्य महिता दुहिता किलोषा ।

त्वत्पौत्रमेनमनिरुद्धमदृष्टपूर्वं

स्वप्नेऽनुभूय भगवन् विरहातुराऽभूत् ॥२॥


பா₃ணஸ்ய ஸா ப₃லிஸுதஸ்ய ஸஹஸ்ரபா₃ஹோ-

ர்மாஹேஶ்வரஸ்ய மஹிதா து₃ஹிதா கிலோஷா |

த்வத்பௌத்ரமேநமநிருத்₃த₄மத்₃ருஷ்டபூர்வம்

ஸ்வப்நே(அ)நுபூ₄ய ப₄க₃வந் விரஹாதுரா(அ)பூ₄த் || 2||


2. மகாபலியின் மகன் பாணாசுரன், சிறந்த சிவபக்தன். அவனுக்கு ஆயிரம் கைகள். அவனுடைய பெண் உஷை. அவள் உன் பேரனான அநிருத்தனை நேரில் கண்டதில்லை. ஆயினும், அவன் மீது காதல் கொண்டாள். அவனைக் கனவில் கண்டு, விழித்ததும் காணாமல் துயரம் அடைந்தாள்.


योगिन्यतीव कुशला खलु चित्रलेखा

तस्या: सखी विलिखती तरुणानशेषान् ।

तत्रानिरुद्धमुषया विदितं निशाया-

मानेष्ट योगबलतो भवतो निकेतात् ॥३॥


யோகி₃ந்யதீவ குஶலா க₂லு சித்ரலேகா₂

தஸ்யா: ஸகீ₂ விலிக₂தீ தருணாநஶேஷாந் |

தத்ராநிருத்₃த₄முஷயா விதி₃தம் நிஶாயா-

மாநேஷ்ட யோக₃ப₃லதோ ப₄வதோ நிகேதாத் || 3||


3. அவளுடைய தோழி சித்ரலேகா என்பவள், யோகத்திலும், சித்திரம் வரைவதிலும் தேர்ச்சி பெற்றவள். அவள் பல இளைஞர்களின் ஓவியங்களை வரைந்தாள். அநிருத்தனை சித்திரமாக வரைந்ததும், உஷை அடையாளம் கண்டு கொண்டாள். சித்ரலேகா, தனது யோக சக்தியால், அன்றிரவே அநிருத்தனை உன் அரண்மனையிலிருந்து அழைத்துச் சென்றாள்.


कन्यापुरे दयितया सुखमारमन्तं

चैनं कथञ्चन बबन्धुषि शर्वबन्धौ ।

श्रीनारदोक्ततदुदन्तदुरन्तरोषै-

स्त्वं तस्य शोणितपुरं यदुभिर्न्यरुन्धा: ॥४॥


கந்யாபுரே த₃யிதயா ஸுக₂மாரமந்தம்

சைநம் கத₂ஞ்சந ப₃ப₃ந்து₄ஷி ஶர்வப₃ந்தௌ₄ |

ஶ்ரீநாரதோ₃க்ததது₃த₃ந்தது₃ரந்தரோஷை-

ஸ்த்வம் தஸ்ய ஶோணிதபுரம் யது₃பி₄ர்ந்யருந்தா₄: || 4||


4. அநிருத்தன் உஷையோடு அந்தப்புரத்தில் சுகமாய் வாழ்ந்து வந்தான். அவனை, பாணாசுரன் கயிற்றால் கட்டிச் சிறையிலிட்டான். நாரதர் மூலம் அச்செய்தியை அறிந்த நீ, மிகுந்த கோபத்துடன், யாதவர்களோடு சென்று, பாணாசுரனின் சோணிதபுரத்தை முற்றுகையிட்டாய்.


पुरीपालश्शैलप्रियदुहितृनाथोऽस्य भगवान्

समं भूतव्रातैर्यदुबलमशङ्कं निरुरुधे ।

महाप्राणो बाणो झटिति युयुधानेनयुयुधे

गुह: प्रद्युम्नेन त्वमपि पुरहन्त्रा जघटिषे ॥५॥


புரீபாலஶ்ஶைலப்ரியது₃ஹித்ருநாதோ₂(அ)ஸ்ய ப₄க₃வாந்

ஸமம் பூ₄தவ்ராதைர்யது₃ப₃லமஶங்கம் நிருருதே₄ |

மஹாப்ராணோ பா₃ணோ ஜ₂டிதி யுயுதா₄நேநயுயுதே₄

கு₃ஹ: ப்ரத்₃யும்நேந த்வமபி புரஹந்த்ரா ஜக₄டிஷே || 5||


5. பாணாசுரனின் நகரத்தை மலைமகளின் கணவரான பரமசிவன் பாதுகாத்து வந்தார். அவர், பூதகணங்களோடு யாதவப் படைகளை பயமில்லாமல் தடுத்தார். பாணாசுரன் யுயுதானனோடும், குகன் ப்ரத்யும்னனோடும், நீ சிவபெருமானோடும் யுத்தம் செய்தாய்.


निरुद्धाशेषास्त्रे मुमुहुषि तवास्त्रेण गिरिशे

द्रुता भूता भीता: प्रमथकुलवीरा: प्रमथिता: ।

परास्कन्द्त् स्कन्द: कुसुमशरबाणैश्च सचिव:

स कुम्भाण्डो भाण्डं नवमिव बलेनाशु बिभिदे ॥६॥


நிருத்₃தா₄ஶேஷாஸ்த்ரே முமுஹுஷி தவாஸ்த்ரேண கி₃ரிஶே

த்₃ருதா பூ₄தா பீ₄தா: ப்ரமத₂குலவீரா: ப்ரமதி₂தா: |

பராஸ்கந்த்₃த் ஸ்கந்த₃: குஸுமஶரபா₃ணைஶ்ச ஸசிவ:

ஸ கும்பா₄ண்டோ₃ பா₄ண்ட₃ம் நவமிவ ப₃லேநாஶு பி₃பி₄தே₃ || 6||


6. சிவனின் எல்லா பாணங்களையும் தடுத்த நீ, மோகனாஸ்திரத்தைத் தொடுத்து அவரை மயங்கச் செய்தாய். அதைக் கண்ட பூதகணங்கள் பயந்து ஓடின. குகனும் ப்ரத்யும்னன் எறிந்த மன்மத அம்பால் தோல்வியடைந்தார். கும்பாண்டன் என்ற பாணாசுரனின் மந்திரியை, பலராமர் அடித்துக் கொன்றார்.


चापानां पञ्चशत्या प्रसभमुपगते छिन्नचापेऽथ बाणे

व्यर्थे याते समेतो ज्वरपतिरशनैरज्वरि त्वज्ज्वरेण ।

ज्ञानी स्तुत्वाऽथ दत्वा तव चरितजुषां विज्वरं स ज्वरोऽगात्

प्रायोऽन्तर्ज्ञानवन्तोऽपि च बहुतमसा रौद्रचेष्टा हि रौद्रा: ॥७॥


இந்த ஸ்லோகத்தைப் படிப்பதால் ஜ்வரபீடை நீங்கும்.


சாபாநாம் பஞ்சஶத்யா ப்ரஸப₄முபக₃தே சி₂ந்நசாபே(அ)த₂ பா₃ணே

வ்யர்தே₂ யாதே ஸமேதோ ஜ்வரபதிரஶநைரஜ்வரி த்வஜ்ஜ்வரேண |

ஜ்ஞாநீ ஸ்துத்வா(அ)த₂ த₃த்வா தவ சரிதஜுஷாம் விஜ்வரம் ஸ ஜ்வரோ(அ)கா₃த்

ப்ராயோ(அ)ந்தர்ஜ்ஞாநவந்தோ(அ)பி ச ப₃ஹுதமஸா ரௌத்₃ரசேஷ்டா ஹி ரௌத்₃ரா: || 7||


7. பாணாசுரன் தன் ஆயிரம் கைகளிலும் ஐந்நூறு விற்களையும் அம்புகளையும் எடுத்துக் கொண்டு போருக்கு வந்தான். நீ அவனுடைய ஆயுதங்கள் யாவற்றையும் நொறுக்கினாய். அதனால் அவன் பின்வாங்கித் திரும்பினான். சைவ ஜ்வரம் முன்னே வந்தது. வைஷ்ணவ ஜ்வரம் அதை முறியடித்தது. உன் மகிமையை அறிந்த பிறகு, அந்த சைவப் படையானது உன்னைப் போற்றிப் புகழ்ந்தது. உன் சரித்திரத்தைப் படிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ ஜ்வரபீடை நீங்கவேண்டும் என்று வேண்டிக் கொண்டு திரும்பிச் சென்றது. சிவனுடைய அடியார்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும், தமோ குணத்தால் மூர்க்கமான செய்கைகளில் ஈடுபடுகிறார்கள்.


बाणं नानायुधोग्रं पुनरभिपतितं दर्पदोषाद्वितन्वन्

निर्लूनाशेषदोषं सपदि बुबुधुषा शङ्करेणोपगीत: ।

तद्वाचा शिष्टबाहुद्वितयमुभयतो निर्भयं तत्प्रियं तं

मुक्त्वा तद्दत्तमानो निजपुरमगम: सानिरुद्ध: सहोष: ॥८॥


பா₃ணம் நாநாயுதோ₄க்₃ரம் புநரபி₄பதிதம் த₃ர்பதோ₃ஷாத்₃விதந்வந்

நிர்லூநாஶேஷதோ₃ஷம் ஸபதி₃ பு₃பு₃து₄ஷா ஶங்கரேணோபகீ₃த: |

தத்₃வாசா ஶிஷ்டபா₃ஹுத்₃விதயமுப₄யதோ நிர்ப₄யம் தத்ப்ரியம் தம்

முக்த்வா தத்₃த₃த்தமாநோ நிஜபுரமக₃ம: ஸாநிருத்₃த₄: ஸஹோஷ: || 8||


8. ஆணவத்துடன் பாணாசுரன், மீண்டும் பல ஆயுதங்களுடன் வந்து உன்னை எதிர்த்தான். அவனுடைய எல்லாக் கைகளையும் அறுத்து எறிந்தாய். உன்னைப் பற்றி அறிந்த பரமசிவன் உன்னைத் துதித்தார். அவர் வேண்டிக் கொண்டதன் பேரில் பாணாசுரனுக்கு இரு பக்கத்திலும் இரண்டு கைகளை மட்டும் மீதமாக வைத்து சிவபக்தனான அவனை விடுவித்தாய். அவன் அன்புடன் அளித்த பொருட்களையும், உஷையுடன் அநிருத்தனையும் அழைத்துக் கொண்டு துவாரகைக்குச் சென்றாய்.


मुहुस्तावच्छक्रं वरुणमजयो नन्दहरणे

यमं बालानीतौ दवदहनपानेऽनिलसखम् ।

विधिं वत्सस्तेये गिरिशमिह बाणस्य समरे

विभो विश्वोत्कर्षी तदयमवतारो जयति ते ॥९॥


முஹுஸ்தாவச்ச₂க்ரம் வருணமஜயோ நந்த₃ஹரணே

யமம் பா₃லாநீதௌ த₃வத₃ஹநபாநே(அ)நிலஸக₂ம் |

விதி₄ம் வத்ஸஸ்தேயே கி₃ரிஶமிஹ பா₃ணஸ்ய ஸமரே

விபோ₄ விஶ்வோத்கர்ஷீ தத₃யமவதாரோ ஜயதி தே || 9||


9. நீ பல முறை இந்திரனை வென்றாய். நந்தனைக் கவர்ந்து சென்ற வருணனை ஜயித்தாய். குருவின் மகனை மீட்டு வந்து யமனை ஜயித்தாய். காட்டுத் தீயைக் குடித்து அக்னியை வென்றாய். கன்றுகளைக் கவர்ந்த பிரமனை வென்றாய். பாணாசுர யுத்தத்தில் சிவனையும் ஜயித்தாய். பிரபுவே! உன்னுடய் இந்த அவதாரம், எல்லா அவதாரங்களையும் விட சிறந்ததாக விளங்குகிறது.


द्विजरुषा कृकलासवपुर्धरं नृगनृपं त्रिदिवालयमापयन् ।

निजजने द्विजभक्तिमनुत्तमामुपदिशन् पवनेश्वर् पाहि माम् ॥१०॥


த்₃விஜருஷா க்ருகலாஸவபுர்த₄ரம் ந்ருக₃ந்ருபம் த்ரிதி₃வாலயமாபயந் |

நிஜஜநே த்₃விஜப₄க்திமநுத்தமாமுபதி₃ஶந் பவநேஶ்வர பாஹி மாம் || 10||


10. ந்ருகன் என்ற அரசன் பிராம்மண கோபத்தால் பச்சோந்தி உருவமடைந்தான். அவனது சாபத்தைப் போக்கி, அவனைத் தூய்மைப்படுத்தி ஸ்வர்க்கத்திற்கு அனுப்பினாய். புனிதமான நீ, மக்களிடம், பிராம்மணர்களிடம் வைக்க வேண்டிய மரியாதையை உபதேசம் செய்தாய். குருவாயூரப்பனே! என்னைக் காப்பாற்ற வேண்டும்.



பௌண்ட்ரகன் முக்தி

रामेऽथ गोकुलगते प्रमदाप्रसक्ते

हूतानुपेतयमुनादमने मदान्धे ।

स्वैरं समारमति सेवकवादमूढो

दूतं न्ययुङ्क्त तव पौण्ड्रकवासुदेव: ॥१॥


ராமே(அ)த₂ கோ₃குலக₃தே ப்ரமதா₃ப்ரஸக்தே

ஹூதாநுபேதயமுநாத₃மநே மதா₃ந்தே₄ |

ஸ்வைரம் ஸமாரமதி ஸேவகவாத₃மூடோ₄

தூ₃தம் ந்யயுங்க்த தவ பௌண்ட்₃ரகவாஸுதே₃வ: || 1||


1. பலராமன் கோகுலம் சென்று அங்குள்ள பெண்களோடு விளையாடிக் கொண்டு, யமுனையின் வழியைத் திருப்பிவிட்டு, போதையில் மதிமயங்கியிருந்தார். அப்போது, பௌண்ட்ரக வாசுதேவன் என்பவன், கூடியிருந்தவர்களின் சொல்லால் தன்னையே பகவான் வாசுதேவன் என்று எண்ணிக்கொண்டு ஒரு தூதனை உன்னிடம் அனுப்பினான்.


नारायणोऽहमवतीर्ण इहास्मि भूमौ

धत्से किल त्वमपि मामकलक्षणानि ।

उत्सृज्य तानि शरणं व्रज मामिति त्वां

दूतो जगाद सकलैर्हसित: सभायाम् ॥२॥


நாராயணோ(அ)ஹமவதீர்ண இஹாஸ்மி பூ₄மௌ

த₄த்ஸே கில த்வமபி மாமகலக்ஷணாநி |

உத்ஸ்ருஜ்ய தாநி ஶரணம் வ்ரஜ மாமிதி த்வாம்

தூ₃தோ ஜகா₃த₃ ஸகலைர்ஹஸித: ஸபா₄யாம் || 2||


2. “நான் தான் இந்தப் பூமியில் அவதரித்துள்ள நாராயணன். நீ என்னுடைய சின்னங்களான சங்கு, சக்கரம் ஆகியவற்றைத் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அவைகளை விட்டுவிட்டு என்னிடம் சரணடைய வேண்டும்” என்று பௌண்ட்ரக வாசுதேவன் சொல்லியதை அந்தத் தூதன் கூற, கூடியிருந்த அனைவரும் அவனைப் பரிஹாஸம் செய்தனர்.


दूतेऽथ यातवति यादवसैनिकैस्त्वं

यातो ददर्शिथ वपु: किल पौण्ड्रकीयम् ।

तापेन वक्षसि कृताङ्कमनल्पमूल्य-

श्रीकौस्तुभं मकरकुण्डलपीतचेलम् ॥३॥


தூ₃தே(அ)த₂ யாதவதி யாத₃வஸைநிகைஸ்த்வம்

யாதோ த₃த₃ர்ஶித₂ வபு: கில பௌண்ட்₃ரகீயம் |

தாபேந வக்ஷஸி க்ருதாங்கமநல்பமூல்ய-

ஶ்ரீகௌஸ்துப₄ம் மகரகுண்ட₃லபீதசேலம் || 3||


3. தூதன் சென்றதும், யாதவப் படைகளுடன் அவன் இருப்பிடம் சென்றாய். உன் மார்பில் உள்ள ஸ்ரீவத்ஸத்தைப் போல, பௌண்ட்ரக வாசுதேவன் தன் மார்பில் சூடு போட்டுக் கொண்டிருந்தான். கௌஸ்துபம் என்ற மாலையைப் போல விலையுயர்ந்த மாலையையும், குண்டலங்களுடனும், பீதாம்பரத்தையும் தரித்துக் கொண்டிருந்தான்.


कालायसं निजसुदर्शनमस्यतोऽस्य

कालानलोत्करकिरेण सुदर्शनेन ।

शीर्षं चकर्तिथ ममर्दिथ चास्य सेनां

तन्मित्रकाशिपशिरोऽपि चकर्थ काश्याम् ॥४॥


காலாயஸம் நிஜஸுத₃ர்ஶநமஸ்யதோ(அ)ஸ்ய

காலாநலோத்கரகிரேண ஸுத₃ர்ஶநேந |

ஶீர்ஷம் சகர்தித₂ மமர்தி₃த₂ சாஸ்ய ஸேநாம்

தந்மித்ரகாஶிபஶிரோ(அ)பி சகர்த₂ காஶ்யாம் || 4||


4. பௌண்ட்ரக வாசுதேவன் தன்னுடைய இரும்பினாலான சக்கரத்தைத் உன் மீது எறிந்தான். உடனே நெருப்புப் பொறிகளைக் கக்குகிற உன் சக்ராயுதத்தால் அவனுடைய தலையைத் துண்டித்தாய். அவனுடைய படைகளையும் அழித்தாய். அவனுடைய நண்பனான காசிநாட்டு அரசன் காசிராஜனின் தலையையும் வெட்டி, காசியில் விழச் செய்தாய்.


जाल्येन बालकगिराऽपि किलाहमेव

श्रीवासुदेव इति रूढमतिश्चिरं स: ।

सायुज्यमेव भवदैक्यधिया गतोऽभूत्

को नाम कस्य सुकृतं कथमित्यवेयात् ॥५॥


ஜால்யேந பா₃லககி₃ரா(அ)பி கிலாஹமேவ

ஶ்ரீவாஸுதே₃வ இதி ரூட₄மதிஶ்சிரம் ஸ: |

ஸாயுஜ்யமேவ ப₄வதை₃க்யதி₄யா க₃தோ(அ)பூ₄த்

கோ நாம கஸ்ய ஸுக்ருதம் கத₂மித்யவேயாத் || 5||


5. முட்டாள்தனத்தினாலும், சிறுவர்களின் பேச்சுக்களாலும், அவன் தன்னையே ஸ்ரீ வாசுதேவன் என்று வெகுநாட்களாய் எண்ணிக் கொண்டிருந்தான். எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருந்ததால் மோக்ஷத்தை அடைந்தான். யாருடைய நல்ல செயல்கள் என்ன பலன் தரும் என்று யாருக்குத் தெரியும்?


काशीश्वरस्य तनयोऽथ सुदक्षिणाख्य:

शर्वं प्रपूज्य भवते विहिताभिचार: ।

कृत्यानलं कमपि बाण्ररणातिभीतै-

र्भूतै: कथञ्चन वृतै: सममभ्यमुञ्चत् ॥६॥


காஶீஶ்வரஸ்ய தநயோ(அ)த₂ ஸுத₃க்ஷிணாக்₂ய:

ஶர்வம் ப்ரபூஜ்ய ப₄வதே விஹிதாபி₄சார: |

க்ருத்யாநலம் கமபி பா₃ணரணாதிபீ₄தை-

ர்பூ₄தை: கத₂ஞ்சந வ்ருதை: ஸமமப்₄யமுஞ்சத் || 6||


6. காசி நாட்டு அரசனின் மகன் சுதக்ஷிணன், தன் தந்தையின் மரணத்தால் கோபம் கொண்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து பலம் பெற்றான். பாணாசுர யுத்தத்தின்போது ஓடிப் போன பூதகணங்களை நிர்ப்பந்தித்து அழைத்து வந்தான். உன்னை அழிக்க ஆபிசார அக்னியை ஏவினான்.


तालप्रमाणचरणामखिलं दहन्तीं

कृत्यां विलोक्य चकितै: कथितोऽपि पौरै: ।

द्यूतोत्सवे किमपि नो चलितो विभो त्वं

पार्श्वस्थमाशु विससर्जिथ कालचक्रम् ॥७॥


தாலப்ரமாணசரணாமகி₂லம் த₃ஹந்தீம்

க்ருத்யாம் விலோக்ய சகிதை: கதி₂தோ(அ)பி பௌரை: |

த்₃யூதோத்ஸவே கிமபி நோ சலிதோ விபோ₄ த்வம்

பார்ஶ்வஸ்த₂மாஶு விஸஸர்ஜித₂ காலசக்ரம் || 7||


7. ஆபிசார அக்னியில் இருந்து தோன்றிய ‘க்ருத்யை’ என்ற பிசாசு, பனைமரம் போன்ற உயர்ந்த கால்களுடன் வழியில் தென்பட்ட எல்லாவற்றையும் எரித்தது. அதைக் கண்ட நகர மக்கள் பயந்து உன்னிடம் கூறினார்கள். பகடை விளையாட்டில் ஈடுபட்டிருந்த நீ, சிறிதும் கலங்காமல், அருகிலிருந்த சுதர்சன சக்கரத்தை ஏவினாய்.


अभ्यापतत्यमितधाम्नि भवन्महास्त्रे

हा हेति विद्रुतवती खलु घोरकृत्या।

रोषात् सुदक्षिणमदक्षिणचेष्टितं तं

पुप्लोष चक्रमपि काशिपुरीमधाक्षीत् ॥८॥


அப்₄யாபதத்யமிததா₄ம்நி ப₄வந்மஹாஸ்த்ரே

ஹா ஹேதி வித்₃ருதவதீ க₂லு கோ₄ரக்ருத்யா|

ரோஷாத் ஸுத₃க்ஷிணமத₃க்ஷிணசேஷ்டிதம் தம்

புப்லோஷ சக்ரமபி காஶிபுரீமதா₄க்ஷீத் || 8||


8. சுதர்சன சக்கரம் ஒளி வீசிக் கொண்டு எதிர்த்து வருவதைக் கண்ட அந்தக் கொடிய தேவதை, கோபமாக சப்தமிட்டுக் கொண்டு, தன்னை ஏவிய சுதக்ஷிணனையே எரித்தது. உன் சக்ராயுதம் காசி நகரையே எரித்தது.


स खलु विविदो रक्षोघाते कृतोपकृति: पुरा

तव तु कलया मृत्युं प्राप्तुं तदा खलतां गत: ।

नरकसचिवो देशक्लेशं सृजन् नगरान्तिके

झटिति हलिना युध्यन्नद्धा पपात तलाहत: ॥९॥


ஸ க₂லு விவிதோ₃ ரக்ஷோகா₄தே க்ருதோபக்ருதி: புரா

தவ து கலயா ம்ருத்யும் ப்ராப்தும் ததா₃ க₂லதாம் க₃த: |

நரகஸசிவோ தே₃ஶக்லேஶம் ஸ்ருஜந் நக₃ராந்திகே

ஜ₂டிதி ஹலிநா யுத்₄யந்நத்₃தா₄ பபாத தலாஹத: || 9||


9. திரேதா யுகத்தில், ராமாவதாரத்தின்போது, ராவண வதத்தில் உதவி செய்த விவிதன் என்ற வானரம், கிருஷ்ணாவதாரத்தின் போது பலராமனால் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பியது. நரகாசுரனுக்கு மந்திரியாய் இருந்து கொண்டு, துவாரகைக்கு அருகே பல தீமைகளைச் செய்து கொண்டிருந்தான். பலராமன் அவனோடு போர் புரிந்து, கைகளால் அடித்து எளிதாக அவனைக் கொன்றார்.


साम्बं कौरव्यपुत्रीहरणनियमितं सान्त्वनार्थी कुरूणां

यातस्तद्वाक्यरोषोद्धृतकरिनगरो मोचयामास राम: ।

ते घात्या: पाण्डवेयैरिति यदुपृतनां नामुचस्त्वं तदानीं

तं त्वां दुर्बोधलीलं पवनपुरपते तापशान्त्यै निषेवे ॥१०॥


ஸாம்ப₃ம் கௌரவ்யபுத்ரீஹரணநியமிதம் ஸாந்த்வநார்தீ₂ குரூணாம்

யாதஸ்தத்₃வாக்யரோஷோத்₃த்₄ருதகரிநக₃ரோ மோசயாமாஸ ராம: |

தே கா₄த்யா: பாண்ட₃வேயைரிதி யது₃ப்ருதநாம் நாமுசஸ்த்வம் ததா₃நீம்

தம் த்வாம் து₃ர்போ₃த₄லீலம் பவநபுரபதே தாபஶாந்த்யை நிஷேவே || 10||


10. துரியோதனனின் பெண்ணான லக்ஷ்மணையைக் கவர்ந்த சாம்பன் என்றவனைக் கௌரவர்கள் சிறைப்படுத்தினர். அதையறிந்த பலராமன் சமாதானம் செய்ய அங்கு சென்றார். கௌரவர்களின் பேச்சால் கோபமடைந்த பலராமர், ஹஸ்தினாபுரத்தை கலப்பையால் மேலே கிளப்பி, சாம்பனை விடுவித்தார். கௌரவர்கள் பாண்டவர்களால் கொல்லப் படவேண்டும் என்பதால், நீ யாதவப் படையை அங்கு அனுப்பவில்லை. உன் லீலைகளை யாரால் அறிய முடியும்? குருவாயூரப்பா! பிணிகளால் உண்டான என்னுடைய தாபம் நீங்குவதற்காக உன்னை நான் வணங்குகிறேன்.



ஸமந்தபஞ்சக யாத்திரை

क्वचिदथ तपनोपरागकाले पुरि निदधत् कृतवर्मकामसूनू ।

यदुकुलमहिलावृत: सुतीर्थं समुपगतोऽसि समन्तपञ्चकाख्यम् ॥१॥


க்வசித₃த₂ தபநோபராக₃காலே புரி நித₃த₄த் க்ருதவர்மகாமஸூநூ |

யது₃குலமஹிலாவ்ருத: ஸுதீர்த₂ம் ஸமுபக₃தோ(அ)ஸி ஸமந்தபஞ்சகாக்₂யம் || 1||


1. ஒருமுறை, சூரியகிரஹணத்தன்று, க்ருதவர்மாவையும் அநிருத்தனையும் துவாரகையில் விட்டுவிட்டு, யாதவர்களுடனும், யாதவகுலப் பெண்களுடனும் ஸமந்தபஞ்சகம் என அழைக்கப்படும் புனித இடத்திற்கு சென்றாய்.


बहुतरजनताहिताय तत्र त्वमपि पुनन् विनिमज्य तीर्थतोयम् ।

द्विजगणपरिमुक्तवित्तराशि: सममिलथा: कुरुपाण्डवादिमित्रै: ॥२॥


ப₃ஹுதரஜநதாஹிதாய தத்ர த்வமபி புநந் விநிமஜ்ய தீர்த₂தோயம் |

த்₃விஜக₃ணபரிமுக்தவித்தராஶி: ஸமமிலதா₂: குருபாண்ட₃வாதி₃மித்ரை: || 2||


2. அங்கே கூடியிருந்த பல மக்களின் நன்மைக்காக, நீ நீராடி அந்தப் புண்ணிய தீர்த்தத்தைப் புனிதப்படுத்தினாய். பல அந்தணர்களுக்கு அளவற்ற பொருட்களைத் தானம் செய்தாய். அங்கு வந்திருந்த கௌரவர்கள், பாண்டவர்கள், மற்றவர்களோடு சேர்ந்து இருந்தாய்.


तव खलु दयिताजनै: समेता द्रुपदसुता त्वयि गाढभक्तिभारा ।

तदुदितभवदाहृतिप्रकारै: अतिमुमुदे सममन्यभामिनीभि: ॥३॥


தவ க₂லு த₃யிதாஜநை: ஸமேதா த்₃ருபத₃ஸுதா த்வயி கா₃ட₄ப₄க்திபா₄ரா |

தது₃தி₃தப₄வதா₃ஹ்ருதிப்ரகாரை: அதிமுமுதே₃ ஸமமந்யபா₄மிநீபி₄: || 3||


3. உன்னிடத்தில் ஆழ்ந்த பக்தி கொண்ட திரௌபதி, உன் மனைவியர்களோடு பேசினாள். அவர்கள் ஒவ்வொருவரையும் நீ மணந்த முறை பற்றி அவர்களிடம் கேட்டு மகிழ்ந்தாள்.


तदनु च भगवन् निरीक्ष्य गोपानतिकुतुकादुपगम्य मानयित्वा।

चिरतरविरहातुराङ्गरेखा: पशुपवधू: सरसं त्वमन्वयासी: ॥४॥


தத₃நு ச ப₄க₃வந் நிரீக்ஷ்ய கோ₃பாநதிகுதுகாது₃பக₃ம்ய மாநயித்வா|

சிரதரவிரஹாதுராங்க₃ரேகா₂: பஶுபவதூ₄: ஸரஸம் த்வமந்வயாஸீ: || 4||


4. பின்னர், கோபர்களைப் பார்த்து, மகிழ்ச்சியுடன் அவர்களை அணுகி, அவர்களிடம் உரையாடினாய். வெகு நாட்களாகத் உன்னைப் பிரிந்ததால் துயரமடைந்து இளைத்த கோபியர்களிடமும் அன்புடன் சென்றாய்.


सपदि च भवदीक्षणोत्सवेन प्रमुषितमानहृदां नितम्बिनीनाम् ।

अतिरसपरिमुक्तकञ्चुलीके परिचयहृद्यतरे कुचे न्यलैषी: ॥५॥


ஸபதி₃ ச ப₄வதீ₃க்ஷணோத்ஸவேந ப்ரமுஷிதமாநஹ்ருதா₃ம் நிதம்பி₃நீநாம் |

அதிரஸபரிமுக்தகஞ்சுலீகே பரிசயஹ்ருத்₃யதரே குசே ந்யலைஷீ: || 5||


5. உன்னைக் கண்டதும் கோபியர்கள் சந்தோஷமடைந்து, வருத்தத்தை மறந்தனர். அதிக அன்பினால் அவர்கள் மார்புக் கச்சைகள் அவிழ்ந்தது. பொங்கி எழுந்து, மனதைக் கவரும் அவர்களது கொங்கைகளை ஆசையுடன் அணைத்தாய்.


रिपुजनकलहै: पुन: पुनर्मे समुपगतैरियती विलम्बनाऽभूत् ।

इति कृतपरिरम्भणेत्वयि द्राक् अतिविवशा खलु राधिका निलिल्ये ॥६॥


ரிபுஜநகலஹை: புந: புநர்மே ஸமுபக₃தைரியதீ விலம்ப₃நா(அ)பூ₄த் |

இதி க்ருதபரிரம்ப₄ணேத்வயி த்₃ராக் அதிவிவஶா க₂லு ராதி₄கா நிலில்யே || 6||


6. அடிக்கடி எதிரிகளுடன் போர் புரிந்ததால் தாமதம் ஆனது என்று கூறிக் கொண்டே ராதையைத் தழுவினாய். அவளும் மிகுந்த பரவசமடைந்து உன்னுடன் ஒன்றிவிட்டாள்.


अपगतविरहव्यथास्तदा ता रहसि विधाय ददाथ तत्त्वबोधम् ।

परमसुखचिदात्मकोऽहमात्मेत्युदयतु व: स्फुटमेव चेतसीति ॥७॥


அபக₃தவிரஹவ்யதா₂ஸ்ததா₃ தா ரஹஸி விதா₄ய த₃தா₃த₂ தத்த்வபோ₃த₄ம் |

பரமஸுக₂சிதா₃த்மகோ(அ)ஹமாத்மேத்யுத₃யது வ: ஸ்பு₂டமேவ சேதஸீதி || 7||


7. தனிமையில் கோபிகைகளின் காதல் வேதனையைப் போக்கினாய். நீ பேரின்பமான பரமாத்மா என்பதை அவர்கள் அறியும்படி செய்தாய். அவர்கள் மனத்தில் உன்னைப் பற்றிய உண்மையை உணரும்படி செய்து, தத்துவ ஞானம் அளித்தாய்.


सुखरसपरिमिश्रितो वियोग: किमपि पुराऽभवदुद्धवोपदेशै: ।

समभवदमुत: परं तु तासां परमसुखैक्यमयी भवद्विचिन्ता ॥८॥


ஸுக₂ரஸபரிமிஶ்ரிதோ வியோக₃: கிமபி புரா(அ)ப₄வது₃த்₃த₄வோபதே₃ஶை: |

ஸமப₄வத₃முத: பரம் து தாஸாம் பரமஸுகை₂க்யமயீ ப₄வத்₃விசிந்தா || 8||


8. முன்பு கோபிகைகள் காதல் பிரிவால் துயரமடைந்திருந்த போது, உத்தவர் அளித்த உபதேசத்தால் ஆனந்தமடைந்தனர். இப்போது நீ உபதேசித்தவுடன், உன்னைப் பற்றிய சிந்தனையானது, பேரின்பத்துடன் ஒன்றியிருக்கும் சுகமாக ஆனது.


मुनिवरनिवहैस्तवाथ पित्रा दुरितशमाय शुभानि पृच्छ्यमानै: ।

त्वयि सति किमिदं शुभान्तरै: रित्युरुहसितैरपि याजितस्तदाऽसौ ॥९॥


முநிவரநிவஹைஸ்தவாத₂ பித்ரா து₃ரிதஶமாய ஶுபா₄நி ப்ருச்ச்₂யமாநை: |

த்வயி ஸதி கிமித₃ம் ஶுபா₄ந்தரை: ரித்யுருஹஸிதைரபி யாஜிதஸ்ததா₃(அ)ஸௌ || 9||


9. உன் தந்தை வசுதேவர், பாவங்கள் விலக என்ன நற்காரியங்கள் செய்ய வேண்டும் என முனிவர்களிடம் கேட்டார். அதைக் கேட்ட அவர்கள், பகவானான நீ அருகில் இருக்கும்போது, வேறு நற்காரியங்கள் எதற்கு என்று கூறிச் சிரித்தார்கள். ஆயினும், வசுதேவர் வேண்டிக் கொண்டதன்பேரில் யாகம் செய்து வைத்தார்கள்.


सुमहति यजने वितायमाने प्रमुदितमित्रजने सहैव गोपा: ।

यदुजनमहितास्त्रिमासमात्रं भवदनुषङ्गरसं पुरेव भेजु : ॥१०॥


ஸுமஹதி யஜநே விதாயமாநே ப்ரமுதி₃தமித்ரஜநே ஸஹைவ கோ₃பா: |

யது₃ஜநமஹிதாஸ்த்ரிமாஸமாத்ரம் ப₄வத₃நுஷங்க₃ரஸம் புரேவ பே₄ஜு : || 10||


10. அந்த யாகம் நடைபெற்ற போது, பல நண்பர்கள் வந்திருந்தார்கள். யாதவர்கள் கோபர்களை உபசரித்தார்கள். இவ்வாறு யாகம் நடந்த மூன்று மாதங்களும், உன் சேர்க்கையால் முன்பு போல சுகமடைந்தார்கள்.


व्यपगमसमये समेत्य राधां दृढमुपगूह्य निरीक्ष्य वीतखेदाम् ।

प्रमुदितहृदय: पुरं प्रयात: पवनपुरेश्वर पाहि मां गदेभ्य: ॥११॥


வ்யபக₃மஸமயே ஸமேத்ய ராதா₄ம் த்₃ருட₄முபகூ₃ஹ்ய நிரீக்ஷ்ய வீதகே₂தா₃ம் |

ப்ரமுதி₃தஹ்ருத₃ய: புரம் ப்ரயாத: பவநபுரேஶ்வர பாஹி மாம் க₃தே₃ப்₄ய: || 11||


11. யாகம் முடிந்து திரும்பிச் செல்லும்போது, ராதையிடம் சென்று அவளை இறுகத் தழுவினாய். அவள் துக்கமற்று இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்வுடன் துவாரகை திரும்பிய குருவாயூரப்பனே! வியாதிகளிலிருந்து என்னைக் காப்பாற்றி அருள வேண்டும்.



ஜராஸந்த வதம், சிசுபால மோக்ஷம்


ततो मगधभूभृता चिरनिरोधसंक्लेशितं

शताष्टकयुतायुतद्वितयमीश भूमीभृताम् ।

अनाथशरणाय ते कमपि पूरुषं प्राहिणो-

दयाचत स मागधक्षपणमेव किं भूयसा ॥१॥


ததோ மக₃த₄பூ₄ப்₄ருதா சிரநிரோத₄ஸம்க்லேஶிதம்

ஶதாஷ்டகயுதாயுதத்₃விதயமீஶ பூ₄மீப்₄ருதாம் |

அநாத₂ஶரணாய தே கமபி பூருஷம் ப்ராஹிணோ-

த₃யாசத ஸ மாக₃த₄க்ஷபணமேவ கிம் பூ₄யஸா || 1||


1. ஜராஸந்தன் இருபதினாயிரத்து எண்ணூறு அரசர்களை சிறையில் அடைத்தான். வெகுகாலமாய் அடைபட்டிருந்த அவர்கள், உநனிடத்தில் யாரோ ஒருவனைத் தூதுவனாக அனுப்பினார்கள். அவனும் மகத தேசத்து அரசனான ஜராஸந்தனை அழிக்கும்படி உன்னிடம் வேண்டினான்.


यियासुरभिमागधं तदनु नारदोदीरिता-

द्युधिष्ठिरमखोद्यमादुभयकार्यपर्याकुल: ।

विरुद्धजयिनोऽध्वरादुभयसिद्धिरित्युद्धवे

शशंसुषि निजै: समं पुरमियेथ यौधिष्ठिरीम् ॥२॥


யியாஸுரபி₄மாக₃த₄ம் தத₃நு நாரதோ₃தீ₃ரிதா-

த்₃யுதி₄ஷ்டி₂ரமகோ₂த்₃யமாது₃ப₄யகார்யபர்யாகுல: |

விருத்₃த₄ஜயிநோ(அ)த்₄வராது₃ப₄யஸித்₃தி₄ரித்யுத்₃த₄வே

ஶஶம்ஸுஷி நிஜை: ஸமம் புரமியேத₂ யௌதி₄ஷ்டி₂ரீம் || 2||


2. நீ மகத நாட்டிற்கு யுத்தம் செய்ய புறப்பட்டபோது, யுதிஷ்டிரர் ராஜஸூய யாகம் நடத்த இருப்பதாக நாரதர் தெரிவித்தார். இவ்விரண்டில் எதை முதலில் செய்வது என்று கலங்கினாய். அப்போது உத்தவர், ராஜஸூய யாகம் எதிரிகளை ஜயித்த பின்னர் நடத்தப்பட வேண்டியதாகும். ஆதலால் இவ்விரண்டும் ஒரே சமயத்தில் நடக்கும் என்று கூறினார். உடனே யாதவப் படைகளோடு பாண்டவர்களின் தலைநகரான இந்திரப்ரஸ்தம் சென்றாய்.


अशेषदयितायुते त्वयि समागते धर्मजो

विजित्य सहजैर्महीं भवदपाङ्गसंवर्धितै: ।

श्रियं निरुपमां वहन्नहह भक्तदासायितं

भवन्तमयि मागधे प्रहितवान् सभीमार्जुनम् ॥३॥


அஶேஷத₃யிதாயுதே த்வயி ஸமாக₃தே த₄ர்மஜோ

விஜித்ய ஸஹஜைர்மஹீம் ப₄வத₃பாங்க₃ஸம்வர்தி₄தை: |

ஶ்ரியம் நிருபமாம் வஹந்நஹஹ ப₄க்ததா₃ஸாயிதம்

ப₄வந்தமயி மாக₃தே₄ ப்ரஹிதவாந் ஸபீ₄மார்ஜுநம் || 3||


3. உன் எல்லா மனைவியருடனும் இந்திரப்ரஸ்தம் சென்றாய். உன் அருட்பார்வையால் பலம் பெற்ற சகோதரர்களுடன், யுதிஷ்டிரர் அனைத்து நாடுகளையும் ஜயித்து, அளவற்ற பொருட்களைப் பெற்றார். பிறகு, பக்தர்களுக்கு அடியவனான உன்னை, பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் ஜராஸந்தனிடம் அனுப்பினார்.


गिरिव्रजपुरं गतास्तदनु देव यूयं त्रयो

ययाच समरोत्सवं द्विजमिषेण तं मागधम् ।

अपूर्णसुकृतं त्वमुं पवनजेन संग्रामयन्

निरीक्ष्य सह जिष्णुना त्वमपि राजयुद्ध्वा स्थित: ॥४॥


கி₃ரிவ்ரஜபுரம் க₃தாஸ்தத₃நு தே₃வ யூயம் த்ரயோ

யயாச ஸமரோத்ஸவம் த்₃விஜமிஷேண தம் மாக₃த₄ம் |

அபூர்ணஸுக்ருதம் த்வமும் பவநஜேந ஸம்க்₃ராமயந்

நிரீக்ஷ்ய ஸஹ ஜிஷ்ணுநா த்வமபி ராஜயுத்₃த்₄வா ஸ்தி₂த: || 4||


4. நீ, பீமன், அர்ஜுனன் ஆகியோருடன் கிரிவ்ரஜம் என்ற ஜராஸந்தனின் நகரை அடைந்தாய். பிராம்மண வேஷம் பூண்டு ஜராஸந்தனிடம் யுத்தம் செய்ய ஒரு போட்டியை யாசித்தாய். புண்ணியம் செய்யாத ஜராஸந்தனை பீமனோடு போரிடும்படி செய்தாய். அரசகுலத்தைச் சேர்ந்த அவர்கள் மோதுவதை அர்ஜுனனுடன் பார்த்துக் கொண்டிருந்தாய்.


अशान्तसमरोद्धतं बिटपपाटनासंज्ञया

निपात्य जररस्सुतं पवनजेन निष्पाटितम् ।

विमुच्य नृपतीन् मुदा समनुगृह्य भक्तिं परां

दिदेशिथ गतस्पृहानपि च धर्मगुप्त्यै भुव: ॥५॥


அஶாந்தஸமரோத்₃த₄தம் பி₃டபபாடநாஸம்ஜ்ஞயா

நிபாத்ய ஜரரஸ்ஸுதம் பவநஜேந நிஷ்பாடிதம் |

விமுச்ய ந்ருபதீந் முதா₃ ஸமநுக்₃ருஹ்ய ப₄க்திம் பராம்

தி₃தே₃ஶித₂ க₃தஸ்ப்ருஹாநபி ச த₄ர்மகு₃ப்த்யை பு₄வ: || 5||

5. முடிவடையாத, நீண்ட அந்த யுத்தத்தில், ஜராஸந்தன் மூர்க்கமாகப் போரிட்டான். அப்போது, ஒரு குச்சியை இரண்டாக முறித்துக் கீழே போட்டு குறிப்பால் பீமனுக்கு உணர்த்தினாய். பீமனும் ஜராஸந்தனைக் இரண்டாகக் கிழித்துக் கொன்றான். பின்னர், சிறைப்பட்டிருந்த அரசர்களை விடுவித்தாய். அவர்களுக்கு பக்தியை அளித்து, பற்றற்றிருந்த அவர்களை தர்மத்துடன் அவரவர்கள் நாட்டை ஆளும்படிக் கட்டளையிட்டாய்.


प्रचक्रुषि युधिष्ठिरे तदनु राजसूयाध्वरं

प्रसन्नभृतकीभवत्सकलराजकव्याकुलम् ।

त्वमप्ययि जगत्पते द्विजपदावनेजादिकं

चकर्थ किमु कथ्यते नृपवरस्य भाग्योन्नति: ॥६॥


ப்ரசக்ருஷி யுதி₄ஷ்டி₂ரே தத₃நு ராஜஸூயாத்₄வரம்

ப்ரஸந்நப்₄ருதகீப₄வத்ஸகலராஜகவ்யாகுலம் |

த்வமப்யயி ஜக₃த்பதே த்₃விஜபதா₃வநேஜாதி₃கம்

சகர்த₂ கிமு கத்₂யதே ந்ருபவரஸ்ய பா₄க்₃யோந்நதி: || 6||


6. தர்மபுத்திரர் ராஜஸூய யாகத்தைத் தொடங்கினார். எல்லா அரசர்களும் மகிழ்ச்சியுடன் வந்திருந்தார்கள். நீயும், யாகத்திற்கு வந்திருந்த அந்தணர்களின் பாதத்தை அலம்பி, பட்டுத் துணியால் துடைத்துப் பணிவிடைகள் செய்தாய். தர்மபுத்திரரின் அதிர்ஷ்டத்தை என்னென்று சொல்வேன்?!


तत: सवनकर्मणि प्रवरमग्र्यपूजाविधिं

विचार्य सहदेववागनुगत: स धर्मात्मज: ।

व्यधत्त भवते मुदा सदसि विश्वभूतात्मने

तदा ससुरमानुषं भुवनमेव तृप्तिं दधौ ॥७॥


தத: ஸவநகர்மணி ப்ரவரமக்₃ர்யபூஜாவிதி₄ம்

விசார்ய ஸஹதே₃வவாக₃நுக₃த: ஸ த₄ர்மாத்மஜ: |

வ்யத₄த்த ப₄வதே முதா₃ ஸத₃ஸி விஶ்வபூ₄தாத்மநே

ததா₃ ஸஸுரமாநுஷம் பு₄வநமேவ த்ருப்திம் த₃தௌ₄ || 7||


7. வந்தவர்களில் சிறந்த ஒருவரைப் பூஜிப்பது அந்த யாகத்தின் முக்கியமான அம்சமாகும். அப்போது தர்மர் யாரைப் பூஜிப்பது என்று யோசித்தார். சகாதேவனுடைய ஆலோசனைப்படி உன்னைத் தேர்ந்தெடுத்தனர். தர்மபுத்திரரும், உலக மக்கள் அனைவரிடத்திலும் அந்தர்யாமியாய் இருக்கும் உன்னைப் பூஜித்து மகிழ்ச்சியடைந்தார். அப்போது உலகத்திலுள்ளவர்களும், தேவர்களும் ஆனந்தம் அடைந்தனர்.


तत: सपदि चेदिपो मुनिनृपेषु तिष्ठत्स्वहो

सभाजयति को जड: पशुपदुर्दुरूटं वटुम् ।

इति त्वयि स दुर्वचोविततिमुद्वमन्नासना-

दुदापतदुदायुध: समपतन्नमुं पाण्डवा: ॥८॥


தத: ஸபதி₃ சேதி₃போ முநிந்ருபேஷு திஷ்ட₂த்ஸ்வஹோ

ஸபா₄ஜயதி கோ ஜட₃: பஶுபது₃ர்து₃ரூடம் வடும் |

இதி த்வயி ஸ து₃ர்வசோவிததிமுத்₃வமந்நாஸநா-

து₃தா₃பதது₃தா₃யுத₄: ஸமபதந்நமும் பாண்ட₃வா: || 8||


8. உன்னைப் பூஜிப்பதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது, சிசுபாலன் ஆசனத்திலிருந்து எழுந்து, “ எந்த முட்டாள், மட்டமான இந்தச் சிறிய இடையனான கிருஷ்ணனை மதித்துத் தேர்ந்தெடுப்பான்? என்று கூறினான். ஆயுதம் ஏந்திக்கொண்டு, பல கெட்ட வார்த்தைகளைக் கூறினான். அதைக் கேட்ட பாண்டவர்கள் சிசுபாலனை எதிர்த்தனர்.


निवार्य निजपक्षगानभिमुखस्यविद्वेषिण-

स्त्वमेव जहृषे शिरो दनुजदारिणा स्वारिणा ।

जनुस्त्रितयलब्धया सततचिन्तया शुद्धधी-

स्त्वया स परमेकतामधृत योगिनां दुर्लभाम् ॥९॥


நிவார்ய நிஜபக்ஷகா₃நபி₄முக₂ஸ்யவித்₃வேஷிண-

ஸ்த்வமேவ ஜஹ்ருஷே ஶிரோ த₃நுஜதா₃ரிணா ஸ்வாரிணா |

ஜநுஸ்த்ரிதயலப்₃த₄யா ஸததசிந்தயா ஶுத்₃த₄தீ₄-

ஸ்த்வயா ஸ பரமேகதாமத்₄ருத யோகி₃நாம் து₃ர்லபா₄ம் || 9||

9. பாண்டவர்களைத் தடுத்து, எதிர்த்த சிசுபாலனின் தலையை, சக்ராயுதத்தால் நீயே அறுத்தாய். மூன்று ஜன்மாக்களிலும் உன்னையே நினைத்ததால் தூய்மை பெற்ற அந்த சிசுபாலன், உன்னோடு ஐக்கியமானான். யோகிகளுக்குக் கூட அத்தகைய பேறு கிடைக்காது!


तत: सुमहिते त्वया क्रतुवरे निरूढे जनो

ययौ जयति धर्मजो जयति कृष्ण इत्यालपन्।

खल: स तु सुयोधनो धुतमनास्सपत्नश्रिया

मयार्पितसभामुखे स्थलजलभ्रमादभ्रमीत् ॥१०॥


தத: ஸுமஹிதே த்வயா க்ரதுவரே நிரூடே₄ ஜநோ

யயௌ ஜயதி த₄ர்மஜோ ஜயதி க்ருஷ்ண இத்யாலபந்|

க₂ல: ஸ து ஸுயோத₄நோ து₄தமநாஸ்ஸபத்நஶ்ரியா

மயார்பிதஸபா₄முகே₂ ஸ்த₂லஜலப்₄ரமாத₃ப்₄ரமீத் || 10||


10. ராஜஸூய யாகமும் நிறைவடைந்தது. எல்லா மக்களும் தர்மபுத்திரரை வாழ்த்திக் கொண்டே சென்றார்கள். அதைக் கண்டு பொறாமை கொண்ட துரியோதனன், மயனால் நிர்மாணிக்கப்பட்ட சபைக்கு வந்தான். முன் மண்டபத்தில், தரையை ஜலம் போலவும், ஜலத்தைத் தரை போலவும் நிர்மாணித்திருந்ததால், துரியோதனன் வேறுபாடு தெரியாமல் குழம்பித் திகைத்தான்.


तदा हसितमुत्थितं द्रुपदनन्दनाभीमयो-

रपाङ्गकलया विभो किमपि तावदुज्जृम्भयन् ।

धराभरनिराकृतौ सपदि नाम बीजं वपन्

जनार्दन मरुत्पुरीनिलय पाहि मामामयात् ॥११॥


ததா₃ ஹஸிதமுத்தி₂தம் த்₃ருபத₃நந்த₃நாபீ₄மயோ-

ரபாங்க₃கலயா விபோ₄ கிமபி தாவது₃ஜ்ஜ்ரும்ப₄யந் |

த₄ராப₄ரநிராக்ருதௌ ஸபதி₃ நாம பீ₃ஜம் வபந்

ஜநார்த₃ந மருத்புரீநிலய பாஹி மாமாமயாத் || 11||


11. வேறுபாடு தெரியாமல் துரியோதனன் சறுக்கி விழுந்தான். அவனைப் பார்த்து திரௌபதியும், பீமனும் சிரித்தார்கள். உன் கடைக்கண் பார்வையால் அவர்களை அதிகமாய் உரத்துச் சிரிக்கச் செய்தாய். பூமியின் பாரத்தைப் போக்குவதற்கு நீ விதைத்த விதையாக அச்செயல் அமைந்தது. தீயவர்களுக்குத் துன்பத்தைத் தருபவனே! குருவாயூரப்பனே! நோயிலிருந்து அடியேனைக் காக்க வேண்டும்.



ஸால்வ வதம், மகாபாரத யுத்தம்

साल्वो भैष्मीविवाहे यदुबलविजितश्चन्द्रचूडाद्विमानं

विन्दन् सौभं स मायी त्वयि वसति कुरुंस्त्वत्पुरीमभ्यभाङ्क्षीत् ।

प्रद्युम्नस्तं निरुन्धन्निखिलयदुभटैर्न्यग्रहीदुग्रवीर्यं

तस्यामात्यं द्युमन्तं व्यजनि च समर: सप्तविंशत्यहान्त: ॥१॥


ஸால்வோ பை₄ஷ்மீவிவாஹே யது₃ப₃லவிஜிதஶ்சந்த்₃ரசூடா₃த்₃விமாநம்

விந்த₃ந் ஸௌப₄ம் ஸ மாயீ த்வயி வஸதி குரும்ஸ்த்வத்புரீமப்₄யபா₄ங்க்ஷீத் |

ப்ரத்₃யும்நஸ்தம் நிருந்த₄ந்நிகி₂லயது₃ப₄டைர்ந்யக்₃ரஹீது₃க்₃ரவீர்யம்

தஸ்யாமாத்யம் த்₃யுமந்தம் வ்யஜநி ச ஸமர: ஸப்தவிம்ஶத்யஹாந்த: || 1||


1. ஸால்வன் என்ற அரசன், ருக்மிணி கல்யாணம் நடந்த சமயத்தில் யாதவ சேனைகளால் தோற்கடிக்கப்பட்டான். அவன் பரமசிவனைப் பூஜித்து ‘ஸௌபம்’ என்ற விமானத்தைப் பெற்றான். நீ ராஜஸூய யாகத்திற்காகச் சென்றிருந்தபோது துவாரகையை முற்றுகையிட்டான். பிரத்யும்னன் அவனை எதிர்த்துப் போரிட்டான். த்யுமான் என்ற ஸால்வனின் மந்திரியையும் கொன்றான். இருபத்தியேழு நாட்கள் அந்த யுத்தம் நடந்தது.


तावत्त्वं रामशाली त्वरितमुपगत: खण्डितप्रायसैन्यं

सौभेशं तं न्यरुन्धा: स च किल गदया शार्ङ्गमभ्रंशयत्ते ।

मायातातं व्यहिंसीदपि तव पुरतस्तत्त्वयापि क्षणार्धं

नाज्ञायीत्याहुरेके तदिदमवमतं व्यास एव न्यषेधीत् ॥२॥


தாவத்த்வம் ராமஶாலீ த்வரிதமுபக₃த: க₂ண்டி₃தப்ராயஸைந்யம்

ஸௌபே₄ஶம் தம் ந்யருந்தா₄: ஸ ச கில க₃த₃யா ஶார்ங்க₃மப்₄ரம்ஶயத்தே |

மாயாதாதம் வ்யஹிம்ஸீத₃பி தவ புரதஸ்தத்த்வயாபி க்ஷணார்த₄ம்

நாஜ்ஞாயீத்யாஹுரேகே ததி₃த₃மவமதம் வ்யாஸ ஏவ ந்யஷேதீ₄த் || 2||


2. நீ பலராமனுடன் துவாரகைக்கு விரைந்து வந்து, எல்லா படைகளையும் அழித்து, ஸால்வனையும் எதிர்த்தாய். அவன் தன் கதையால் உன்வில்லைக் கீழே தள்ளினான். உன் தந்தையான வசுதேவரைப் போல ஒரு உருவம் செய்து அதனைக் கொன்றான். நீ அவனது மாயையை க்ஷணநேரம் அறியவில்லை என்று சிலர் சொல்வார்கள். ஆனால் வியாசர் அதை மறுத்திருக்கிறார்.


क्षिप्त्वा सौभं गदाचूर्णितमुदकनिधौ मङ्क्षु साल्वेऽपि चक्रे-

णोत्कृत्ते दन्तवक्त्र: प्रसभमभिपतन्नभ्यमुञ्चद्गदां ते ।

कौमोदक्या हतोऽसावपि सुकृतनिधिश्चैद्यवत्प्रापदैक्यं

सर्वेषामेष पूर्वं त्वयि धृतमनसां मोक्षणार्थोऽवतार: ॥३॥


க்ஷிப்த்வா ஸௌப₄ம் க₃தா₃சூர்ணிதமுத₃கநிதௌ₄ மங்க்ஷு ஸால்வே(அ)பி சக்ரே-

ணோத்க்ருத்தே த₃ந்தவக்த்ர: ப்ரஸப₄மபி₄பதந்நப்₄யமுஞ்சத்₃க₃தா₃ம் தே |

கௌமோத₃க்யா ஹதோ(அ)ஸாவபி ஸுக்ருதநிதி₄ஶ்சைத்₃யவத்ப்ராபதை₃க்யம்

ஸர்வேஷாமேஷ பூர்வம் த்வயி த்₄ருதமநஸாம் மோக்ஷணார்தோ₂(அ)வதார: || 3||


3. ஸால்வனுடைய ‘ஸௌபம்’ என்ற விமானத்தை, கதையால் உடைத்து, கடலில் எறிந்தாய். ஸால்வனின் தலையை சக்ராயுதத்தால் அறுத்தாய். தந்தவக்த்ரன் கதையை உன் மேல் எறிந்து தாக்கினான். உநுடைய கௌமோதகீ என்ற கதையால் அவனைக் கொன்றாய். சிசுபாலனைப் போல அவனும் உன்னுடன் ஐக்கியமானான். முற்பிறவியில் உநனிடத்திலேயே மனதைச் செலுத்திய எல்லாருக்கும் மோக்ஷம் அளிப்பதற்காகவே இந்த அவதாரம் எடுத்திருக்கிறாய்.


त्वय्यायातेऽथ जाते किल कुरुसदसि द्यूतके संयताया:

क्रन्दन्त्या याज्ञसेन्या: सकरुणमकृथाश्चेलमालामनन्ताम् ।

अन्नान्तप्राप्तशर्वांशजमुनिचकितद्रौपदीचिन्तितोऽथ

प्राप्त: शाकान्नमश्नन् मुनिगणमकृथास्तृप्तिमन्तं वनान्ते ॥४॥


த்வய்யாயாதே(அ)த₂ ஜாதே கில குருஸத₃ஸி த்₃யூதகே ஸம்யதாயா:

க்ரந்த₃ந்த்யா யாஜ்ஞஸேந்யா: ஸகருணமக்ருதா₂ஶ்சேலமாலாமநந்தாம் |

அந்நாந்தப்ராப்தஶர்வாம்ஶஜமுநிசகிதத்₃ரௌபதீ₃சிந்திதோ(அ)த₂

ப்ராப்த: ஶாகாந்நமஶ்நந் முநிக₃ணமக்ருதா₂ஸ்த்ருப்திமந்தம் வநாந்தே || 4||

4. நீ துவாரகை சென்றதும், கௌரவர்களின் சபையில், கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே சூதாட்டம் நடந்தது. (பாண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்தனர். திரௌபதியையும் பணயமாக வைத்துத் தோற்றனர்). பலபேர் முன்னிலையில், துச்சாதனன் திரௌபதியின் தலைமுடியைப் பற்றி இழுத்து வந்து, துகிலுரித்து மானபங்கப்படுத்தினான். கதியற்ற திரௌபதி தங்களை வேண்டிக் கதறி அழுதாள். தாங்கள் கணக்கிலடங்காத வஸ்திரங்கள் அளித்து அவளுக்கு உதவினாய். பாண்டவர்கள் காட்டில் வசிக்கும் போது, ஒரு நாள் அனைவரும் உண்ட பின், துர்வாசர் தனது கூட்டத்தினருடன் உணவுண்ண வந்தார். உணவில்லாததால் திரௌபதி மிகவும் பயந்து உன்னைத் துதித்து வேண்டினாள். தாங்கள் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டு இருந்த கீரையைச் சாப்பிட்டு, முனிவருக்கும் அவருடன் வந்திருந்தவர்களுக்கும் உண்ட திருப்தி கிடைக்கச் செய்தாய்.

युद्धोद्योगेऽथ मन्त्रे मिलति सति वृत: फल्गुनेन त्वमेक:

कौरव्ये दत्तसैन्य: करिपुरमगमो दूत्यकृत् पाण्डवार्थम् ।

भीष्मद्रोणादिमान्ये तव खलु वचने धिक्कृते कौरवेण

व्यावृण्वन् विश्वरूपं मुनिसदसि पुरीं क्षोभयित्वागतोऽभू: ॥५॥


யுத்₃தோ₄த்₃யோகே₃(அ)த₂ மந்த்ரே மிலதி ஸதி வ்ருத: ப₂ல்கு₃நேந த்வமேக:

கௌரவ்யே த₃த்தஸைந்ய: கரிபுரமக₃மோ தூ₃த்யக்ருத் பாண்ட₃வார்த₂ம் |

பீ₄ஷ்மத்₃ரோணாதி₃மாந்யே தவ க₂லு வசநே தி₄க்க்ருதே கௌரவேண

வ்யாவ்ருண்வந் விஶ்வரூபம் முநிஸத₃ஸி புரீம் க்ஷோப₄யித்வாக₃தோ(அ)பூ₄: || 5||


5. யுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அர்ஜுனன் உன்னைத் துணையாகவும், துரியோதனன் உன்னுடைய சைன்யத்தையும் விரும்பினார்கள். அவ்வாறே அளித்துவிட்டு, ஹஸ்தினாபுரத்திற்கு சமாதானத் தூது சென்றாய். பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தாலும், துரியோதனன் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கேயே உனது விஸ்வரூபத்தைக் காட்டி ஹஸ்தினாபுரத்தை நடுங்கச் செய்தாய். பிறகு துவாரகை சென்றாய்.


जिष्णोस्त्वं कृष्ण सूत: खलु समरमुखे बन्धुघाते दयालुं

खिन्नं तं वीक्ष्य वीरं किमिदमयि सखे नित्य एकोऽयमात्मा ।

को वध्य: कोऽत्र हन्ता तदिह वधभियं प्रोज्झ्य मय्यर्पितात्मा

धर्म्यं युद्धं चरेति प्रकृतिमनयथा दर्शयन् विश्वरूपम् ॥६॥


ஜிஷ்ணோஸ்த்வம் க்ருஷ்ண ஸூத: க₂லு ஸமரமுகே₂ ப₃ந்து₄கா₄தே த₃யாலும்

கி₂ந்நம் தம் வீக்ஷ்ய வீரம் கிமித₃மயி ஸகே₂ நித்ய ஏகோ(அ)யமாத்மா |

கோ வத்₄ய: கோ(அ)த்ர ஹந்தா ததி₃ஹ வத₄பி₄யம் ப்ரோஜ்ஜ்₂ய மய்யர்பிதாத்மா

த₄ர்ம்யம் யுத்₃த₄ம் சரேதி ப்ரக்ருதிமநயதா₂ த₃ர்ஶயந் விஶ்வரூபம் || 6||

6. அர்ஜுனனின் தேரோட்டியாக வந்த நீ, யுத்தத்தின் துவக்கத்தில் தன்னுடைய உறவினர்களை வதம் செய்ய விரும்பாமல் மனம் வருந்திய அர்ஜுனனைக் கண்டாய். அவனுக்கு, “ நண்பனே! ஆத்மா என்பது என்றும் அழிவில்லாதது. கொல்பவன், கொல்லப்படுகிறவன் என்பவர் இங்கே யார்? எனவே, கொல்வதைப் பற்றிய பயத்தை விட்டு, என்னிடத்தில் சரணடைந்து, நேர்மையான யுத்தத்தைச் செய்” என்று அவனுக்கு உபதேசம் செய்து, அவனுக்கு விஸ்வரூபத்தைக் காட்டி, அவனைத் தன் நிலைமையை அடையச் செய்தாய்.


भक्तोत्तंसेऽथ भीष्मे तव धरणिभरक्षेपकृत्यैकसक्ते

नित्यं नित्यं विभिन्दत्ययुतसमधिकं प्राप्तसादे च पार्थे ।

निश्शस्त्रत्वप्रतिज्ञां विजहदरिवरं धारयन् क्रोधशाली-

वाधावन् प्राञ्जलिं तं नतशिरसमथो वीक्ष्य मोदादपागा: ॥७॥


ப₄க்தோத்தம்ஸே(அ)த₂ பீ₄ஷ்மே தவ த₄ரணிப₄ரக்ஷேபக்ருத்யைகஸக்தே

நித்யம் நித்யம் விபி₄ந்த₃த்யயுதஸமதி₄கம் ப்ராப்தஸாதே₃ ச பார்தே₂ |

நிஶ்ஶஸ்த்ரத்வப்ரதிஜ்ஞாம் விஜஹத₃ரிவரம் தா₄ரயந் க்ரோத₄ஶாலீ-

வாதா₄வந் ப்ராஞ்ஜலிம் தம் நதஶிரஸமதோ₂ வீக்ஷ்ய மோதா₃த₃பாகா₃: || 7||


7. பூபாரத்தைப் போக்கும் நோக்கத்தில், உன் பக்தரான பீஷ்மர் ஒவ்வொரு நாளும் பதினாயிரம் அரசர்களை வதம் செய்தார். அர்ஜுனன் பீஷ்மரை எதிர்த்து மிகவும் சோர்வடைந்தான். அதைக் கண்ட நீ, போரில் ஆயுதம் எடுப்பதில்லை என்ற உன் பிரதிக்ஞையை மீறி சுதர்சன சக்கரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு கோபத்துடன் பீஷ்மரை நோக்கி ஓடினாய். உன்னைக் கண்டதும் பீஷ்மர் தலைவணங்கியதைக் கண்டு சந்தோஷித்து, அவரைத் தாக்காமல் திரும்பினாய்.


युद्धे द्रोणस्य हस्तिस्थिररणभगदत्तेरितं वैष्णवास्त्रं

वक्षस्याधत्त चक्रस्थगितरविमहा: प्रार्दयत्सिन्धुराजम् ।

नागास्त्रे कर्णमुक्ते क्षितिमवनमयन् केवलं कृत्तमौलिं

तत्रे त्रापि पार्थं किमिव नहि भवान् पाण्डवानामकार्षीत् ॥८॥


யுத்₃தே₄ த்₃ரோணஸ்ய ஹஸ்திஸ்தி₂ரரணப₄க₃த₃த்தேரிதம் வைஷ்ணவாஸ்த்ரம்

வக்ஷஸ்யாத₄த்த சக்ரஸ்த₂கி₃தரவிமஹா: ப்ரார்த₃யத்ஸிந்து₄ராஜம் |

நாகா₃ஸ்த்ரே கர்ணமுக்தே க்ஷிதிமவநமயந் கேவலம் க்ருத்தமௌலிம்

தத்ரே த்ராபி பார்த₂ம் கிமிவ நஹி ப₄வாந் பாண்ட₃வாநாமகார்ஷீத் || 8||


8. துரோணருடன் போர் புரிந்த போது, நரகாசுரனின் பிள்ளையான பகதத்தன், நான்கு தந்தமுள்ள யானைமீது ஏறிவந்து வைஷ்ணவாஸ்திரத்தை ஏவினான். அதை நீ மார்பில் தாங்கிக் கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினாய். உன்னுடைய சக்ராயுதத்தால் சூரியனை மறைத்து, அர்ஜுனனைக் கொண்டு ஜயத்ரதனைக் கொன்றாய். கர்ணன் நாகாஸ்திரத்தை அர்ஜுனன் மீது ஏவினான். உன் கால் கட்டைவிரலால் பூமியை அழுத்தி, அர்ஜுனனின் கிரீடத்தை மட்டும் அறுக்கும்படி செய்தாய். பாண்டவர்களின் நலனுக்காக நீ எதைத்தான் செய்யவில்லை?


युद्धादौ तीर्थगामी स खलु हलधरो नैमिशक्षेत्रमृच्छ-

न्नप्रत्युत्थायिसूतक्षयकृदथ सुतं तत्पदे कल्पयित्वा ।

यज्ञघ्नं वल्कलं पर्वणि परिदलयन् स्नाततीर्थो रणान्ते

सम्प्राप्तो भीमदुर्योधनरणमशमं वीक्ष्य यात: पुरीं ते ॥९॥


யுத்₃தா₄தௌ₃ தீர்த₂கா₃மீ ஸ க₂லு ஹலத₄ரோ நைமிஶக்ஷேத்ரம்ருச்ச₂-

ந்நப்ரத்யுத்தா₂யிஸூதக்ஷயக்ருத₃த₂ ஸுதம் தத்பதே₃ கல்பயித்வா |

யஜ்ஞக்₄நம் வல்கலம் பர்வணி பரித₃லயந் ஸ்நாததீர்தோ₂ ரணாந்தே

ஸம்ப்ராப்தோ பீ₄மது₃ர்யோத₄நரணமஶமம் வீக்ஷ்ய யாத: புரீம் தே || 9||


9. போர் ஆரம்பித்தபோது தீர்த்தயாத்திரை சென்ற பலராமன், நைமிசாரண்யம் சென்றார். தன்னை மதிக்காத ஸூதபௌராணிகரைக் கொன்றார். அந்த ஸ்தானத்தில் அவருடைய மகனை நியமித்தார். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் யாகங்களுக்கு இடையூறு செய்த வல்வலன் என்ற அசுரனைக் கொன்றார். பின்னர், தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு குருக்ஷேத்ரம் வந்தார். பீமனும் துரியோதனனும் நீண்ட சண்டை செய்வதைப் பார்த்து துவாரகைக்குச் சென்றார்.


संसुप्तद्रौपदेयक्षपणहतधियं द्रौणिमेत्य त्वदुक्त्या

तन्मुक्तं ब्राह्ममस्त्रं समहृत विजयो मौलिरत्नं च जह्रे ।

उच्छित्यै पाण्डवानां पुनरपि च विशत्युत्तरागर्भमस्त्रे

रक्षन्नङ्गुष्ठमात्र: किल जठरमगाश्चक्रपाणिर्विभो त्वम् ॥१०॥


ஸம்ஸுப்தத்₃ரௌபதே₃யக்ஷபணஹததி₄யம் த்₃ரௌணிமேத்ய த்வது₃க்த்யா

தந்முக்தம் ப்₃ராஹ்மமஸ்த்ரம் ஸமஹ்ருத விஜயோ மௌலிரத்நம் ச ஜஹ்ரே |

உச்சி₂த்யை பாண்ட₃வாநாம் புநரபி ச விஶத்யுத்தராக₃ர்ப₄மஸ்த்ரே

ரக்ஷந்நங்கு₃ஷ்ட₂மாத்ர: கில ஜட₂ரமகா₃ஶ்சக்ரபாணிர்விபோ₄ த்வம் || 10||


10. துரோணரின் மகனான அஸ்வத்தாமன், தூங்கிக் கொண்டிருந்த திரௌபதியின் பிள்ளைகளைக் கொன்று விட்டான். உன் உத்தரவின்பேரில் அர்ஜுனன் அவன் மீது விடுத்த பிரம்மாஸ்திரம், அவனுடைய சிரோமணியைத் துன்புறுத்தித் திரும்பி வந்தது. அஸ்வத்தாமன், பாண்டவ வம்சத்தை வேரோடு அழிக்க, மீண்டும் பிரம்மாஸ்திரத்தை ஏவினான். அது, அபிமன்யுவின் மனைவியான உத்தரையின் கர்ப்பத்தில் இருந்த சிசுவை எரிக்கத் தொடங்கியது. நீ கட்டை விரல் அளவுள்ள உருவமெடுத்து சுதர்சன சக்கரத்துடன் உத்தரையின் கருப்பைக்குள் பிரவேசித்து அந்த சிசுவைக் காத்தாய்.


धर्मौघं धर्मसूनोरभिदधदखिलं छन्दमृत्युस्स भीष्म-

स्त्वां पश्यन् भक्तिभूम्नैव हि सपदि ययौ निष्कलब्रह्मभूयम् ।

संयाज्याथाश्वमेधैस्त्रिभिरतिमहितैर्धर्मजं पूर्णकामं

स्म्प्राप्तो द्वरकां त्वं पवनपुरपते पाहि मां सर्वरोगात् ॥११॥


த₄ர்மௌக₄ம் த₄ர்மஸூநோரபி₄த₃த₄த₃கி₂லம் ச₂ந்த₃ம்ருத்யுஸ்ஸ பீ₄ஷ்ம-

ஸ்த்வாம் பஶ்யந் ப₄க்திபூ₄ம்நைவ ஹி ஸபதி₃ யயௌ நிஷ்கலப்₃ரஹ்மபூ₄யம் |

ஸம்யாஜ்யாதா₂ஶ்வமேதை₄ஸ்த்ரிபி₄ரதிமஹிதைர்த₄ர்மஜம் பூர்ணகாமம்

ஸ்ம்ப்ராப்தோ த்₃வரகாம் த்வம் பவநபுரபதே பாஹி மாம் ஸர்வரோகா₃த் || 11||

11. விரும்பிய நேரத்தில் மரணத்தை அடையும் சக்தியைப் பெற்ற பீஷ்மர், யுதிஷ்டிரருக்கு அனைத்து தர்மங்களையும் உபதேசித்தார். தீவிரமான பக்தியுடன் உன்னையே பார்த்துக் கொண்டு மோக்ஷத்தை அடைந்தார். பின்னர், யுதிஷ்டிரர் மூன்று அஸ்வமேத யாகங்களைச் செய்யத் துணை புரிந்து, அவரது அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து, துவாரகை திரும்பினாய். குருவாயூரப்பனே! எல்லா வியாதிகளில் இருந்தும் என்னைக் காத்து அருள் புரிய வேண்டும்.



குசேலோபாக்யானம்

कुचेलनामा भवत: सतीर्थ्यतां गत: स सान्दीपनिमन्दिरे द्विज: ।

त्वदेकरागेण धनादिनिस्स्पृहो दिनानि निन्ये प्रशमी गृहाश्रमी ॥१॥


குசேலநாமா ப₄வத: ஸதீர்த்₂யதாம் க₃த: ஸ ஸாந்தீ₃பநிமந்தி₃ரே த்₃விஜ: |

த்வதே₃கராகே₃ண த₄நாதி₃நிஸ்ஸ்ப்ருஹோ தி₃நாநி நிந்யே ப்ரஶமீ க்₃ருஹாஶ்ரமீ || 1||


1. ஸாந்தீபனி முனிவரிடம் நீ குருகுலம் பயின்றபோது, குசேலர் என்ற பிராமணர் உன்னுடன் பயின்றார். கிருஹஸ்தனான அவர் உன் ஒருவரிடத்திலேயே பக்தி பூண்டிருந்ததால், செல்வங்களில் பற்றற்றவராய் புலன்களை அடக்கி, தன்னுடைய நாட்களைக் கழித்தார்.


समानशीलाऽपि तदीयवल्लभा तथैव नो चित्तजयं समेयुषी ।

कदाचिदूचे बत वृत्तिलब्धये रमापति: किं न सखा निषेव्यते ॥२॥


ஸமாநஶீலா(அ)பி ததீ₃யவல்லபா₄ ததை₂வ நோ சித்தஜயம் ஸமேயுஷீ |

கதா₃சிதூ₃சே ப₃த வ்ருத்திலப்₃த₄யே ரமாபதி: கிம் ந ஸகா₂ நிஷேவ்யதே || 2||


2. அவருடைய மனைவியும் அவரைப் போன்ற குணங்கள் உள்ளவளாய் இருந்தாள். ஆனால் ஆசையற்ற நிலையை அடையவில்லை. ஒரு நாள் அவள் தன் கணவரிடம், லக்ஷ்மீபதியான கிருஷ்ணர் உங்கள் நண்பரல்லவா? வாழ்வதற்குப் பொருளைப் பெற ஏன் அவரை அணுகக்கூடாது? என்று கேட்டாள்.


इतीरितोऽयं प्रियया क्षुधार्तया जुगुप्समानोऽपि धने मदावहे ।

तदा त्वदालोकनकौतुकाद्ययौ वहन् पटान्ते पृथुकानुपायनम् ॥३॥


இதீரிதோ(அ)யம் ப்ரியயா க்ஷுதா₄ர்தயா ஜுகு₃ப்ஸமாநோ(அ)பி த₄நே மதா₃வஹே |

ததா₃ த்வதா₃லோகநகௌதுகாத்₃யயௌ வஹந் படாந்தே ப்ருது₂காநுபாயநம் || 3||


3. பசியின் துன்பத்தாலேயே அவள் அவ்வாறு கூறினாள். செல்வம் கர்வத்தை உண்டாக்கி வாழ்க்கையைக் குலைக்கும் என்று அவர் உணர்ந்திருந்தாலும், உன்னைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலால், தனது வஸ்திரத்தின் நுனியில் ஒரு பிடி அவலை முடிந்துகொண்டு, உனக்குக் காணிக்கையாய் எடுத்துச் சென்றார்.


गतोऽयमाश्चर्यमयीं भवत्पुरीं गृहेषु शैब्याभवनं समेयिवान् ।

प्रविश्य वैकुण्ठमिवाप निर्वृतिं तवातिसम्भावनया तु किं पुन: ॥४॥


க₃தோ(அ)யமாஶ்சர்யமயீம் ப₄வத்புரீம் க்₃ருஹேஷு ஶைப்₃யாப₄வநம் ஸமேயிவாந் |

ப்ரவிஶ்ய வைகுண்ட₂மிவாப நிர்வ்ருதிம் தவாதிஸம்பா₄வநயா து கிம் புந: || 4||


4. ஆச்சர்யம் மிக்க உன் நகரத்தை அடைந்தார். உன் மாளிகைக்குள் நுழைந்ததும் வைகுண்டத்தில் இருப்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தார். நீ அவரை வரவேற்று உபசரித்ததும் விளக்க முடியாத ஆனந்தமடைந்தார்.


प्रपूजितं तं प्रियया च वीजितं करे गृहीत्वाऽकथय: पुराकृतम् ।

यदिन्धनार्थं गुरुदारचोदितैरपर्तुवर्ष तदमर्षि कानने ॥५॥


ப்ரபூஜிதம் தம் ப்ரியயா ச வீஜிதம் கரே க்₃ருஹீத்வா(அ)கத₂ய: புராக்ருதம் |

யதி₃ந்த₄நார்த₂ம் கு₃ருதா₃ரசோதி₃தைரபர்துவர்ஷ தத₃மர்ஷி காநநே || 5||


5. அன்புடன் வரவேற்கப்பட்ட அவருக்கு உன் மனைவி விசிறி வீசினாள். நீ அவருடைய கைகளைப் பற்றிக் கொண்டு குருகுலத்தில் நடந்த பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தாய். குருபத்தினிக்கு விறகு கொண்டு வர காட்டுக்குச் சென்ற போது மழையில் நனைந்ததைப் பற்றிப் பேசினீர்கள்.


त्रपाजुषोऽस्मात् पृथुकं बलादथ प्रगृह्य मुष्टौ सकृदाशिते त्वया ।

कृतं कृतं नन्वियतेति संभ्रमाद्रमा किलोपेत्य करं रुरोध ते ॥६॥


த்ரபாஜுஷோ(அ)ஸ்மாத் ப்ருது₂கம் ப₃லாத₃த₂ ப்ரக்₃ருஹ்ய முஷ்டௌ ஸக்ருதா₃ஶிதே த்வயா |

க்ருதம் க்ருதம் நந்வியதேதி ஸம்ப்₄ரமாத்₃ரமா கிலோபேத்ய கரம் ருரோத₄ தே || 6||


6. கொண்டு வந்த அவலைக் கொடுக்க வெட்கப்பட்டுத் தயங்கிய குசேலரிடமிருந்து கட்டாயப்படுத்தி அவலை வாங்கி ஒரு பிடியை உண்டாய். இரண்டாவது பிடியை எடுத்ததும், “போதும், போதும்” என்று மகாலக்ஷ்மியான ருக்மிணி உன் கையைப் பிடித்துத் தடுத்தாள். (இதற்குமேல் உண்டால் அவர்களுக்குக் கொடுப்பதற்குப் பொருள் ஒன்றும் இல்லை என்று அர்த்தம்).


भक्तेषु भक्तेन स मानितस्त्वया पुरीं वसन्नेकनिशां महासुखम् ।

बतापरेद्युर्द्रविणं विना ययौ विचित्ररूपस्तव खल्वनुग्रह: ॥७॥


ப₄க்தேஷு ப₄க்தேந ஸ மாநிதஸ்த்வயா புரீம் வஸந்நேகநிஶாம் மஹாஸுக₂ம் |

ப₃தாபரேத்₃யுர்த்₃ரவிணம் விநா யயௌ விசித்ரரூபஸ்தவ க₂ல்வநுக்₃ரஹ: || 7||


7. பக்தர்களுக்கு அடியவனான உன்னால் குசேலர் மிகவும் உபசரிக்கப்பட்டு, மிகவும் மகிழ்ச்சியுடன் அன்று இரவு உன்னுடன் தங்கினார். மறுநாள் பொருள் எதுவும் பெறாமல் தன்னுடைய ஊருக்குத் திரும்பினார். நீ பக்தர்களுக்கு அனுக்ரஹம் செய்யும் விதமே மிக ஆச்சர்யமாகும்!


यदि ह्ययाचिष्यमदास्यदच्युतो वदामि भार्यां किमिति व्रजन्नसौ ।

त्वदुक्तिलीलास्मितमग्नधी: पुन: क्रमादपश्यन्मणिदीप्रमालयम् ॥८॥


யதி₃ ஹ்யயாசிஷ்யமதா₃ஸ்யத₃ச்யுதோ வதா₃மி பா₄ர்யாம் கிமிதி வ்ரஜந்நஸௌ |

த்வது₃க்திலீலாஸ்மிதமக்₃நதீ₄: புந: க்ரமாத₃பஶ்யந்மணிதீ₃ப்ரமாலயம் || 8||


8. பொருள் வேண்டும் என்று கேட்டிருந்தால் பகவான் கொடுத்திருப்பார். மனைவியிடம் எவ்வாறு சொல்வது என்று வழிநெடுக யோசித்துக் கொண்டே சென்றார். அவரது மனம் முழுக்க உன் புன்னகையும், பேச்சுக்களும் நிறைந்திருந்தது. அப்போது அவர் பிரகாசம் மிக்க ரத்தினங்களால் விளங்கும் ஒரு மாளிகையை அடைந்தார்.


किं मार्गविभ्रंश इति भ्रंमन् क्षणं गृहं प्रविष्ट: स ददर्श वल्लभाम् ।

सखीपरीतां मणिहेमभूषितां बुबोध च त्वत्करुणां महाद्भुताम् ॥९॥


கிம் மார்க₃விப்₄ரம்ஶ இதி ப்₄ரம்மந் க்ஷணம் க்₃ருஹம் ப்ரவிஷ்ட: ஸ த₃த₃ர்ஶ வல்லபா₄ம் |

ஸகீ₂பரீதாம் மணிஹேமபூ₄ஷிதாம் பு₃போ₃த₄ ச த்வத்கருணாம் மஹாத்₃பு₄தாம் || 9||


9. க்ஷணநேரம் வழி தவறி வந்து விட்டோமோ என்று திகைத்து, பின்னர் வீட்டினுள் நுழைந்தார். உள்ளே தோழிகள் சூழ, ரத்தினங்களாலும், தங்கத்தினாலும் ஆன ஆபரணங்கள் அணிந்திருக்கும் தன் மனைவியைக் கண்டார். உன் கருணை மிக அற்புதமானது, ஆச்சர்யமானது என்று அறிந்தார்.


स रत्नशालासु वसन्नपि स्वयं समुन्नमद्भक्तिभरोऽमृतं ययौ ।

त्वमेवमापूरितभक्तवाञ्छितो मरुत्पुराधीश हरस्व मे गदान् ॥१०॥


ஸ ரத்நஶாலாஸு வஸந்நபி ஸ்வயம் ஸமுந்நமத்₃ப₄க்திப₄ரோ(அ)ம்ருதம் யயௌ |

த்வமேவமாபூரிதப₄க்தவாஞ்சி₂தோ மருத்புராதீ₄ஶ ஹரஸ்வ மே க₃தா₃ந் || 10||


10. ரத்னமயமான மாளிகையில் வசித்துக் கொண்டு இருந்தாலும் அவர் உன்னிடமே மனதைச் செலுத்தி மிகுந்த பக்தி உடையவராய் இருந்தார். இறுதியில் மோக்ஷத்தையும் அடைந்தார். பக்தர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றும் குருவாயூரப்பனே! என் வியாதிகளைப் போக்கி அருள வேண்டும்.



ஸந்தானகோபாலம்

प्रागेवाचार्यपुत्राहृतिनिशमनया स्वीयषट्सूनुवीक्षां

काङ्क्षन्त्या मातुरुक्त्या सुतलभुवि बलिं प्राप्य तेनार्चितस्त्वम् ।

धातु: शापाद्धिरण्यान्वितकशिपुभवान् शौरिजान् कंसभग्ना-

नानीयैनान् प्रदर्श्य स्वपदमनयथा: पूर्वपुत्रान् मरीचे: ॥१॥


ப்ராகே₃வாசார்யபுத்ராஹ்ருதிநிஶமநயா ஸ்வீயஷட்ஸூநுவீக்ஷாம்

காங்க்ஷந்த்யா மாதுருக்த்யா ஸுதலபு₄வி ப₃லிம் ப்ராப்ய தேநார்சிதஸ்த்வம் |

தா₄து: ஶாபாத்₃தி₄ரண்யாந்விதகஶிபுப₄வாந் ஶௌரிஜாந் கம்ஸப₄க்₃நா-

நாநீயைநாந் ப்ரத₃ர்ஶ்ய ஸ்வபத₃மநயதா₂: பூர்வபுத்ராந் மரீசே: || 1||


1. உன் குரு சாந்தீபனியின் இறந்த குழந்தையைப் பிழைக்கச் செய்து குருதக்ஷிணையாக நீ கொடுத்ததைக் கேட்ட தேவகி, தன் இறந்த ஆறு குழந்தைகளையும் பார்க்க விரும்பினாள். அதைக் கேட்ட நீ ஸுதலலோகத்திற்குச் சென்றாய். மகாபலி உன்னை வரவேற்றுப் பூஜித்தான். மரீசியின் பிள்ளைகள், பிரும்மதேவரின் சாபத்தால், ஹிரண்யகசிபுவிற்குப் பிள்ளைகளாகப் பிறந்தார்கள். அவர்களே வசுதேவரின் மூலம் தேவகிக்கு பிள்ளைகளாகப் பிறந்தபோது கம்ஸன் அவர்களைக் கொன்றான். அவர்களை ஸுதலலோகத்திலிருந்து அழைத்து வந்து தேவகியிடம் காட்டிப் பின்னர் வைகுண்டத்திற்கு அனுப்பினாய்.


श्रुतदेव इति श्रुतं द्विजेन्द्रं

बहुलाश्वं नृपतिं च भक्तिपूर्णम् ।

युगपत्त्वमनुग्रहीतुकामो

मिथिलां प्रापिथं तापसै: समेत: ॥२॥


ஶ்ருததே₃வ இதி ஶ்ருதம் த்₃விஜேந்த்₃ரம்

ப₃ஹுலாஶ்வம் ந்ருபதிம் ச ப₄க்திபூர்ணம் |

யுக₃பத்த்வமநுக்₃ரஹீதுகாமோ

மிதி₂லாம் ப்ராபித₂ம் தாபஸை: ஸமேத: || 2||


2. பக்தியில் சிறந்த ஸ்ருததேவன் என்ற அந்தணரையும், பஹுலாஸ்வன் என்ற அரசனையும் ஒரே சமயத்தில் அனுக்ரஹம் செய்ய விரும்பி, முனிவர்களுடன் மிதிலைக்குச் சென்றாய்.


गच्छन् द्विमूर्तिरुभयोर्युगपन्निकेत-

मेकेन भूरिविभवैर्विहितोपचार: ।

अन्येन तद्दिनभृतैश्च फलौदनाद्यै-

स्तुल्यं प्रसेदिथ ददथ च मुक्तिमाभ्याम् ॥३॥


க₃ச்ச₂ந் த்₃விமூர்திருப₄யோர்யுக₃பந்நிகேத-

மேகேந பூ₄ரிவிப₄வைர்விஹிதோபசார: |

அந்யேந தத்₃தி₃நப்₄ருதைஶ்ச ப₂லௌத₃நாத்₃யை-

ஸ்துல்யம் ப்ரஸேதி₃த₂ த₃த₃த₂ ச முக்திமாப்₄யாம் || 3||


3. ஒரே மாதிரியான இரண்டு உருவங்கள் எடுத்துக்கொண்டு ஒரே சமயத்தில் அவர்கள் இருவர் வீட்டிற்கும் சென்றாய். அரசன் விலையுயர்ந்த பொருட்களாலும், அந்தணன் அன்றைய தினம் பெறப்பட்ட பழங்கள், அன்னம் முதலியவற்றாலும் பூஜித்தனர். இரண்டையும் சமமாக ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு மோக்ஷம் அளித்தாய்.


भूयोऽथ द्वारवत्यां द्विजतनयमृतिं तत्प्रलापानपि त्वम्

को वा दैवं निरुन्ध्यादिति किल कथयन् विश्ववोढाप्यसोढा: ।

जिष्णोर्गर्वं विनेतुं त्वयि मनुजधिया कुण्ठितां चास्य बुद्धिं

तत्त्वारूढां विधातुं परमतमपदप्रेक्षणेनेति मन्ये ॥४॥


பூ₄யோ(அ)த₂ த்₃வாரவத்யாம் த்₃விஜதநயம்ருதிம் தத்ப்ரலாபாநபி த்வம்

கோ வா தை₃வம் நிருந்த்₄யாதி₃தி கில கத₂யந் விஶ்வவோடா₄ப்யஸோடா₄: |

ஜிஷ்ணோர்க₃ர்வம் விநேதும் த்வயி மநுஜதி₄யா குண்டி₂தாம் சாஸ்ய பு₃த்₃தி₄ம்

தத்த்வாரூடா₄ம் விதா₄தும் பரமதமபத₃ப்ரேக்ஷணேநேதி மந்யே || 4||


4. துவாரகையில் ஒரு பிராமணனுக்குக் குழந்தைகள் பிறந்து பின் இறந்தன. அழுது புலம்பிய தந்தையிடம் விதியை யாராலும் தடுக்க முடியாது என்று உலகத்திற்கே நாயகனான நீ கூறினாய். அர்ஜுனனுடைய கர்வத்தையும், உன்னை சாதாரண மனிதன் என்று நினைத்த அவனது எண்ணத்தையும் போக்கவே அவ்வாறு செய்தாய். அவனுக்கு உன் ஸ்தானமான வைகுண்டத்தைக் காட்டி, உன் பரமாத்ம ஸ்வரூபம் என்ற எண்ணத்தை அவனுக்கு அளித்தாய்.


नष्टा अष्टास्य पुत्रा: पुनरपि तव तूपेक्षया कष्टवाद:

स्पष्टो जातो जनानामथ तदवसरे द्वारकामाप पार्थ: ।

मैत्र्या तत्रोषितोऽसौ नवमसुतमृतौ विप्रवर्यप्ररोदं

श्रुत्वा चक्रे प्रतिज्ञामनुपहृतसुत: सन्निवेक्ष्ये कृशानुम् ॥५॥


நஷ்டா அஷ்டாஸ்ய புத்ரா: புநரபி தவ தூபேக்ஷயா கஷ்டவாத₃:

ஸ்பஷ்டோ ஜாதோ ஜநாநாமத₂ தத₃வஸரே த்₃வாரகாமாப பார்த₂: |

மைத்ர்யா தத்ரோஷிதோ(அ)ஸௌ நவமஸுதம்ருதௌ விப்ரவர்யப்ரரோத₃ம்

ஶ்ருத்வா சக்ரே ப்ரதிஜ்ஞாமநுபஹ்ருதஸுத: ஸந்நிவேக்ஷ்யே க்ருஶாநும் || 5||


5. இவ்வாறு அந்த பிராமணனுக்கு எட்டுக் குழந்தைகள் இறந்தும் நீ எந்த உதவியும் செய்யவில்லை என்று மக்கள் பேசினார்கள். அப்போது துவாரகைக்கு அர்ஜுனன் வந்தான். அந்நேரத்தில், அந்த பிராமணனுக்கு ஒன்பதாவது குழந்தையும் பிறந்து இறந்ததால் அவன் அழுது அரற்றினான். அதைக்கேட்ட அர்ஜுனன், “இறந்த குழந்தைகளை மீட்டு வருவேன், இல்லாவிடில் தீயில் விழுந்து உயிர் துறப்பேன்” என்று சபதம் செய்தான்.


मानी स त्वामपृष्ट्वा द्विजनिलयगतो बाणजालैर्महास्त्रै

रुन्धान: सूतिगेहं पुनरपि सहसा दृष्टनष्टे कुमारे ।

याम्यामैन्द्रीं तथाऽन्या: सुरवरनगरीर्विद्ययाऽऽसाद्य सद्यो

मोघोद्योग: पतिष्यन् हुतभुजि भवता सस्मितं वारितोऽभूत् ॥६॥


மாநீ ஸ த்வாமப்ருஷ்ட்வா த்₃விஜநிலயக₃தோ பா₃ணஜாலைர்மஹாஸ்த்ரை

ருந்தா₄ந: ஸூதிகே₃ஹம் புநரபி ஸஹஸா த்₃ருஷ்டநஷ்டே குமாரே |

யாம்யாமைந்த்₃ரீம் ததா₂(அ)ந்யா: ஸுரவரநக₃ரீர்வித்₃யயா(அ)(அ)ஸாத்₃ய ஸத்₃யோ

மோகோ₄த்₃யோக₃: பதிஷ்யந் ஹுதபு₄ஜி ப₄வதா ஸஸ்மிதம் வாரிதோ(அ)பூ₄த் || 6||


6. அந்த பிராமணனுக்குப் பத்தாவது குழந்தை பிறக்க இருக்கும் சமயம், அர்ஜுனன் உன்னிடம் ஏதும் சொல்லாமல், அந்த பிராமணனுடைய வீட்டிற்குச் சென்று, பிரசவ அறையைச் சுற்றி பெரிய அஸ்திரங்களாலும், அம்புகளாலும் பாதுகாப்புச் சுவர் எழுப்பினான். ஆனால் குழந்தை பிறந்து இறந்ததுமில்லாமல் அதனுடைய உடலும் காணாமல் போனது. தனது யோக சக்தியால் அர்ஜுனன், யமலோகம், இந்திரலோகம், தேவலோகம் ஆகிய எல்லா உலகங்களிலும் தேடியும் அக்குழந்தை கிடைக்கவில்லை. அதனால் சபதம் செய்தபடி தீயில் விழ முற்பட்டபோது, நீ புன்முறுவலுடன் அவனைத் தடுத்தாய்.


सार्धं तेन प्रतीचीं दिशमतिजविना स्यन्दनेनाभियातो

लोकालोकं व्यतीतस्तिमिरभरमथो चक्रधाम्ना निरुन्धन् ।

चक्रांशुक्लिष्टदृष्टिं स्थितमथ विजयं पश्य पश्येति वारां

पारे त्वं प्राददर्श: किमपि हि तमसां दूरदूरं पदं ते ॥७॥


ஸார்த₄ம் தேந ப்ரதீசீம் தி₃ஶமதிஜவிநா ஸ்யந்த₃நேநாபி₄யாதோ

லோகாலோகம் வ்யதீதஸ்திமிரப₄ரமதோ₂ சக்ரதா₄ம்நா நிருந்த₄ந் |

சக்ராம்ஶுக்லிஷ்டத்₃ருஷ்டிம் ஸ்தி₂தமத₂ விஜயம் பஶ்ய பஶ்யேதி வாராம்

பாரே த்வம் ப்ராத₃த₃ர்ஶ: கிமபி ஹி தமஸாம் தூ₃ரதூ₃ரம் பத₃ம் தே || 7||


7. தேரில் ஏறி அர்ஜுனனுடன் வேகமாய் மேற்கு திசையை நோக்கிச் சென்றாய். லோகாலோகம் என்ற மலையைத் தாண்டி இருளாக இருந்தது. சக்ராயுதத்தின் ஒளியால் அந்த இருளைப் போக்கினாய். அந்த ஒளியைப் பார்க்க முடியாத அர்ஜுனனுக்கு, காரண ஜலத்திற்கப்பால், அஞ்ஞானம் என்னும் இருளால் பாதிக்கப்படாததும், விவரிக்கமுடியாததுமான உன் இருப்பிடமான வைகுண்டத்தைக் காட்டினாய்.


तत्रासीनं भुजङ्गाधिपशयनतले दिव्यभूषायुधाद्यै-

रावीतं पीतचेलं प्रतिनवजलदश्यामलं श्रीमदङ्गम् ।

मूर्तीनामीशितारं परमिह तिसृणामेकमर्थं श्रुतीनां

त्वामेव त्वं परात्मन् प्रियसखसहितो नेमिथ क्षेमरूपम् ॥८॥


தத்ராஸீநம் பு₄ஜங்கா₃தி₄பஶயநதலே தி₃வ்யபூ₄ஷாயுதா₄த்₃யை-

ராவீதம் பீதசேலம் ப்ரதிநவஜலத₃ஶ்யாமலம் ஶ்ரீமத₃ங்க₃ம் |

மூர்தீநாமீஶிதாரம் பரமிஹ திஸ்ருணாமேகமர்த₂ம் ஶ்ருதீநாம்

த்வாமேவ த்வம் பராத்மந் ப்ரியஸக₂ஸஹிதோ நேமித₂ க்ஷேமரூபம் || 8||


8. ஆதிசேஷன் மேல் அமர்ந்திருப்பவரும், தெய்வீகமான ஆபரணங்கள் அணிந்தவரும், தெய்வீகமான ஆயுதங்கள் ஏந்தியவரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், மகாலக்ஷ்மியைத் தன் மார்பில் தாங்கியிருப்பவரும், கார்மேகம் போன்ற நீல வண்ணத்துடன் காட்சி அளிப்பவரும், மும்மூர்த்திகளுக்கும் மேலானவரும், வேதங்களின் ஸாரமாகவும், பரமபுருஷனாகவும் இருக்கும் உன்னையே அங்கு கண்டு, நண்பனான அர்ஜுனனுடன் சேர்ந்து நீயும் நமஸ்காரம் செய்தாய்.


युवां मामेव द्वावधिकविवृतान्तर्हिततया

विभिन्नौ सन्द्रष्टुं स्वयमहमहार्षं द्विजसुतान् ।

नयेतं द्रागेतानिति खलु वितीर्णान् पुनरमून्

द्विजायादायादा: प्रणुतमहिमा पाण्डुजनुषा ॥९॥


யுவாம் மாமேவ த்₃வாவதி₄கவிவ்ருதாந்தர்ஹிததயா

விபி₄ந்நௌ ஸந்த்₃ரஷ்டும் ஸ்வயமஹமஹார்ஷம் த்₃விஜஸுதாந் |

நயேதம் த்₃ராகே₃தாநிதி க₂லு விதீர்ணாந் புநரமூந்

த்₃விஜாயாதா₃யாதா₃: ப்ரணுதமஹிமா பாண்டு₃ஜநுஷா || 9||


9. “ஆற்றல் மிக்க ஒன்றாகவும், அதனுள்ளே மறைந்திருக்கும் மற்றொன்றாகவும் (பரமாத்மாவாகவும், ஜீவாத்மாவாகவும்) இரண்டாகப் பிரிந்து இருவேறு உருவங்களுடன் இருக்கும் உங்கள் இருவரையும் ஒன்றாகக் காண வேண்டும் என்பதற்காக நானே பிராமணக் குழந்தைகளை எடுத்துக் கொண்டேன். அவர்களை எடுத்துச் செல்லுங்கள்” என்று வைகுண்டத்தில் காணப்பட்ட பகவான் கூறினார். உடனே அர்ஜுனன் உன் மகிமையைப் புகழ்ந்து பாடினான். பிறகு, அக்குழந்தைகளையும் எடுத்து வந்து பிராமணரிடம் கொடுத்தாய்.


एवं नानाविहारैर्जगदभिरमयन् वृष्णिवंशं प्रपुष्ण-

न्नीजानो यज्ञभेदैरतुलविहृतिभि: प्रीणयन्नेणनेत्रा: ।

भूभारक्षेपदम्भात् पदकमलजुषां मोक्षणायावतीर्ण:

पूर्णं ब्रह्मैव साक्षाद्यदुषु मनुजतारूषितस्त्वं व्यलासी: ॥१०॥


ஏவம் நாநாவிஹாரைர்ஜக₃த₃பி₄ரமயந் வ்ருஷ்ணிவம்ஶம் ப்ரபுஷ்ண-

ந்நீஜாநோ யஜ்ஞபே₄தை₃ரதுலவிஹ்ருதிபி₄: ப்ரீணயந்நேணநேத்ரா: |

பூ₄பா₄ரக்ஷேபத₃ம்பா₄த் பத₃கமலஜுஷாம் மோக்ஷணாயாவதீர்ண:

பூர்ணம் ப்₃ரஹ்மைவ ஸாக்ஷாத்₃யது₃ஷு மநுஜதாரூஷிதஸ்த்வம் வ்யலாஸீ: || 10||


10. இவ்வாறு பலவிதமான லீலைகளால் உலகத்தை மகிழ்வித்தும், வ்ருஷ்ணி வம்சத்தைப் பேணிக் காத்தும், பல யாகங்களைச் செய்து கொண்டும், நிகரேதும் இல்லாத விளையாட்டுக்களால் பெண்களை மகிழ்வித்துக் கொண்டும் விளங்கினாய். பூர்ணப்ரம்மமாகிய நீ, பூபாரத்தைப் போக்கும் காரியத்தில், உன்னுடைய தாமரை போன்ற பாதங்களை அண்டியவர்களுக்கு முக்தி அளித்து, யாதவர்களிடையே மனித வடிவில் தோன்றிப் பிரகாசித்தாய்.


प्रायेण द्वारवत्यामवृतदयि तदा नारदस्त्वद्रसार्द्र-

स्तस्माल्लेभे कदाचित्खलु सुकृतनिधिस्त्वत्पिता तत्त्वबोधम् ।

भक्तानामग्रयायी स च खलु मतिमानुद्धवस्त्वत्त एव

प्राप्तो विज्ञानसारं स किल जनहितायाधुनाऽऽस्ते बदर्याम् ॥११॥


ப்ராயேண த்₃வாரவத்யாமவ்ருதத₃யி ததா₃ நாரத₃ஸ்த்வத்₃ரஸார்த்₃ர-

ஸ்தஸ்மால்லேபே₄ கதா₃சித்க₂லு ஸுக்ருதநிதி₄ஸ்த்வத்பிதா தத்த்வபோ₃த₄ம் |

ப₄க்தாநாமக்₃ரயாயீ ஸ ச க₂லு மதிமாநுத்₃த₄வஸ்த்வத்த ஏவ

ப்ராப்தோ விஜ்ஞாநஸாரம் ஸ கில ஜநஹிதாயாது₄நா(அ)(அ)ஸ்தே ப₃த₃ர்யாம் || 11||


11. உன் வழிபாட்டில் மூழ்கிய நாரதர் பெரும்பாலும் துவாரகையிலேயே தங்கியிருந்தார். அப்போது, பெருமைக்குரிய உன் தந்தை வசுதேவர், அவரிடமிருந்து ஆத்ம ஞானத்தைப் பெற்றார். அறிவில் சிறந்தவரும், பக்தர்களுக்குள் முதன்மையானவருமான உத்தவர் உன்னிடமிருந்து தத்துவ ஞானத்தைப் பெற்றார். உலக நன்மைக்காக இன்றும் உத்தவர் பத்ரியில் வசிக்கிறார் என்று நம்பப்படுகிறது.


सोऽयं कृष्णावतारो जयति तव विभो यत्र सौहार्दभीति-

स्नेहद्वेषानुरागप्रभृतिभिरतुलैरश्रमैर्योगभेदै: ।

आर्तिं तीर्त्वा समस्ताममृतपदमगुस्सर्वत: सर्वलोका:

स त्वं विश्वार्तिशान्त्यै पवनपुरपते भक्तिपूर्त्यै च भूया: ॥१२॥


ஸோ(அ)யம் க்ருஷ்ணாவதாரோ ஜயதி தவ விபோ₄ யத்ர ஸௌஹார்த₃பீ₄தி-

ஸ்நேஹத்₃வேஷாநுராக₃ப்ரப்₄ருதிபி₄ரதுலைரஶ்ரமைர்யோக₃பே₄தை₃: |

ஆர்திம் தீர்த்வா ஸமஸ்தாமம்ருதபத₃மகு₃ஸ்ஸர்வத: ஸர்வலோகா:

ஸ த்வம் விஶ்வார்திஶாந்த்யை பவநபுரபதே ப₄க்திபூர்த்யை ச பூ₄யா: || 12||


12. மேன்மை மிகுந்த இந்த கிருஷ்ணாவதாரம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. நட்பு, பயம், அன்பு, காதல், வெறுப்பு, இணைப்பு போன்ற பல வழிவகைகள் மூலம் மக்கள் எல்லா துக்கங்களையும் போக்கிக்கொண்டு உலக பந்தங்களிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். குருவாயூரப்பா! உலகின் கவலைகளை நீக்கி, அடியேனும் முழு பக்தி பெற வகை செய்தருளிக் காக்க வேண்டும்.



வ்ருகாசுரன் கதை, ப்ருகுவை சோதித்தல்

रमाजाने जाने यदिह तव भक्तेषु विभवो

न सद्यस्सम्पद्यस्तदिह मदकृत्त्वादशमिनाम् ।

प्रशान्तिं कृत्वैव प्रदिशसि तत: काममखिलं

प्रशान्तेषु क्षिप्रं न खलु भवदीये च्युतिकथा ॥१॥


ரமாஜாநே ஜாநே யதி₃ஹ தவ ப₄க்தேஷு விப₄வோ

ந ஸத்₃யஸ்ஸம்பத்₃யஸ்ததி₃ஹ மத₃க்ருத்த்வாத₃ஶமிநாம் |

ப்ரஶாந்திம் க்ருத்வைவ ப்ரதி₃ஶஸி தத: காமமகி₂லம்

ப்ரஶாந்தேஷு க்ஷிப்ரம் ந க₂லு ப₄வதீ₃யே ச்யுதிகதா₂ || 1||


1. லக்ஷ்மியின் நாயகனே! இவ்வுலகத்தில் உன் பக்தர்களுக்கு எளிதில் ஐஸ்வர்யம் கிடைப்பதில்லை. ஏனெனில் செல்வங்களால் அகங்காரம் உண்டாகிறது என்பதால் அவ்வாறு செய்கிறாய் போலும். இந்திரியங்களை அடக்கும் மனநிலையைத் தந்து, பிறகு அவர்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்றாய். அந்த மனநிலையை ஏற்கெனவே பெற்றவர்களுக்கு உடனேயே அனுக்ரஹம் செய்கின்றாய். உன் பக்தர்களுக்கு வீழ்ச்சி என்ற பேச்சுக்கே இடமில்லை.


सद्य: प्रसादरुषितान् विधिशङ्करादीन्

केचिद्विभो निजगुणानुगुणं भजन्त: ।

भ्रष्टा भवन्ति बत कष्टमदीर्घदृष्ट्या

स्पष्टं वृकासुर उदाहरणं किलास्मिन् ॥२॥


ஸத்₃ய: ப்ரஸாத₃ருஷிதாந் விதி₄ஶங்கராதீ₃ந்

கேசித்₃விபோ₄ நிஜகு₃ணாநுகு₃ணம் ப₄ஜந்த: |

ப்₄ரஷ்டா ப₄வந்தி ப₃த கஷ்டமதீ₃ர்க₄த்₃ருஷ்ட்யா

ஸ்பஷ்டம் வ்ருகாஸுர உதா₃ஹரணம் கிலாஸ்மிந் || 2||


2. விரைவில் சந்தோஷத்தையும், கோபத்தையும் அடையும் பிரம்மா, பரமசிவன் முதலியோரை, மக்கள் தன் சொந்த இயல்புக்கு ஏற்ப வழிபடுகின்றனர். அந்தோ! அவர்கள் குறுகிய நோக்கத்தில் வீழ்ந்து விடுகின்றனர். இதற்கு வ்ருகாசுரனே தெளிவான உதாரணம்.


शकुनिज: स तु नारदमेकदा

त्वरिततोषमपृच्छदधीश्वरम् ।

स च दिदेश गिरीशमुपासितुं

न तु भवन्तमबन्धुमसाधुषु ॥३॥


ஶகுநிஜ: ஸ து நாரத₃மேகதா₃

த்வரிததோஷமப்ருச்ச₂த₃தீ₄ஶ்வரம் |

ஸ ச தி₃தே₃ஶ கி₃ரீஶமுபாஸிதும்

ந து ப₄வந்தமப₃ந்து₄மஸாது₄ஷு || 3||


3. சகுனியின் பிள்ளையான வ்ருகாசுரன், எளிதில் மகிழும் தெய்வம் யார் என்று நாரதரிடம் கேட்டான். அவரும் பரமசிவனை வணங்கும்படி உபதேசித்தார். தீய எண்ணம் கொண்ட மக்களை நீ ஆதரிக்க மாட்டாய் என்பதால் தீயவனான அவனிடம் அவ்வாறு உபதேசித்தார்.


तपस्तप्त्वा घोरं स खलु कुपित: सप्तमदिने

शिर: छित्वा सद्य: पुरहरमुपस्थाप्य पुरत: ।

अतिक्षुद्रं रौद्रं शिरसि करदानेन निधनं

जगन्नाथाद्वव्रे भवति विमुखानां क्व शुभधी: ॥४॥


தபஸ்தப்த்வா கோ₄ரம் ஸ க₂லு குபித: ஸப்தமதி₃நே

ஶிர: சி₂த்வா ஸத்₃ய: புரஹரமுபஸ்தா₂ப்ய புரத: |

அதிக்ஷுத்₃ரம் ரௌத்₃ரம் ஶிரஸி கரதா₃நேந நித₄நம்

ஜக₃ந்நாதா₂த்₃வவ்ரே ப₄வதி விமுகா₂நாம் க்வ ஶுப₄தீ₄: || 4||


4. கடுமையான தவம் செய்த வ்ருகாசுரன், சிவனைக் காணாததால் ஏழாவது நாளன்று கோபத்துடன் தனது தலையைத் துண்டித்துக் கொள்ள முயன்றபோது, பரமசிவன் அவன் முன் தோன்றினார். அசுரன், யார் தலையில் நான் கை வைக்கிறேனோ, அவன் உடனே சாம்பலாகிவிட வேண்டும் என்ற நீச்சமான, பயங்கரமான வரத்தைக் கேட்டான். உன்னிடம் பக்தி இல்லாதவர்களுக்கு எவ்வாறு நல்லறிவு உண்டாகும்?


मोक्तारं बन्धमुक्तो हरिणपतिरिव प्राद्रवत्सोऽथ रुद्रं

दैत्यात् भीत्या स्म देवो दिशि दिशि वलते पृष्ठतो दत्तदृष्टि: ।

तूष्णीके सर्वलोके तव पदमधिरोक्ष्यन्तमुद्वीक्ष्य शर्वं

दूरादेवाग्रतस्त्वं पटुवटुवपुषा तस्थिषे दानवाय ॥५॥


மோக்தாரம் ப₃ந்த₄முக்தோ ஹரிணபதிரிவ ப்ராத்₃ரவத்ஸோ(அ)த₂ ருத்₃ரம்

தை₃த்யாத் பீ₄த்யா ஸ்ம தே₃வோ தி₃ஶி தி₃ஶி வலதே ப்ருஷ்ட₂தோ த₃த்தத்₃ருஷ்டி: |

தூஷ்ணீகே ஸர்வலோகே தவ பத₃மதி₄ரோக்ஷ்யந்தமுத்₃வீக்ஷ்ய ஶர்வம்

தூ₃ராதே₃வாக்₃ரதஸ்த்வம் படுவடுவபுஷா தஸ்தி₂ஷே தா₃நவாய || 5||


5. அந்த வ்ருகாசுரன், கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சிங்கம் விடுவித்தவனையே துரத்துவதுபோல், சிவனிடமே அந்த வரத்தை சோதிக்க நினைத்தான். சிவனும் அசுரனிடத்தில் பயந்து, திரும்பிப் பார்த்துக் கொண்டே எல்லா திக்குகளிலும் ஓடினார். எல்லா உலகங்களுக்கும் ஓடினார். பின்னர் வைகுண்டத்திற்குச் செல்ல நினைத்தார். அதைக் கண்ட நீ, அசுரன் வெகுதூரத்தில் வரும்போது ஒரு சாமர்த்தியமான பிரம்மச்சாரி வேடம் பூண்டு நின்றாய்.


भद्रं ते शाकुनेय भ्रमसि किमधुना त्वं पिशाचस्य वाचा

सन्देहश्चेन्मदुक्तौ तव किमु न करोष्यङ्गुलीमङ्गमौलौ ।

इत्थं त्वद्वाक्यमूढ: शिरसि कृतकर: सोऽपतच्छिन्नपातं

भ्रंशो ह्येवं परोपासितुरपि च गति: शूलिनोऽपि त्वमेव ॥६॥


ப₄த்₃ரம் தே ஶாகுநேய ப்₄ரமஸி கிமது₄நா த்வம் பிஶாசஸ்ய வாசா

ஸந்தே₃ஹஶ்சேந்மது₃க்தௌ தவ கிமு ந கரோஷ்யங்கு₃லீமங்க₃மௌலௌ |

இத்த₂ம் த்வத்₃வாக்யமூட₄: ஶிரஸி க்ருதகர: ஸோ(அ)பதச்சி₂ந்நபாதம்

ப்₄ரம்ஶோ ஹ்யேவம் பரோபாஸிதுரபி ச க₃தி: ஶூலிநோ(அ)பி த்வமேவ || 6||


6. அவன் உன்னிடம் வந்ததும் அவனிடம், “அந்தப் பிசாசின் பேச்சைக் கேட்டு ஏன் அலைகின்றாய்? சந்தேகமிருந்தால் உன் தலையிலேயே கைவைத்து ஏன் பார்க்கவில்லை? என்று கூறினாய். அந்த வார்த்தைகளில் மயங்கிய அவன் தன் தலையில் கை வைத்துக் கொண்டு வேரற்ற மரம் போல, சாம்பலாகிக் கீழே விழுந்தான். இவ்வாறு மற்ற தெய்வங்களை வணங்குவோருக்கு வீழ்ச்சி உண்டு. பரமசிவனுக்கும் கூட இறுதியில் அடைக்கலம் அளிப்பவர் நீ தான்.


भृगुं किल सरस्वतीनिकटवासिनस्तापसा-

स्त्रिमूर्तिषु समादिशन्नधिकसत्त्वतां वेदितुम् ।

अयं पुनरनादरादुदितरुद्धरोषे विधौ

हरेऽपि च जिहिंसिषौ गिरिजया धृते त्वामगात् ॥७॥


ப்₄ருகு₃ம் கில ஸரஸ்வதீநிகடவாஸிநஸ்தாபஸா-

ஸ்த்ரிமூர்திஷு ஸமாதி₃ஶந்நதி₄கஸத்த்வதாம் வேதி₃தும் |

அயம் புநரநாத₃ராது₃தி₃தருத்₃த₄ரோஷே விதௌ₄

ஹரே(அ)பி ச ஜிஹிம்ஸிஷௌ கி₃ரிஜயா த்₄ருதே த்வாமகா₃த் || 7||


7. ஒரு சமயம், சரஸ்வதி நதிக்கரையில் வசித்த முனிவர்கள், மும்மூர்த்திகளில் யாரிடம் ஸத்வ குணம் இருக்கிறது என்று அறிய பிருகு என்ற முனிவரை அனுப்பினார்கள். பிரம்மலோகம் சென்ற பிருகு, பிரம்மாவிற்கு நமஸ்காரம் செய்யவில்லை. அதைக் கண்ட பிரம்மா கோபமடைந்தார். ஆயினும், கோபத்தை அடக்கிக் கொண்டார். பின்னர் பிருகு கைலாசம் சென்று அவ்வாறே நடந்து கொண்டார். சிவன் கோபம் கொண்டு அவரைக் கொல்ல முயல, பார்வதிதேவி அதைத் தடுத்தாள். பிறகு, பிருகு உன்னிடம் வந்தார்.


सुप्तं रमाङ्कभुवि पङ्कजलोचनं त्वां

विप्रे विनिघ्नति पदेन मुदोत्थितस्त्वम् ।

सर्वं क्षमस्व मुनिवर्य भवेत् सदा मे

त्वत्पादचिन्हमिह भूषणमित्यवादी: ॥८॥


ஸுப்தம் ரமாங்கபு₄வி பங்கஜலோசநம் த்வாம்

விப்ரே விநிக்₄நதி பதே₃ந முதோ₃த்தி₂தஸ்த்வம் |

ஸர்வம் க்ஷமஸ்வ முநிவர்ய ப₄வேத் ஸதா₃ மே

த்வத்பாத₃சிந்ஹமிஹ பூ₄ஷணமித்யவாதீ₃: || 8||


8. தாமரைக் கண்ணனான நீ மஹாலக்ஷ்மியின் மடியில் தலைவைத்து உறங்கிக் கொண்டிருந்தாய். பிருகு உன்னைக் காலால் எட்டி உதைத்தார். நீ உடனே எழுந்து மன்னிப்பு கேட்டு, அவரது கால் அடையாளக்குறி எப்போதும் உமது மார்பின் மீது அலங்காரமாக இருக்க வேண்டும் என்று கூறினாய்.


निश्चित्य ते च सुदृढं त्वयि बद्धभावा:

सारस्वता मुनिवरा दधिरे विमोक्षम् ।

त्वामेवमच्युत पुनश्च्युतिदोषहीनं

सत्त्वोच्चयैकतनुमेव वयं भजाम: ॥९॥


நிஶ்சித்ய தே ச ஸுத்₃ருட₄ம் த்வயி ப₃த்₃த₄பா₄வா:

ஸாரஸ்வதா முநிவரா த₃தி₄ரே விமோக்ஷம் |

த்வாமேவமச்யுத புநஶ்ச்யுதிதோ₃ஷஹீநம்

ஸத்த்வோச்சயைகதநுமேவ வயம் ப₄ஜாம: || 9||


9. பிருகு முனிவர் இதை சரஸ்வதி நதிக்கரையில் உள்ள முனிவர்களிடம் கூறியதும் அவர்கள் நீயே ஸத்வ குணம் நிரம்பியவர் என்று அறிந்து உன்னிடத்திலேயே அசையாத பக்தி கொண்டு மோக்ஷமடைந்தனர். அச்சுதனே! குறையொன்றும் இல்லாத ஸத்வகுணம் நிரம்பிய உன்னை நாங்கள் வணங்குகிறோம்.


जगत्सृष्ट्यादौ त्वां निगमनिवहैर्वन्दिभिरिव

स्तुतं विष्णो सच्चित्परमरसनिर्द्वैतवपुषम् ।

परात्मानं भूमन् पशुपवनिताभाग्यनिवहं

परितापश्रान्त्यै पवनपुरवासिन् परिभजे ॥१०॥


ஜக₃த்ஸ்ருஷ்ட்யாதௌ₃ த்வாம் நிக₃மநிவஹைர்வந்தி₃பி₄ரிவ

ஸ்துதம் விஷ்ணோ ஸச்சித்பரமரஸநிர்த்₃வைதவபுஷம் |

பராத்மாநம் பூ₄மந் பஶுபவநிதாபா₄க்₃யநிவஹம்

பரிதாபஶ்ராந்த்யை பவநபுரவாஸிந் பரிப₄ஜே || 10||


10. அரசர்களின் சபையில் துதிபாடும் இசைவாணர்களைப் போல், படைப்பின் ஆரம்பத்தில் வேதங்கள் உன்னைத் துதித்தன. நீ சச்சிதானந்த ரூபமாகவும், அத்வைத ரூபமாகவும், பரமாத்மாவாகவும் இருப்பவன். கோபிகைகளுடைய நல்வினையின் குவியல். என்னுடைய எல்லா துக்கங்களையும் போக்கி அருளத் உன்னையே வேண்டுகிறேன்.




148 views0 comments

Recent Posts

See All

コメント


bottom of page